
வார்த்தைகள் தீர்த்தகையில் மௌனங்கள் அழகு -2
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤️❤️
உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ
கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பூஜா வீட்டுக்கு வந்திருந்தாள். புவனா பூஜாவை நன்றாக கவனித்து கொண்டார். பூஜா வந்த உடன் தேவாவை வயலுக்கு அனுப்பி விட்டார். மதியம் நேரம்தான் வீட்டுக்கு வந்தாள் தேவா. அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது.மதியம் நேரம் பசியில் வந்தவளுக்கு சாப்பாடு நியாபகம் வரவில்லை கழுவி வைக்க வேண்டிய பத்திரங்கள்தான் நியாபகம் வந்தது.எப்படியும் பாத்திரம் எல்லாம் இருக்கும் என்று நினைத்துகொண்டு வீட்டின் பின்பக்கம் செல்ல அங்கே பாத்திரம் எதுவும் இல்லை. தேவாக்கு குழப்பமாகிவிட்டது. வேகமாக அடுக்களைக்குள்(சமையல் அறை )வந்தாள் அவளை பார்த்து புன்னகை செய்தபடி சாப்பாடு இட்டு கொண்டிருந்தாள்.
ஹோய் என்ன ஆச்சு. அப்டியே நின்னுட்ட வா வந்து சாப்பிடு உனக்காகதான் சாப்பாடு இட்டு வச்சேன்.அப்புறம் அம்மா வந்தா உன்ன நிம்மதியா சாப்பிட விடமாட்டாங்க. வா வந்து சாப்பிடு என்று அவள் கையை பிடித்து அழைத்துவந்து தரையில் உட்கார வைத்து சாப்பாடை முன்னால் வைத்தாள் பூஜா. தேவா சாப்பிடாமல் பூஜாவை பார்த்தாள்.
என்ன ஆச்சு ஏன் இப்படி சாப்பிடாம இருக்க.நான் ஒண்ணும் சாப்பாடு பண்ணல. நம்பி சாப்பிடு. இரு நானும் சாப்பிட போறேன் . என்று சொன்னவள் தானும் சாப்பாடு போட்டு கொண்டாள். தேவா சாப்பிட ஆரம்பித்தாள். அவளை பார்த்து புன்னகை செய்தாள் பூஜா.அவர்கள் சந்தோசமாக சாப்பிட ஆரம்பிக்க அப்போது அங்கு வந்து சேர்ந்தார் புவனா.பக்கத்து வீட்டில் கதை அடித்துவிட்டு என்னவோ உலகத்தில் உள்ள எல்லா வேலையையும் ஒரே ஆள் செய்தது போல் வந்து அமர்ந்தார்.
ஏட்டி தர்சினி எனக்கு குடிக்க வெள்ளம் (தண்ணி )கொண்டு வா.நல்லா தாகமா இருக்கு என்று ஹாலில் இருந்து குரல் கொடுத்தார். அவருக்கு தாகம் எல்லாம் இல்லை மாறாக அவருக்கு தேவா நிம்மதியாக சாப்பிடுவது பிடிக்கவில்லை.அதனால்தான் தேவாவை அழைத்தார். ஆனால் பூஜா வந்து தண்ணீர் கொடுத்தாள்.
நீ ஏன்ட்டி கொண்டு வந்த. ஓஹோ மஹாராணி எழுச்சி(எழுந்து )வர மாட்டாளோ அது சரி. என்று அவர் திட்ட ஆரம்பிக்க பூஜா அவரை இடை மறித்து பேச ஆரம்பித்தாள்.
என்ன அம்மா உங்க பிரச்சனை. அவ சாப்டுட்டு இருக்கா. சாப்பிடட்டும் வெள்ளம் இல்லாம சீவன் போயிரும்ன்னு நின்னல்லா இந்த வெள்ளம் குடி. என்று சொன்னவள் தண்ணீரை புவனா முன்பு வைத்துவிட்டு சென்று விட்டாள்.ஏக கடுப்பில் தண்ணீரை குடிக்காமல் உட்கார்ந்து இருந்தார் புவனா.
பூஜா சிறுபிள்ளையாக இருந்த போதெல்லாம் அவள் அம்மா பேச்சை கேட்டு தேவாவிடம் ஒழுங்காம பேசாமல்தான் இருந்தாள். ஆனால் ஒரு வயதுக்கு மேல் தேவா மீது எந்த தவறும் இல்லை என்பது அவளுக்கு புரிந்தது.அதன் பிறகு அவள் தேவா மீது எந்த வெறுப்பும் காட்டவில்லை. ஒரு முறை பூஜா கல்லூரி படிக்கும் சமயத்தில் தேவையில்லாமல் தேவாவை அவர் திட்டுவதை தாங்காமல் புவனாவை நன்றாக திட்டிவிட்டு சென்று விட்டாள். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வந்த போதுதான் தெரிந்தது அவர் பூஜா மீதுள்ள கோபத்தில் தேவா காலில் சூடு வைத்து விட்டார் என்று பாவம் தேவா அப்போது கூட யாரிடம் எதுவும் வெளிப்படுத்தவில்லை அப்படி செய்தால் இன்னும் எதாவது அதிகமான தண்டனை கிடைக்குமோ என்று பயம்தான் அவளுக்குள் இருந்தது.பூஜா அன்றுதான் தன்னுடைய தாயின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டாள்.(me: இப்படியும் சில மனிதர்கள் )அற்றிலிருந்து தேவாவை புவனா என்ன சொன்னாலும் பூஜா புவனாவை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. தினமும் எல்லாம் ஒரு நாள் மாறும் என்று தேவாக்கு நம்பிக்கை தருவாள். அவளுக்கு வேலை கிடைத்தது முதல் மாத சம்பளத்தில் தேவாக்கு வீடியோ கால் செய்ய வசதியாக ஒரு மொபைல் வாங்கி கொடுத்தாள். ஆனால் அதையும் புவனா பிடுங்கி கொண்டார். அப்போதுதான் தேவாக்கு எதாவது நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்றால் அம்மாக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள்.பூஜாவை பொறுத்தவரை தேவா அவளுக்கு அம்மா மாதிரி பூஜாக்கு அவள் அம்மா மீது பாசம் இருக்கிறதா என்பது அவளுக்கே சந்தேகம்.பூஜா ஆசை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் அது தேவாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அங்கு அவளை எல்லோரும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். நல்ல இடம் வந்தால் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் தெரியாமல் தேவா கல்யாணத்துக்காக பணம் சேர்த்து வைத்து கொண்டிருக்கிறாள். அவள் உடன் வேலை செய்பவர்கள் எல்லாம் வாரம் ஒரு முறை வெளியே போனால் இவள் மாதம் ஒருமுறைதான் வெளியே செல்வாள். அதே போல் அவளுக்கு என்று வாங்கும் ஆடை, அணிகலன் என ஒவ்வொற்றையும் பார்த்து பார்த்து குறைவாக செலவு செய்து தேவாக்காக பணம் சேர்த்து வைத்து இருக்கிறாள்.இந்த விஷயம் தேவாக்கு கூட தெரியாது.
அன்று பூஜா வந்திருந்ததால் அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் என வீட்டில் அவ்வபோது கூட்டம் வந்து சென்று கொண்டிருந்தது. இரவு உறங்குவதற்காக பூஜாவும் தேவாவும் ரூம்க்கு சென்றார்கள். புவனா ஹாலில் படுத்து உறங்கிவிட பூஜாவும் தேவாவும் ரூமில் பாய் விரித்து கொண்டிருந்தார்கள். பூஜா சென்று ரூம் கதவை சாத்திவிட்டு வந்தவள் பேச ஆரம்பித்தாள்.தேவா அவள் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள்.
அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். பூஜா வார்த்தையால் பேசினாள். தேவா சைகையால் பேசினாள. உரையாடல் என்பது புரிதலூக்காக தானே புரிதல் இருந்தால் வார்த்தைகள் இல்லாத மௌனமும் பேசும். புரிதல் இல்லை என்றால் பேச வரும் வார்த்தைகள் கூட மௌனமாக மாறிவிடும். தேவா மற்றும் பூஜா இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் அவர்கள் உரையாடல் எந்த வித தடையும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் பூஜா தேவாவின் கல்யாணத்தை பற்றி பேச ஆரம்பிக்க தேவா முகம் வாடி போனது.
ஹே தேவா இப்போ எதுக்கு கல்யாணம்ன்னு சொன்ன உடனே உன்னோட முகம் இப்படி வாடி போகுது
என்று கேட்டாள் பூஜா.
தேவா தலை குனிந்து கொண்டாள் அதை பார்த்த பூஜா அவள் முகத்தை உயர்த்தி தன்னை பார்க்க வைத்தாள்.தேவா முகம் அவ்வளவு சோகத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தது.
ஹே தேவா என்ன ஆச்சு. கல்யாணம் பத்தி தானே பேசுனேன். நான் என்ன அந்த புவனா பத்தியா பேசுனேன்.என்றாள் பூஜா சாதாரணமாக. அவள் சொன்னதை கேட்ட தேவா கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.அதை பார்த்து பூஜாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை
எதுக்கு நீ இப்போ இவ்ளோ ஷாக் ஆகுற.நான் என்ன நாட்டுக்காக உயிர் துறந்தவங்கள பத்தியா தப்பா பேசுனேன். பெத்துட்டா அம்மா ஆயிடுவாங்களா. நீ வேணா பாரு உனக்கு கல்யாணம் ஆன பிறகு நான் இங்க வரவே மாட்டேன். உன்ன எந்நேரமும் திட்டிட்டு இருப்பா பாத்தியா அதுக்கெல்லாம் சேர்த்து அவ அனுபவிப்பா. நீயும் இருக்க மாட்ட நானும் இருக்க மாட்டேன் தனியா இருக்கட்டும். அப்போதான் புத்தி வரும். நான் சம்பளம் கூட அனுப்ப மாட்டேன் போன் கூட எடுக்க மாட்டேன். அவ அப்டியே கஷ்டப்பட்டு என்று பூஜா தொடர்ந்து சொல்ல போக தேவா பூஜா வாயை கைவைத்து மூடியவள் இதற்கு மேல் எதுவும் புவனாவை பற்றி பேச கூடாது என்று சைகையால் சொன்னாள்.
ஹே என்ன நீ ஏன் இவ்ளோ நல்லவளா இருக்க. உன்ன மாதிரி இருக்கவங்கள இந்த உலகம் ஈஸியா தூக்கி போட்டுடும் கொஞ்சம் உனக்காக யோசி தேவா. அது சரி உனக்கு எப்படி இந்த உலகத்தை பத்தி தெரியும் நீதான் இந்த உலகத்தை பாக்கவே வர மாட்டேங்குறியே. நீ வேணா பாரு உன்னோட நல்ல மனசுக்கு உன்னயே உலகம்ன்னு நினைச்சு வாழுற மாதிரி ஒருத்தன் வருவான். அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கும் அந்த குடும்பம் அப்புறம் உன் குடும்பம் ஆகும். அந்த குடும்பத்தில நீ ஒருத்தியா இருப்ப அவங்க எல்லாம் உன்ன அன்பா பாத்துந்துறத பாத்து நான் சந்தோச படுவேன் புவனாக்கு வயிறு எரியும். என்று பூஜா மகிழ்ச்சியாக சொல்ல தேவா அவளை சோகமாக பார்த்தாள். அவள் சோகமான பார்வையின் அர்த்தம் உணர்ந்து கொண்டவ பூஜா பேச ஆரம்பித்தாள்.
சொந்த சித்தியே இப்படி கொடுமை படுத்துறப்போ இன்னொரு குடும்பம் எப்படி உன்ன நல்லா பாத்துக்கும்ன்னா யோசிக்குற தேவா என்னோட அம்மா மாதிரி எல்லாம் இருக்க மாட்டாங்க. சராசரி மனுசங்க எல்லாருக்குமே உன்ன ரொம்ப பிடிக்கும். பாரு உன்ன தாங்கு தாங்குன்னு தாங்க ஒருத்தன் வரதான் போறான் என்று பூஜா சொல்ல அவளை பார்த்து தேவா உனக்கு அப்படி ஒருவன் வருவான் என்று சைகை செய்தாள்.
அப்படி எல்லாம் ஒருத்தனும் வர தேவையில்லை. எனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம். முதல்ல உனக்கு ஆகட்டும். உனக்கு குழந்தை பிறந்து நான் அவங்களுக்கு பெஸ்ட் சித்தியா இருந்து குழந்தை பாத்துக்க பயிற்சி எடுத்துப்பேன்.அப்புறம் நேரம் வர்றப்போ என்னோட கல்யாணம் பத்தி யோசிப்போம்.அதோட. உடனே கல்யாணம் வேணாம்ன்னு சொல்ல காரணம் இருக்கு . எனக்கு இப்போ என் வேலை பாக்கவே நேரம் சரியா இருக்கு. அப்புறம் அங்க போய் அவங்க வீட்ல வேலை செய்யுன்னு சொல்லி நமக்கு வேற ரொம்ப கோபம் வரும். கோபத்துல சட்டுன்னு எதாவது பண்ணிட்டோம்ன்னா சம்பவம் ஆயிடும். அதெல்லாம் நடக்க கூடாது எந்த அப்பாவியும் பாதிக்க படக்கூடாது அப்டின்னா எனக்கு கல்யாணம் கொஞ்சம் வருஷம் கழிச்சுதான் ஆகணும்.என்று பூஜா வைகைபுயல் வடிவேலு பாணியில் சொல்ல அவளை பார்த்து சிரித்தாள் தேவா.
ம்ம்ம் அப்போ. மேடம்க்கு உன்னோட கல்யாணம் பத்தி பேசுறத விட என்னோட கல்யாணம் பத்தி பேசுறதுதான் உனக்கு பிடிச்சிருக்கு. அது சரி.எனக்கு தோணுது தேவா உன்னோட கல்யாணம் கொஞ்சம் கூட எதிர்பாக்காத மாதிரி நடக்கும்ன்னு.ரொம்ப பிளான் பண்ணி ஒரு விஷயம் விட எதிர்பாக்காம பண்ற விஷயம்தான் நல்லா முடியும்.எப்படி தெரியுமா நீ எதிர்பாகாத நேரத்தில இந்த சாக்லேட் உனக்கு கொடுக்குறமாதிரி என்று அவள் கையில் கிட்கேட் சாக்லேட் பாக்சை கொடுத்தாள் பூஜா. அதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தாள் தேவா. அவள் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்த்த பூஜா அவளை பார்த்து சிர்த்து சாக்லேட் சாப்பிட சொன்னாள் தேவா பூஜாக்கு சாக்லேட் கொடுத்துவிட்டு தான் சாப்பிட ஆரம்பித்தாள். தேவாவை பார்த்த பூஜா மனதில் இறைவனிடம் வேண்டி கொண்டாள்.
கடவுளே இந்த பொண்ணு பெரிய விஷயம் எல்லாம் எதுவும் ஆசை படல. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட அவ்ளோ சந்தோச படுறா. இவ வாழ்க்கை சந்தோசமா இருக்குற மாதிரி நீங்கதான் ஒரு நல்ல குடும்பத்தை இவளுக்கு அமைச்சு குடுக்கணும் என்று மனதில் வேண்டி கொண்டாள்.
----
அதே நேரம் இங்கே சூர்யா தோசை சுட்டு கொண்டிருந்தான் இன்னொரு பக்கம் ப்ளாக் டீ ரெடியாகி கொண்டிருந்தது . அவன் அருகில் அவன் நண்பன் பிரசாத் நின்று கொண்டு இருந்தான்.
எதுக்கு ஏதோ பேச வந்துட்டு வெட்டியா நின்னுட்டு இருக்க.என்று கேட்டான் சூர்யா.
பிரசாத்க்கு சாவுக்கு சங்கு ஊதுவது போல் இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவைத்து பேச ஆரம்பித்தான்.
எத்தனை நாளைக்குடா இந்த வேலை எல்லாம் நீ செய்ய போற என்று ஆரம்பித்தான் பிரசாத்.
சூர்யாக்கு பிரசாத் என்ன பேச போகிறான் என்று தெரியும் இருந்தாலும் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற முடிவு செய்தான்.
ம்ம்ம் எனக்கு எதுவரை பசி இருக்கோ அதுவரைக்கும் நான் இப்படி பண்ணலாம்ன்னு இருக்கேன் என்று சொன்னான் சூர்யா.
டேய் நான் என்ன பேசுறேன் தெரியாத மாதிரி பேசாத என்றான் பிரசாத்.
என்ன பேசுற எனக்கு ஒண்ணும் புரியலடா. என்று அப்பாவி போல் கேட்டான் சூர்யா.
ம்ம்ம் நீ இப்படி சமைச்சு நீயே உன்னோட வேலை எல்லாம் செய்யுறல்ல அதான்.என்று அவன் முடிக்கும் முன்பு இடைமறித்து பேசினான் சூர்யா.
ஓ வேலைக்கு ஆள் வைக்க சொல்றியா. ஆனா வேலைக்கு ஆள் வைக்கிற அளவுக்கு இங்க வேலை எதுவும் இல்லையே என்றான் சூர்யா மிகவும் சீரியசாக.
இங்க பாரு நான் வேலை பாக்குறத பத்தி பேசல. யாரையும் வேலைகாரங்களா கூட்டிட்டு வர சொல்லல. உன்னோட வேலையை பகிர்ந்துக்க ஒரு ஆள் வேண்டாமா. நீ எல்லாமே பண்ற ஆனா ரொம்ப தனியா இருக்கடா. உன்மேல அன்பு காட்ட இன்னொருத்தங்க வந்தா எல்லாம் மாறும். ம்ம்ம் உதாரணமா சொல்லணும் அப்டினா இப்போ நீ போடுற ப்ளாக் டீ கூட அன்பு கலந்தா இன்னும் டேஸ்ட்டா ஆகிடும். அதெல்லாம் உணர்ந்தாதான் தெரியும். என்று பிரசாத் மேலே பார்த்து சொல்ல அவன் கையில் ப்ளாக் டீ கொடுத்தான் சூர்யா.
நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற. சூர்யா விளையாடாத கொஞ்சம் பொறுப்பா பேசு. கல்யாணம் ஏன் வேண்டாம்ன்னு சொல்ற. ஒரு விஷயம் நடந்துச்சுன்னா அதுலயே இருக்காதடா. இங்க எல்லாமே மாறிடும். நீதான் மாற வாய்ப்பு கொடுக்கணும். (Me:உண்மை மக்களே )உன்னோட வேலை உனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அடி பட்டா கூட அவ்ளோவா கண்டுக்க மாட்ட. உன்னோட கவனம் எல்லாம் வலியில இருக்காது. உன்னோட வேலைல இருக்கும்.அதே மாதிரிதான் உனக்கும் கல்யாணம் ஆச்சுன்னா உன்னோட குடும்பம் முழுமையாகிடும். அப்புறம் உனக்கு கவலை வந்தாகூட அதெல்லாம் கண்டுக்காம நீ கடந்து போயிடுவ. அதுக்குதான் நான் சொல்றேன் கல்யாணம் பண்ணிக்கோ. என்று தனக்கு வரவில்லை என்றாலும் முயற்சி செய்து சூர்யாக்கு அறிவுரை வழங்கினான் பிரசாத்.
டீ சூடு ஆறிட போகுது குடி என்று சம்மந்தமே இல்லாமல் சொன்னான் சூர்யா. இவ்வளவு நேரம் பேசியது காதில் விழாதது போல் தோசை சுட்டு கொண்டிருப்பவனை பார்த்து கடுப்பானான் பிரசாத். அதே கடுப்பில் ப்ளாக் டீ எடுத்து வாயில் வைத்தவன் முகத்தை சுழிதான்.
டேய் நான் என்னடா உனக்கு பாவம் பண்ண. சக்கரை போடாம ஒரு டீ போட்டு தந்துருக்க என்று கேட்டான் பிரசாத்.
ம்ம்ம் நீ பேசுறத கேக்க கேக்க எனக்கு உன்மேல அன்பு பொங்கி வழிஞ்சிடுச்சு. நீ வேற அன்பு கலந்து போடுற டீ டேஸ்ட் தனின்னு சொன்னியா அதான் நான் உனக்கு இந்த அன்பு கலந்துபோட்ட டீ குடுத்தேன். உன் மூஞ்சி அந்த போக்கு போகுது.ஏன் என்னோட அன்பு கசக்குதா.என்று சூர்யா முறைதப்படி கேட்க பிரசாத் மௌனம் ஆனான்.
இங்க பாரு இதுக்கு மேல அப்பா சொன்னாருன்னு அவர் சொல்றத கேட்டு என்கிட்ட கல்யாணம் பத்தி பேச வந்த இந்த முறை விஷம் மாதிரி டீ குடுத்தேன் அப்புறம் உண்மையா விஷத்தையே குடுத்துருவேன். இப்போ நீயே சக்கரை எடுத்து போட்டு டீ குடிச்சிட்டு கிளம்பு.
பிரசாத் சக்கரை எடுத்து போட்டு கொண்டவன் அந்த டீயை குடித்தான்.பிறகு பேச ஆரம்பித்தான்.
மச்சான் நான் சொல்றது உனக்கு புரியல. இப்போது இந்த டீ உன்னோட வாழ்க்கை சக்கரைதான் கல்யாணம் சேத்துக்கோ இனிப்பா இருக்கும் என்று சொன்னான் பிரசாத்.(me:இருக்கலாம் இல்லமலும் இருக்கலாம் 🤷♀️)
உனக்கு கண்டிப்பா விஷம்தான் என்பது போல் முறைத்தான் சூர்யா.
சரி கல்யாணம் வேண்டாம் காதல் பத்தி என்ன நினைக்குற. அதற்கும் முறைப்புதான் பதிலாக அவனுக்கு கிடைத்தது.
டேய் அது எப்படி ஒருத்தன் லவ் கூட இல்லாம இவ்ளோ வருஷம் கடந்து வர முடியும். சரி லவ் இல்லை ஆனா இந்த பொண்ண பாத்த உடனே ஒரு பீல் அப்படி எதாவது. என்று அவன் கேட்க இந்த முறை சூர்யா முறைத்ததில் அப்படியே பின்வாங்கி சென்று விட்டான் பிரசாத்.
அவன் சென்ற பிறகு மௌனமாக நின்று கொண்டிருந்தான் சூர்யா. கண்ணை மூடியவனுக்கு அவள் முகம் வந்து சென்றது. கண்ணை திறந்தவன் சக்கரை இல்லாமல் இருந்த பிளாக் டீயையும் பார்த்தான் அப்படியே அருகில் இருக்கும் சக்கரையையும் பார்த்தான்.பிறகு சக்கரை எடுத்து மேலே வைத்தவன் சக்கரை இல்லாத அந்த டீயை ரசித்து குடிக்க ஆரம்பித்தான்.
❤️சில நேரங்களில் வார்த்தைகள் வெளிப்படுத்தாத உணர்வுகளை மௌனம் வெளிப்படுத்தும் ❤️
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் ❤️
இப்படி எழுதுறது ஓகேவான்னு பாத்துக்கோங்க மக்களே. நான் நல்லபடியா கதை கொண்டு போக ட்ரை பண்றேன்.
❤️அப்புறம் மக்களே இந்த கதை படிக்கும் ஒவ்வொரு சகோதரிக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் ❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro