நினைவில் அவன்: 4
நினைவில் அவன்: 4
ஷிவன்யா சென்னை மாநகரம் வந்து இரண்டு நாள் கடந்திருக்க, தங்கள் புது வீட்டில் தாயும் மகளும் விரைவிலே பழகத் தொடங்கியிருந்தனர். இன்று வெள்ளிக் கிழமை என்பதால் அடுத்த திங்கள் அலுவலகத்திற்கு வேலைத் தேடிச் செல்லலாம் என்ற யோசனையோடே மதிய உணவை கிளறிக் கொண்டிருந்தாள் ஷிவன்யா.
அவளது மகளோ அவளின் பின்னிருந்த உணவு மேஜையின் மீது சமனமிட்டு அமர்ந்து கொண்டு, " இந்த பட்டாம்பூச்சி பேரு காச்சி, அது பேரு பூச்சி, இது தான் காச்சியோட டங்கச்சி.. டங்கச்சியோட பூச்சி, மச்சி! " என மற்றவருக்கு புரியாத படி அவளது மொழியில் தமிழை குழப்பி ஒரு ட்ராயிங் புக்கில் வண்ண வண்ண கலர் ஸ்கெட்சிகளை வைத்து கிருக்கிக் கொண்டிருந்தாள்.
" பூ வைத்தாய் பூ வைத்தாய்.. நீ பூவைக்கோர் பூ வைத்தாய்... மணப்பூ வைத்துப் பூவைத்துப் பூவைக்குள் தீ வைத்தாய் ஓ..ஓ..ஓ..ஓ, " என மெல்லிய ஒலியில் பாடியபடி ஷிவன்யா தலையசைக்க ஷிவானி பேசுவதை நிறுத்தி விட்டு, " ம்ம் ம்மா ஷத்த..மா பாடு! " என கத்திக் கூறினாள்.
திடுக்கிட்டு தன் மகளை திரும்பி நோக்கிய ஷிவன்யா தான் பாடிக் கொண்டிருந்ததை உணர்ந்து அவளின் இதழை அவளே தொட்டுப் பார்த்தாள்.
ஷிவானி தன் தாய் தாலாட்டு பாடிக் கேட்டிருக்கிறாளே ஒழிய அதையன்றி ஷிவன்யா அவள் முன் எதுவும் பாடியதில்லை. அந்த காரணத்தினாலோ என்னவோ ஷிவானி மிகவும் உற்சாகமாய் அந்த மரமேஜையின் மீது தன் கையை கீழே ஊன்றி தடுமாறி எழுந்து நின்று கைதட்டி தன் தாயை உற்சாகப்படுத்தினாள்.
ஷிவானி " பாடும்மா... நா கேக்றேன்! " என்ற ஷிவானியை வேகமாய் தன் கரங்களில் தூக்கிக் கொண்ட ஷிவன்யா, அவளின் குட்டி கரங்கள் அவளது கழுத்தை கட்டியணைத்ததும்
ஷிவன்யா " இல்ல செல்லம் அம்மா பாடுனா நல்லாயிருக்காது. " என சமாதானம் செய்ய முயன்றாள்.
ஷிவானி " அது நீ சொல்லாத, நா சொர்ரேன் (சொல்றேன்)! " என முகத்தை சுருக்கிக் கோவமாய் கூற, ஷிவன்யாவின் நினைவலைகளில் வேறேதோ ஒன்று வந்து சென்றது.
அன்று தனக்கு தேவையான புத்தகங்களை அடுக்கிக் கொண்டே இதே பாடலை எதற்சையாய் முனுமுனுத்துக் கொண்டிருந்த ஷிவன்யா, " நீ...நீ நீ மழையில் ஆட... நான் நான் நான் நனைந்தே வாட... என் நாளத்தில் உன் இரத்தம் நாடிக்குள் உன் சத்தம்... உயிரே... ஹோ! " என்ற மாயக்குரலை கேட்டுத் திரும்பினாள்.
குளியலறையை விட்டு தலைத்துவட்டியபடி வந்தவன் அவளை இடையோடு அணைத்து அவளைப் பார்த்தான்.
" எனக்கு வேலை இருக்கு மாமா, கொஞ்சம் நகர முடியுமுங்களா? " என இவள் புன்னகையோடே கேட்டு அவனை மெல்லமாய் தள்ள, " நீ கொஞ்சம் பாடு. நான் விடுறேன். " என்றவனும் அவளை விடுவதாய் தெரியவில்லை.
" என் குரல் நல்லா இருக்காது, " என இவள் எங்கோ பார்க்க, " அது நீ சொல்லாத, நான் சொல்றேன். " என முறைத்தான் அவன்.
" நீங்க நல்லா இருக்குன்னு தான் சொல்லுவீங்க, " என இவள் பங்கிற்கு முகத்தை சுழிக்க, அவனின் வசீகரப் புன்னகையோடு இவளது மூக்கோடு மூக்குரசியவன், " அதான் உண்மை. " என்றான்.
" தோளில் ஒரு சில நாழி- " என அவன் ஒரு வரியை தொடங்கிய உடனே தன்னையும் மீறி ஷிவன்யா அப்பாடலை தொடர்ந்தாள்.
" தனியென ஆனால்... தரையினில் மீன்..ம்..ம்... முன்பே வா... என் அன்பே வா... ஊனே வா... உயிரே வா... " என பாட்டிசைத்தவளை இன்னும் தன்னோடு சேர்த்தணைத்தவன், " நான்... நானா... கேட்டேன்... என்னை நானே... நான் நீயா... நெஞ்சம் சொன்னதே! " என தொடர்ந்தான்.
" முன்பே வா என் அன்பே வா... ஊனே வா உயிரே வா, முன்பே என் அன்பே வா... பூப்பூவாய் பூப்போம் வா! " என இருவரும் தொடர்ந்து ஒன்றாய் சிரித்தபடியே அருகிலிருந்த கட்டிலில் ஒருவர் மற்றவரோடு அணைப்பிலே சரிந்து விழுந்தனர்.
அந்த நினைவில் தன்னை தொலைத்திருந்த ஷிவன்யா கன்னத்தில் உணர்ந்த ஒரு மென்மையான ஸ்பரசித்தில் கண்களை விழித்துத் தன் குழந்தையை நோக்க, " அழாத ம்மா, நா பாட சொல்லி கேர (கேக்க) மாட்டேன். " என தன் விண்மீன் போன்ற கண்கள் மிளிரக் கூறிய ஷிவானி, அவளின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
தன் கன்னத்தை ஒரு கரத்தால் தொட்டுப் பார்த்த ஷிவன்யா தன் மகளை தானும் மென்மையாய் அணைத்தபடி அவளது தலையை வருடிக் கொடுத்தாள். அவள் என்றோ கற்பனை செய்ததை போல அதே பாடலை பாடுகையில் அவளை இழுத்து அணைக்கவோ அப்பாடலை அவளோடு சேர்ந்துத் தொடரவோ அவன் உடன் இருக்க மாட்டான் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
யாஸ் நிறுவனம்
தன் அலுலகத்தில் அமர்ந்தபடி ஒரு கோப்பை வாசித்துக் கொண்டிருந்த ஆரவ் அவனின் செல்பேசி அடிக்கும் அரவத்தில் அதை நோக்கித் திரும்பினான். அவன் அந்த அழைப்பை ஏற்கும் முன்பாக அது அணைந்து விட, அவனை மீண்டும் திசை திருப்பும் விதமாக கதவு மெல்லிய ஓசையோடு தட்டப்பட்டது.
" எஸ் கம் இன், " என்ற ஆரவ் கதவை திறந்துக் கொண்டு வந்தவரை கண்டு சர்வமும் அடங்கி நின்றான்.
ஆரவ் " சூர்யா? " என அதிர்ச்சியாய் இவன் எழுந்து நிற்க, கதவை அடைத்து விட்டு உள்ளே நுழைந்த சூர்யா என்னும் அந்த நபர் ஆரவை முகமிறுக நோக்கி, " நீங்க இன்னும் தப்பு பண்ணிக்கிட்டு இருக்கீங்க ஆரவ். யாதேஷ் கிட்ட நீங்க உண்மைகள சொல்லியிருக்கனும். " என கூறிய போது சூர்யாவின் குரல் தண்ணீர் குடித்து வெகு நாளாகியதோ என்னும் அளவிற்கு ஆழ்ந்து இருந்தது...
ஆரவ் " என்ன சொல்ல வர, நீ எப்ப? அப்போ- "
சூர்யா " நிறுத்துங்க ஆரவ். நான் என்ன பத்தி பேச வரல... எதுக்காக யாதேஷ் கிட்ட இன்னும் உண்மைய சொல்லாம இருக்கீங்க? இது நீங்க அவளுக்கு செய்ர துரோகமா தெரியலையா உங்களுக்கு? "
ஆரவ் " சூர்யா ப்லீஸ் முதல்ல தண்ணிய குடி டா... நான் எக்ஸ்ப்லைன் பன்றேன். "
சூர்யா " எனக்கு வேண்டாம் ஆரவ். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. அவ உங்கள அண்ணனா தான பார்த்தா? அவ வாழ்கைய எப்படி உங்களால கெடுக்க முடியிது? பதில் சொல்லுங்க ஆரவ்! "
ஆரவ் " போதும் சூர்யா, இப்பவும் சொல்லுவேன். ஷிவன்யா என்னோட தங்கச்சி தான், ஆனா அவ யாதேஷோட வாழ்கைல முடிஞ்சு போன அத்தியாயம். என்னால ஒன்னும் பண்ண முடியல. "
சூர்யா " ஏன்? எதனால முடியல? யாதேஷ்கிட்ட உண்மைய சொன்னா அவரு என் ஷிவாவ தேடி போவாரு. "
ஆரவ் " அவனுக்கு முதல்ல நியாபகம் வரும்னு என்ன நிச்சயம்? அவங்க காதலிச்சு நாழு வர்ஷமாச்சு சூர்யா. இப்போ ஷிவன்யா எங்க இருக்கா என்ன ஆனான்னு எதுவுமே எனக்குத் தெரியல. என்னால யாதேஷ் கிட்ட என்ன சொல்ல முடியும்? அவனுக்கு நியாபகப்படுத்த முயற்சி செஞ்சா அவன் உயிருக்கே ஆபத்தாகீடும்னு டாக்டர் சொல்றாரு சூர்யா. என்னால என்னோட யாதேஷுக்கு அவனுக்கு எதாவது ஆகிடும்னு தெரிஞ்சே ஒரு விஷப்பரிட்சை வைக்க முடியாது. "
சூர்யா " ஆரவ் உங்களுக்கு ஏன் புரிய மாட்டுது? ஷிவன்யாவ நீங்க போக விட்டதே தப்பு! அவளுக்கு அவங்க பாட்டி அந்த நேரத்துல யாரு கூடையோ கல்யாணம் பேசியிருக்காங்க. ஒருவேளை அவளுக்கு கல்யாணம் மட்டுமாகியிருந்தா உண்மை தெரிய வரும் போது நம்ம யாரையும் யாதேஷ் மன்னிக்க மாட்டாரு! "
ஆரவ் " கல்யாணம் முடிவு பன்னாங்களா?! என்ன சொல்ற சூர்யா?! "
சூர்யா " உங்களுக்கு அந்த விஷயமே தெரியாதுல்ல? யாதேஷ லவ் பண்ணத தவிர என் ஷிவா எந்த தப்பையும் பண்ணல ஆரவ். ஆனா எப்போ யாதேஷ் வாழ்கைல அவ வந்தாளோ அப்போலேந்து அவ வாழ்கை கூட போராடிக்கிட்டு தான் இருந்தா... கடைசியா அவரால தான் யாருன்னே தெரியாதவர கல்யாணம் பண்ணிக்கிற நிலமைக்கு போனா... அவ அவருக்காக போராடுனா சரி, ஆனா அது எதுக்குமே பிரயோஜனமில்லாம யாதேஷ நீங்க இப்டியே விட்டு வச்சிர்க்கீங்களே?! "
ஆரவ் " இ-இல்..ல.. சூர்யா... " என ஆரவ் தடுமாறினான்.
ஷிவன்யாவிற்குத் திருமணம் நடந்து முடிந்திருக்குமென கேட்டதிலிருந்தே ஆரவின் இதயம் இறுகி அவனின் மூளையை வேலை நிறுத்தம் செய்ய வைத்திருந்தது. அந்த அதிர்ச்சியினாலே தொப்பென கதிரையில் அமர்ந்த ஆரவ் கதவை இழுத்து மூடி விட்டுச் சென்ற சூர்யாவை கவனிக்கவில்லை.
ஆரவின் கண்கள் கண்ணீரால் நிறம்ப, ஏதேதோ நினைவுகள் அவனின் மூளையிலிருந்து முளைத்துக் கொண்டு அவனை இம்சித்தது. தலையை சாய்த்து அமர்ந்த ஆரவ் ஒரு பெருமூச்சுடன் நினைவலைகளில் மறைந்த ஷிவன்யாவின் முகத்தை தோண்டி எடுத்தான்.
எட்டு வருடம் முன்பாக முதல் முறை அனார்கலி சுடிதார் அணிந்து ஒரு நீண்ட பின்னலுடன் ஒன்றுமறியா குழந்தை போல அந்த கல்லூரியை அன்னாந்து பார்த்துக் கொண்டே அவர்களின் வாழ்கைக்குள் வந்தாள் ஷிவன்யா...
அவளை எதற்சையாய் கண்டு முதல் புன்னகையிலே ஸ்நேகமாகி அவளின் வகுப்பறையைத் தேடி கொடுப்பானென அவனும் அறிந்திருக்கவில்லை. அதே மாலை அவளை மீண்டும் சூர்யாவோடு சந்திப்பானெனவும் அறிந்திருக்கவில்லை.
சில நாட்களிலே ஆரவிற்கு செல்லத் தங்கையாகிப் போனாள் ஷிவன்யா. அவள் கூறினால் எதையும் செய்யும் பாசக்கார அண்ணனாகிப் போனான் ஆரவ். ஆனால் இவர்களின் வாழ்வில் வந்த பிரிவும் எதற்சையானது தானே.
ஆரவ் " இந்த உண்மைய எப்படி அவன் கிட்ட சொல்லுவேன்? அவனுக்கு என்னைக்காவது நியாபகம் வந்து அவளப்பத்தி கேட்டா அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னு எப்படி சொல்லுவேன்? தப்பு பண்ணீட்ட டா ஆரவ்! அவ அவ்வளவு பேசும் போது நீ அவள தடுத்துருக்கனும்! யாதுவோட அக்ஸிடென்ட்னால அவள அப்படியே விற்றுக்கக் கூடாது! ஹையோ நானே என் தங்கச்சி வாழ்கையையும் கெடுத்துட்டேன்! " என கத்தி கதற இயலாமல் தலையிலடுத்து அவன் கதற, அவனின் கண்ணீர் பல நாள் கழித்து மீண்டும் வழி கண்ட ஆனந்தத்தில் விழி தாண்டி வலிந்தது.
யாதேஷின் வீட்டில்
மதிய உணவை உண்டு விட்டு அப்போதே சமையலறையை விட்டு வெளியே வந்த விஜித்தா, தன் அன்னையோடு அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்த ஸ்வேத்தாவை கவனித்தாள்.
விஜித்தா " வாங்க வாங்க ஸ்வேத்தா... எப்போ வந்தீங்க? என்ன கூப்ற்றுக்களாம்ல? சரி சொல்லுங்க எதாவது சாப்டுறீங்களா? " என முகம் மலர அன்பாய் வரவேற்த்தாள்.
ஸ்வேத்தா " அதெல்லாம் வேணாம் விஜித்தா... இப்படி வந்து உக்காரு, வா. "
விஜித்தா " இதோ வந்துட்டேன். ஹான் அப்பரம் அத்தையும் மருமகளும் என்ன பேசீட்டு இருக்கீங்க? " என சாதாரணமாய் பேச்சைத் தொடங்கினாள்.
சாதனா " எல்லாம் உன் அண்ணன பத்தி தான். " என்றதும் விஜித்தாவின் புருவம் ஒரு நொடி சுருங்கியது..
விஜித்தா " அண்ணன பத்தியா? என்னதும்மா? "
சாதனா " ஸ்வேத்தாக்கு வயசு ஏறீட்டே போதுல்ல டா. பொண்ணுங்கள கல்யாணம் பண்ணாம வீட்லையே எப்படி வச்சிருக்குறது சொல்லு? இப்போவே ஸ்வேத்தாக்கு இருவத்தஞ்சு வயசாகுது. உன் அண்ணனுக்கு வயசானா பரவாயில்ல அவன் ஆம்பல புள்ள, என் மருமக அதுக்கு என்ன பண்ணுவா? அதான் கல்யாணத்த பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். "
விஜித்தா " அண்ணனுக்கும் ஸ்வேத்தாக்கும் கல்யாணமா? "
சாதனா " பின்ன இல்லையா? முன்னாடியே பேசி வச்சது தானே? உன் அண்ணன் கூட கேக்கல, நீ என்னடி இப்படி கேக்குர? "
விஜித்தா " அ-அது... அண்ணனுக்கு ஓக்கேவா கல்யாணத்துல? நீங்க கேட்டீங்களா? "
சாதனா " என் மருமகள அவனுக்கு எப்படி டி புடிக்காம போகும்? அவன் எப்பவோ சம்மதம் சொல்லீட்டான். இனிமே கல்யாணம் கச்சேரி தான்! " என புன்னகையோடு அமர்ந்திருந்த ஸ்வேத்தாவிற்கு அவர் நெட்டி முறிக்க, விரக்தியாய் அவர்களோடு புன்னகைத்த விஜித்தா, " நான் இதோ வந்துடுறேன், " என அங்கிருந்து எழுந்து அவளது அறைக்குச் சென்றாள்.
யாருக்கோ டயல் செய்து அழைப்பு விடுத்த விஜித்தா எடுத்த எடுப்பிலே, " அங்கில், அண்ணனுக்கு எப்போ எல்லாம் நியாபகம் வரும்? " என கேட்டாள்.
அப்புறமிருந்த மருத்துவரோ பெருமூச்சுடன் கூறினார், " நீ எப்பவும் கேக்குர இதே கேள்விக்கு என்னோட அதே பதில் தான் விஜி... யாதேஷோட கண்டிஷன் இப்போ வர சரியில்ல, அவனுக்கு தானாவே நியாபகம் வரலாம், வராமலும் போகலாம். என்னால ஒரு பதிலும் சொல்ல முடியாது. "
விஜித்தா " அங்கில் அம்மா அண்ணனுக்கு கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க. நான் என்ன செய்யட்டும்? அவனும் எதுவுமே நியாபகமில்லாம ஓக்கே சொல்லிட்டான்!!"
மருத்துவர் " அப்போ நம்மளால ஒன்னும் செய்ய முடியாது மா. உன் அண்ணனுக்கு வலுக்கட்டாயமா நாம நியாபகத்த வர வைக்க முடியாது. வர வைக்கக் கூடாது. அதையெல்லாம் அவனால தாங்கிக்க முடியாது. அவனுக்கும் கல்யாணத்துக்கு சம்மதம்னா அவன அவன் போக்குலையே விற்றுமா. அவன் புது வாழ்கைய இப்படியே தொடரட்டும். " என அவர் பங்கிற்கு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்...
விஜித்தா " இப்போ நான் என்ன செய்றது? உங்கள மறந்துட்டு அவன் ஸ்வேத்தாவ கல்யாணம் பண்ணிக்க போறானாம் அண்ணி! நான் இப்போ என்ன செய்யட்டும்? அவன இப்டியே விட்டுடட்டுமா? ஆனா என்னைக்காவது ஒரு நாள் அவனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பரம் உங்க நியாபகம் வந்தா அவனே அவன வெறுத்துடுவான். நீங்க எங்க கூடையே இருந்துர்க்களாம் அண்ணி. " என தனக்குள்ளே மருகிக் கொண்டாள்.
ஷிவானியின் தலை கோதியபடி மெத்தையில் அமர்ந்திருந்த ஷிவன்யா தன் செல்பேசியில் பல வருடங்கள் கழித்து கண்டெடுத்த அப்புகைபடத்தை நோக்கிக் கொண்டிருந்தாள். அது எதற்சையாய் சிக்கியதோ அல்ல இவளே தேடிச் சென்றாளோ, அவளே அறிவாள். அது ஆரவ் பார்த்த அதே புகைபடம் தான் போலும்.
ஷிவன்யா " நீங்க என்ன விட்டு போகாமையே இருந்துர்க்களாம். இத்தன வர்ஷம் கழிச்சு நேர்ல அதிசயமா நீங்க என் முன்னாடி வந்தாலும் என்ன உங்களுக்கு தெரியாது. ஆனா அது நடக்கப் போறதில்ல. நீங்க என் கண்ணுக்கு தெரியப் போறதுமில்ல... "என ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினாள்.
வேறேதோ சிந்தனையில் யாதேஷின் அருகிலிருந்த வேறொரு ஆண் மகனை கண்டு கண்ணீர் மழ்க, " நீங்களும் என்ன விட்டு போய்ட்டீங்கல்ல? அன்னைக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்பரம் நா அழுதுட்டே போயிருக்கக் கூடாது. என்னால தான் நீங்க இறந்துட்டீங்க. என் வாழ்கைல எனக்குன்னு பாசம் வைக்க இருந்த எல்லாரும் என்ன விட்டு போய்ட்டீங்க. ஏன் என்ன விட்டு போனீங்க? என் கூட எப்பவும் எனக்கு துணையா இருப்பேன்னு சொன்னீங்க? அப்போ அதெல்லாம் பொய்யா? என்ன தான் அளவுக்கதிகமா காதலிக்கிறதா சொன்னீங்களே அதெல்லாம் பொய்யா? ஏன் என்ன விட்டு போனீங்க? புதுசா ஆரம்பிச்ச வாழ்கைல நீங்களாவது எனக்கு துணையா இருக்கீங்கன்னு நெனச்சேன். ஆனா நீங்களும் ஏன் போனீங்க? இப்போ எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்லல்ல?! " என தடம் புரண்ட கண்ணீரை துடைக்க மனமின்றி அழுதவளை உறுத்து நோக்கிக் கொண்டிருந்த சூர்யாவின் கண்களிலும் கண்ணீர் தேங்கியிருக்க, " நான் உனக்காக இருக்கேன் ஷிவா, நான் எப்பவும் உனக்காக இருப்பேன். " என தனக்குள்ளே கூறிக் கொண்டு வந்த வழியிலே திரும்பி சென்றார்.
விழி மீறிய வழி நாடி...
ஹாய் இதயங்களே! இந்த தடவ காணாபோயிட்டு இவ வரவே மாடாடன்னு தான நெனச்சீங்க...? ஹிஹிஹிஹிஹிஹி நான் வந்துட்டேன்... ஒன்னும் இல்ல எனக்கு எப்பவும் போல எக்ஸம் ஸ்டார்ட் பண்ணீட்டாங்க இதயங்களே... அதான் காணா போயிட்டேன். ஆனா இந்த புதன் அடுத்து ஞாயிறும் யூடி வந்துடும். நான் எக்ஸம் முடிச்சிட்டு நிறையா யூடி போட ட்ரை பன்றேன்! இப்போ டாட்டா!!
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro