இரண்டாய் இருமனம்: 11
பந்தயம் கட்டிக் கொண்டு தயாராய் நின்றிருந்த மாணவர்கள் கூட்டத்தின் கரகோஷம், ஷிவன்யா மட்டும் தனியே வருவதை கண்டதும் மெல்லக் குறைந்தது. ஆரவ், ஷிவனேஷ் கூறிய இரு வாய்ப்புகளில் ஒன்றை தவறாமல், அவள் முறைத்தபடி வருவதையும், யாதேஷ் இவர்களது பக்கமே வராமல் பின் புறமாய் வகுப்பறைக்குச் செல்வதையும் கண்டு என்ன நடந்திருக்குமென ஓரளவு யூகித்திருந்தான்.
ஷிவன்யா அவர்களுருகில் வந்து தொப்பென அமரவும், ஷிவனேஷ் மற்றும் ஆரவ் பார்வை பரிமாற்றம் செய்து கொள்ள, " பரவால்ல ஷிவாமா. அவன சரி பண்ணிக்களாம் நீ கவலப்படாத, " என கூறிவிட்டு யாதேஷை தேடி ஓடினான் ஆரவ்.
ஷிவனேஷ் அமைதியாய் ஷிவன்யா அருகில் அமர்ந்து அவளின் கரத்தின் மீது தன் கரம் வைத்து தட்டிக் கொடுத்தான். அதை கண்டு சூர்யாவும் ஷிவன்யாவின் மறுபக்கம் வந்து அமைதியாய் அமர, ஷிவனேஷின் தோளில் சாய்ந்து கொண்ட ஷிவன்யா, " அவரு புரிஞ்சிப்பாரு தானே? நான் ஏமாந்துட மாட்டனே? " என மிகவும் மெதுவாய் யாரிடம் கேட்கிறாளென்றே தெரியாமல் கேட்டாள்.
ஷிவனேஷ் தன் மௌனத்தை கடைப்பிடித்தாலும் அவன் பிடித்திருந்த அவளின் கரத்தில் மெதுவாய் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
சூர்யா " எது நடக்கனும்னு இருக்கோ... அது கண்டிப்பா நடக்கும் ஷிவா. அங்க என்ன நடந்துச்சு? " என கேட்டு கொண்டிருக்கும் பொழுதே, அங்கு ஏற்கனவே குழுமியிருந்த யாஷா கூட்டத்தினர் அவர்களின் கூட்டத்துத் தலைவன் ஆரவும் இல்லாமல், எண்ணற்ற கலந்தோசித்தலின் பின், ஆரவின் அசிஸ்டென்ட் எனப்படும் ஒருவனை ஷிவன்யாவிடம் அனுப்பினர்.
அவன் " ஷிவன்யா... உங்களால இன்னைக்கு பாட்டு பாட முடியுமா? " என பொருமையாய், அதே நேரம் அவனை ஏறிட்டுப் பார்த்த ஷிவனேஷின் பார்வையில் முறைக்கிறானோ என்ற பயத்திலும் தயக்கமாய் கேட்டவனை நிமிர்ந்து நோக்கினாள் ஷிவன்யா.
ஷிவன்யா " இன்னைக்கு யாருக்கோ பர்த்டேன்னு சொன்னீங்கல்ல? நான் பாடுறேன், நான் பாடுறேன். பர்த்டே கெர்ள் எங்க இருக்கீங்க? " என எழுந்து நின்று யாஷா கூட்டத்தினரைப் பார்க்க, ஒரு சலசலப்பிற்கு பின் சில சீனியர்களுக்கு மத்தியில் தள்ளப்பட்டாள் ஒரு பெண்.
அவள் மருண்ட விழிகளோடு அந்த கூட்டத்தை நோக்க, ஷிவன்யா புன்னகையோடு யாஷா கூட்டத்து செயலாளரிடமிருந்து மைக்கை வாங்கிக் கொண்டு, ஷிவனேஷின் தோளை ஒரு கையால் பிடித்து, அவன் கொடுத்த மறுகையை பிடித்துக் கொண்டு அந்த கல்பென்சில் ஏறி நின்றாள்.
ஷிவன்யா " ஓக்கே... இன்னைக்கு டூயெட்லாம் இல்லங்க மக்களே. ஒன்லி சிங்கில் வாக்கல், அட்ஜஸ்ட் கரோ! " என கண்ணடித்துக் கூறிவிட்டு பாடத் தயாரானாள்.
விறுவிறுவென வகுப்பறை பக்கம் செல்லும் யாதேஷை ஓடிப் போய் பிடித்த ஆரவ் மூச்சு வாங்கியபடி அவனை நிறுத்தினான்.
ஆரவ் " டேய், என்ன டா ஆச்சு? "
யாதேஷ் " போடா, நான் வீட்டுக்குப் போறேன். எனக்கு தல வலிக்கிது! "
ஆரவ் " மச்சான்... அவ சின்ன பொண்ணு டா. அவ மேல கோவப்படாத. "
யாதேஷ் " ம்ச் அவ மேல நான் எப்படி டா கோவப்படுவேன்? இந்த வயசே அப்படி தான்... அவள தப்பு சொல்ல முடியாது. "
ஆரவ் " பின்ன என்ன டா சொன்ன அவ கிட்ட? "
யாதேஷ் " என்ன மறந்துடுன்னு சொன்னேன்... அவ நம்ம செமெஸ்டர் முடியிர வர என்ன பார்க்க மாட்டேன், என் பக்கமே வர மாட்டேன்னு சொல்லீட்டு போய்ட்டா, நான் வந்துட்டேன்... "
ஆரவ் " சுத்தம். நீ ஓக்கே சொல்லுவன்னு நெனச்சேன். நீ ஏன் டா முடியாதுன்னு சொன்ன? " என கேட்டதும் யாதேஷ் அவனை வெறியுடன் முறைத்தான்.
யாதேஷ் " நீயுமா டா! "
" பின்ன இல்லையா? " என ஆரவ் உடனடியே கேட்க, யாதேஷ் வேகமாய் தலையை இடவலதாய் ஆட்டினான்.
யாதேஷ் " இது சரிப்பட்டு வராது. என்ன வீட்ல கொண்டு போய் விடுறியா இல்ல, நான் போற வழில எந்த லாரியையாவது லிஃப்ட் கேட்டு போகவா?! "
ஆரவ் " ஹெ செய், வா டா! லூசு, " என அவர்களின் வகுப்பறையிலிருந்து இருவரின் பையையும் மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை ஷிவனேஷிடம் கூறிக் கொள்ளலாமென இவர்கள் மைதானத்தை தாண்டி நடந்த நேரம், அவளின் உருகிய குரல் அவனின் செவியை தேனென வந்தடைந்தது...
" உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன் உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன் அலைந்தும்
ஏன் மறுபடி தொலைகிறேன்...
ஓா்
நொடியும் உன்னை நான் பிாிந்தால்
போா்களத்தை உணா்வேன் உயிாில்
என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்
கடிதம் வரைகிறேன் அன்பே...
உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன்... "
கல்லூரி மாணவர்கள் அவளின் குரலிலும் புன்னகை மாறா முகத்திலும் மயங்கி மூக்குளிக்க, ஷிவன்யாவின் மனக்கண்ணில் அவளவனின் அழகிய விழிகள் படம் போல் வந்துச் சென்றது. யாதேஷ் நடப்பதை நிறுத்தி விட்டு அமைதியாய் நிற்க, ஆரவ் அவனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.
"தூரத்தில் தோன்றிடும்
மேகத்தை போலவே நான்
உன்னை பாா்க்கிறேன் அன்பே...
சாரலாய் ஓா் முறை நீ என்னை
தீண்டினாய் உனக்கது தொிந்ததா
அன்பே...
என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா அன்பே...
நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே...
ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே... "
ஷிவனேஷ் ஷிவன்யாவை கண்டு புன்னகைக்க, வரிகளில் உருகி பாடிக்கொண்டிருந்த ஷிவன்யா, பாடல் தந்த நம்பிக்கையாலோ என்னவோ யாதேஷின் நிராகரிப்பையெல்லாம் மறந்துவிட்டு புன்னகைத்தாள்.
" உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன்... "
இறுதியாய் எழுந்த கரகோஷத்தோடு அவளின் குரல் அவன் செவிகளை விட்டு கானலாய் மறைய, ஆரவையும் தாண்டி கல்லூரியை விட்டு வெளியேறினான் யாதேஷ்...
புன்னகையுடன் அந்த கூட்டத்திடமிருந்து விடை பெற்று தன் வகுப்பறையை அடைந்த ஷிவன்யா, பெருமூச்சுடன் கண்களை திறக்கவும் அவளருகில் புன்னகைத்தபடி நின்றிருந்தாள் ஒரு பெண். ஷிவன்யாவை விடவும் சற்றே குள்ளமாய் மஞ்சள் நிற சுடிதாருடன் ஊதா நிற ஷால் அணிந்து தோள் பையின் இரு வாரையும் பிடித்துக் கொண்டு நம் நாயகியை கண்டு சிரித்தவள், " இன்னைக்கு ரொம்ப அழகா பாடுனீங்க. தன்க்யூ! " என கூறினாள்.
ஷிவன்யா " இட்ஸ் ஓக்கே மா. " என மறு புன்னகையளித்தாள்.
" நான் உங்க பக்கத்துல உக்காரளாமா? ஐம் அத்விகா, " என அவள் அறிமுகமாகிக் கொள்ள முகம் கொள்ளா புன்னகையுடன் அவளை அருகில் அமர்த்தி கொண்டாள் ஷிவன்யா.
" இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். " அவள் தான் பர்த்டே கெர்ள் என்பதை நினைவில் கொண்டு மனம் நிறைய வாழ்த்தினாள்.
#
மகிழுந்தில் சென்று கொண்டிருந்த நம் இரு நண்பர்களும் வெகு நேரமாய் அமைதியை கடைப்பிடித்து அமர்ந்திருக்க, கண்கள் மூடி சாய்ந்திருந்த யாதேஷை ஓரக்கண்ணால் அவ்வப்போது நோட்டமிட்டுக் கொண்டே வந்தான் ஆரவ்.
ஆரவ் " மச்சான்... தூங்குறியா...? "
யாதேஷ் " இல்ல, செத்துப் போனா எப்படி இருக்கும்னு ரிஹெர்செல் பண்ணீற்றுக்கேன்... "
ஆரவ் " ஓஹ் சரி சரி பண்ணு— ஹன், என்ன சொன்ன?! " என விழிக்க, யாதேஷ் இவனையெல்லாம் முறைப்பது அந்த நேரத்திற்கே அவமானம் என சொல்லாமல் சொல்வதை போல உண்மையிலே உறங்க முடிவெடுத்திருந்தான்.
ஆரவ் " டேய், நான் பேசீட்டே இருக்கேன்ல, என்ன தூக்கம் உனக்கு?! "
யாதேஷ் " ம்ச் இப்போ என்ன டா பிரச்சனை உனக்கு?! அமைதியா தான வந்த? இப்போ என்ன?! "
ஆரவ் " இல்லடா... வீடு வேற வரப்போகுது... விடிஞ்சிதுன்னா எப்பவும் போல இன்னைக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்துடுச்சுன்னே நீ மறந்துடுவ. அதான் முன்னாடியே கேட்டுக்களாமேன்னு நெனச்சேன்... " என அவன் இறுதியாய் ஒரு வளைவில் காரை செலுத்த, கண்களை திறந்து நேராய் அமர்ந்தான் யாதேஷ்.
யாதேஷ் " மறந்து போறதுக்கு மத்தவங்களும் அவளும் ஒன்னில்லடா... " என மனதிற்குள் சொல்வதாய் எண்ணி சத்தமாய் கூறினானோ இல்லையோ, அதை ஆரவ் கவனித்தும் கூட ஏதும் கூறவில்லை.
மாலை சிறப்பு வகுப்னைத்தையும் முடித்து விட்டு " அம்மா! " என கத்தி கொண்டே ஓடி வந்தாள் பதினேழு வயதான விஜித்தா. அவளுக்கு முன்பே அவளின் தமையன் உணவு மேஜையில் தேனீர் அருந்தியபடி அமர்ந்திருந்தான்.
விஜித்தா " ஹாய் ப்ரோ! என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?! இன்னைக்கு உங்க காலேஜ்ல எந்த கச்சேரியும் இல்லையா? "
யாதேஷ் " ஆறு மணியாகப்போகுது, இது உனக்கு சீக்கிரமா?! "
விஜித்தா " எனக்கு லேட்டு தான். ஆனா உனக்கு சீக்கிரமாச்சே! ஏன் சீக்கிரம் வந்த? சொல்லு, சொல்லு! கச்சேரி கன்சலாகாதே, என்ன உன் ஃபர்ஸ்ட் இயர் குயிலி அக்கா லீவா இன்னைக்கு?! ஆனா அவங்க அனேகமா லீவெல்லாம் போட மாட்டாங்களே? " என அவளே கேள்விகளை அடுக்கிக் கொண்டு அவளைப் பார்த்தாள்.
யாதேஷ் " ம்ச் அவள பத்தி பேசாத விஜி! "
விஜித்தா " ஏன் டா?! " என ஆச்சர்யமாய் கேட்கவும்,
யாதேஷ் " அவ என்ன லவ் பன்றாலாம். இன்னைக்கு ப்ரொப்போஸ் பண்ணா... "
விஜித்தா " வாட்ட்ட்ட்!? நல்ல விஷயம் தானே? "
யாதேஷ் " ஹே! அதெப்படி நல்ல விஷயமாகும்? இனிமே என்ன பார்க்கவே மாட்டன்னு சொல்லீட்டா. " என இவன் கடுகடுத்தான்.
விஜித்தா " ஏன் ப்ரோ உன் லவ்வ நீயும் சொல்லீருந்தா அவங்க ஏன் உன்ன பார்க்க மாட்டேன்னு சொல்லப் போறாங்க? " என அவன் தோளில் சாய்ந்தபடி கேட்டாள்.
யாதேஷ் " ம்ச் நான் லவ் பன்றேன்னு எப்போ சொன்னேன்?! "
விஜித்தா " ஓ லவ் பண்ணலையா? ஹிஹிஹி பண்ணியோன்னு நெனச்சிட்டேன் டா அண்ணா! சாரி, "
யாதேஷ் " லூசு மாரி பேசாம போய் கை கால் முகத்த கழுவு போ... " என அவள் தலையிலே கொட்டி விட்டு எழுந்துச் சென்றான்.
இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த நம் நாயகனின் தாயார் சாதனா, " பாத்தியா டி என் மகன் நான் யார காற்றனோ அவளத் தான் கட்டிப்பான். என் புள்ள தங்கம்... அவன் எப்படி ஒரு பொண்ண லவ் பண்ணுவான்? வாய்ப்பே இல்ல! " என விஜித்தாவிடம் பெருமையாய் கூறிக் கொள்ள, அவரை கண்டு வாயை மூடி சிரித்தாள் விஜித்தா.
விஜித்தா " ம்மா, உனக்கு அண்ணன பத்தித் தெரியல! ஒருவேளை ஃபர்ஸ்ட் இயர் குயிலி அக்கா அவன் மனச மாத்தீட்டா, இன்னும் இரெண்டே மாசத்துல அவங்கள வீட்டுக்கே கூட்டீட்டு வந்து உன் ஆசிர்வாதத்த வாங்கீடுவான் பாரு அவன்! " என அவள் விளையாட்டாய் சிரித்துக் கொண்டே கூறவும், சாதனா அவளின் தலையில் கொட்டி அவளின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
இரண்டு வாரம் மற்றவர்களுக்கு கண்ணிமைக்கும் நேரத்திலும் நம் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு மட்டும் இரண்டு வருடங்களைப் போலவும் நகர்ந்திருந்தது.
இந்த இரு வாரத்தில் ஷிவன்யா யாதேஷ் கூறியதைப் போலவே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. வாரத்தில் நான்கு முறைக்கும் மேலாகவாவது நடந்துவிடும் அவர்களின் டூயெட் கச்சேரிகளை காணாமல் மாணவர்கள் வாட, யாதேஷின் இறுதி பரிட்சை நெருங்குவதால் ஷிவன்யா மாத்திரம் பாடுவதை விடாமல் தொடர்ந்து வந்தாள். நடந்த அனைத்தையும் தன் தந்தையிடமும் தெரிவித்திருந்தவள் மறந்தும் அதன் பின் யாதேஷின் பக்கம் திரும்பவில்லை.
அத்விகா அன்பான குணம் கொண்டவள், ஷிவன்யாவை முதல் பார்வையிலே ஈர்த்து இன்றளவில் இருவரும் தோழிகளாகியிருந்தனர்.
ஒரே வகுப்பறை மட்டுமல்லாமல் அத்விகா தன்னுடைய விடுதியில் தான் இருக்கிறாள் என தெரிந்த பின் ஷிவன்யாவின் காட்டில் மழை தான். இருவரும் காலையில் உணவு உண்பதோடு இரவு உணவு உண்டுவிட்டு அவரவர் அறைக்குச் செல்லும் வரை ஒன்றாகவேத் தான் இருப்பர்.
இந்த புதிய மாற்றங்களின் இடையில் நம் நாயகிக்கு நிம்மதியை கொடுத்தென்னவோ அத்விகாவின் நட்பு தான்...
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro