Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நீயும் நானும்: 31

மணி பத்தைத் தொட்ட நேரம் தான் தூரத்தில் வந்தவனை அடையாளம் கண்டாள் ஷிவன்யா. நடையும் ஓட்டமுமாக வாக்கிங் ஸ்டிக்கால் ஒரு ஒரு வீட்டின் சுவற்றைத் தட்டிக் கொண்டே வந்த யாதேஷ், தாமரை பாட்டியின் கேட்டில் நின்றவுடன் வேகமாய் படிக்கட்டில் மேலே ஏறினான்.

" மாமா! "

ஷிவன்யாவின் குரல் கேட்டு சட்டென நின்றவனின் முகம் தோய்ந்தது. அவள் குரல் வந்த திசை இவன் திரும்பும் முன்பாக ஷிவன்யா அவன் அருகில் வந்து அவனது லன்ச் பேகை வாங்கிக் கொண்டாள்.

" ஸாரி மா, லேட்டாய்டுச்சு இன்னைக்கு. ரொம்ப நேரமா தனியா இருந்தியா டி? "

அவன் குரலில் வருத்தமும் குற்றவுணர்ச்சியும் தாண்டவமாட, ஷிவன்யா மென்மையாக புன்னகைத்தாள்.

" நான் பாட்டி கூட தான் இவ்ளோ நேரம் இருந்தேன் மா, நீங்க ஏன் ஸாரிலாம் கேக்குறீங்க? "

" இல்ல டி, சீக்கிரம் உடனே கிளம்ப முடியல இன்னைக்கு. ஷிவாவும் கோயம்பத்தூர் வரைக்கும் ப்ரான்ச் விஷயமா போயிருக்கான். எனக்கும் ஆரவுக்கும்— "

" அடடடடா! யாரு இப்போ உங்கள குறுக்கு விசாரணை பண்ணது? நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்ங்க, விடுங்க, "

ஆனாலும் யாதேஷின் முகத்தில் அந்த குற்ற உணர்வு குறையவில்லை. மேலும் அவன் பேசிக் கொண்டே தான் போவான் என அறிந்தவளாக அவளே அவனை இழுத்துச் சென்று குளியலறைக்குள் விட்டுவிட்டு உணவை எடுத்து வைக்கச் சென்றாள்.

யாதேஷ் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு வெளியே வரவும் ஷிவன்யா ஒரு தடுக்கை விரிக்க, அவளையும் இழுத்து கீழே அமர வைத்தான்.

" ஓய் சாப்ட்டியா இல்லையா? "

ஷிவன்யா இளித்துக் கொண்டே " இல்ல மாமா, "

" எவ்ளோ நேரம் டி சாப்டாம இருப்ப? நான் இனிமே லேட்டா வந்தா வெயிட் பண்ணீட்டு இருக்காத சரியா? சீக்கிரம் சாப்ட்டுட்டு தூங்கு டி, "

" சரி சரி புரியிது புரியிது. நீங்க இப்போ சாப்டுங்க மொதல்ல, "

யாதேஷும் மறுசொல்லின்றி அவள் பரிமாரியதை புகழ்ந்து கொண்டே அவளையும் உண்ண வைத்து உணவை முடித்தான்.

ஷிவன்யா " மாமா... " என உணவை உண்டுவிட்டு உறங்க தயாரானவனை அவள் தயக்கத்தோடு அழைக்க, நின்று என்ன என்பது போல் அவள் புறம் திரும்பினான்.

" இல்ல... இன்னைக்கு... விஜி ஃபோன் பண்ணா, "

" சரி... "

" உங்க அம்மா உங்க கிட்ட பேசனும்னு... "

அவள் சொல்லி முடிக்கவில்லை அதற்குள்ளாகவே யாதேஷின் மென்மையான பார்வை மறைந்து கோவம் அவன் கண்களில் எட்டிப் பார்க்க, ஷிவன்யா வார்த்தையை அப்படியே விழுங்கிக் கொண்டாள்.

" யமுனா அதப்பத்தி எதுவும் நாம பேச வேணாம். அவசியம் இல்ல. "

ஷிவன்யா அவன் கடுமையாக வார்த்தைகளை ஒரு ரியக்ஷனுமே இல்லாமல் சொன்னதில் உதட்டைக் கடித்துக் கொண்டு அப்படியே நிற்க, யாதேஷ் தொடர்ந்தான்.

" விஜிகிட்டையும் சொல்லிடு. இனிமே அவங்கள பத்தி பேச வேண்டாம்னு. இல்ல நாளைக்கு நானே சொல்லீடுறேன். "

" ஏங்க... "

" ம்ம்ம், "

" இருந்தாலும் நீங்க ஒரு வார்த்தை பேசலாம்ல... அவங்க அன்னைக்குத் தான் ஏதோ பேசிட்டாங்க. ஸ்வேத்தா மேல இருக்க பாசத்துனால தான்— "

" யமுனா உன் மேல கோவப்பட வைக்காத டி, விடு... " யாதேஷ் நெற்றியை நீவிக் கொண்டு திரும்பி கொள்ள, ஷிவன்யா ஒரு பெருமூச்சோடு அவன் முன் சென்று நின்று அவனது முகத்தை தன் கையில் ஏந்திக் கொண்டள்.

அழகிய விழிகள் யாருக்கோ வெறுப்பை உமிழ்ந்தது கூட அவள் இதயத்தை கிள்ளியது.

" மாமா, ப்லீஸ்... அவங்களும் என்ன பண்ணுவாங்க? நான் என்ன தான் இருந்தாலும் திடீருனு வந்தவ மா. ஒரு பொண்ண உங்களுக்கு கட்டி வைக்கிறேன்னு சொல்லி சொல்லி வளத்துட்டு இப்போ வேற ஒருத்திய மருமகன்னு சொல்ல எப்டி மனசு வரும்? "

அவள் தொடுகையில் அப்போதே மனம் இறங்கியவன் அவள் கூற்றை கேட்டு கண்களை அழுந்த மூடி, " அதுக்கென்ன இப்போ? நான் வேண்டா போய் அவளையே மேரேஜ் பண்ணிக்கவா? " என பல்லைக் கடித்தான்.

" மாமா... நான் அப்டி சொல்லல, "

அவள் கைகளை இறக்கிவிட்டு மெதுவாய் திரும்பி கொண்ட யாதேஷ், " எதுவும் பேசாத யமுனா. எனக்கு உண்மையா கோவமா வருது டி அவங்க யார நெனைச்சாலும். உன்ன நான் எதாவது சொல்லீட்டா எனக்கு மனசு தாங்காது, ப்லீஸ் இதோட நிறுத்திக்களாம். "

ஷிவன்யா கண்களில் நீர் கோர்க்க அவன் கைகளை மீண்டும் பிடிக்க வர, யாதேஷ் அதை உதறிவிட்டு அவன் முன்பே விரித்த பாயில் போய் படுத்துக் கொண்டான்.

தனக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டவனை பார்த்தே நின்றிருந்தவள் அவன் உறங்கவில்லை என்பதை அறிந்து அவள் உறங்கும் அறையில் இருந்த பாயை எடுத்து வந்து அவன் அருகில் விரித்து அதில் அமர்ந்து கொண்டாள்.

ஷிவன்யாவின் அசைவுகளை கவனித்துக் கொண்டே உறங்காமல் அவளிடம் கோவத்தை காட்டிய வருத்தத்தில் புரண்டு கொண்டிருந்தவன் பட்டென எழுந்து அவள் புறம் திரும்பினான்.

" இங்க என்ன டி பண்ற? "

ஷிவன்யா அதற்கு பதில் தராமல் அவளது தலையணையையும் போட்டுவிட்டு மற்றுமொரு தலையணையை அவர்களுக்கு இடையில் போட்டுவிட்டு படுத்துக் கொண்டாள்.

" தூங்க போறேன். நீங்க தனியா படுத்தா பயந்துருவீங்க, அதான் நானும் வெளிய வந்துட்டேன். "

என்ன விளையாடுறியா என்பது போல் அவளை முறைத்தவன் பின் கோவத்தை இழுத்துப் பிடிக்க இயலாமல் அவளை தன் புறம் இழுத்துத் திருப்பினான்.

" ஸாரி யமுனா. அப்டி பேசியிருக்கக் கூடாது உன் கிட்ட, ஸாரி டி... "

அவன் விழிகள் அவளிடம் பவமாய் கெஞ்ச, அவன் கரத்தை தன் கன்னத்திலிருந்து வலிக்காமல் பொய் கோபத்தோடு தட்டிவிட்ட ஷிவன்யா

" கோவம் வந்தா காமிக்கத் தான் செய்வாங்க. கோவம் வர்ரப்போவெல்லாம் ஸாரி கேட்கனும்னா ஹிட்லர் கிட்டலாம் நான் வாழ்க்க முழுக்க ஸாரி கேட்டுட்டே தான் இருக்கனும். அவரு என்ன ஏத்துற காண்டுக்கு நான் ஸாரியா சொல்லீட்டு இருக்கேன்? நான் தான் இப்போ ஸாரி கேட்கனும் உங்ககிட்ட! "

குழந்தை போல் அவள் அவனை நியாயப்படுத்த முயல, யாதேஷ் குனிந்து அவள் கன்னத்தை பிடித்து அவள் நெற்றியோடு தன் நெற்றி முட்டிக் கொண்டு சிரித்தான். ஷிவன்யா மூடியிருந்த அவன் விழிகளை பார்த்துவிட்டு கண் மூடி அமைதியாய் இருக்க, அவள் எதிர்பார்த்ததை போல் யாதேஷ் ஒரு சில நொடி அமைதிக்குப் பின் பேசத் தொடங்கினான்.

" நானும் நீயும் வேறவேற இல்ல யமுனா. நான் எப்போ என் லவ்-அ முழு மனசோட ஏத்துக்குட்டேனோ அப்போத்துலேந்து நான் உன்ன என் கிட்டேந்து பிரிச்சு பார்த்ததில்ல. என்னோட அம்மாவே உன்ன அவ்ளோ காயப்படுத்துனப்போ எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு நீ ஏன் டி அமைதியா நின்ன? எவ்ளோ நாள் அவங்க உன்ன...உன்ன அப்டியெல்லாம் பேசுனாங்க? ஏன்... ஏன் நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? ஆவ்ரெடி...ஆல்ரெடி நீ அவ்வளவு பேச்சயும் வாங்கீட்டு இங்க வந்த இடத்துல கூட... என்னோட அம்மாவே... "

அவன் குரல் உடைய ஆரம்பித்த சில வினாடிகளில் கண்ணீர் துளிகள் ஒன்றன் மாற்றி ஒன்று அவள் இமைகளின் மேல் விழ, பட்டென விழிகளைப் பிரித்து அவன் கண்ணீரை அவள் விரைந்து துடைத்தாள்.

" மாமா! "

" எனக்கு இங்க ரொம்ப வலிக்கிது. யாரும் உன்ன ஹர்ட் பண்ண கூடாது. யாரும் உன்ன எதுவும் சொல்ல கூடாது. நீ...நீ அழவே கூடாது. நீ ஹப்பியா இருக்கனும். நீ எப்பவும் ஹப்பியா இருக்கனும். உன் அப்பாக்கு நான் சத்தியம் பண்ணி உன்ன அழைச்சிட்டு வந்தப்போ உன்ன திரும்ப அழவே விட மாட்டேன்னு சொல்லீட்டு வந்தேன். ஆனா... என்னாலையே... "

" மாமா ப்லீஸ்... " அவள் குரலும் உடைந்தது.

அவன் கண்ணீர் தான் அவளுடைய பலகீனம் என்று கூட பெண் மனதிற்கு அப்போது தான் புரிந்தது.

" ஸாரி டி... உன்ன ஹர்ட் பண்ண எந்த இடத்துலையும் நான் உன் கூட இல்லாம போய்ட்டேன். ஸாரி மா... "

" மா, ஏன் மா அழறீங்க? நீங்க அழுதா எனக்கு கஷ்ட்டமா இருக்காதா? அவங்க...அவங்க பண்ணதெல்லாம் மறந்துடுங்க ப்லீஸ். நான் எப்டி அனாதையா நிக்கிறனோ அந்த மாதிரி நீங்க நிக்க கூடாதுன்னு நினைச்சேன். அதான்...அதான் நான் கேட்டேன். "

யாதேஷ் சட்டென கண்களைத் திறந்து வேகமாக தலையை இடவலதாய் திருப்பி அவள் கண்ணீரையும் வேகவேகமாகத் துடைத்தான்.

" நீ அனாதை கிடையாது டி. என்ன வார்த்தை சொல்ற நீ?! நான் இருக்கேன் உனக்கு! நானும் அனாதை இல்ல. நீ ஒத்துக்குட்டாலும் ஒத்துக்கலன்னாலும் எனக்கு எல்லாம் நீ மட்டும் தான் யமுனா. " தீர்மானத்தோடு கூறி அவள் நெற்றியில் அவன் அழுந்த முத்தம் பதிக்க, அழுகையோடு புன்னகைத்த ஷிவன்யா

" நான் உங்கள ஹர்ட் பண்ணனும்னு அப்டி சொல்லல மா, என்ன இருந்தாலும் உங்க வீட்டுல என்ன நடுவுல வந்தவளா தான் பார்ப்பாங்க. "

யாதேஷ் வேகமாய் தலையை அசைத்து அவள் வாயை மூட, அவன் கரத்தை நகர்த்திவிட்டு அதே கையால் அவன் கன்னத்தைப் பிடித்து, " நாம நம்மள பார்க்குற அதே விதத்துல இந்த உலகம் நம்மள பார்க்காது மாமா. நம்மள எல்லாரும் ஏத்துக்குற வரைக்கும் நம்மள சேர்ந்து நிம்மதியா வாழ விட மாட்டாங்க... "

யாதேஷ் அவள் சொன்னதை கேட்டு அமைதியாகிட, மறுகரத்தால் அவன் கேசத்தை ஆசையாய் கோதிவிட்டாள்.

" நான் நல்லா தான் இருக்கேன். ரொம்ப ஹப்பியா இல்லனாலும் உங்க கூட இருக்கப்போ நான் நிம்மதியா இருக்கேன். முடிஞ்சத பத்தி நாம யோசிக்க வேணாம். இனிமே ஹப்பியா இருக்குறதுக்காக எல்லாமே செய்யலாம். "

" இருந்தாலும் நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ... எனக்கு எல்லாம் நீ தான். "

ஆழ்ந்த குரலில் கூறி அவன் அவளை சிலிர்க்க வைக்க, அப்போதே அவர்கள் இருந்த நெருகத்தையும் யாதேஷ் கிட்டத்தட்ட அவள் மீது மொத்தமாய் சாய்ந்திருப்பதையும் தெளிவாய் கவனித்த ஷிவன்யா கோவப்பழமாய் சிவந்து போனாள்.

" அஹ்... சரி... சரி எனக்கு தூக்கம் வருது. நான் தூங்குறேன், " என அவன் கன்னத்திலிருந்து பட்டென தன் கையை எடுத்துக் கொண்டவள் திரும்பி படுத்துக் கொள்ள ஏதோ ஒரு தீவிர யோசனையில் இருந்த யாதேஷும் தலையை அசைத்துவிட்டு அவன் இடத்தில் படுத்துக் கொண்டான்.

வெட்கம் முகத்தை சூடேற்ற நகத்தைக் கடித்துக் கொண்டு திரும்பி படுத்திருந்த ஷிவன்யா தன்னைத் தானே பெரிய பெரிய பெருமூச்சோடு ஆசுவாசப்படுத்திக் கொண்டு நேராக திரும்பிப் படுத்தாள்.

அந்த சிறிய அசைவில் யோசனையில் இருந்து வெளியே வந்த யாதேஷ் தலையை மட்டும் இவள் புறம் திருப்பினான்.

யாதேஷ் " ஓய் இன்னும் இங்க என்ன டி பன்ற? "

ஷிவன்யா " ஹ்ம் வேற என்ன? தூங்க தான் போறேன், " என அவனைப் பார்த்துக் கொண்டே சொல்ல, யாதேஷ் முளித்தான்.

" ஏய் போய் ரூம்ல படு டி, எனக்குலாம் பயம் இல்ல. "

ஷிவன்யா " இல்ல பரவாயில்ல, நான் மட்டும் அங்க தனியா போய் படுக்கனுமா? "

" ஒரு வாரமா அப்டி தான தூங்குற? இன்னைக்கு மட்டும் என்ன வந்துச்சு புதுசா? " என அவன் கண்களை மட்டும் இவள் பக்கம் ஓரங்கட்ட, உதட்டைக் கடித்துப் புன்னகையை மறைக்க நினைத்தாள்.

" எல்லாம் புதுசா தான் இருக்கு. "

" என்ன புதுசா இருக்கு? "

" எல்லாம் தான். பாட்டி தான் நிறைய சொல்றாங்க, "

" என்ன சொன்னாங்க உன் பாட்டி? "

ஷிவன்யா அவன் முகத்தில் இருந்த குழப்பத்தை இரசித்தபடி பதிலை கொடுத்தாள்.

" ம்ம்ம் கட்டுன புருஷன நம்ம கைக்குள்ளையே வச்சிக்கனுமாம். புருஷன் தூங்குறத கண்ணிமைக்காம பார்த்து இரசிக்கனுமாம். அவனுக்கு பிடிச்ச மாதிரி சமச்சுப்போட்டு பொண்டாட்டி கைப்பக்குவத்த மறக்காத மாதிரி மயக்கி வைக்கனுமாம். அதான் நானும் இனிமே கரெக்ட்டான பொண்டாட்டி ஆய்டலாம்னு முடிவு பண்ணீட்டேன். " என புன்னகை மறையாமல் கன்னங்கள் சிவக்க கூறியவள் அவன் அவள் புறம் தலையை கையில் சாய்த்து அவன் வசீகரப் புன்னகையோடு திரும்பவும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

யாதேஷ் அவளை சீண்டவே அவள் அருகில் குனிந்து காது மடலில் கூறினான். " இது கூட நல்லா இருக்கே, பாட்டி நல்லவேளை தான் பார்த்துருக்காங்க... இன்னும் கூட சேர்த்துப் போட்டு கொஞ்சம் கத்துக்கோ டி, "

" ம்க்கும் இது போதும் ஸாருக்கு. நீங்க நல்ல புருஷனா மாறுன அப்பரமா மீதிய கத்துக்குறேன். "

அவள் வெட்கி சிவந்ததை கண்ணாலே பார்ப்பது போல் அவன் விழிகள் அவளை உன்னிப்பாய் கவனிக்க, ஷிவன்யாவிற்குத் தான் தெரியவில்லை எங்கிருந்து அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்ததென்று.

" சரி சரி தூக்கம் வருது எனக்கு. நீங்களும்...நீங்களும் தூங்குங்க, "

" நான் இப்போ தூங்கீட்டா எப்போ நான் நல்ல புருஷனாகுறது? "

ஷிவன்யாவிற்கு இதயம் மேரத்தான் ஓடுவது போல் அடித்துக் கொண்டது. விட்டால் அது அவனுக்கே கேட்டுவிடும் போல. கேட்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

" அத... அத நா...நாளைக்கு பார்த்துக்களாம். புருஷன் வேலைக்கு போறதுக்கு டையர்டா போக கூடாதுன்னா அ...அவன நல்லா தூங்கவிடனும்னும் பாட்டி சொன்னாங்க. ஆமா... அதனால பேசாம தூங்குங்க! "

தலையணை புறம் அவனை தள்ளிவிட்டு இவளும் திரும்பி படுத்துக் கொள்ள, மனமெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க உறைந்த புன்னகையோடு இரவு முழுவதும் அவளிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையை மனமே இல்லாமல் கை விட்டுவிட்டு அவள் கூறியது போலவே கண்களை மூடி உறங்கத் தொடங்கினான் யாதேஷ்.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro