காதலில் வலி: 16
அன்று முதல் ஒரு முறை கூட வாழ்வில் காதலென்பது அதுவும் தானிருக்கும் இந்த ஒரு நிலையில் வேண்டவே வேண்டாமென்ற தனிப்பட்ட முடிவிலிருந்தான் யாதேஷ். இருந்தும் காதல் வேண்டாமென கூறும் அனைவரும் வாழ்வில் மலையேறவா போகிறார்கள்? அது போல் தான் அன்று முதல் முறையாய் அவன் செவிகளை தீண்டியது அந்த தேவதையின் அதாவது அவன் வாழ்வின் நாயகியின் குரல்...
பார்த்தவுடன் தோன்றும் காதல் கதையில் மட்டுமல்லாது சிலரது நிஜ வாழ்கையிலும் நிச்சயம் நிகழுமென்பதை ஒரு பொதுவான கருத்தாகவே கொண்டிருந்த யாதேஷின் மனதில் நம் நாயகியை கண்ட முதல் நாள் அக்கருத்தை எண்ணி சந்தேகம் எழுந்தது.
பின் என்ன? பார்க்கவில்லை... பெயர் கேட்கவில்லை... பழகவில்லை... அவளைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ள முணையவில்லை...
இவ்வாறிருக்கையில் இது காதலாக இருக்குமோ என அவன் கூறியிருந்தால் ஆரவே அவனை மடையனா நீ என்பதை போல் தான் பார்த்திருப்பான்.
என்ன செய்வது? காதல் என்று, எவ்வாறு, ஏன், எதற்காய் வருகிறதென தாமஸ் ஆல்வா எடிஸனாலும் கூற முடியாதே...
ஆனால் மலிவற்ற மூளைக் கொண்ட நம் நாயகன் பெண்ணவளைத் தள்ளி வைத்தால் போதும், காதலதை மனதின் அடி ஆழத்தில் புதைத்தால் போதுமென எண்ணி அதற்கான அடிகளை எடுத்து வைத்தான்.
ஆனால் தள்ளி வைத்த எதுவாயினும் அதன் அழுத்தம் குறையும் பொழுது சென்ற வேகத்திலே மீண்டு வரும் என்பதையும், விதையென்றறியாமல் விதைக்கப்படும் காதலென்ற விதை என்றேனும் ஒரு நாள் மண்ணை பொத்துக் கொண்டு வளரத் தான் போகிறதென்றும் அறியாதிருந்தானே அந்த மாயவன்...
இன்று கண்ணில் வலியுடன் மனதில் அவள் விட்டுச் சென்ற இரனத்துடன் மேடையேறி அக்கூட்டத்தின் முன் தன்னந்தனியே தான் இது வரை வெளிப்படுத்தாத தன் காதலை பாடலுடன் வெட்டவெளியில் போட்டுடைத்தான்.
அவன் பாடிய ஒவ்வொரு வரியிலும் ஒரு வலி... அவனவளை காயப்படுத்தும் எண்ணத்தில் அவன் எதுவும் செய்ய நினைக்கவில்லை... தான் எப்படி போனால் என்ன? தன்னவளாவது ஒரு நல்வாழ்வை தேடிச் செல்லட்டுமென்ற தன்னலமற்ற எண்ணம் தான் அவனுக்கு...
இவை அனைத்தையும் பார்த்தபடி நின்ற ஆரவிற்கு தன் நண்பனுக்கு ஆறுதலாகவோ அல்லது தனக்கு ஆறுதலாகவோ ஏதேனும் சொல்லிக் கொள்ள வேண்டுமென்று எதுவும் தோன்றவில்லை.
அன்று யாதேஷின் வற்புருத்தலினால் ஜடம் போல யாதேஷுடனே வீட்டிற்குச் சென்றான். ஆனால் ஆரவின் மன காயங்களும் ஒரு முடிவு பெற எண்ணிய இறைவனின் அருளும் நடந்தேறியதன்று.
யாதேஷின் வீட்டில்,
இரவு யாதேஷ் உணவை முடித்துவிட்டு வழக்கத்திற்கு மாறாக விரைவாய் உறங்கியிருக்க, அவனருகில் இன்னமும் உறங்காமல் புரண்டுபுரண்டு பூனைக்கும் மேலாக உடலை முறுக்கிக் கொண்டிருந்தான் ஆரவ். காலை முழுவதும் யாதேஷ் கேட்ட காதல் பாடல்களினால் வந்த வினையா அல்ல அவ்வப்போது சௌமியாவின் நினைவு வந்து தாக்கிய தாக்கத்தினாலோ தெரியவில்லை, ஆரவிற்கு அந்த நொடி எங்கேனும் தனியே சென்று அழ வேண்டுமென்ற ஒரே எண்ணம் மட்டும் தான் இருந்தது.
ஆனால் எங்கு தான் எழுந்து விட்டால், தன்னருகிலே தூங்காமல் தான் இருக்கிறான் என நினைத்து உறங்கும் யாதேஷ் அவனருகில் இல்லாததை கண்டுபிடித்து விழித்துக் கொள்வானோ என்ற பயத்தில் வெகு நேரமாய் புரண்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தான் தனது மனகுமறலை அடக்கியாள முடியும்?
மணி பணிரெண்டை கடந்த நேரமெல்லாம் ஆரவ் யாதேஷின் அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு ஓட்டம் பிடித்திருந்தான். தனியே வந்து ஒரு நிமிடம் நின்றிருக்க மாட்டான், மொட்டை மாடியின் இரும்பு கதவை இழுத்து மூடிவிட்ட அடுத்த நொடி தாரைதாரையாய் சிந்தியது அவனது கண்ணீர்.
அவன் கத்திய கதறல் ஒன்று அவ்வீட்டின் வீதி முணை வரையிலும் எதிரொலிக்க, மறுவினாடியே தன் வாயை இரு கைகளாலும் மூடிக் கொண்டு முட்டிகளில் விழுந்து அழுதான் அந்த இளைஞன்.
" ஏன் டி இப்படி செஞ்ச? ஏன்?! ஏன் சௌமியா?! " என தனக்குள்ளே மருகிக் கொண்டு சுவரோடு சாய்ந்தவன் மௌனமாய் கண்ணீர் சிந்தி தவித்த அந்த நேரம் அவன் பின்னிருந்து ஒரு குரல் கேட்டது.
" ஆரவ்...? தூங்கலையா நீ? "
சடாரென திரும்பிய ஆரவ் அவன் அமர்ந்திருந்த சுவரின் மறுபுறத்தில் மஞ்சள் நிற சுடரொளியில் இரு புத்தகங்களை தரையில் கடைப்பரப்பி இரட்டை சடையும் சுடிதார் தாவணியுமாய் அமர்ந்திருந்த அவனது அத்தை மகளை கண்டான்.
விஜித்தாவின் முகத்தில் அப்படி ஒரு அமைதி...
அவளையே ஒருநொடி உருத்து நோக்கிக் கொண்டிருந்தவன் சட்டென தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான். விஜித்தா அந்த மெழுகுவர்த்தியோடே எழுந்து அதை அருகில் இருந்த கைப்பிடி மீது வைத்து விட்டு ஆரவை நோக்கினாள்.
" நான்...நான் தூங்கனும் விஜி. நீ இங்க என்ன பன்ற? தூங்கலையா? "
" இல்ல... இரெண்டு நாளுக்கு அப்பரம் மக்ஸ் எக்ஸம் இருக்கு... அதான் வொர்க்ஔட் பண்ணீட்டு இருந்தேன், " என பதில் அளித்தபடியே ஆரவ் சாய்ந்திருந்த சுவரில் சாய்ந்தமர்ந்த விஜித்தா அவனையும் சைகை செய்து கீழே அமரச் செய்தாள். " என்னாச்சு இப்போ? ஏன் உன் முகமெல்லாம் வேர்த்து போயிருக்கு? உன் சேமியா நீ என்ன செய்யிறன்னு வேவு பார்க்குறதுக்கு ஃபோன் பண்ணீட்டாளா என்ன? "
அவளை கண்களை விரித்து நோக்கிய ஆரவ் படபடத்தான். " அவ வேவு பார்த்தா நான் ஏன் பயப்புடனும்? நான் ஒன்னும் செய்யலையே! "
" ஆமா ஆமா நீ ஒன்னும் செய்யல தான். இருந்தாலும் இப்படி அழகா ஒரு லவ்வர் இருந்தா உன் சேமியா என்ன? உலகத்துல எந்த பொண்ணும் நிம்மதியா இருக்க மாட்டா... எவ எப்போ வந்து நம்ம ஆள தூக்கீட்டு போவாளோன்னு காவல் காத்துட்டே தான் இருக்கனும், " என குறும்பாய் கூறி அவள் சிரிக்க, அவளது தலையில் வலிக்காது தட்டிய ஆரவ் குறுநகையோடு தொடர்ந்தான்.
" எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசாத வாலு! "
அவனை கண்டு புன்னகைத்த விஜித்தா " பொண்ணுகளோடு மனசு இன்னோறு பொண்ணுக்கு தான் புரியும்... ஃபக்ட் மன்! " என தோளை குலுக்கினாள்.
நேரம் உருள ஆரவ் தன் அழுகையை சற்று மறந்து கண்களில் தூக்கம் சொக்கவே விஜித்தாவிடம் விடைபெற்று உறங்கச் சென்றான். அவன் மனதில் பல நாள் கிட்டாத ஏதோ ஒரு நிம்மதி. விஜித்தா அவன் அழுததை பற்றி கேட்கவில்லை. அவன் அந்த நேரத்தில் தனியே வந்ததை பற்றி கேட்கவில்லை. அவனிடம் எவ்வொரு குதர்க்கமான கேள்வியுமில்லாது பேசிபேசியே அவன் அங்கு வந்ததன் முழு காரணத்தையே மறந்திருந்தான் ஆரவ்.
அவன் செல்லும் முன் இறுதியாய் அவனது கைப் பிடித்து அவள் அவனை உருத்து நோக்கிய போது விஜித்தாவின் கண்கள் அவனிடம் ஏதோ கேட்பது போலிருந்தது.
சற்றே குழப்பத்தோடு பார்த்திருந்தவன் என்ன என்பதை போல் அவளிடமே கேட்க, தலையை இடவலதாய் ஆட்டிய பெண்ணவள் " இத்தன நாளா நான் ஏன் உன் கண்ணுக்குத் தெரியவே இல்லன்னு யோசிச்சுப் பார்த்தேன்... " என கூறிவிட்டு அவளும் எழுந்து அவளது புத்தகங்களை அடுக்கினாள்.
இறுதியாக ஆரவிற்கு முன் கீழே இறங்கியவள் அந்த கும்மிருட்டில் திரும்பி அவனை பார்த்துவிட்டு " சௌமியா இல்லனா உனக்கு வேற யாருமே இல்லன்னு ஆகிடாது ஆரவ். என்னையும் பாரு... உனக்கே புரியும். " என கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்.
அனைத்தையும் அசை போட்டபடி யாதேஷின் அருகில் பொத்தென விழுந்த ஆரவின் சிந்தையிலும் அதே கேள்வி. இத்தனை நாள் விஜித்தா ஏன் தன் கண்களுக்கு தெரியவில்லை? ஏன் அவ்வாறு அவள் கேட்க வேண்டும்? சௌமியாவை பற்றி அவள்— என அவன் முழுதாய் சிந்திக்கும் முன்னமே அவன் கத்திய கதறல் தெருமுணைக்கே கேட்ட போது அருகிலிருந்த அவளுக்கும் கேட்டிருக்கும் என்ற உண்மையும் உறக்கமும் அவனை ஆறத்தழுவியிருந்தது.
மறுநாள் விடியும் முன்னமே எழுந்து கொண்ட ஆரவின் முகத்திலும் மனதிலும் ஒரு தெளிவு. இனிமேலும் சௌமியாவாக இருந்தாலும், சரி சேமியாவாக இருந்தாலும் சரி, அவன் அழப் போவதாய் இல்லை. அவளே இவனை விட்டு விட்டுச் சென்று எவனோடோ மகிழ்ச்சியோடு வாழும் பொழுது தனக்கு எல்லாமுமாய் உள்ள அனைவரும் தன்னோடு இருக்கையில் தான் ஏன் இன்னமும் விட்டுச் சென்றவளை எண்ணி அழ வேண்டுமென்ற தீர்மானத்தோடு யாதேஷை அடித்து எழுப்பினான்.
கும்பகர்ணன் பரம்பரைக்கே டஃப் கொடுப்பதை போல் உறங்கிக் கொண்டிருந்த யாதேஷ், அரவின் அடிகளில் கத்தியபடியே எழுந்தமர, அவன் சட்டையை இழுத்துப் பிடித்து அவனுக்கு லெஃப்ட் அண் ரைட் என முதலில் இரு அறைகளை பரிசாய் கொடுத்த ஆரவ் " மடசாம்பிராணி! என்ன டா நெனச்சிட்டு இருந்த நீ?! என் கிட்ட எப்போவோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஷிவன்யாவும் அவ்வளவு பாடு பற்றுக்க மாட்டா, நீயும் கஷ்டப்பட்டுட்டு இருந்துருக்க மாட்ட! காதல்ன்னா வலிக்கத் தான் டா செய்யும்! அதுக்குன்னு உன்ன மட்டுமே நெனச்சிட்டு இருந்தவள அவ ஊருக்கு தொரத்தி விற்றுக்க! நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது! உன் லவ்வ அவ கிட்ட ஒத்துக்குட்டுத் தான் ஆகனும் இல்லைன்னா நான் உன் கண்ணு— இல்ல உன் காதுக்கு முன்னாடியே நல்லா கேக்குற மாதிரி அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்! "
சரி கல்யாணம் பண்ணி வை போ என யாதேஷ் கூறியிருப்பான் தான் ஆனால் எங்கு இன்னும் நான்கடி கொடுப்பானோ என்னும் பயத்தில் பூம்பூம் மாடு போல் அவன் தலையாட்ட, யாதேஷ் உறக்கத்திலிருந்தும் ஆரவ் தந்த அதிர்ச்சியிலிருந்தும் வெளி வரும் முன்பாகவே ஷிவனேஷிற்கு ஃபோன் போட்டு முடிந்த மட்டும் உடனேயே ஷிவன்யாவை ஏதேனும் காரணம் காட்டி சென்னைக்கே அழைத்து வரக் கூறினான்.
பின் என்ன? ஆரவும் ஷிவனேஷுமாய் சேர்ந்து இந்த கல்லும் கரையுமா என்றிருந்த நாயகனை காதல் வசனமாய் பேசி அவன் காதலை ஏற்றுக் கொள்ள வைத்திருந்தனர்.
இவை அனைத்தையும் கேட்டு பித்துப் பிடித்ததை போல் நின்றிருந்த ஷிவன்யாவை ஆரவ் எங்கு தன்னை அடித்து விடுவாளோ என்பதை போல் சற்று பீதியுடன் பார்க்க, அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தவளை அவனே மெதுவாய் உலுக்கிப் பார்த்தான்.
பட்டென தலையை சிலுப்பி விட்டு, " ஹான் அப்பரம் அப்பரம்... அப்பரம் என்னாச்சுண்ணா?! " என ஷிவன்யா படபடக்க, " அப்பரம் என்ன? அவ்வளவு தான். " என தோலை குலுக்கினான் ஆரவ்.
அவன் தோளை குலுக்கியது தான் தாமதம் கால்கள் தரையில் நிற்க மறுக்க எம்பி குதித்து கத்திய ஷிவன்யாவின் முகத்தில் அப்படியொரு ஆனந்தம்.
இன்று
எத்தனை கசப்பான நினைவு? எத்தனை வலி தந்த காலம்? தீயால் சுட்ட வடுவில் மயிலிறகை போல் வருடிய ஒன்று தான் யாதேஷ் மற்றும் ஷிவன்யாவின் சுயநலமற்ற காதல். இன்னமும் அவனால் யாதேஷின் கைப்பிடித்து அந்த இரண்டு வருடம் கல்லூரியை வட்டமடித்த ஷிவன்யாவை தத்ருபமாய் நினைத்துப் பார்க்க முடிந்தது.
அவ்விருவரும் ஒருவரோடு மற்றொருவர் நேற்று தான் காதல் லயிக்கும் விழிகளோடு இருந்தது போல் இருக்கிறது. ஆனால் அவ்விருவரும் பிரிந்து அதில் யாதேஷ் அவளை பற்றிய துளி நினைவுமில்லாது போய் நான்கு வருடமானதை ஆரவின் மேஜை மீதிருந்த நாட்காட்டித் தான் பட்டைத் தீட்டிக் காட்டியது.
பழைய நினைவுகளின் தாக்கம் தேவையின்றி இப்போது அந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அவளது கணவனோடு இருக்கும் ஆரவின் முதல் காதலியின் கசப்பான நினைவுகளை கிளறிக் கொண்டிருந்தது. நேரம் போனது தெரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த ஆரவ் அந்த கசப்பான நினைவுகளை எண்ணி ஒரு பெருமூச்சோடு அவனது அறையிலிருந்து வெளியேறினான்.
அவனுக்கு அந்த நொடி வேண்டுமென்று தோன்றியது ஒன்று தான். அவனது விஜித்தா...
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro