அணைக்காமல் போவேனோ ஆருயிரே: 49
முகிலின் துணையின்றி தன் காலை கதிரோன்களை உலகெங்கிலும் பரப்பி அழகிய இருளுக்கு விடுப்புக் கொடுத்து புன்னகை முகமாய் பொளிவுடன் உதயமாகினான் ஆதவன்.
அல்லாடும் மனதை தாங்க இயலாமல் இன்றும் பொளிவின்றி நிறுவனம் வந்தடைந்த நம் நாயகியின் கண்கள் அவளவனைத் தேடியது. நிறுவனத்தையே நான்கு நாட்கள் அல்லோலப்படுத்தி அவன் கட்டிய அந்த கண்ணாடி அறை கடந்த ஆறு நாட்களாக எப்படி வெறுமென அவளை வரவேற்றதோ அவ்வாறே இன்றும் அவளை வரவேற்று நின்றது.
அவள் உள்ளே வந்ததுமே அவளது பார்வை செல்லும் திசையை கவனித்த சித்ராவும் மிருதுளாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்களது ஷிவன் பாஸை பற்றி அவர்களுக்கும் ஒரு சில விஷயங்கள் தெரியும். தலை கால் போன விஷயமாக இருந்தாலும் ஒரு நாளுக்கு மேல் நிறுவனம் வராமல் இருந்ததில்லை அவன். இப்படி தொடர்ந்து ஆறு நாட்களாக என்ன தலை போகும் காரணமோ தெரியவில்லை...
இன்றும் இவனை காணவில்லை என்றால் நேராக வீட்டிற்கே போய்விட வேண்டியது தான் என்ற முடிவோடு தான் இன்று கண்களையே பிரித்தாள் நம் நாயகி. இப்படி நாள் கணக்கில் அவனை பார்க்காமல் காதலித்த நாட்களில் கூட அவள் தவித்தத்தில்லை.
யாஸ் நிறுவனம் முழுவதும் பலர் பறபறவென அலைந்து கொண்டிருந்தனர். ஏதோ ஒரு பாடல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சரியாக இல்லை என மிருதுளாவையும் பிடித்துக் கொண்டனர் போலும். ஷிவன்யா பெருமூச்சோடு அவளது இருக்கையில் வந்து அமர்ந்ததுமே புதிய பேச்சுரை நிகழ்ச்சியின் கோப்புகள் இவள் மேஜையை நிறைக்கத் தொடங்க, பின் நேரம் போவது தெரியாமல் அவர்களின் வேலைகள் அனைவரின் கவனத்தையும் திருடிக் கொண்டது.
அந்த பாடல் திடீரென நிறுவனம் முழுவதும் ஒலித்தடங்கும் வரை...
" துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே... "
உயிர் வரை தீண்டி வந்த அந்த பாடலில் சிலிர்த்தடங்கிய ஷிவன்யா படக்கென நிமிர்ந்து பார்க்க, யாஸ் நிறுவனத்தில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்த பாடல் நிகழ்ச்சிக்கு பொருப்புடைய குழு ஒரு மூலையை மட்டும் மொய்த்துக் கொண்டிருந்தது.
படபடக்கும் இதயத்தை பிடித்துக் கொண்டு எழுந்த ஷிவன்யாவின் விழிகள் ஒரு வழியாக ஆறு நாட்கள் ஏக்கத்தின் பின் அவளவனின் புன்சிரிக்கும் விழிகளுடன் சங்கமித்தது.
கண்ணீர் அவளை காந்தமாய் பிடித்தணைக்க, அவளை ஊடுருவிய அவன் கண்களோடு அவன் இதழும் அவளை கண்டு காதலாய் விரிந்தது.
" முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே... " அவன் விழிகள் இரண்டும் அவளோடு காதல் மொழி பேச அவளையும் மீறி கண்ணீரோடு சிரித்த ஷிவன்யா அவனை கண்டு மெல்லமாக தலையசைத்தாள்.
தன் மொத்த காதலையும் விழிகளில் தேக்கி அவளை பார்த்துப் பாடினான் அடுத்த வரிகளை...
" ஓ நிழல் போல விடாமல்
உன்னை தொடர்வேனடி...
புகைபோல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி... "
அவன் பாடிக் கொண்டே ஷிவன்யாவின் கதிரை முன் வந்து நிற்க, அவன் பாடலில் இருந்த கேள்வியை கண்டு கொண்ட ஷிவன்யா ஆறு நாளும் தன்னை காணாமல் தவிக்கவிட்டவனை கண்களை சுருக்கி முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
" யமுனா, "
" சித்ரா அவங்க தேடடுற யாரும் இங்க இல்ல-ன்னு சொல்லீடு மா, " என சித்ராவை பார்த்து பேருக்கு புன்னகைத்த ஷிவன்யா அவனை அப்படியே விட்டுவிட்டு மிருதுளாவிற்கு உதவி செய்யச் சென்றாள்.
திடீரென எங்கிருந்தோ வந்தான். அவனே னாடவும் செய்தான். எங்கோ போககும் அவளை இப்போது பார்த்து நின்றான். அந்த மொத்த நிறுவனமே அவனை பார்த்திருந்தாலும் அவன் கவனம் முழுவதும் அவள் மீதே நிலைத்திருக்க, அங்கே நம் நாயகியின் கதிரை அருகில் அமர்ந்திருந்த சித்ரா " உங்களுக்கு தேவை தான் ஷிவன் பாஸ். அனுபவிங்க, " என அவன் காதுபடவே கூறிவிட்டு அவன் கவனிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
ஒரு சிறு புன்னகையோடு தலையை கலைத்துவிட்ட யாதேஷ் திரும்பி நடக்க, அவனை ஏறஇறங்க பார்த்துக் கொண்டே அவன் கண்ணாடி அறை முன் ஆரவ் நின்று கொண்டிருக்க, அவன் அருகிலே ஷிவனேஷ் அந்த கண்ணாடி கதவின் மீது கஷ்வலாக சாய்ந்து நின்றிருந்தான்.
ஆரவ் " என்னப்பா புதுசா காலைலயே பாட்டு கச்சேரி? "
" என் கம்பெனி என் கச்சேரி... என்னடா உனக்கு? "
புசுபுசுவென ஆரவின் காதுகளில் இருந்து புகை பறந்தது. " ஏன் நீ காணாம போன ஒரு வாரத்துல தெரியலையா உனக்கு இது உன் கம்பெனி-ன்னு?! "
யாதேஷ் அதற்கு ஈ என இளிக்க, ஆரவின் தோளை கட்டிக் கொண்டவன் " அப்பரம் எப்போ மச்சான் என் தங்கச்சிய கட்டிக்கப் போற? "
" ஏதே?! "
" அதான் டா, உனக்கும் வயசேறீட்டேப் போகுது. என் தங்கச்சியும் வீட்டுல சும்மாவே இருக்கால்ல... அம்மாக்கு வேற கல்யாணம் பண்ணனுமாம், நீ பண்ணிக்கோயேன். "
ஆரவின் முகம் தீவிரமாய் மாறியது. " டேய் என்ன டா ஆச்சு உனக்கு? தலை எங்கையும் வலிக்கிதா? மச்சான் டேய் டாக்டர்-க்கு ஃபோன் பண்ணு, "
" டேய் டேய் அஞ்சு ரூபாவு குடுத்ததுக்கு ஐநூறு ரூபா குடுத்த மாதிரி நடிக்காத... நீ கல்யாணம் பண்ணாம ஓசில காசி போலாம்னு சொன்னன்னு விஜி கிட்ட சொல்லீடுவேன், " என யாதேஷ் வேண்டுமென்றே விஷமமாய் சிரிக்க, ஆரவிற்கு தான் பகீரென்று இருந்தது.
" டேய் என் லவ் லைஃப் நல்லா இருந்தா உனக்குப் பொருக்காதா? ஏன் டா என் காதல் காவியத்துல ஒல வைக்கப் பார்க்குற? நீ எங்கப் போய் தொலஞ்சன்னு ஒரு கேள்வி கேட்டது குத்தமா?! "
நட்டநடு நிறுவனத்தில் நின்று அவன் சட்டை காலரைப் பிடித்து யாதேஷை இப்படியும் அப்படியும் அவன் உலுக்க யாதேஷும் பேச்சை மாற்றிய நிம்மதியில் அவனை மேலும் வம்பிழுத்தான்.
" என்னன்னு இவனுங்க இந்த கம்பெனிய நாழு வர்ஷம் தனியா நின்னு நடுத்துனானுங்களோ தெரியல.... " ஷிவனேஷ் இவர்களின் அலும்பலில் தலையில் அடித்துக் கொண்டு அவன்களின் சட்டையைப் பிடித்து யாதேஷின் அறைக்குள் இழுத்துச் சென்றான்.
#
அலுவலக நேரம் முடிந்து மதிய உணவு வேளையில் யாதேஷின் அறை புறமே தலையைத் திருப்பாமல் சித்ராவை இழுத்துக் கொண்டு ஷிவன்யா ஓடி விட, திருவிழாவில் காணாமல் போன அப்பாவி பிள்ளைப் போல் அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான் அவள் கணவன்.
" யமுனா, என்ன பண்றீங்க? " யாதேஷ் அவளின் கதிரை அருகில் நின்று கொண்டு கஷ்வலாக கேட்க தீவிரமாக எதையோ தட்டிக் கொண்டிருந்த நம் நாயகி
" வேலை பார்த்துட்டு இருந்தேன் பாஸ். இப்போ ஃபைல் ஸைன் வாங்கப் போறேன், "
அவனைப் பார்க்காமல் பதில் கூறிவிட்டு ஏதோ ஒரு கோப்பை எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டி அருகில் அமைக்கப்பட்டிருந்த ஷிவனேஷின் அறைக்குள் சென்று மறைந்தாள்.
இவ்வாறே அன்று முழுவதும் ஷிவன்யா அவளவனிடம் ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி விளையாட பொருத்துப் பொருத்துப் போன யாதேஷ் அவள் இவனை கண்டு வேறு ஒரு பக்கம் ஓடுவதை கண்டு யாரும் கவனிக்காத நேரம் அவள் பின்னூடே சென்று படிக்கட்டுகளின் கீழ் அவளை இழுத்து சுவற்றில் சாய்த்தான்.
திடுக்கிட்டு அவன் மாரில் சாய்ந்த பெண்ணவள் உடனே பின்னோக்கி நகர, யாதேஷ் அவன் புருவங்களை ஏற்றி இறக்கினான்.
" என்ன மிஸ்ஸஸ் யமுனஷிவன்யா ரொம்ப பிஸி-யா இருக்கீங்க போல? " யாதேஷின் கூர்பார்வை அவளை உறைக்க, அவன் கண்களின் ஒரு ஓரத்தில் கோவம் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடத் தொடங்கியது.
ஷிவன்யா அவனை நேராக பார்க்க இயலாமல் தரையை அளந்து கொண்டே காற்றிற்கும் மிகாத கம்மிய குரலில் " ஆபீஸ் டைம்ல உங்க கூட விளையாடுறத விட இன்னும் நிறைய வேலை இருக்கு எனக்கு. "
இரு கைகளையும் நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்ட அந்த கள்வன், " ஓஹோ... என்ன பார்க்குறத விட உங்களுக்கு இந்த கம்பெனியோட வேலை ரொம்ப நிறைய இருக்கு. அப்படி தானே? "
இத்தனை நாளும் எங்கு சென்றான்? எங்கு இருந்தான்? உயிரோடு தான் இருந்தானா என்றே தெரியாத ரேஞ்சிற்கு எங்கேயோ இருந்துவிட்டு இப்போது அவனை ஏன் பார்க்கவில்லை என கேட்பவனை தீயாய் முறைத்த ஷிவன்யாவின் மட்டுப்பட்ட கோபம் மீண்டும் வெகுண்டெழுந்தது.
" எங்க மேல அக்கரை இல்லாம எங்கையோ நாட்கணக்கா ஊரு சுத்தீட்டு வந்தவர எல்லாம் பார்க்குறதுக்கு நேரம் இல்ல. இப்போ கொஞ்சம் நகர முடியுமா? நிறைய வேலை இருக்கு எனக்கு, "
யாதேஷ் நாக்கை கடித்துக் கொண்டு அவன் கழுத்தை அசடுவழிய தேய்க்க, ஷிவன்யா அவனை மீண்டும் ஒரு முறை தள்ளிவிட்டுவிட்டு நகர முயன்ற போது அவளை பிடித்து நிறுத்தினான்.
" யமுனா யமுனா, என் செல்லமே, நான் சொல்றத கேளேன். யமுனா ஸாரி டி, "
அவனது கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் ஷிவன்யாவை அமைதியாக்கவில்லை. சொல்லப் போனால் அந்த கொஞ்சலும் அவனது குறும்பு புன்னகையும் இன்னும் தான் நம் நாயகியை தகதகவென எரிய வைத்தது.
" ஏன் கிட்ட எல்லாம் ஏன் ஸாரி கேக்குறீங்க? உங்க அத்த பொண்ணு வீட்டுல இருப்பா அவக்கிட்ட போய் கேளுங்க. நான் அப்படியே போய் எப்பவும் போல போனவரு வருவாரோ மாட்டாரோ-ன்னு செவுத்தப் பார்த்துட்டே உக்காந்துக்குறேன். எனக்கென்ன இப்டி. இருக்குறது புதுசா? "
யாதேஷின் இதயம் லேசாக அந்த கடைசி வரியில் வலிக்க, அவன் விரலால் திரும்பியிருந்த அவள் முகத்தை அவன் புறம் திருப்பினான். மெல்ல ஷிவன்யாவின் தாடையை உயர்த்தி அவள் மான்விழிகளை அவன் சந்திக்க, கோர்க்கத் தொடங்கிய விழி நீர் அவனைக் கண்டதும் அணைக்கட்டி நின்றது.
" யமுனா... ரொம்ப தேடுனியா? "
" ரொம்ப... ரொம்ப தேடுனேன்... தப்பா? "
அவளுக்கு கசந்த புன்னகை ஒன்றை வீசியவன் அவள் நெற்றியோடு நெற்றி மோதி நிற்க, கோவம் என்ன தான் இருந்தாலும் அதை கொஞ்சம் டெம்பரரியாக ஓரந்தள்ளிய ஷிவன்யாவின் இமைகள் அவன் அருகாமை தந்த சுகத்தில் மாயலோகம் ஒன்றில் ஓய்வு தேடி மூடிக் கொண்டது.
" யமுனா நான் வந்துட்டேன் டி... "
அவளது கழுத்தில் கை கொடுத்து அவளை மேலும் தன் அருகில் அவன் இழுக்க, இருவரின் மூச்சுக் காற்றும் அந்த குறுகிய இடத்தை நிறைக்க, அவனது கன்னங்களில் தடம் புரண்டோடிய கண்ணீர் அவள் வதனத்தை வருடிய வேளையே ஷிவன்யா மீண்டும் தன் உலகத்தில் கால் வைத்தாள்.
" நான் திரும்ப வந்துட்டேன் யமுனா. "
" எ...என்ன... என்ன சொல்றீங்க? "
" நான் திரும்ப வந்துட்டேன் டி. இனிமே நான் எங்கையும் போக மாட்டேன். என்ன போக விற்றாத ப்லீஸ், "
" மாமா... மாமா என்னப் பாருங்க! ஏங்க, கண்ணத் தொறந்து என்னப் பாருங்க, "
யாதேஷ் அவளை சட்டென இழுத்து அணைத்துக் கொண்டான். ஷிவன்யாவின் பூ உடல் அதிர்ந்து அவன் கைவளைவிற்குள் அடங்கிட, காற்றிற்கும் இடம் கொடுக்காமள் தனக்குள் அவளை புதைத்துக் கொண்டான் அவன்.
" இத்தன வர்ஷமும் அவ்ளோ கஷ்டப்பட்டும் ஏன் டி என்ன இவ்ளோ லவ் பண்ண? " அவன் அதரங்கள் சிரித்தாலும் அவனது கண்ணீர் அவள் தோளை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.
மெல்ல அவன் அணைப்பிற்குள் ஒன்றிய ஷிவன்யா அவன் எகிரும் இதயமும் மெல்ல மெல்ல அமைதியடைவதை கவனித்துக் கொண்டே தலையை லேசாக உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
யாதேஷும் குனிந்து அவளைப் பார்க்க, அவன் மூக்கோடு தன் மூக்கை உரசிய ஷிவன்யா
" பண்ணுவேன்... இன்னும் இன்னும் லவ் பண்ணுவேன். என் காதலுக்கு இங்க அணைக்கட்ட அன்ஃபார்சுனேட்லி யார் கிட்டையும் சக்தி இல்ல. "
தன்னையும் அறியாது சிரித்த யாதேஷ் அவளை அழகாய் இரசிக்க அவன் பார்வை தந்த குருகுருப்பில் வெட்கிக் கொண்ட ஷிவன்யாவின் அழகிய வதனம் நாணத்தில் சிவந்து இன்னும் நம் நாயகனை மயக்கியது.
" தங்கம் என்கூட வரியா இப்போ? "
திடீரென அவள் காது மடல் உரச அவன் கேட்ட கேள்வியில் முதலில் தடுமாறிய ஷிவன்யா பின் அவளை அவன் எங்கோ இழுத்துச் செல்லும் உணர்வில் நாணத்தில் இருந்து தெளிந்து சுற்றத்தை கவனித்தாள்.
நிறுவனத்தின் பின் புறமாக அவளை வெளியே அழைத்து வந்திருந்த யாதேஷ் அவன் காரின் முன் கதவை திறந்து ஷிவன்யாவை அமர வைத்துவிட்டு வேகமாக மறுபுறம் சென்று ஓட்டுனர் இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டான்.
" என்னங்க ஆஃபீஸ் டைம்-ல என்ன செய்றீங்க?! யாராவது பார்த்தா என்ன ஆகுறது?! "
ஷிவன்யா பதட்டத்தில் அவன் கார் கண்ணாடி கருப்பானது, வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது என தெரியாமல் தலையை மறைத்து கீழே குனிந்து கொள்ள யாதேஷ் அவளை கண்டு சிரித்துக் கொண்டே காரை உயிர்ப்பித்தான்.
" நான் இருக்குறப்போ உன்ன யாரு என்ன சொல்லப் போறாங்க செல்லம்? நீ தைரியமா நேரா உக்காந்து வா டி, "
" யோவ் மாமா என்னயா ஆச்சு உனக்கு? எங்க போய் தலைய இடிச்சிட்டு வந்தீங்க நீங்க? "
ஷிவன்யாவின் பொருமை அனைத்தும் காற்றில் பறக்கத் தயாராக இருந்தது. அதை ஒரு சிறு நகையில் கட்டி இழுத்த யாதேஷ்
" கொஞ்சம் ரிலக்ஸ்-ஆ இரு டி, ஒன்னும் ஆகல எனக்கு. "
ஷிவன்யா அவனை குழப்பமாக பார்க்க அவளுக்கு ஏதோ ஒன்று யாதேஷிடம் வித்யாசமாக அதே நேரம் மிகவும் பரிட்சயமாகவும் இருப்பதாக உள்ளுணர்வு கூறிக் கொண்டே இருக்க, பேதை மனம் அதை பகுத்தறிய இயலாமல் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தது.
" உங்களுக்கு...உங்களுக்கு எதாவது நியாபகம் வந்த மாதிரி இருக்கா... ஏன்...எப்படி... இவ்ளோ... "
எவ்வாறு இவ்வளவு எளிதாக காதல் கண்களில் தாண்டவமாட என்னை இத்தனை நெருக்கத்தில் நிறுத்தினாய் என எப்படி கேட்பது என தெரியாமல் அவள் இதழ்களில் வார்த்தைகள் தினறியது.
யாதேஷ் ஷிவன்யாவின் புறம் திரும்பி எதுவும் கூறாமல் அழகாய் புன்னகைத்தான்.
அதே நேரம் அவன் அழைப்பேசி ஆரவின் எண்ணை திரையிட்டு சத்தமாய் அலறியது. இவன் அழைப்பை எடுத்த எடுப்பிலே அந்த பக்கத்திலிருந்து காட்டுக்கத்து கத்தத் தொடங்கினான் ஆரவ்.
ஆரவ் " டேய் பரங்கிக்கா மண்டையா என்ன டா நெனச்சிட்டு இருக்க நீ? பட்டப்பகல்ல ஒரு பச்சப்புள்ள கையப் புடிச்சு இழுத்துட்டுப் போயிருக்க?! "
ஆரவ் படபடவென வெடித்துக் கொண்டிருக்க, இடையில் ஷிவனேஷின் அமைதியான குரல் அவனை இடைமறித்தது.
ஷிவனேஷ் " இது பட்டப்பகல் இல்ல. மணி சாய்ங்காலம் நாழு ஆகப் போகுது. "
ஆரவ் " சரி ஈவ்னிங் ஆய்டுச்சு என்னாடா இப்போ அதுக்கு?! இவன் ஆஃபீஸ் டைம்ல அவள எங்கையோ இழுத்துட்டுப் போயிருக்கான் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியலையா உனக்கு? "
யாதேஷ் " டேய் என்ன பேச விடுங்க டா, "
ஆரவ் " நீ என்னாடா ஹீரோவா இருந்தா என்ன வேணா பண்ணுவியா நீ? ஷிவாவ எங்க டா இழுத்துட்டுப் போன? "
அதற்கும் சலைக்காமல் இல்லாத காலரை ஏற்றி விட்டுக் கொண்ட யாதேஷ் " நான் ஹீரோ டா. நான் இன்னும் செய்வேன். இதுக்கு மேலையும் செய்வேன். இப்போ நாங்க ஜாலியா வெளிய போகப் போறோம். எங்களத் தேடாதீங்க, நன்றி! வணக்கம்! "
ஆரவ் " இவன் என்னாடா படத்துக்கு எண்டு கார்ட் போடுற மாதிரி பேசுறான்? டேய் நீ கொஞ்ச நாளாவே சரி இல்ல! நான் அங்க வந்தேன்னா நீ காலி- "
ஆரவின் வாக்கியத்தை இடைவெட்டி யாதேஷ் அழைப்பைத் துண்டித்திருந்தான். ஷிவன்யா இந்த நண்பர்களின் அக்கப்போராட்டத்தை அஷ்டகோணலான முகத்தோடு பார்த்திருக்க, அவள் அவனை கேள்வி கேட்க வரும் முன்பாகவே யாதேஷின் கார் அவர்கள் வர வேண்டிய இடத்தின் முன் சென்று நின்றிருந்தது.
ஷிவானியின் பள்ளி
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro