Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல் சங்கமம்: 32

தன் தாய்‌மடி சாய்ந்த‌ மதிக்கு டாட்டா காட்டிவிட்டு உற்சாகத்தோடு உலகைக் காண வந்த ஆதவனின் கதிர்வீச்சில் யாதேஷின் கண்கள் குருகுருத்தது.

இவ்வளவு நேரமும் காலம் போவதை அறியாமல் அவன் உறங்கும் அழகை இரசித்துக் கொண்டிருந்த பெண்ணவள் அதை கண்டு படாரென கண்கள் மூடி படுத்துக் கொண்டாள்.

அவள் எதிர்பார்த்தது போல் கண்களை மெல்லத் திறந்த யாதேஷ் மென்மையாய் அவள் முகம் நோக்கி அவன் கையை உயர்த்த, மூச்சை இழுத்துப் பிடித்திருந்த ஷிவன்யா அவன் விரல்கள் பட்டும் படாமல் அவள் நெற்றியில் இறகு போல் தவழ்ந்ததில் உடல் சிலிர்த்தாள.‌

" குட் மார்னிங், " என மெல்லிய குரலில் கூறிக் கொண்டு மேலும் அவள் நெற்றியில் தவழ்ந்த கற்றை முடியோடு சற்று விளையாடிவிட்டு எழுந்து தன் காலைக்கடன்களை பார்க்கச் சென்றான் நம் நாயகன்.

கோவப்பழமாய் சிவந்திருந்த ஷிவன்யா அவன் சென்ற அடுத்த நொடி, வாயை இறுக்கி மூடிக் கொண்டு அவள் கைகளுக்குள்ளே வீலென கத்திவிட்டு அவன் தலையணையை இழுத்து அணைத்துக் கொண்டாள். காதல் கொண்ட பள்ளி மாணவளைப் போல் அவர்களின் பாயிலே புரண்டு கொண்டிருந்தவள் யாதேஷ் குளித்துவிட்டு வரும் அரவம் கேட்டதும் எழுந்து ஓடியே விட்டாள்.

தன் நாயகியின் மனதை இப்படி அட்டகாசம் செய்ய வைத்தது தெரியாமல் எப்போதும் போல வேலைக்குத் தயாராகி கீழே இறங்கிய யாதேஷை, வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தாமரை பார்த்துவிட்டு சத்தமாக கத்தி அவனை அழைத்தார்.

" டேய் படவா! வீட்டுல உன்ன நம்பி ஒரு புள்ள இருக்கா, நீ அவள பார்க்காம கண்ட நேரத்துல வீட்டுக்கு வருவியா?! நேத்திக்கு எத்தனை மணிக்கு வந்த நீ?! பத்து பதினோரு மணி வரை வேலைய கட்டீட்டு அழுவனுமுன்னா அவள எதுக்கு கல்யாணம் பண்ணி கொண்டு வந்த?! "

அவர் தன்னவள் மீது வைத்துள்ள பாசத்தில் சிரித்த‌ யாதேஷ், " எல்லாம் நீங்க இருக்க தைரியம் தான், லோட்டஸ்! "

" வாய்க்கு வாய் பேசாத டா கெட்டப்பையா! இனிமே நேரா நேத்துக்கு எட்டு மணிக்கெல்லாம் வீட்டுல இருக்கப் பாரு! கட்டுனப் பொண்டாட்டி வீட்டுல இருக்கப்போ உனக்கு அவள விட பெரிய வேலை என்ன இருக்கப் போகுது? "

யாதேஷ் சிரித்துக் கொண்டே அவர் கன்னத்தை செல்லமாய் பிடித்து கிள்ளினான். " சொல்லீட்டீங்கல்ல லோட்டஸ்? இனிமே பாருங்க ஐயா கரெக்ட்டா நைட்டு டின்னர்க்கு வீட்டுல இருப்பேன். "

" டின்னர்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, போடா அங்க, " என கோவமாய் கூறினாலும் அவர் முகத்திலும் ஒரு புன்னகை இலையோடியது.

" இதே மாதிரி என் பொண்டாட்டிய நல்லா பார்த்துக்கோங்க லோட்டஸ். "

" எல்லாம் எனக்குத் தெரியும் நீ வந்து உன் வேலைய பாரு, இப்போ பத்திரமா போயிட்டு வா போ, "

இவ்வாறு இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே, ஷிவன்யா யாதேஷின் லன்ச் பேகை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள்.

" மாமா! நில்லுங்க மாமா! "

யாதேஷ் வேகமாக அவள் ஓசை புறம் திரும்பவும் அவள் வந்த வேகத்திற்கு அவன் மீது இடித்துத் தள்ளாட, யாதேஷ் சற்றும் தாமதிக்காமல் அவள் விழத் தான் போகிறாள் என அவனது ஏழாம் அறிவு மணி அடித்தது போல் அவளை இழுத்துப் பிடித்து அவனோடு சேர்த்து நிற்க வைத்தான். தாமரை பாட்டி சிரித்துக் கொண்டே பேப்பரில் கண்ணானது போல் பாவித்துக் கொள்ள, ஷிவன்யா பட்டென யாதேஷின் கைவளைவில் இருந்து விலகி நின்றாள்.

ஆனால் இன்னமும் அவளை தீட்டிக் கொண்டிருந்த நம் நாயகனுக்கு அவன் நாயகி வெட்கத்தில் சிவந்ததோ அவன் அவளை இன்னமும் அவன் கைவளைவில் வைத்திருந்ததோ மூளையில் பதியவில்லை.

" ஏன் டி இவ்ளோ அவசரம் உனக்கு? எங்க போகப் போறேன் நான்? பொருமையா வர வேண்டியது தான? "

ஷிவன்யா இன்னமும் தாமரை  பாட்டி பேப்பருக்குப் பின்னால் சிரித்துக் கொண்டிருப்பதை கண்டு யாதேஷின் வாயை தன் கையால் மூடி, " ஏங்க நாம நடு ரோட்டுல நின்னுட்டு இருக்கோம், "

" அதுக்கென்ன இப்போ?! "

" ஐயா சாமி போதும் நிறுத்து! இந்தாங்க உங்க சாப்பாடு, " என கும்பிடு போட்டு அவன் கையில் அதை திணிக்க, சிரித்துக் கொண்ட யாதேஷ்

" அப்போ நீ வரலையா என் கூட? "

இப்போது பேப்பரில் இருந்து தலையை எட்டிப் பார்த்த பாட்டி, " அவள எங்க டா கூப்ட்டுட்டுப் போற? "

ஷிவன்யா " வேலைக்குத் தான் பாட்டி. நான் என் வேலைக்கு போயே ஒரு மாசம் ஆச்சு, போய் ரீஜாய்ன் பண்ணனும் இன்னைக்கு. "

தாமரை பாட்டி " அப்படியா தங்கம்? மகாராசியா போயிட்டு வா டி, "

யாதேஷ் ஷிவன்யாவின் காதிற்குள் கிசுகிசுத்தான். " பாத்தியா பாட்டியா? என்ட்ட வள்ளுவள்ளுன்னு கத்திப்புட்டு  உன்ன தங்கம் வைரமுன்னு கொஞ்சிது? "

அதற்கு ஷிவன்யா பதில் தரும் முன் பாட்டியிடம் இருந்து பேப்பர் பறந்து வந்தது. " எனக்கு இரெண்டு வயசுலையே காது குத்தீட்டாங்க டா சின்னப்பையா! "

அவர் கத்தலில் எழுந்த சிரிப்பலையோடு நம் நாயகன் நாயகி பாட்டியிடம் விடைப்பெற்றுக் கொண்டு அவரவர் வேலைக்குக் கிளம்பினர்.

நாட்களும் உருண்டோடியது. நம் நாயகர்களின் காதல் பயணமும் சில்மிஷங்களோடு நல்லறமாய் தொடர, ஏதோ ஒன்று யாதேஷின் தலையை சுற்றிக் கொண்டே இருந்ததை ஷிவன்யா அறிந்திருந்தாலும் அவள் கேட்டுப் பார்த்தும் அவனிடம் பதில் இல்லை.

" வேற ஒருத்தவங்க கிட்ட மொதல்ல இத சொல்லனும். அப்பரம் உடனே வந்து உன் கிட்ட சொல்லீடுறேன் கண்ணம்மா, " என கெஞ்சிக் கொஞ்சி அவளையும் மாற்றிவிட்டான்.

இன்றும் என்றும் போல இருவரும் அவரவர் வேலைக்குத் திரும்பினர். அப்போதே நிறுவன வளாகத்தில் நுழைந்த யாதேஷ் ஏதோ காள் வந்ததும்  அதை ஏற்று அப்படியே நிற்க, அவன் முன் நடந்து சென்றிருந்த ஷிவனேஷ் இவன் பரபரப்பாய் எங்கோ ஓடுவதைக் கண்டு திரும்பி பார்த்து கத்தினான்.

" டேய் யாது! எங்கடா போற? "

யாதேஷ் " யமுனாவோட அப்பா வந்திருக்காரு டா மச்சான், நான் வரேன், " என கத்திக் கொண்டே ஓடியவனின் தலை அங்கிருந்து மறைந்தது.

ஆரவும் கோவை வரை அலுவலக வேலைக்காக சென்றிருப்பதால் மூவரில் யாரேனும் ஒருவராவது இருந்தாக வேண்டும் என்ற காரணத்தால் பெருமூச்சோடு அவனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என உள்ளே நுழைந்தான் ஷிவனேஷ்.

சென்னை பேருந்து நிலையத்தில் முணியாண்டிக்காக காத்துக் கொண்டிருந்த யாதேஷின் மனதில் ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, யாரோ ஒருவர் அவன் தோளை தொட்ட உணர்வில் உலகிற்கு வந்தான்.

அவன் முன் நின்றிருந்த முணியாண்டி, புன்னகையோடு அவனைப் பார்த்து நலம் விசாரித்தார்.

" நாங்க நல்லா இருக்கோம் ஸர், நீங்க நல்லா இருக்கீங்களா? நீங்க தனியா இவ்ளோ தூரம் ஏன் வந்தீங்க? "

" எனக்கென்னையா? நான் நல்லாத் தான் இருக்கேன். ஒரு முக்கியமான விஷயம் பேச தான் நேர்ல வந்தேன், தம்பி, "

அப்போது ஏதோ ஒன்று யாதேஷின் மூளையில் மின்னலாய் வெட்ட, படபடவென மனதில் தோன்றியதை கூறிவிட்டான். " நானே ஒரு முக்கீயமான விஷியம் பேச உங்கள நேர்ல வந்து பார்க்களாம்னு தான் இருந்தேன் ஸர், ஆனா எப்படி எப்போன்னு தெரியாம இருந்தேன், "

முணியாண்டி குழப்பத்தில் இருந்த போதே அவர் கரத்தைப் பிடித்த யாதேஷ், " நான் இப்டி திடீருன்னு கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, ஸர், ஆனா என் மனசுல நான் ரொம்ப நாளா பூட்டி வச்சிட்டே இருக்கேன். எனக்கு இதுக்கு மேல தாமதிச்சா சரியா வருமுன்னு தோனல... ஸர், உங்க பொண்ண எனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? "

அவனது மொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டி கேட்ட யாதேஷிற்கு ஒரு சில நிமிடங்கள் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருந்த முணியாண்டி அவன் கரத்தை இறுக்கிப் பிடித்து அவர் நெற்றியோடு ஒற்றிய போதே அவர் கண்ணீரை உணர்ந்தான்.

" என்ன தம்பி...? "

" நான் ரொம்ப நாளா உங்ககிட்ட அனுமதி வாங்க காத்துட்டு இருந்தேன் ஸர், இன்னும் அவ கிட்டையே நான் சொல்லல. யமுனாவ யாரும் ஒரு தகாத வார்த்தை சொன்னாலும் அத என்னால தாங்க முடியாது. அவ ரொம்ப சந்தோஷமா வாழனும். நான் அவள என்னோட உயிரா பார்த்துக்குறேன். என்ன நம்பி என்ன உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையா ஏத்துக்கோங்க ஸர், "

கண்களில் கண்ணீரோடு அவன் கரத்தில் தன் முகத்தைப் புதைத்த முணியாண்டிக்கு சில நொடிகள் வாய் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

" நான்...நானே அதப்பத்தி பேச தான் வந்தேன், தம்பி. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல தம்பி, "

யாதேஷ் அவரது கையில் அழுத்தம் கொடுத்தான். 

முணியாண்டி " இந்த ஒரு மாசத்துல என் மனசு என் கிட்டையே இல்ல தம்பி. எல்லாம் இங்க யமுனா கிட்ட தான் இருந்தது. என்னோட சொந்த வீட்டுல என் புள்ள நிம்மதி எழந்து நிக்கிறத பார்த்ததும் என் மனசு சுக்கு நூறாப்போச்சு... என் புள்ளைய கஷ்டம் தெரியாம வளத்தேன்னு நான் சொல்லல... ஒவ்வொன்னும் சொல்லி வளத்துருக்கேன். ஆனா ஒரு நாளும் மத்தவங்க சந்தோஷத்துக்காக அவ வாழ்கைய வீணடிக்க சொல்லிக் குடுக்கல. அவ மனச விட்டுட்டா தம்பி, என் ஆத்தா குடுத்த காயம் என் புள்ள வாழ்கைய அழிச்சிற கூடாது. அவளுக்கு நீங்க தான் தம்பி எல்லாம். என் புள்ளைய என்னவிட நீங்க நல்லா பார்த்துக்குவீங்கன்னு எனக்குத் தெரியும் அதான் நான் இன்னைக்கு நேர்லையே வந்தேன், "

யாதேஷிற்கும் அவர் உடைந்த குரலில் மனம் கனத்தது.

" என் ஸர் இப்டி பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க? அவ என் உயிரு ஸர். எப்போ எப்டின்னுலாம் எனக்கு தெரியல ஆனா அவளுக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது ஸர். யாரும் இல்லாம அவ நின்ன மாதிரி திரும்ப அவ நின்னுற கூடாது ஸர். எனக்கு அவ வேணும். அவ மட்டும் போதும் எனக்கு. என்ன நம்பி உங்க பொண்ண எனக்கு கட்டிக் கொடுங்க. என் உடம்புல உயிரும் நினைவும் இருக்குற வர, அவள என் உயிரா பார்த்துக்குவேன். "

முணியாண்டி கண்களெல்லாம் கண்ணீரோடு அவனை கட்டி அணைத்துக் கொண்டார்.

" இது போதும் தம்பி. இது போதும்... "

அடுத்த ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட யாதேஷின் மூளையில் பதியவே இல்லை. மௌனத்தின் ஆட்சியோடு வீட்டை அடைந்தனர். மதிய வேளையாக இருந்ததால் தாமரை பாட்டி கூட உறங்கிவிட்டிருந்தார் போலும்.

பாய் ஒன்றை விரித்து அதில் முணியாண்டியை அமர வைத்த யாதேஷ் பின் என்ன செய்வதென தெரியாமல் சற்றே தடுமாற்றத்தோடு கிச்சனில் இருந்து அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்தான்.

பின்ன மாமனார் முதல் முறை வீட்டிற்கே வந்திருக்கிறார் அல்லவா...

வீட்டைச் சுற்றிப் பார்த்தபடி அமர்ந்திருந்த தந்தை மனதில் கதவருகிலே நின்றிருந்த யாதேஷைக் கண்டு ஒரு பெரும் நிம்மதி பரவியது. அவன் கொடுத்த நீரை விழுங்கிவிட்டு, தன் முடிவில் எந்த தவறும் இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு தன் மகளுக்காக காத்திருந்தார்.

வேகமாக யாதேஷின் அழைப்பை ஏற்று வீடு திரும்பிய ஷிவன்யா தன் காதலனைக் கண்டு குழம்பினாள் என்றால், சொல்லாமல் கொள்ளாமல் பட்டணம் வந்த தன் தந்தையைக் கண்டு அதிசயித்துவிட்டாள்.

ஓடிச் சென்று தன் தந்தையின் அரவணைப்பில் தித்தித்தவளை யாதேஷ் வாஞ்சையோடு நினைத்திருக்க, முணியாண்டி தன் மகளின் கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறாமல் தான் வந்த காரியத்தை முன் வைத்தார்.

" உனக்கும் யாதேஷ் தம்பிக்கும் உடனே கல்யாணம் பண்ணனும் டா தங்கம், "

யாதேஷ் திடுக்கிட்ட ஷிவன்யாவின் அதிர்ச்சியைப் புரிந்து தந்தை மகளுக்கு தனியே நேரம் கொடுத்துவிட்டு வெளியேறினான். காலாற ஒரு மணி நேரம் அவன் அந்த வீதியை அளந்துவிட்டு பெருமூச்சோடு ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.

நம் நாயகனுக்கு இந்த திருமண முடிவில் எந்த ஒரு தயக்கமும் இல்லை. எப்போது அவன் கீரனூரில் இருந்து ஷிவன்யாவை கைப்பிடித்து அழைத்து வந்தானோ அன்றிலிருந்தே அவன் சிந்தையில் ஓடிய ஒன்று தான் இது.

அவன் மனதின் எண்ணமெல்லாம் இப்போது தந்தையோடு தான் விட்டுவந்த தன்னவள் மீது தான் நிலைத்திருந்தது. திருமணம் என்ற ஒன்றைப் பற்றி பெரும்பாலும் அவர்கள் எதுவும் பேசியதில்லை. இத்தனை விரைவில் அதை தன்னவள் ஏற்றுக்கொள்வாளா  என்றும் அவனுக்கு மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.

மேலும் ஒரு அரைமணி நேரம் அங்கேயே சிந்தையில் அமர்ந்திருந்தவனை முணியாண்டியே தேடி வந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். ஷிவன்யாவிடம் என்ன சொல்வதென அவன் யோசித்துக் கொண்டே வர, அதற்கெல்லாம் நேரம் கொடுக்காமல் ஒரு பட்டு வேட்டி சட்டையை அவன் கையில் திணித்துவிட்டு குளியலறைக்குள் தள்ளினார் முணியாண்டி.

" உடனே கல்யாணமா...? " என்ற கேள்வியிலே குளித்துவிட்டு பன்ட்டைப் போட்டுக் கொண்டு வந்த யாதேஷின் முன் சற்றே அதிர்ச்சியோடு காத்திருந்தான் ஷிவனேஷ்.

ஷிவனேஷ் " மச்சான்... "

" நீ எப்போ டா வந்த? "

ஷிவனேஷ் அவனை ஏறஇறங்க பார்த்துவிட்டு பெருமூச்சுடன், " உனக்கு வேட்டி கட்டிவிடவும், சாட்சி கையெழுத்து போடவும் தான் அப்பா கூப்பிட்டுவிட்டாரு, " என அந்த வேட்டியை வாங்கிக் கொண்டே பதில் கூறினான்.

அமைதியான யாதேஷிற்கு உடனே பதில் வரவில்லை. அவன் அதைப் பற்றி பேசும் எண்ணத்திலும் இல்லாததால் மேலும் அமைதி காக்க, அவனுக்கு வேட்டி கட்டிவிட்டு, சட்டையும் அணிவிக்க உதவிய ஷிவனேஷ் சரியாக அவர்கள் கதவை நெருங்கும் அந்த நேரம் அவன் தோளைப் பற்றினான்.

ஷிவனேஷ் " நல்லா யோசிச்சிட்ட தான? "

யாதேஷ் திரும்பி அவனை நோக்கி புன்னகைத்தான். " ரொம்ப நல்லாவே யோசிச்சிட்டேன். "

ஷிவனேஷ் தலையசைப்போடு வெளியே அழைத்து வர அதே நேரம் முணியாண்டியும் ஷிவன்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். நம் நாயகன் நாயகிக்கு பேச வாய்ப்புத் தராமல் அங்கிருந்து உடனே ரெஜிஸ்ட்டர் ஆபீஸிர்க்குக் கிளம்பினர்.

முணியாண்டியும் ஷிவனேஷும் திருமணத்தைக் குறிக்கச் சென்ற நேரம், யாதேஷ் தன்னவளின் கைகயைப் பிடிக்க, ஏதோ ஒரு யோசனையில் இருந்த ஷிவன்யா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

" யமுனா நான்... "

" மாமா ஸாரி கேட்கப் போறீங்கன்னா கேட்காதீங்க... "

யாதேஷ் அவள் நேரடியான பதிலில் உதட்டைக் கடித்தான். " இல்ல டி... நான் ஒரு வார்த்தை கூட உன்ட்ட கேக்கலையே... "

ஷிவன்யா அவன் வாரிய கேசத்தை ஆசையாய் கலைத்துவிட்டாள் அழகிய புன்னகையோடு. " இல்லையே... நான் என் பதில இரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி காலேஜ்ல நீங்க என்ன கட்டிக்கிறியா ன்னு கேட்டப்போவே சொல்லீட்டனே, "

" நான் ஸீரியசா கேட்குறேன் டி... "

" நீங்க இங்க தனியா நிக்கிறத தவிர வேற எந்த கவலையும் எனக்கு இல்ல மாமா. எனக்காக அம்மாவ விட்டுட்டு வந்துட்டீங்க, இந்த இடத்துலையும் நான் உங்கள தனியா நிக்க விட்டுட்டனே— "

அவள் இதழில் விரல் வைத்து அவளை நிறுத்திய யாதேஷ், " எனக்கு எல்லாமே நீ தான் யமுனா. நான் தனியா இல்ல. நீ இருக்குறப்போ எனக்கு வேற என்ன டி வேணும்? நீ இத எப்டி ஏத்துக்குவன்னு எனக்கு பயமா இருந்துச்சு ஆனா... "

யாதேஷ் தலைசாய்த்து அவளைப் நோக்க, அவன் கரத்தை இறுக்கிப் பிடித்தவள், " உங்க கூட ட்ரவல் பண்ணப் போறதா இருந்தா நான் எந்த எல்லைக்கும் வேணா வருவேன் மாமா. ஐ லவ் யூ சோ மச் சீனியர். "

உடல் சிலிர்க்க அவள் காதலை உணர்ந்த யாதேஷ் மறுகரத்தால் அவள் கண்ணம் ஏந்தி அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான். " ஐ லவ் யூ யமுனா... லவ் யூ, "

ஷிவன்யா அவனை புன்னகையோடு அணைத்துக் கொள்ள, சற்று தொலைவில் இருந்து இவர்களைப் பார்த்த முணியாண்டி மற்றும் ஷிவனேஷ் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் காதல்ஜோடி இருவரும் கையெழுத்திட, முணியாண்டி தன் மகளுக்காகவும் ஷிவனேஷ் தன் நண்பனுக்காகவும் கையொப்பமிட்டதும் இனிதே நிறைவடைந்தது யாதேஷ் ஷிவன் மற்றும் யமுனஷிவன்யாவின் சங்கமம்.

விழியை வழி நாடி...

ஹாய் இதயங்களே! நல்லா யூடி போட்டுட்டு இருந்தவ ஒரு வாரமா எங்க போனான்னு தான பார்க்குறீங்க? ஒரு இரெண்டு வாரமா நான் கதை எதுவும் எழுத முடியல இதயங்களே... எதிர்பாராதவிதமா நான் எழுதலாம்னு ஒருவழியா  திரும்ப தொடங்குன அன்னைக்கு என்னோட Tablet ஒர்க் ஆகாம போயிடுச்சு... கிட்டத்தட்ட 8 வர்ஷமா என் கூட இருந்து, நம்ம **' ஒரு சாவி ஒரு சாவி '** முதல் இப்போ நம்ம விழியின் மொழி வரைக்குமே என் கூட இருந்தது தான் அந்த Tab... அதுலையே கதை எழுதி பழகுன எனக்கு சட்டுன்னு மாற முடியல... இந்த யூடியவே கஷ்டப்பட்டுத் தான் எழுதுனேன் அதுனால இனிமே தாமதமானா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க இதயங்களே... டாட்டா!

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro