வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…
திடீரென்று இந்த பாடல் ஒலிக்க
மனோவை மனதில் நினைத்துக் கொண்டே "ஆமா சார் உங்களுக்கு நிலா தான் வேணும்னா அப்படியே இருங்க எனக்கு என்ன நஷ்டம்?? நான் உங்களை மறந்துட்டு ஜாலியா இருப்பேன் ம்ம்ம்க்க்கும் அவன் முகத்தைப் பார்க்காமல் நிலாவைப் பார்த்துக் கொண்டு கூறியவள் அவனைத் திரும்பிப் பார்த்ததும் "எப்படி லாலிபாப் எப்படி உங்களை நான் மறப்பேன் அது நான் சாகுறவரை நடக்க வாய்ப்பே இல்லையே!!! உங்களுக்கு நிலா தான் வேணுமா??? இந்த மேஹா வேணாமா?? நான் என்ன பண்ணா உங்களுக்கு என்னைப் பிடிக்கும்??? " மனதில் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வர அதை அவனறியாமல் துடைத்துக் கொண்டாள்.
கார் மனோவின் வீட்டினை அடைய
எங்கு தான் திரும்ப வர மாட்டோமோ என ஏங்கிய இடத்திற்கு வந்ததும் அவளையும் அறியாமல் மனது இதமானது.
காரினை விட்டு இறங்கியவள் வாசல் வரை சென்று அங்கேயே நின்று விட்டாள்.
"ஏன் மேஹா உள்ளே போலயா??" என மனோ கேட்க
"வலது கால் எடுத்து உள்ள வரவா? இல்லை இடது
கால் வைச்சு வரவா?? இத இவர் கிட்ட கேட்டா கேவலமா ஒரு லுக் விடுவாரே வேணாம் மேஹா நீ இரண்டு கால் வெச்சு குதிச்சு உள்ளே போயிடு" என மனதில் நினைத்தவள் குதிக்க தயாராக
"அங்கேயே நில்லுங்க "என அகிலா ஆராத்தி தட்டுடன் வெளியே வந்தார்.
"எதுக்கு மா இதெல்லாம் "என மனோ கேட்க.
"என் மருமக எவ்ளோ நாள் கழிச்சு வந்துருக்கா இரு டா" என ஆராத்தி சுத்தியவர் வலது கால் எடுத்து வெச்சு
உள்ளே போங்க எனக் கூற மேஹா திருத்திருவென முழிப்பதைப் பார்த்து இப்போ டவுட் கிளியரா எனக் கூறி புன்னகைத்துக் கொண்டே வெளியே சென்றார்.
"ச்ச்ச்ச மானங்கெட்ட மைன்ட் டி மேஹா உனக்கு நாம நினைக்கிறது எல்லாருக்கும் கேட்கும் இதோ இந்த லாலிபாப்பை தவிர"என்றவள்
பெருமூச்சு ஒன்றை விட்டு நிலா நீ எங்கே தான் இருக்கியோ என முகம் தெரியாத ஒருத்தியைத் திட்டி விட்டு உள்ளே சென்றாள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"ஆமா டி அவரைத் தான் பாலோ பண்ணுறேன் ஏண்டி இப்படி வேகாத வெயில்ல அலைய வைக்கிற" என புலம்பிக் கொண்டே சென்றவள்
தான் யாரை பாலோ செய்து கொண்டு வந்தாளோ அவனைத் தவற விட்டாள்.
"போச்சு அய்யோ இது தெரிஞ்சா என்னை ஒருவழி பண்ணிடுவாளே" என நினைத்தவள் தன் மொபைலைப் பார்க்க
அதில் டார்ச்சர் காலிங் என்று வந்தது.
"நினைச்சேன் பண்ணிட்டா"கைகள் நடுங்க அதை அட்டெண்ட் செய்தவள் "ம்ம்ம் டிசொல்லு "எனக் கூற
"மிஸ் பண்ணிட்டியா??"குரலே கோபமாக வந்தது.
"அது வந்து உன்கூட பேசிட்டே வந்தேனா அதான்"வார்த்தைகள் வராமல் தத்தளிக்க
"நீ வாடி காலேஜ்ல உன்னை பாத்துக்கிறேன்"எனக் கூறி கட் செய்து விட்டாள்.
"திவி நீ செத்த டி அவகிட்ட"புலம்பிக் கொண்டே கல்லூரி சென்றவளை வரவேற்றதே அந்த டார்ச்சர் தான்.
"ஒரே ஒரு வேலை தானே குடுத்தேன் உன்கிட்ட"
"ஆமாம்"திவி மேலும் கீழும் தலையாட்ட
"நீ அதை சரியா பண்ணியா??"அவள் கேட்க
"அது வந்து டி"திவி இழுக்க
"போயிடு கண்ணுல மாட்டுன செத்த என்கிட்ட" என தன் ஒற்றைப் புருவத்தை தூக்கி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
"பார்த்ததும் ப்ப்பப்பபபாபா செம அழகு என்று கூறும் அளவு இருக்கும் மாடர்ன் அழகி,
செதுக்கிய புருவங்கள்,கோபம் வந்தால் ஒற்றைப் புருவம் உயர்த்தும் அழகை கண் கொட்டாமல் பார்க்கலாம்,தலை முடியில் தூக்கி போடப்பட்டிருக்கும் குதிரைவால்,சிரித்தால் கொள்ளை அழகு,கொஞ்சிப் பேசும் கோபக்கார கிளி"
மறந்துட்டேன் பாருங்க நிலவு போன்ற முகம்.
"ஏய் நிலா நில்லு டி"திவி கத்திக் கொண்டே வர
திரும்பி அவளை முறைத்தவள் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"ச்ச்சசசசச என்ன கனவு டா இது" என மனோ அதிகாலையிலேயே கண்களைத் திறக்காமல் எழுந்து அமர்ந்திருந்தான்..
கண்களைத் திறந்தவன் எதிரில் மேஹாவைத் தேட அவள் இல்லாமல் போக வெளியே பால்கனிக்குச் சென்றான்.
அங்கு மேஹா ஊஞ்சலில் படுத்துக் கொண்டிருக்க
அவள் அருகில் அமர்ந்தவன்
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துரேன் மேஹா ஆனால் நீ சந்தோஷமா இருக்கணும் அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்"அவள் சந்தோஷம் அவன் தான் என்பதை அறியாமல் அவளைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.
முகில் சோனியுடன் வீட்டிற்கு வந்திருக்க முகி மற்றும் மனோ தனி அறையில் ஐக்கியமாகி விட்டனர்.
"டேய் ஒரு கனவு டா"
"உனக்கா???"
"ஏன் எனக்கு வரக்கூடாதா???"என்றவன் அவனைப் பார்த்து முறைக்க
"சரி சொல்லு"
"ஏண்டா சலிச்சுக்கிற இப்படிலாம் பண்ணா நான் கனவை சொல்ல மாட்டேன் "என மனோ கூற
"அப்பாடா ஹேப்பி"என முகி கூறிச் சிரிக்க
"எனக்கு இருக்கிறதே ஒரே நண்பன் நீயும் கேட்கலைனா எப்படி டா"மனோ முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள
"சொல்லும் சொல்லித் தொலையும் மூஞ்சியை மட்டும் இப்படி வைக்காத சகிக்கல"
"ம்ம்க்கக்கும்" என்றவன் தன் கனவினைக் கூற ஆரம்பித்தான்.
"என்னை ஒரு பொண்ணு பாலோ பண்ணிட்டே இருக்கா எனக்குத் தெரியல"
"உன்கூட இருக்க ஒருத்தியே அதை தான் பண்ணா அதுவே தெரியல கனவுல மட்டும் தெரிஞ்சிருமா!!!!!" முகி புலம்ப
"என்னடா என்ன சொன்ன???"
"ஒன்னுல யு கன்டின்யு"
"திடீருனு ஒரு நாள் என் முன்னாடி வந்து ஐ லவ் யு னு சொல்லுறா"
"கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா "
"ஏண்டா எனக்கு யாரும் சொல்ல மாட்டாங்களா??? நான் நல்லா தானே இருக்கேன்"
"நீயே சொல்லிக்கோடா"
"போடா"என்றவன் தன் கனவினைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.
"அவ முகத்தைப் பார்த்தியா???"
"இல்லை"
"அவ எல்லோ கலர் டிரஸ் போட்டுருந்தா"
"வேற எதாச்சும்???"
"ம்ம்ம்" சிறிது நேரம் யோசித்தவன்
"அவ ஒரு புருவத்தை மட்டும் தூக்குனா டா"
"முகத்தை பாக்கல ஆனா புருவம் தூக்குறத மட்டும் பாத்துருக்க"என முகி கேட்க
"இல்லை டா அவ என் முன்னாடி வந்து நின்னா நான் யாருடா அதுனு நிமிர்ந்து பாக்குற அப்போ இரண்டு பேர் மேலையும் பூ கொட்டுது அவ என் கைல ஒரு ரோஜாவை கொடுத்து ஐ லவ் யு னு சொல்லிட்டு போயிட்டா பூ கொட்டிட்டே இருந்தனால அவ முகம் தெரியல."
"பாருடா செம ல "என்றவன் மேஹா எப்போ தான் அவன் கிட்ட உன் காதலை சொல்ல போறியோ என மனதில் நினைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
தன் கனவில் வந்த பெண்ணையே நினைத்துக் கொண்டிருந்தவன் வெளியே செல்ல அங்கு மேஹா மற்றும் சோனி பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான்.
"ஏன் டி எப்போ தான் உன் காதலை சொல்ல போற"என சோனி கேட்க
"சொல்லணும் கா"
"ஏய் மேஹா லவ் பண்ணுறாலா சூப்பர்"என மனோ நினைக்க
"எப்போ தான் சொல்லுவ மனோ கிட்ட"
"சொல்லுவேன் கா கண்டிப்பா நீங்க என்னை நினைச்சு பீல் பண்ணாதீங்க மனோ சார் எனக்கு மட்டும் தான் எங்களுக்கு நடுவில யாரும் வரக் கூடாது வரவும் விட மாட்டேன் ஓகே வா"என மேஹா கூற
"ச்ச்சீ ஏன் மேஹா இப்படி இருக்க நான் நிலாவை லவ் பண்ணுறேனு தெரிஞ்சும் நீ இப்படி பேசுற அப்போ என்னை என் நிலா கூட சேத்து வைக்கிறனு சொன்னதுலாம் பொய்யா???" மேஹாவை முற்றிலும் வெறுத்தவன் தன் அறைக்குச் சென்று நகத்தைக் கடித்துக் கொண்டே மேஹாவின் மேல் கடுப்பில் அமர்ந்திருந்தான்.
"சாரி சோனிக்கா நீங்க பீல் பண்ணகூடாதுனு தான் நான் இப்படிலாம் சொன்ன மனோ சார் எப்பவும் நிலாவுக்குத் தான் " என்றவள்
அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு தன் அறைக்குச் சென்றாள்.
"என்ன மனோ சார் நிலாவை பத்தி நினைக்கிறீங்களா??? கண்டிப்பா உங்க நிலா உங்களுக்குத் தான்"என மேஹா கூற
"ஏண்டி இப்படி நடிக்கிற ச்சசி..."என மனதில் நினைத்தவன் எதுவும் கூறாமல் அமைதியாக வெளியே சென்று விட்டான்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro