அன்பு அத்தை: 55
வாயிலில் நின்றிருந்த ஷிவன்யாவின் தாயிற்கு மனம் குளிர்ந்தது.
சசி படித்து முடித்து சென்னையில் வேலையில் அமர்ந்தும் கூட தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் அவர் கணவன் இறுதியாய் வாழ்ந்த வீட்டையும் இயற்கையிடம் கைவிட்டுச் செல்ல மனமின்றி இளைய மகள் எவ்வளவோ சொல்லியும் அதை அன்பாய் மறுத்துவிட்டு ஊரோடே இருந்துவிட்டார் ராசாத்தி.
தனிமையில் வாழும் வாழ்கையெல்லாம் அந்த அனுபவத்தில் வளர்ந்த பெண்மணிக்கு பெரிதாய் தெரியவில்லை. கட்டிய கணவன் கடவுளடி சாய்ந்ததும் நம்பி வந்த புகுந்த மனையில் சொந்த மகளுக்கு நடந்த அநீதியை குரல் உயர்த்தித் தட்டிக் கேட்க இயலா நிலைக்கு ஆளாக்கப்பட்ட அந்த தாய் தன் மகளுக்கு ஏற்பட்ட துயரில் இருந்து அவளை காக்க இயலாமல் நிர்பந்தமாய் நின்றது போதும் என எதிர்த்து நின்ற மொத்த கிராமத்தையும் பகைத்துக் கொண்டு ' நீ உன் வாழ்கைய தேடி போய்ட்டு வா தங்கம், " என கண்ணீரோடு பெற்ற மகளை தன்னை விட்டு அனுப்பி வைத்தார்.
இந்த ஊர்காரர்களுக்கு எல்லாம் என்ன தான் வன்மமோ தெரியவில்லை. யார் காதலித்தால் என்ன? காதலிக்கும் ஆண் பெண்ணின் குடும்பத்தாரை விடுத்தும் அதில் அதிகம் ஈடுபட நினைப்பது என்னவோ அக்கம்பக்கத்தில் எரியும் நெருப்பை கிருஷ்ணா ஆயில் ஊற்றி ஏற்றிவிட நினைக்கும் சிலர் தான்.
அப்படி பலர் கீரனூரில் வசித்து வந்தனர் போலும். ஷிவன்யாவின் வாழ்கையை முடக்கி அவளை ஏதோ ஒரு ஆடவனுக்கு ஊரே சேர்ந்து திருமணம் முடிக்க முணைந்த போது தான் ராசாத்திக்கும் அது புரிந்தது.
அவர் கணவில் கூட ஏதோ ஒரு பெண்ணின் வாழ்வில் முடிவு எடுக்கவோ அல்லது விருப்பமில்லாத ஒன்றை அவளை செய்ய வைக்கவோ நினைத்திருக்க மாட்டார். காதல் திருமணமோ பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட திருமணமோ வாழப் போகும் இருவர் முடிவை சுற்றி உள்ள நான்கு பேர் எடுத்து அதில் என்ன ஆனந்தம் பார்க்கிறார்கள்?
இப்படி நியாயம் பேசும் சிலரும் விதிவிளக்கல்ல... சமூகத்தில் நற்பெயர் பெற்றவர்களும் ஊருக்கு ஒரு நியாயம் என் வீட்டிற்கு ஒரு நியாயம் என அவர்களின் குடும்பத்தில் அதே சம்பவம் வரும் போது அதை வேறு பார்வையில் பார்ப்பதுண்டு. நல்ல மனம் கூட சில நேரம் காதல் என்ற உன்னதமான அன்பை புரிந்து கொள்ளாமல் ஊர் பேச்சுக்களுக்கு இடையில் சில நாள் சிக்க பயந்து வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் உறவை பிரித்துவிடுகிறது.
வாழ நினைப்போரின் முடிவுகளை எடுக்கும் சக்தி அவர்கள் கையில் இருப்பதே சிறத்தை. உனக்கு ஒன்றும் தெரியாது, பெரியவர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என கூறும் அவர்கள் கொஞ்சம் பொருமை காத்து இளையவர்களுக்கும் பேச நேரம் கொடுத்தால் என்ன குறைந்துவிடுமோ...?
சசியை நல்லபடியாக படிக்க வைத்து ஒரு நல்ல நிலையில் அவளை கரைசேர்த்ததும் தான் ராசாத்திக்கு மூச்சே வந்தது. ஊரிடம் இருந்து தன் இளைய மகளை காக்கவே அவளுக்கு வேலை கிடைத்ததும் தாராளமாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
ராசாத்தி இவ்வாறான எண்ணங்கள் அனைத்தையும் சசியை சென்னைக்கு அனுப்பியதோடு தூக்கி பெட்டியில் அடைத்துவிட்டார். ஊரை கண்டு கவலைப்படுவதை விட அந்த அம்மாவிற்கும் வேறு வேலை இருக்கும் இல்லையா?
இறந்த கணவனுக்காகவும் எங்கோ வாழும் மூத்த மகளின் நலனுக்காகவும் இளைய மகளின் மகிழ்வுக்காகவும் மட்டுமே பிரார்த்தித்து வாழ்ந்து வந்த அவரின் வீட்டு வாசலில் இரண்டு நாட்களுக்கு முன் வந்து நின்றான் யாதேஷ்.
ஆனந்த அதிர்ச்சியில் யாதேஷை கண்ட ராசாத்தி அவனை விழுந்துவிழுந்து உபசரிக்க, மீண்டு வந்திருந்த கொஞ்சநஞ்ச நியாபகங்களோடு அவரை கண்டு புன்னகைத்த நாயகன் ராசாத்தியின் வரவேற்பை ஏற்று வாயிலின் முற்றத்தில் இருவரும் அமர்ந்தனர்.
தான் வந்த காரணத்தை வெகு நேரம் மறைத்து வைக்க மனம் வராமலும் ராசாத்தியின் கண்கள் அவ்வப்போது அவனின் காரை ஆவலோடும் ஏக்கத்தோடும் தீண்டி வருவதை பார்த்து ஒரு பெருமூச்சோடு அனைத்தையும் ஒரு மணி நேரத்தில் கூறி முடித்தான்.
இத்தனை வருடம் இல்லாமல் அதுவும் ஷிவன்யாவும் உடன் இல்லாமல் முக்கியமாக கண் பார்வையோடு மீண்டு வந்திருந்தவனை குழப்பமாகவே பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தியை அடுத்தடுத்து யாதேஷ் கொடுத்த அதிர்ச்சிகள் கத்தி அழாத நிலைக்கு தள்ளிவிட்டது.
" அத்த... என்னால எல்லாத்தையுமே பழையபடி மாத்த முடியும்னு வாக்கு குடுக்க முடியாது. ஆனா மாமா என்ன நம்பி என் கைல விட்டுட்டுப் போன உங்க பொண்ண திரும்ப கண்கலங்க விட மாட்டேன். இப்பவும் நான் எல்லாம் நியாபகம் இருந்தும் ஷிவன்யா கிட்ட போகாம உங்ககிட்ட தான் வந்துருக்கேன். உங்க பொண்ண... என்னால தான் உங்கள விட்டு இவ்வளவு வருஷம் பிரிஞ்சி இருந்தீங்க... என்ன மன்னிச்சிருங்க அத்த... "
" நீங்க ஏன் தம்பி மன்னிப்பு கேக்குறீங்க... உங்களுக்கு தெரிஞ்சா இதெல்லாம் ஆச்சு? நமக்குத் தெரியாத எல்லாம் தெரிஞ்ச அந்த கடவுள் எல்லாம் நல்லதுக்குத் தான் பன்றாங்கன்னு நினைச்சா எல்லாம் நமக்கும் நல்லதே நடக்கும்... "
ராசாத்தி கண்ணீரை வேகமாக ஒற்றி எடுத்துவிட்டு அவனை கண்டு புன்னகைக்க முயன்றார்.
" என் தொணை இல்லன்னாலும் என் மவ நல்லா தான் இருந்துருப்பா தம்பி. அவ கெட்டிக்காரி... அவள...அவள அவ்ளோ சீக்கிரம் ஒடச்சிற முடியாது...முடியாது... "
யாதேஷ் அவரை கண்டு புன்னகைத்தான். ஆனால் என்ன முயன்றும் அந்த புன்னகையில் அவனால் அவன் வலியை மறைக்க முடியவில்லை.
கண்களை எட்டாத புன்னகை...
வாழ்கையை ஏற்கனவே வாழ்ந்து முடித்த பெண்மணிக்கு அந்த வலி கூடவா அடையாளம் தெரியாது?
" எம்புள்ள இப்போ சந்தோசமா இருக்காளா தம்பி? "
ராசாத்தியின் கேள்வியில் யாதேஷ் தரையைப் பார்த்தான். பதில் இல்லை. ஷிவன்யா சந்தோஷமாக இல்லை. அதை கூறும் தைரியமும் அவனிடம் இல்லை.
" என்ன... என்னாச்சு தம்பி? ஏன்...? ஏன் அமைதியா இருக்கீங்க? "
" அவ சந்தோஷத்த இழந்துட்டா அத்த... நாழு வர்ஷத்துக்கு முன்னாடியே... இப்போ அவ ஏதோ இருக்கா ஆனா அவளா இருக்காளான்னு எனக்குத் தெரியல... "
" ஷிவன்யா கிட்ட நீங்க பேசலையா? ஏன் பேசலை? அவ உங்களுக்காக தான் காத்துட்டு இருப்பா... "
மகளை நன்கு அறிந்த தாயாய் அவர் சரியாக கூற விரக்தியாய் சிரித்த யாதேஷின் கண்களில் மேலும் மேலும் வலி கூடிக் கொண்டே போனது. அவன் பேசபேச ராசாத்திக்குத் தான் கொஞ்சம் பயமாக இருந்தது.
" அவள தனியா விற்ற மாட்டேன்னு நான் மாமாவுக்கு குடுத்த வாக்க என்னால காப்பாத்த முடியல... நாழு வர்ஷம்... நாழு வர்ஷம் என் உயிர நான் இழந்துட்டு அவ இருந்தாங்குறதையே மறந்துட்டு பொணமா வாழ்ந்துட்டேன். அதுக்கு நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்... ஆனா உங்களோட முழு சம்மதம் இல்லாம நான் திரும்ப அவ வாழ்கைக்குள்ள போ மாட்டேன். "
" ஐயோ தம்பி என்ன என்னென்னமோ சொல்றீங்க? நீங்களே சொல்றீங்களே, உங்களுக்கு நினைவு இருந்துருந்தா நடந்த எதுவும் நடந்துருக்காது. ஆனா முடிஞ்சது முடிஞ்சது தான? நீங்க அப்டியெல்லாம் யோசிக்காதீங்க! உங்களவிடவும் ஒரு நல்ல மாப்பிள்ளைய என்னால எங்க போயும் கண்டுப்புடிக்க முடியாது. இப்பவும் நான் மனப்பூர்வமா தான் தம்பி உங்கள இங்க உக்கார வச்சிருக்கேன். அவ அப்பா உங்கள நம்பி தான் உங்க கைல எங்க பொண்ண குடுத்தாரு. நான் எப்படி அவருக்கு எதிரா நிப்பேன். நீங்க சொக்கத் தங்கம் தம்பி. உங்கள வேணான்னு சொன்னா என்ன என் பொண்ணே விட்டு வைக்க மாட்டா... "
ராசாத்தி அவன் ஏதோ சொல்ல கூடாத எதையோ சொன்னது போல் வாயில் இரண்டு முறை அடித்துக் கொள்ள யாதேஷ் அதை தடுக்க வரும் முன்பாக எங்கிருந்தோ வந்த சசியின் குரல் அவனை திடுக்கிட வைத்தது.
" ஏன் மாமா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல...? "
படாரென எங்கிருந்தோ முளைத்த காளான் போல் யாதேஷ் அமர்ந்திருந்த முற்றத்தின் திடல் பின்னிருந்து எழுந்த சசியை கண்டு யாதேஷ் ராசாத்தி இருவருமே பதற, யாதேஷ் தவறி திண்டிலிருந்து கீழேயே விழுந்திருந்தான்.
நெஞ்சைப் பிடித்துக் கொண்ட ராசாத்தி " கூருக்கெட்டவளே எங்கேந்து டி குட்டிச்சாத்தான் மாதிரி மொளச்சி வர? தம்பி நெஞ்சப் புடிச்சிட்டு கிடக்குறாரு பாரு, ஐயோ தம்பி எந்திரிங்க, " என அவரே அதன் பிறகு நியாபகம் வந்து அவனுக்கு எழுந்து நிற்க உதவினார்.
அப்போதும் திண்டில் கை வைத்துக் மற்றொரு கையை தாடையில் வைத்து அவர்களை பார்த்த சசி " நான் காலைல இருந்து இங்க தான் இருக்கேன் ஆத்தா. நீ தான் உன் மருமகன் வந்த குஷில பெத்த புள்ளைய மறந்துட்ட, "
' ஆட ஆமால்ல... காலைல தான வந்தா இவ, ' என ராசாத்தி அவருக்குள்ளே நினைத்துக் கொள்ள
" ஓய் குட்டி மச்சி என்ன என்ன நினைச்சிட்டு இருக்க நீ? " யாதேஷ் அப்போதே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கண்களை விரிக்க சசி அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள்.
" என்ன மாம்ஸ் நான் என்ன தப்பா கேட்டுட்டேன்? எங்கம்மா இப்போ எங்கக்காவ உங்களுக்குத் தர மாட்டேன், நீங்க பேட் மருமகன் னு சொல்லி இரெண்டு ஸ்டார் ரேட்டிங் குடுத்தா மட்டும் நீங்க சும்மா இருந்துருவீங்களா இல்ல எங்கக்கா தான் சும்மா இருந்துருவாளா? "
யாதேஷ் என்ன சொல்வதென தெரியாமல் கழுத்தைத் தேய்க்க
" சொல்லுங்க மாமா? அப்டி சொன்னா சும்மாவா இருப்பீங்க நீங்க? "
" திரும்ப உங்கக்காவ ஃபர்ஸ்ட்டுல இருந்து லவ் பண்ணி வீட்டுல வந்து பொண்ணு கிட்ட அத்த கால்ல விழுந்துருவேன். " யாதேஷ் பட்டென சொல்லிவிட்டு கழுத்தை அசடு வழிய தேய்க்க ராசாத்தி அவனை ஏதே என்பது போல் பார்க்க சசி தான் " எனக்குத் தான் தெரியுமே! " என கைத் தட்டினாள் குஷியாக.
" நான் முன்னாடியே அந்த ப்லன்ல தான் வந்தேன். அத்த ஒருவேளை ஒத்துக்கலன்னா கால்ல விழுந்துடலாம்னு... "
சசி எழுந்து வந்து ராசாத்தியை கட்டிக் கொண்டு " உங்க மாமியார பத்தி உங்களுக்குத் தெரியல மாமா. இவங்க ரொம்ப ஸ்வீட்டு, அவங்க மருமகன அவங்களே எப்டி கஷ்டப்படுத்துவாங்க? நீங்க எங்க மம்மிய அப்பரமா கவனிச்சிக்களாம் எங்கக்காவ போய் கவனிங்க, "
ராசாத்தி அப்போதே ஏதோ உணர்ந்தது போல் சசியை அவர் புறம் திருப்பி வேகமாக கேட்டார். " ஏய் தங்கம் அப்போ உனக்கு எல்லாம் தெரியுமா முன்னாடியே? அக்காவ பாத்தியா நீ? "
" ஆமாம்மா நான் அக்கா கூட தான் நேத்து வரைக்கும் இருந்தேன். இன்னைக்கு நான் ஊருக்கு வந்ததே உன்ன அவள பார்க்க அழச்சிட்டுப் போகத்தான்... அவ உன்ன பார்க்கனும்னு சொல்லீட்டே இருந்தா ஆனா அவளுக்கு உன்ன பார்க்க பயமா இருக்குதாம்... மாமாவ நாளு நாளா காணும்னு இப்போ அந்த டெஸ்ஷன்ல இருக்கா... அதான் நான் உன்ன அழச்சிட்டுப் போவ வந்தேன். "
" பெத்தவள பார்க்குறதுக்கு இவளுக்கு என்ன பயமாம்? நீ ஒரு புத்தி சொல்ல மாட்ட அவளுக்கு? அது சரி நீ என்ன டி வீட்டுக்கு வந்த இத்தன நேரத்துல சொல்லுற? ஒரு பொருப்பு இருக்கா டி உனக்கு? ஐயோ எனக்கு காலும் ஓடல கையும் ஓடலையே! வாங்க இப்போவே கிளம்பலாம் பெட்டிப் படுக்கைய எடுத்துப் போடு உடனே... "
ராசாத்தி சசியின் முதுகில் நான்கு அடி போட்டுவிட்டு படபடவென பேசிக் கொண்டே வீட்டுக்குள் ஓட, சசி அவரை வேகமாக பிடித்து நிறுத்தினாள்.
" எம்மா எம்மா செத்த இரும்மா! ஏன் இப்போ இந்த பறபறந்து எந்த ஏரோப்லேன புடிக்கப் போற? இப்போவெல்லாம் பஸ்ஸு புடிக்க முடியாது. நானே நைட்டெல்லாம் பஸ்ல வந்து காலைல தான் தூங்குனேன். காணாம போன மாமா என்னன்னா இங்க உக்காந்து மாமியார் கூட கடல ஃப்ரை பண்ணீட்டு இருக்காரு. "
யாதேஷ் சசியின் துடுக்கான பேச்சில் சிரித்துக் கொண்டே " நான் கார்ல தான டா வந்தேன். கார்ல போயிக்கலாமே. "
" அட என்ன மாமா? மாமியார் வீட்டுக்கு மொதல் முறையா வந்துருக்கீங்க, அதெப்புடி உடனே உங்கள அனுப்ப முடியும்? எங்கம்மா தடபுடலா ஒரு விருந்து வைக்காம உங்கள சென்னைக்கு நான் விட மாட்டேன். "
நடந்த களோபரத்தில் ராசாத்திக்கும் அது மறந்திருக்க மகளின் கூற்றை கப்பென பிடித்துக் கொண்ட அந்த அன்பு மாமியார் சொன்னது போல் பம்பரமாய் சுற்றி அவரது மருமகனுக்கு அறுசுவை உணவு சமைத்து யாதேஷ் போதும் போதும் என்று சொல்லியும் கேட்காமல் சசியும் ராசாத்தியும் அவனை கண்ணுங்கருத்துமாய் கவனித்துக் கொண்டனர்.
பின்னர் இரவு வெகு நேரம் ஆனதால் சசியும் யாதேஷும் அங்கேயே ராசாத்தியின் சொல் கேட்டு தங்கிவிட மறுநாள் கீரனூரில் இருந்து கிளம்பி நேராக சென்னை வந்தனர்.
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro