உன்னில் என்னை தொலைத்தேனே: 50
ஷிவானியின் பள்ளியை அன்னாந்து பார்த்துக் கொண்டே கீழே இறங்கிய ஷிவன்யா யாதேஷைத் திரும்பி பார்க்க அவனும் காரை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தான்.
பள்ளியும் முடிந்துவிட்டது. அலைமோதும் பொற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே அந்த சத்தமான மைதானத்திலும் ஷிவானியின் குதூகலமான " அம்மா அப்பா! " என்ற கூவல் அவர்களை விரைவாகவே வந்தடைந்தது.
இவர்களுக்கு சில அடி தூரத்திலே குழந்தைகளை அழைக்க வந்த சூர்யாவின் கையைப் பிடித்து தன் தாய் தந்தையைப் பார்த்த குஷியில் குதித்துக் கொண்டிருந்தாள் அந்த குட்டி தேவதை.
ஆர்யாவும் " அத்த! " என ஷிவன்யாவிற்கு உற்சாகமாய் கை காட்ட, சூர்யா இவ்விருவரையும் கண்டு முளித்தாள்.
ஷிவனேஷின் அருமையினால் ஒரு வாரம் முன்பு நடந்ததையும் இந்த ஒரு வாரமாக யாதேஷ் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமவல் எங்கோ சென்றுவிட்டான் என்பதையும் அறிந்திருந்த சூர்யா அந்த கணவன் மனைவி இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்.
அருகே வந்ததுமே தன்னிடம் தாவி குதித்த மகளை ஆசையாய் அள்ளி அணைத்துக் கொண்டான் யாதேஷ்.
" ஹாய் தங்கோ. எப்டி இருக்கீங்க? "
ஷிவானி " நான் ரொம்ப நல்லாக்கேன்ப்பா! நீங்க எங்க போன? ஷிவானி உங்ள தேடுனேன், " என அழகாய் உதட்டைப் பிதுக்கி பாவமாய் முகத்தை வைத்துக் கொள்ள, அவள் குறும்புத்தனம் அறியாத யாதேஷிற்கு மனம் வெம்பிவிட்டது.
" அப்பா ஸாரி பேபிடால். அப்பாக்கு கொஞ்சம் பெரிய வேலை. அதான் உங்கள பார்க்க வர முடியல. ரொம்ப தேடுனீங்களா அப்பாவ? "
ஷிவானி ம்ம் ம்ம் என தலையை பாவமாய் ஆட்ட தங்கள் மகளை நன்கு அறிந்த ஷிவன்யா லேசாக அந்த குட்டி வாண்டை மிரட்டிப் பார்த்தாள்.
" ஏய் வாண்டு நடிக்காத டி, இல்லனா அப்பா வாங்கீட்டு வந்த பிஸ்கெட் எல்லாம் அம்மா ஒளிச்சு வச்சிருவேன். "
அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் கண்களை நான்கு மீட்டருக்கு அகல விரித்த ஷிவானி தன் இரண்டு குட்டி கைகளையும் யாதேஷின் கன்னத்தில் வைத்து கண்கள் சிரிக்க அவனைப் பார்த்தாள்.
" உண்மையாப்பா? பாப்பாக்கு பிஸ்கெட் எங்க?! "
யாதேஷ் முதலில் பேந்தபேந்த முளித்தாலும் ஷிவன்யா அவனை கண்டு நகைப்பதை பார்த்தப் பின் அவன் மகளின் விளையாட்டைப் புரிந்து கொண்டான். அவன் மகளாயிற்றே... அவனைப் போலத் தான் இருப்பாள்.
அதனால் யாதேஷும் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் இதழ் பதித்து அவன் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டுகளை ஷிவானி மற்றும் ஆர்யா இருவருக்கும் பிரித்துக் கொடுத்தான்.
சூர்யா இன்னமும் பாதி புரிந்தும் புரியாத நிலையில் நின்றிருக்க யாதேஷின் பார்வை இப்போது அவள் மீது நிலைத்தது.
" ஹாய் சூர்யா, எப்டி இருக்கீங்க? உங்க எருமமாடு உங்கள நல்லா பாத்துக்குதா? "
சூர்யா அவனை ங என முகத்தில் அரை கிலோ குழப்பத்தை குத்தகைக்கு வாங்கிப் பார்க்க ஷிவன்யாவுமே அவனை அவ்வாறு தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
" அவன் ரொம்ப அலும்பு பண்ணா இரெண்டு நாள் வீட்ட விட்டு தொரத்திவிற்றுங்க சூர்யா. அவன் அதுக்கு தான் சரிப்பட்டு வருவான்... " என தன் நண்பனை பாரபட்சம் பார்க்காமல் ஆடி தள்ளுபடியோடு டேடேஜ் செய்தவனை ஷிவன்யா
" ஏங்க... " என தயங்கித் தயங்கி அழைக்க, அவளிடம் திரும்பிய யாதேஷ்
" ஆஹ் இதோ கிளம்பியாச்சு யமுனா. சரிங்க சூர்யா நாங்க கிளம்புறோம். நீங்களும் வாங்களேன் உங்களையும் ஆர்யாவையும் வீட்டுல ட்ராப் பண்ணீடுறேன், " என சூர்யாவை பார்க்க அவள் ஷிவன்யாவையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு வேகமாக மறுத்துவிட்டாள்.
" இல்ல இல்ல பரவாயில்ல யாதேஷ். நான் வண்டில தான் வந்தேன். "
" அப்போ நீங்க பத்திரமா போயிட்டு வாங்க, "
சூர்யாவும் தன் குட்டி மகனோடு அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
சூர்யாவும் ஆர்யாவும் கிளம்பியதும் " இப்போ என்ன? " என்பது போல் ஷிவன்யா மகளை தூக்கி வைத்திருந்த கணவனைப் பார்த்தாள்.
" இப்போ நாம ஒருத்தவங்க வீட்டுக்கு போயிட்டு அப்பரமா பாப்பாக்கு எங்க போகனும்னு தோனுதோ அங்க போக போறோம். என்ன பேபி ஓக்கே வா? " யாதேஷ் இழுத்துக் கொண்டே ஷிவானியின் மூக்கோடு மூக்குரச, க்லுக் என சிரித்த ஷிவானி " சேரி அப்பா! " என்ற கத்தலோடு அவள் அன்னையைப் பார்த்தாள்.
ஷிவன்யா அவ்விருவரையும் கண்களை சுருக்கி முறைக்க அப்பாவும் மகளும் ஒரே போல் அவளை கண்டு கண்களால் சிரித்தவுடன் பட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
" எனக்கு ஒன்னுமே புரியல... அப்பாவும் புள்ளையும் எதாவது பண்ணுங்க... வாங்க, "
யாதேஷ் வேகமாக முன்னே சென்று ஷிவன்யாவிற்கு கார் கதவைத் திறந்து விட ஹ்க்கும் என முகவாயை தோளில் இடித்தவள் புன்னகையை மறைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள்.
ஷிவானியையும் அவள் மடியில் அமர்த்திவிட்டு காரை உயிர்பித்த நம் நாயகன் ஒரு முறை அமைதியாக ஷிவன்யாவைத் திரும்பி பார்த்தான்.
" என்ன? "
யாதேஷ் ஒன்றுமில்லை என தலையை இடவலமாய் ஆட்டிவிட்டு ஷிவானியின் பள்ளி வளாகத்தில் இருந்து காரை ஓட்டிக் கொண்டு சென்றான். அந்த நேரத்தை அழகாக்குவதைப் போல யாதேஷின் காரில் மெல்லிசையாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலும் அவர்களுடன் பயணித்தது.
உன்னால் உன்னால் உன் நினைவால்
உலகில் இல்லை நான் தானே
உள்ளே கேட்கும் ஓசையிலே
உன்னை உன்னை கேட்டேனே
புன்னகை ஒன்று யாதேஷின் முகத்தில் இலையோட அவன் குரலும் அவர்களின் மௌனத்தை நிறைத்தது.
யாதேஷ் " உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள்
காலார நடந்து மிதந்தேனே
உன்னிடம் தந்த இதயத்தை தேடி
உன்னில் என்னை தொலைத்தேனே "
ஷிவானி தன் தந்தையின் பாடல் திரணில் கைத்தட்டி மகிழ, கடைக்கண்ணால் தன்னவளை ஏறிட்ட யாதேஷ் அவளது அழகிய புன்னகையில் மெய்மறந்து ஷிவானி வேடிக்கைப் பார்த்த நேரம் அவள் ஒரு கையை அவன் வசம் இழுத்துக் கொண்டான்.
" எந்தன் விழி ஓரங்கள்
உன் இமையில் சாயுதே
என் கண் கடை மூடினால்
உந்தன் முகம் தெரியுதே
என் பகல் உன் கண்ணில்
நீ இல்லை என்றாலே
நான் ஏதும் இல்லை இரவு தான்... "
அவள் கைகளை அழுத்திப் பிடித்தவன் தலை சாய்த்து அவளைப் பார்க்க அவன் கண்களில் என்ன கண்டாளோ பெண்ணவள் பதிலேதும் இன்றி மறுபுறம் திரும்பி கொண்டாள். ஆனால் மனம் கொள்ளா மகிழ்ச்சியின் சாயலாக அவள் வதனம் பூப்போல் பூத்திருந்தது.
அந்த புன்னகை இடம் தெரியாமல் சட்டென மறைந்தது யாதேஷின் வீட்டின் முன் அவன் கார் சென்று நின்ற அடுத்த நொடி.
அவள் முகத்தில் இவ்வளவு நேரமும் இருந்த மகிழ்ச்சி மறைந்து பயமும் குழப்பமும் அப்பியதை மௌனமாகப் பார்த்த யாதேஷ் அவளுக்கு முன்பாக காரை விட்டு கீழே இறங்கி இன்னமும் அவள் சிலை போல் உறைந்து அமர்ந்திருந்த பக்கம் வந்து கதவை திறந்தான்.
யாதேஷை நோக்கி ஷிவானி உடனே கைகளை தூக்க, அவளை தூக்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டவன் இப்போது தன் காதல் ராணியை நோக்கினான்.
ஷிவன்யா அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே ஒரு முறை அந்த வீட்டையும் திரும்பி பார்க்க, யாதேஷ் சட்டென அவள் முன் அவனது மற்றொரு கையை நீட்டினான்.
' போயே ஆகனுமா? வேண்டாமே... ' என்ற கெஞ்சலை அவள் விழிகளில் புரிந்து கொண்ட யாதேஷ் மீண்டும் அவள் முகத்திற்கு நேராக ஏதும் கூறாமல் அவன் கைகளை நீட்டினான்.
ஷிவானி பள்ளி சென்ற சோர்வில் கொட்டாவி விட்டுக் கொண்டே யாதேஷின் தோளில் சாய்ந்தபடி இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
" வா யமுனா, "
ஷிவன்யாவின் மனம் கல் போல் இருகியிருந்தாலும் யாதேஷின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றை நம்பி ஒரு பெருமூச்சோடு அவன் கைகளை அவள் பிடிக்க, யாதேஷ் அவர்கள் இருவரின் கரத்தையும் கோர்த்துக் கொண்டு அவளை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அழைப்பு மணி அடித்த இரண்டு நிமிடத்திற்கெல்லாம் வந்து கதவைத் திறந்த விஜித்தா தன் அண்ணனும் அண்ணியும் ஜோடியாய் நிற்பதை கண்டு கண்களை அகல விரித்தாள்.
" அண்ணா அண்ணி! "
யார டா இந்த புது ரோல் என ஷிவானி அவளை ஆர்வமாய் பார்க்க, தன் தங்கையை கண்டு சிரித்த யாதேஷ் தன்னவளை மென்மையாய் அணைத்தபடி உள்ளே அழைத்து வந்த அதே நேரம் விஜித்தாவின் அலறல் கேட்டு மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்தார் சாதனா.
அவரின் முகத்தில் தெரிந்த ஒரு திகில் யாதேஷுடன் இருந்த ஷிவன்யாவை கண்டு தீவிரமடைய அவரையே உருத்து நோக்கிக் கொண்டிருந்த ஷிவன்யா இத்தனை வருடமும் பயந்த அந்த தருணமும் வந்தது.
தன் மகனின் தோளில் சாய்ந்திருந்த அழகிய குழந்தையின் புன்சிரிப்பு அவரை முதல் பார்வையிலே கட்டி ஈர்த்தது.
" விஜி இரு, அம்மா இங்க வாங்க. "
யாதேஷின் அழைப்பில் பட்டென உலகை அடைந்த சாதனாவால் உண்மையிலே பயத்தில் ஒரு நொடி அவர் உடலில் நடுக்கம் பரவியதை மறுக்க முடியவில்லை.
" யாதேஷ்... "
" ம்ஹும். இப்போ நீங்க எதுவும் சொல்ல வேணாம் அம்மா. நான் பேசிக்கிறேன் மொதல்ல... இவ என் பொண்டாட்டி யமுனஷிவன்யா அப்பரம் இது எங்க கொழந்தை ஷிவானி. "
விஜித்தாவும் சாதனாவும் அதிர்ச்சியில் அவனை கண்டு வாயைப் பிளக்க ஷிவன்யா பட்டென திரும்பி அவனைப் பார்த்தாள்.
" இதோ நிக்கிற யமுனா தான் ஆறு வர்ஷத்துக்கு முன்னாடி நான் இங்க கூட்டீட்டு வந்த என்னோட யமுனா... தொலஞ்சு போன விஷயம் ஒரு நாள் கண்டிப்பா கிடைக்கும்ன்னு சொல்ற மாதிரி நான் தொலைச்ச என் மறுபாதி இப்போ கிடைச்சிருச்சு. இப்போ நான் கேட்க நினைச்சதையும் கேட்டுடுறேன்... "
இவ்வளவு நேரமும் இருந்த அவனது புன்னகை கானலாய் எங்கோ மறைந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக யாதேஷின் பிடி ஷிவன்யாவை சுற்றி இறுகிட அவன் கண்களில் தெறித்த சினம் சாதனாவை எச்சிலை கூட்டி விழுங்க வைத்தது. ஒரு அதிர்ச்சியில் இருந்து அவர் மீளும் முன்னே அடுத்தடுத்த அதிர்வலைகளை தாக்கத் தொடங்கினான் நம் நாயகன்.
" அக்ஸிடென்ட் ஆனதுக்கு அப்பரம் நான் செத்துட்டேன்னு அவக்கிட்ட ஏன் ம்மா சொன்னீங்க? ஏன் எனக்கு எல்லாம் மறந்து போனப்போ என் வாழ்கைல ஒருத்தி இருந்தா அவ இப்போ என் கூட இல்ல-ன்னு என் கிட்ட சொல்லல? எதுக்கு நான் யார மறந்தாலும் பரவாயில்ல உயிரோட மட்டும் இருந்தா போதும்னு நினைச்சீங்க? சொல்லுங்க, "
சாதனாவின் வாய் பதில் கூற இயலாமல் தந்தியடிக்க, என்ன தான் யாதேஷின் குரல் தன்மையாக இருந்தாலும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது பெண்கள் மூவருக்குமே தெரிந்தது.
" நான் எல்லாத்தையும் தொலச்சிட்டு என்னையே இழந்துட்டு நின்னப்போ ஒரு முறை கூட என்ன பார்க்க பாவமா இல்லையாம்மா உங்களுக்கு? "
அவன் அடிப்பட்ட பார்வை ஒன்று பார்க்க சாதனாவின் தாய் உள்ளம் பதறியது.
" ஐயோ கண்ணா... யா...யாதேஷ் அப்டிலாம் இல்லப்பா... இவ-இவ வேணாம்- "
யாதேஷ் திடீரென சத்தமாக சிரிக்க, சாதனாவிற்கோ இதயம் எகிறிவிட்டு அடங்கியது.
" இப்பவும்... இத்தன வருஷம் ஆகியும் நீங்க மாறலல்ல? "
" மாமா... " ஷிவன்யா அவள் இடையை அணைத்திருந்த அவனது கரத்தை இறுக்கிப் பிடித்து அவனை அமைதியாக்க முயற்சிக்க யாதேஷ் சட்டென அவளை கண்டு புன்னகைத்தான்.
" நீ இதெல்லாம் கேக்க மாட்ட டி... என்னையாவது கேக்க விடு. இந்த நாழு வர்ஷமும் என்ன நினைச்சிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சிக்கனும்னு தோனுது. "
" மாமா ப்லீஸ்... "
யாதேஷ் ஒரு பெருமூச்சோடு தன்னை சமன்செய்து கொள்ள வேண்டி அவன் மகளை பார்க்க, ஷிவானி அதற்காகவே காத்திருந்தது போல் அவனைப் பார்த்து அன்றலர்ந்த மலராய் சிரித்தாள்.
அம்மா மீதிருந்த பார்வையை அண்ணன் மீது மாற்றிய விஜித்தா மெல்ல அவர்களை நெருங்கி வந்து ஷிவானியை ஆசையாய் பார்க்க, யாதேஷ் அவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.
" தங்கோ இவங்க தான் என்னோட தங்கச்சி. உனக்கு விஜி அத்த, "
விஜித்தா வேகமாக அவளை கண்டு புன்னகையோடு தலையசைக்க புதிதாய் அவளை கண்டதில் கொஞ்சம் வெட்கி தன் தந்தை கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்ட ஷிவானி ஓரக்கண்ணால் அவளைப் பார்த்து " ஹாய் " என மெல்லிய குரலில் கூற விஜித்தாவிற்கு அப்போதே அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
இருந்தாலும் தன் குஷியை மறைத்துக் கொண்டு அவளிடம் ஆசை மொழி பேசினாள். " ஹாய் பேபி உங்க பேரு என்ன? அத்தக்கு சொல்லுங்களேன், "
பேரை சொல்லவா என்பது போல் ஷிவானி இப்போது கண்களை யாதேஷிடம் உயர்த்த அவன் சிரித்துக் கொண்டே தலையசைத்ததும் மெல்ல அவன் கழுத்தில் முகத்தை மட்டும் திருப்பி " ஷிவானி " என்றாள்.
" அச்சோ ஸ்வீட் நேம் செல்லம். அப்பரம் என் பேரு விஜித்தா. " என அவள் கன்னம் கிள்ளி விஜித்தா முத்தம் கொடுக்க ஷிவானிக்கு அந்த சைகை பிடித்திருந்தது.
பட்டென பூ போல் அவள் சிரிக்க அந்த கொள்ளை அழகில் விஜித்தாவும் சாதனாவும் சொக்கித் தான் போயினர்.
அதே நேரம் யாரிடமோ ஃபோனில் கத்திக் கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்த ஸ்வேத்தா பக்கவாட்டில் நின்ற யாதேஷை கவனியாமல் வாயிலுக்கு நேராக நின்ற ஷிவன்யாவை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் கத்தத் தொடங்கினாள்.
" நீ எதுக்கு திரும்ப இங்க வந்த?! உன்ன யாரு உள்ள விட்டது? "
இவளின் திடீர் அலறலில் ஷிவானி திடுக்கிட்டு அரண்டு போய் அவளைப் பார்க்க யாதேஷிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது.
" உன்ன தான் கேக்குறேன் ஏன் வந்த இங்க? திரும்ப பொண்டாட்டி புருஷன்னு உரிமை கொண்டாட வந்தியா? " ஸ்வேத்தா கத்திக் கொண்டே வந்து ஷிவன்யாவை பிடிப்பது போல் சென்ற நேரம் சரியாக அவர்களுக்கு இடையே வந்து நின்றான் யாதேஷ்.
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro