சாலையோரம் பூக்கள்: 56
ஷிவன்யா வேகமாக அவள் அம்மாவை அணைத்துக் கொள்ள ஆசை தீற அவளை அணைத்துக் கொண்ட ராசாத்திக்கும் கண்ணீர் தடம் புரண்டு ஓடியது.
" அம்மா... அம்மா எப்டிம்மா இருக்க? "
" நான் எப்டி இருந்தா என்ன டி உனக்கு? பெத்த தாய பார்க்கனும்னு நாழு வர்ஷத்துல ஒருக்க கூட தோனலையா? "
தப்பு செய்து மாட்டிக் கொண்ட குழந்தைப் போல் தரையை அளந்த ஷிவன்யாவிற்கு கைகள் எல்லாம் நடுங்கியது.
" இல்ல அம்மா... எனக்கு... எனக்கு உன் முன்னாடி வந்து நிக்க தைரியமே இல்லம்மா. நீ என் மேல கோவமா இருப்பன்னு தான் நான் இவ்ளோ நாளா வரல... உன் முன்னாடி... உன் முன்னாடி எப்டிம்மா வந்து நான் நிப்பேன்? "
" உன் மேல எனக்கு என்ன டி கோவம்? நான் ஏன் டி தங்கம் கோவமா இருக்கப் போறேன்? நீ எங்கையோ சந்தோஷமா இருக்கன்னு தான் தினம் தினம் நான் நெனச்சிட்டு இருந்தேன். ஆனா நீ எதேதோ நினைச்சிட்டு தினம் தனிமைல செத்துட்டு இருந்துருக்க... அம்மாகிட்ட ஏன் கண்ணு நீ வரல? "
" இல்லம்மா... அப்பாக்கு... அப்பா... என்... என்னால... என்னால தான் அப்பாக்கு... அன்னைக்கு... "
மறைந்திருந்த நினைவுகள் மீண்டும் கண் முன் நிழலாடிட அதற்கு மேல் அவளால் எதையும் இழுத்துப் பிடிக்க முடியவில்லை. உடைந்து அழுத மகளை இழுத்து வேகமாக அணைத்துக் கொண்ட ராசாத்தி பதறி விட்டார்.
" தங்கம் ஏன் டா அழுவுர? உன் அப்பா எங்கையோ இருந்து உன்ன பார்த்துட்டு தான் இருப்பாரு. அந்த மனுஷனோட காலம் ஏதோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சு ஆனா அவரு நிறைவா தான் போனாரு சாமி... உன்ன பத்திரமான இடத்துல சேத்ததுக்கு அப்பரம் நிம்மதியா தான் அந்த மனுஷன் கண்ண மூடுனாரு. உன்னோட சந்தோஷம் தான் அவரோட சந்தோஷம். உன்னால உன் அப்பாக்கு எதுவும் ஆவல டி. உன்ன ஊருக்கு அனுப்புனப்போவே தான் நான் படிச்சுப் படிச்சு சொன்னனே... உன் அப்பா இறப்புக்கு நீ காரணம் இல்ல சாமி, நீ காரணம் இல்ல... "
தேம்பி தேம்பி தாயின் நெஞ்சில் சாய்ந்த ஷிவன்யா மொத்த வலியையும் அங்கே இறக்கி வைத்தாள்.
சசி " சரி போதும் போதும் அக்கா உன் அழுகாச்சி. மாமா என்ன உன்ன சமாதானப்படுத்தி முடிச்சிட்டாரா? உன்ன ஒரு வாரம் தேட விட்டதுக்கு நீ இன்னும் அவர ஒரு வாரம் அலைய விடுவன்னுல நெனைச்சேன். " என பேச்சை மாற்ற முயன்றாள்.
" என் தங்கமே, நான் உனக்கு என்னமா பாவம் செஞ்சேன்? ஏன் என் வாழ்கைல ஒல வைக்கிற? " யாதேஷ் சசியை கண்டு சிரிக்க ராசாத்தி அவர் மருமகனுக்கு சப்போர்ட்டாக வந்தார்.
" என் மருமகன ஏன் டி வம்பிழுக்குற? உனக்கும் உன் அக்காக்கும் கூட என் நியாபகம் வரல, பாரு உங்க மாமா தான் நியாபகம் வந்த உடனே ஊருக்கு என்ன பார்க்க வந்தாரு, "
ஷிவன்யா இதை கேட்டு ஆச்சர்யமாக யாதேஷைத் திரும்பிப் பார்க்க அவன் புன்னகைத்துவிட்டு வேறெதுவும் கூறாமல் நண்பர்களையும் சூர்யா விஜித்தா சசியையும் உள்ளே வரவேற்று அமர வைக்க, அவனிடம் ஓடி வந்த ஆர்யா
" மாமா மாமா ஷிவானி எங்க? " என வேகமாய் கேட்க அவனை தூக்கிக் கொண்ட யாதேஷ்
" ஷிவானி தூங்குறா ஆர்யா... நாம போய் அவள எழுப்புவோம் வரியா? "
ஆர்யா ஆர்வமாய் தலையாட்டிய நேரம் இவர்களின் பேச்சு சத்தத்தில் ஷிவன்யா யாதேஷை மீண்டும் திரும்பி பார்க்க, தான் பார்த்துக் கொள்வதாய் கண் காட்டிய யாதேஷ் அவன் மகளை ஆர்யாவுடன் எழுப்பி முகம் கழுவி பல்துளக்கி உடை மாற்றிவிட்டு ஒரு கையில் ஆர்யாவையும் மறுகையில் ஷிவன்யாவையும் தூக்கிக் கொண்டு வந்தான்.
அந்த அரைமணி நேரத்திற்குள்ளாக ஷிவன்யா அழுது ஓய்ந்து அம்மாவிடமும் என்ன நடந்தது என்று கேட்டு அறிந்து கொண்டிருந்தாள். தன்னவன் தனக்காக எத்தனை தூரம் சிந்திக்கிறான் என நினைத்து மேலும் மேலும் அவள் காதல் சிகரம் இமயத்தை மிஞ்சியது.
ராசாத்தி தன் மகளை உரித்து வைத்தது போல் மருமகனின் கண்களோடு வந்த குட்டி தேவதையை கண்டு உண்மையில் மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டார்.
மாமாக்கள் அத்தைகள் சசி சித்தி என அனைவரையும் பார்த்து பஞ்சுமிட்டாய் கடையைப் பார்த்தது போல் ஷிவானி வாயெல்லாம் பல்லாக அவர்களிடம் ஓட சசி அவளை தூக்கி கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தாள்.
சசி " தங்கம் உன்ன பாக்க யாரு வந்துருக்காங்க பாரு! பாட்டி வந்துருக்காங்க, "
ஷிவானி " பாட்டியா? ஷிவானிக்கு பாட்டியா சித்தி? "
அவள் கேள்வியில் கண்ணீரோடு அமர்ந்திருந்த ஷிவன்யாவைத் திரும்பி பார்த்த ராசாத்தி அவள் கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு எழுந்து பேத்தியிடம் சென்றார்.
" என் வைரமே உங்கம்மாவ உறிச்சு வச்சிருக்க கண்ணு. நான் தான் டா உன் பாட்டி. நான் தான் உன் பாட்டி, " என ஷிவானியின் முகம் தொட்டு அவளுக்கு நெட்டிமுறித்த ராசாத்தி, " உன் பேரு என்ன டா செல்லம்? "
ஷிவானி தலையை தூக்கி அவள் அம்மாவையும் அப்பாவையும் பார்க்க, ஷிவன்யா வேகமாக தலையை ஆட்டியதும் " என் பேரு ஷிவானி... பாட்டி, " என நன்கு யோசிவிட்டு கூற
ராசாத்தி அவளுக்கு மீண்டும் நெட்டி முறித்தார்.
" அழகான பேரு தங்கம். "
குடுகுடுவென அவரிடம் ஓடி வந்த ஆர்யா " பாட்டி பாட்டி அப்போ என் பேரு? "
நேற்று ஊருக்கு வந்ததும் மாலை நேரம் போலாகவே சசி ராசாத்தியை சூர்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் ஆர்யா அவருடன் நன்கு ஒட்டிக் கொண்டான். திருமணம் ஆனதும் சூர்யாவை இப்போதே பார்க்கும் ராசாத்திக்கும் அவர்களை மிகவும் பிடித்துவிட்டது.
இத்தனை நாளும் எல்லாம் தெரிந்தும் வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளே வைத்து புழுங்கிக் கொண்டிருந்த ஷிவனேஷை இரண்டு அடி அடித்து ' ஒரு வார்த்தை சொல்ல வேண்டியது தான டா படவா ' என அதட்டியதும் தான் அந்த தாயின் மனம் அமைதியானது.
" உன் பேருக்கு என்ன டா ராஜா கொறச்சல்? அம்மா உனக்கு அம்சமான பேரு வச்சிருக்காங்க, " என ராசாத்தி ஆர்யாவின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டதும் பெருமையாக சிரித்துக் கொண்டான் குட்டி ஆர்யா.
ஆரவ் " சரி அழுகாச்சி ட்ரமாவெல்லாம் முடிஞ்சிதுன்னா வாங்க அப்டியே சாப்பாடு சாப்ற்றுவோம். வயிறு பசிக்கிது ரொம்ப நேரமா, "
" உன் வேலைல கரெக்ட் ஆ இருந்துக்க டா நீ, " விஜித்தா அவன் தோளை இடிக்க
" நான் என்ன தப்பா சொன்னேன்? சாப்புடத்தான உயிர் வாழுறோம்? உணவின்றி உயிரில்லை. நீரின்றி உலகில்லைன்னு உன் தமிழ் மிஸ் உனக்கு சொல்லிக் குடுக்கலையா? "
" ஆமா சொல்லிக்குடுக்கல, நீ மட்டும் தான் உலகத்துல திருக்குறள் படிச்சிருக்கல்ல... "
" பின்ன அந்த ஒரு பாய்ன்ட் அ மட்டும் எத்தனை கட்டுரைக்கு எழுதியிருக்கேன் தெரியுமா? ஐம் அ ஜீனியஸ் டார்லிங், " ஆரவ் ராஜா பகவத் போல் ஒரு போஸ் கொடுத்தான்.
யாதேஷ் " என் மாமியார் முன்னாடி மானத்த வாங்காத டா எரும, "
சசி இவர்களின் ஆட்டத்திற்கு எல்லாம் முடிவு கட்டி ஆரவையும் ஷிவனேஷையும் உணவு வாங்க அனுப்பி வைக்க சூர்யா ஷிவன்யாவை அமர வைத்துவிட்டு அனைவருக்கும் டீ போட சமையலறைக்குச் சென்றதும் விஜித்தாவும் சசியும் அவளுடன் இணைந்து கொண்டனர்.
ஷிவானிக்கு என்ன தான் உடனே ராசாத்தியிடம் ஒன்ற தயக்கமாக இருந்தாலும் ஷிவன்யாவோடு அமர்ந்து ஆர்யாவும் ராசாத்தியும் பேசி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக ராசாத்தியிடம் நகர ஆரம்பித்தாள்.
ஷிவன்யா ஆசை தீற ஷிவானி விளையாடுவதை பார்க்க மீண்டும் மீண்டும் துளிர்ந்த கண்ணீரை புன்னகையோடு துடைத்துக் கொண்டிருந்தவள் பின் எழுந்து ஒரு அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அவளைப் பின் தொடர்ந்து வந்த உருவம் உள்ளே வந்து கதவை மூடும் முன்னே அவன் நெஞ்சில் சாய்ந்த ஷிவன்யா அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
" யமுனா என்ன டி? இன்னும் எவ்ளோ தான் அழுகப் போற நீ? என்னோட பொண்டாட்டி இனிமே அழ கூடாது. "
" மாமா இன்னும் எனக்காக என்ன என்னலாம் பண்ணுவீங்க மாமா? ஏன் இப்டி சுயநலமே இல்லாம இருக்கீங்க நீங்க? உங்கள காக்க விட்டுட்டு நான் போனப்போ கூட எனக்காக இவ்ளோ யோசிச்சிருக்கீங்க... ஏன் மாமா? "
அவள் முகத்தை உயர்த்தி கண்ணீரை விரலால் துடைத்து எடுத்த யாதேஷ் ஷிவன்யாவின் கன்னத்தை கடிக்க அவள் வலியில் முகம் சுருக்கி அவனை தள்ளிவிட்டாள்.
" ஐயோ மாமா நான் என்ன சொல்றேன் நீங்க என்ன பண்றீங்க? "
" வலிக்கிதுல்ல? இனிமே உனக்கு வாயால அழுவாதன்னு சொன்னா எல்லாம் பத்தாது. இதான் பண்ணனும். " என அவன் மிடுக்காய் சிரிக்க அவள் அவனை கேவலமாகப் பார்த்தாள்.
" உன்ன போய் தேடி வந்தேன்ல? என்ன சொல்லனும், போயா நான் போறேன், " என திரும்பி நடந்தவளை பிடித்திழுத்து அணைத்துக் கொண்டவன்
" ஸாரி ஸாரி கண்ணம்மா. இன்னும் கொஞ்ச நேரம் இப்டி இரு ப்லீஸ் ப்லீஸ், "
மீன் போல துள்ளி எழுந்து தள்ளி ஓடத் தான் அவளுக்கும் தோன்றியது. ஆனால் அவன் அமைதியான இதயத்துடிப்பு அவளை தாலாட்டாக சற்று ஓய்விற்கு அழைக்க கொஞ்சம் பாவம் பார்த்து அவன் கைவளைவில் தஞ்சமடைந்தாள்.
அவர்களின் காதல் மொழியை வாய்மொழியாக்கி இசைத்துக் கொண்டிருந்தது விஜித்தா சமையல் அறையில் ஒலிக்கவிட்ட அந்த பாடல்.
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro