காதல் பரிசு:23
" மாமா எங்க மாமா போறோம்? " காரில் ஏறியதும் ஏறாததுமாக ஷிவன்யா ஆர்வமாய் யாதேஷைப் பார்த்தாள்.
ஆனால் யாதேஷிற்கு முன்பாக, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ஆரவ் குரலை உயர்த்தினான்.
" அடியேன் உங்களுடைய ஆர்டருக்காக காத்துட்டு இருக்கேன் ராணி. "
ராணியா என புரியாமல் அவனை ங என பார்த்த ஷிவன்யா, புன்முறுவல் பூத்த தன்னவன் முகத்தைப் பார்த்து இருவருக்குள் உள்ள ஏதோ ஒன்றென புரிந்துகொண்டு ஆரவ் இன்னும் நம்பகமான ஒரு அடியேன் போல் தலை தாழ்த்தியே இருப்பதை கண்டு, " அண்ணா போதுண்ணா... எங்க போனுமோ அங்க போகலாம் வாங்க... "
" இல்ல நாம எங்கையும் போகப் போறதில்ல... " இப்போது பதில் யாதேஷிடம் இருந்து வந்தது.
நீ வந்து வண்டி ஓட்டியே ஆக வேண்டும், வெளியே போயே ஆக வேண்டும் இல்லனா பல்டாஇல்-அ குடிச்சிடுவேன் என உயிர் போகும் ரேஞ்சிற்கு இவனை இழுத்து வந்தவன் கூறியதை கேட்டு படாரென அவனை திரும்பி பார்த்த ஆரவ், வாயில் வந்ததை அப்படியே கூறும் முன்பாக தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டு தன் நண்பனை பார்த்தான். " அப்பரம் என்ன எதுக்கு மகாராஜா கூட வர சொன்னீங்க? "
ஆரவின் பவ்யமான குரல் ஷிவன்யாவையே ஆச்சர்யமாக்கியது.
அவன் புறம் அதே புன்னகையுடன் திரும்பிய யாதேஷ், " காவல் காக்குறதுக்கு தான் காப்பாளேனே, வெளிய நில்லுங்க. "
அவன் முதுகில் ஏறி இரண்டு வைக்கத் தான் ஆரவிற்கு முதலில் தோன்றியது. ஆனால் நம் நாயகனின் புதிர்போடும் புன்னகை அவனை பல்லைக் கடித்தபடி அனைத்தையும் பொருத்துக்கொள்ள வைத்தது. " நானும் ஒரு லவ் பண்ணி உங்க எல்லாரையும் காண்டேத்துவேன் டா... எனக்கும் ஒரு காலம் வரும்... பரங்கிக்காத் தலையா உன்ன அப்பரம் கவனிச்சிக்கிறேன். " என தனக்குள்ளே முனகிக் கொண்டு அவன் கதவை திறக்க...
" என்ன? என்ன சொன்னீங்க காப்பாளனே? சரியா கேட்கல, " யாதேஷ் வேண்டுமென்றே சீண்டினான்.
முகமெல்லாம் சிரிப்புடன், கையை எடுத்து கூப்பிக் கொண்டு அவர்களை பார்த்து மீண்டும் திரும்பிய ஆரவ், " ஒன்னுமில்லை மகாராஜா உங்களுக்கும் உங்க ராணிக்கும் காப்பாளன் போய் பரங்கிக்கா ஜூஸ் வாங்கீட்டு வரேன்னு சொன்னேன். "
" ஹா நல்லா சக்கரை தூக்கலா போட்டு வாங்கீட்டு வா... "
" இதுக்கு ஒன்னும் கொரைச்சல் இல்ல த்தூ! " அதற்குமேல் அவன் பொருக்காமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
சிரித்துக் கொண்டிருந்த யாதேஷைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் ஷிவன்யா. " ஏங்க அண்ணனை போட்டு பாடாப் படுத்துறீங்க? உங்களுக்கு ஃப்ரெண்டா போனத தவிற வேறெந்த பாவமும் அந்த மனுஷன் பண்ணல, " என கேவலமாக ஒரு லுக் விட்டாள்.
அது புரிந்தது போல் பட்டென அவன் சிரிப்பு மறைந்து விட, " ஏய் ஐயாவோட கெத்து உனக்குப் புரியல... அவன் என் மச்சானாக போறானாம் எனக்காக இது கூட செய்ய மாட்டானா? "
" ஆமா இவ்வளவு வர்ஷமா மச்சானா இல்லாம மாமாவா இருந்தாரா? "
" இவ்ளோ வர்ஷமாவும் மச்சான் தான் இனிமேலும் மச்சான் தான்... ஃப்யூச்சர்லையும் மச்சான் ஆவான்...இப்போ அதெல்லாம் உனக்கெதுக்கு டி? எனக்கே இரெண்டு நாள் தான லீவ் கிடைக்குது என்ட்ட பேசு! "
அவன் கூறும் ஒன்றும் புரியாததால் அதை அக்கடாவென தூக்கி எறிந்துவிட்டு தன்னவன் மேல் கவனம் செலுத்தினாள். அவளும் அவனை நேரில் பார்த்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
யாதேஷ், ஆரவ் மற்றும் ஷிவனேஷிற்கு முன்பே இறுதி தேர்வுகள் முடிவுப் பெற்றிருந்ததால் அவர்களுக்கு கல்லூரி வருவதற்கு வேலையே இருக்கவில்லை. முழுக்க முழுக்க மூவரும் யாஸ் தொலைக்காட்சியன் வேலையில் தான் கடந்த இரண்டு மாதங்களாய் ஈடுபட்டுள்ளனர். தற்போது இவர்களின் தொலைக்காட்சி ஒரு பிரபலமான நிறுவனத்தில் ஒரு சிறு கிளையாய் மாறி இருக்கிறது.
இந்த மாற்றங்களுக்கின் இடையில் ஷிவன்யாவிற்கும் பெரும்பாலும் தன் கல்லூரியின் இறுதி கட்டத்தில் தேர்வுகளுக்காகவும் ப்ராஜெக்ட்களுக்காகவும் ஓடுவதிலே நேரம் சரியாக இருப்பதால் நம் நாயகன் நாயகிக்கு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக கிடைக்கவில்லை.
" உங்கள்ளட்ட பேசலாம்னு வந்த இடத்துல கார்ல ஏறுன்னீங்க... இப்போ எங்கையும் போகலங்குறீங்க... "
" உன் கூட நேரம் செலவழிக்க ஒரு இடம் இருந்தா போதாதா... அது காரா இருந்தா என்ன காடா இருந்தா என்ன...? " என மெல்லமாய் சிரித்துக் கொண்டே மடிமீதிருந்த அவள் கரத்தைப் பிடித்தான்.
அவன் தன் விரல்களை வருடுவதை பார்த்துக் கொண்டே சந்தேகமாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
" ஸர் இப்டியெல்லாம் டையலாக் பேசமாட்டாரே... என்ன விஷயம்? "
யாதேஷ் ஏதோ முட்டாய் திருடி மாட்டிக் கொண்ட குழந்தை போல ஷிவன்யாவை நோக்கி சிரிக்க, அவன் கண்களில் தெரிந்த சிரிப்பில் அனைத்தையும் மறந்துவிட்டாள் அந்த பேதை.
" ஏன் என்னோட பொண்டாட்டிக்கிட்ட நான் இப்டிலாம் பேசக்கூடாதா...? "
யாதேஷின் வார்த்தைகளில் அவள் உடல் ஒரு முறை சிலிர்க்க, அவன் முகத்தில் அர்த்தமாய் ஒரு புன்னகை இழையோடிய போது, சட்டென தலைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.
" பொண்டாட்டியா... இந்த தைரியமெல்லாம் ஸருக்கு எப்போ வந்துச்சு? " என நம்பாமல் கேட்டாள்.
அவள் விரல்களோடு விளையாடிக் கொண்டே தலையை சற்று சாய்த்து அழகாய் அந்த இரசனையான புன்னகையோடு அவளைப் பார்த்தான்.
" நான் அப்டி கூப்டாம வேற யாரு கூப்டப்போறா? "
" ஹ்ம்... அதுக்கெல்லாம்... அதுக்கெல்லாம் ஒரு இது...வேணும்ல... " அவன் அழகிய விழிகளில் அவள் உதடுகள் தந்தியடிக்க, அவனை நேராக பார்க்க இயலாமல் அவள் நாணம் தலை தூக்க, தரையை ஆழம் பார்த்தாள்.
" எது வேணும்...? " அவனும் இன்று அவளை சீண்டாமல் விட மாட்டான் போல... ஒரு பக்கம் அவள் விரல்களோடு விளையாடியபடி அவள் மனதையும் துள்ளவைத்தான்.
" ஹ்ம்ம் நான் உங்க பொண்டாட்டி தான்னு உலகத்துக்கு காமிக்கிறதுக்கு ஒன்னு வேணும்ல... "
எப்படியோ தைரியத்தை வரவழைத்து அவனை நிமிர்ந்து நோக்கியவளின் புன்னகை சட்டென மறைய, மெல்ல குனிந்து அவள் விரல்களில் முத்தமிட்ட யாதேஷ் மீண்டும் நிமிர்ந்த போது ஷிவன்யாவின் கைகளில் ஒரு தங்க மோதிரம் மிளிர்ந்தது.
இப்போது நம் நாயகனின் முகமெல்லாம் சிவந்திருக்க, அப்போதும் விடாமல் அவள் கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டு மறுகையில் ஒரு குட்டி பெட்டியை திணித்தான்.
" இப்போதிக்கு உன் மாமாவோட முதல் சம்பாத்தியத்துல முடிஞ்சது... இத மட்டும் காமிச்சு இந்த ஊர் முழுக்க நீ என் இதயத்தோட சொந்தக்காரின்னு சொல்ல முடியலன்னாலும் இது அதுக்கு முதல் படியா இருக்கட்டுமே... "
மீண்டும் மீண்டும் அவன் மேல் காதலில் விழும் இந்த இதயத்தை என்ன தான் செய்ய?
கண்கள் பனிக்க அவன் கரங்களை இறுகப் பற்றிய ஷிவன்யா பேச்சற்று சிலைப் போல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
" என்னாச்சு டி... "
ஒரு நீண்ட அமைதிக்குப் பின் தாங்க முடியாமல் யாதேஷே அவளை உலுக்க, தாவி அவனை அணைத்துக் கொண்டாள்.
" மா... மாமா... பெருமாளே... என்ன மாமா? நீங்க எனக்காக ஏன் இவ்வளவு பண்றீங்க...? நான் உங்களுக்காக ஒன்னுமே செய்யலையே... உங்களுக்காக நான் எதுவுமே செய்ய வேண்டாமா... எப்டி...எப்டி... "
வார்த்தைகள் தந்தியடிக்க, கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, யாதேஷ் ஒரு நொடி பதறிவிட்டான். அவளை அணைத்து அமைதி படுத்தியவன் மென்மமையாய் அவள் கேசம் கோதி, அவன் நெஞ்சோடு அவளை சாய்த்துக் கொண்டான்.
" உனக்கு செய்யாம நான் வேற யாருக்கு டி செய்யப் போறேன்? நான் இன்னும் உனக்கு நிறைய செய்யனும்னு தான் எனக்கு ஆசை... ஆனா என்னால இப்போ அவ்வளவு தான் முடிஞ்சது... உனக்குப் புடிச்சதெல்லாம் வாங்கி குடுத்து நீ ஒவ்வொரு டைம் இப்டி என்ன ஹக் பண்ணிக்குவன்னா இதுக்காகவே நான் டபுல்மடங்கா சம்பாதிப்பேனே! "
விளையாட்டாய் அவன் சிரித்தபோது, அவன் நெஞ்சில் அடித்தாள். அப்போதும் புன்னகை மாறாமல் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி கண்கள் மூடிக் கொண்டான்.
" ஐ லவ் யு சோ மச் யமுனா... அது எந்தளவுக்குனு என்னால வார்தையால சொல்லீட முடியாது. காலத்தால அளந்துட முடியாது. எவ்வளவோ என் லைஃப்ல நிலையில்லாம இருந்தாலும் நிறைந்திறமா இருக்கனும்னு நான் என்னையும் அறியாம அந்த இறைவன் கிட்ட கேட்குறது உன்ன தான். நான் உன் கூட இருந்த இந்த இரண்டரை வர்ஷத்துல இருந்த மாதிரி சந்தோஷமா நான் எப்பவும் இருந்ததில்லை... இனிமே நீ இல்லாம எப்டி இருக்கும்னு எனக்கு கற்பனை கூட பண்ணிப் பார்க்க மனசு வரல டி... நீ... நீ எனக்குள்ள ஒரு பார்ட் மாதிரி ஆய்ட்ட... என்னால உன்ன தனியா கூட இப்போ யோசிச்சுப் பார்க்க முடியல... நீ என்ன மாயம் பண்ணன்னு கூட தெரியல டி மாயக்காரி. ஆனா அப்பவும் நீ தான் வேணும்னு இந்த மனசு சொல்லுது... மனசு சொல்லுதோ இல்ல நான் தான் கெடந்து அடம்புடிக்கிறனோ, ஆனா இரெண்டும் ஒன்னு தான். அது நீ தான்... நீ இல்லனா நான் என்ன ஆவேன்னு கூட தெரியல... "
கண்கள் மூடிய நிலையிலே ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தமர்ந்திருந்தவர்களின் கரங்கள் தானாக இணைய, ஷிவன்யா மெல்ல தன் தலையை நிமிர்த்தி மறுகரத்தால் அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தாள்.
" என்ன மா... இன்னைக்கு என்ன மா ஆச்சு என் மாமாக்கு? நான் எங்கையும் போகலையே... நான் உங்கள விட்டு எங்க போகப் போறேன்? "
உண்மையில் யாதேஷ் இப்படி பரக்ரஃப் பரக்ரஃபாகவெல்லாம் அவன் காதலைப் பற்றிப் பேச மாட்டான். அவன் செயல்களிலும், அவன் சிரிப்பிலும், அவன் விழிகளிலும் ஷிவன்யாவிற்கான அவன் காதல் தெரியும். அவனில் தெரியும் அந்த காதல் ஊருக்கே சொல்லிடும் அவன் இதயத்தின் சொந்தக்காரி அருகில் எங்கோ தான் இருக்கிறாள் என்று. அவள் குரல் கேட்க வேண்டாம், அவள் தொடுகை உணர வேண்டாம். அவள் அருகில் இருந்தாலே போதும். யாதேஷின் காதல் கட்டுண்ட இதயம் அவள் வழி அவனை அழைத்துச் செல்லும்.
இவையனைத்தையும் அவன் வாயால் சொல்லித் தான் அறிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. எனேனில் இந்த இரண்டரை வருடத்தில் அவன் இப்படி பேசியதே இரண்டு முறை தான். காதல் தொடங்கிய அன்று, காதலை ஒப்புக் கொண்ட அன்று... அவ்வளவே...
அசராமல் நிற்கும் அந்த மாயவனை அசைத்துப் பார்ப்பதும் அவள் மீதான அவன் காதல் தான். அவனை கலக்கமுறும் நிலைக்கு அழைத்துச் செல்வதும் அந்த காதல் தான்.
" உன் கிட்ட இதெல்லாம் சொல்லனும்னு தோனுச்சு... " என கையை உயர்த்தி அவள் கண்ணீரை யாதேஷ் துடைக்க, அவன் உள்ளங்கையில் முகம் புதைத்து மென்மையாய் அவளின் இதழ் முத்திரையை பதித்தாள்.
அந்த செவ்விதழின் தொடுகையில் ஆண்மகன் சிலிர்த்தடங்க, ஷிவன்யா தனக்குள்ளே தன்னவனின் சிகப்பேறும் முகத்தைக் கண்டு சிரித்துக் கொண்டாள். யார் சொன்னாலும் சொல்லாட்டியும், அவளவன் வெட்கப்பட்டால் அனைத்து ஆணழகனையும் வென்றுவிடுவான்.
" உங்க லவ்வ நீங்க இப்டி சொல்லி தான் நான் தெரிஞ்சிக்கனும்னு இல்லை மா... உங்க அக்ஷன்லையே தான் நீங்க எனக்கு சொல்லீடுவீங்களே... காதல் சொல்லி தான் புரியனுமா என்ன? "
யாதேஷும் புன்முறுவலுடன் இல்லையென தலையசைக்க, அவன் கரங்களை அழுத்திப் பிடித்து புன்னகைத்தாள்.
" நான் உங்கள விட்டு எங்கையும் போக மாட்டேன். இந்த யமுனஷிவன்யா இந்த யாதேஷ் ஷிவனுக்கு மட்டும் தான். நீங்க எங்க போனாலும் நான் உங்கள பேய் மாதிரி தொரத்தி வருவேன்! " என கடைசியாய் அவள் வில்லி போல் சிரிக்க, யாதேஷ் அவன் தலையிலே அடித்துக் கொண்டான்.
அரை மணி நேரம் கழித்து, முரட்டு சிங்கிளாக தனிமையில் புலம்பாமல் ஷிவனேஷிற்கு ஃபோன் செய்து அவனை கொலை செய்து கொண்டிருந்த ஆரவையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நிறைவாய் கிளம்பினர்.
நாட்கள் ஓடிட இன்னும் ஒரு சில நாட்களில் ஷிவன்யாவிற்கு இறுதி ஆண்டின் தேர்வுகள் தொடங்க இருந்தது. காலையில் கண் விழித்த உடனே, கைகளை உயரத் தூக்கி அவள் மோதிர விரலில் மினுமினுத்த அவளவன் கொடுத்தப் பரிசை இரசித்தாள்.
நேரம் போனதே தெரியாமல் கண் விழித்துக் கொண்டே கணவு கண்ட ஷிவன்யாவின் மேல் தண்ணீரை தெளித்த அத்விகா, அவள் பதறிக் கொண்டு எழுந்ததைப் பார்க்காமல் கைகளை கூப்பி தலை மீது வைத்தாள்.
" காத்தாயி மாத்தாயி கருப்பாயி எல்லாரும் இந்த புள்ளையப் புடிச்ச காத்துக்கருப்ப எரிச்சுப் போற்று கடவுளே! "
" உனக்கு நான் சந்தோஷமா இருக்குறது பொருக்கல... போ டி கிராதகி! " அருகில் இருந்த தலையணையை தூக்கி அவள் மண்டை மீதே தூக்கி எறிந்தாள் ஷிவன்யா.
கீழே விழுந்த தலையணையை மீண்டும் அவள் மீதே எறிந்த அத்விகா வலிப்பதற்காகவே வேகமாக நாயகியின் தலையை பதம் பார்த்தாள்.
" சொல்லுவ டி சொல்லுவ... என்ச்சு வா டி... உனக்காக கொட்டிக்காம ஒருத்தி நீ வருவன்னு மெஸ் வாசலையே பார்த்துட்டு இருக்கேன் நீ இங்க யாதேஷ் ஸீனியர் கூட டூயட் பாடீட்டு இருக்க! "
" என் ஆளு நான் பாடுவேன்! உனக்கென்னா டி? "
பதிலுக்கு கௌன்ட்டர் கிடைக்காமல் தலையைப் பிய்த்துக் கொண்ட அத்விகா எப்படியோ ஷிவன்யாவை உருட்டி மிரட்டி உணவை முடித்துவிட்டு வந்ததும் அவளை குளியல் அறைக்குள் தள்ளிவிட்டுத் தான் அவளது அறைக்கேச் சென்றாள் அன்றைய நாளிற்காய் தயாராக...
கல்லூரி பயிலும் அனைத்து மாணவர்களும் எதிர்நோக்கும் அந்த நாள் தான் இன்று.
காலேஜ் ஃபரவெல் டே
ஷிவன்யா பூத்துக்குழுங்கிய மலர் போல் தலை துவட்டியபடி அவள் அறைக்குள் வந்த நேரமெல்லாம் அத்விகா அழகான அரக்கு நிற சேலையில் அலங்கரித்து வந்திருந்தாள்.
வாயெல்லாம் பல்லாக தான் ஆசையாசையாய் ஊருக்கு சென்றிருந்த போது எடுத்து வந்திருந்த அவளது அன்னையின் கத்திரிப்பு நிற சேலையை அவளிடம் நீட்டினாள் ஷிவன்யா. புன்னகையுடன் தன் தோழிக்கு சேலையை கட்டிவிட்டு அவளை அழகுப் பார்த்தாள் அத்விகா.
எங்கு அவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் கீழேயே பார்த்திருந்த ஷிவன்யாவின் தலையை பிடித்துத் தூக்கி, அவளை முழுதாக ரெடி செய்துவிட்டுத் தான் அவளது அலங்காரத்திற்கேச் சென்றாள்.
" அத்வி அத்வி நான் எப்டி டி இருக்கேன்? " சேலையின் ஒரு பக்கத்தைப் பிய்க்காத குறையாக, கண்ணாடி முன் நின்ற அத்விகாவை நச்சரித்தாள்.
" ரொம்ப அழகா இருக்க டி தங்கம், " என அவளின் கண்களில் மையிட்டுக் கொண்டே அத்விகா பதில் கூற, ஷிவன்யா சத்தமாய் சினுங்கினாள்.
" ஏ ஒழுங்கா என்ன பார்த்துட்டு சொல்லு டி, "
திரும்பி அவளை பெருமூச்சுடன் பார்த்த அத்விகா பொய்க்கோபம் காட்ட முயன்றாலும் ஷிவன்யாவின் சினுங்கல் அதற்கு இடமே கொடுக்கவில்லை. புன்முறுவலுடன் அவளை நெட்டி முறித்து விரல்களின் சத்தத்தை அவள் காதுபடவே காட்டிய தோழி, " உனக்கு என்ன டி கொறைச்சல்? அழகு ரதி மாதிரி இருக்க நீ! "
" ம்ம் நீ ஏதோ சொல்ற... ஆனா நான் பொடவை கட்டீட்டு மாமா முன்னாடி முதல் தடவை போகப்போறத நினைச்சா எனக்கு அவரு என்ன நினைப்பாரோன்னு இருக்கு டி, " என ஷிவன்யா வெடுக்கு வெடுக்கென அவள் விரல்களை கடிக்க, அத்விகாவின் சிரிப்பு சத்தம் அவளை கலைத்தது.
" யாதேஷ் ஸீனியர் கண் இல்லாமையே ஏதோ நீ மட்டும் தான் அவரோட கண்ணுக்குத் தெரியிற மாதிரி உன்ன பார்ப்பாரு... அந்த மனுஷன் உன்ன விட்டு இன்னைக்கு வேற சைட் திரும்புனாலே அச்சீவ்மென்ட் தான்! என்ன நினைச்ச நீ நம்ம காலேஜோட காதல் மன்னனைப் பத்தி? "
அத்விகா தன்னவன் காதலை புகழ்வதில் கன்னம் சிவந்த ஷிவன்யா, கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
" இருந்தாலும் என் மாமாக்காக நான் அழகா போனும்! "
" ஆமா ஆமா! "
தோழிகள் இருவரும் தங்களுக்குள்ளே சிரித்துக் கொண்டு எப்படியோ அரை மணி நேரம் பின்னே அங்கிருந்து கிளம்பினர்.
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro