
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -50 { இறுதி அத்தியாயம் }
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
முடியாத பாா்வை
நீ வீச வேண்டும் முழு
நேரம் என்மேல் உன்
வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஜெய் சொன்னதை கேட்ட பூஜா என்ன சொல்ல என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள்.அதை கவனித்த.
"ஹே பூஜா நீ என்ன எதுவும் பேச மட்டேங்குற", என்று கேட்டான்.பூஜாக்கு அவன் கேள்வியே மிகவும் வித்தியாசமாக இருந்தது.
"இந்த மாதிரி ஒரு விஷயத்தை சொல்லியிருக்க அப்புறம் எப்படி என்னால பேச முடியும்",என்று கேட்டாள்.அவளை பார்த்து லேசாக சிரித்த ஜெய்..
"நான் அவங்க என்ன சொன்னாங்களோ அதைதான் சொன்னேன்.மத்தபடி நான் அவங்ககிட்ட என்ன சொன்னேன்னு சொல்லவே இல்லையே", என்று சொன்னான்.
"நீ என்ன சொன்ன", என்று கேட்டாள் பூஜா..
"ம்ம் அதை இப்போ வந்து கேளு.யாராவது ஏதாவது சொன்னா அதைகேட்டு நான் உன்னவிட்டு போயிடுவேன்னு நினைச்சியா", என்று கேட்டான் ஜெய்..
"இங்க பாருங்க ஜெய்..நான் உங்களை அதிகமா நம்புறேன் அதனாலதான் நான் உங்களை லவ் பண்ணுறேன்.நீங்க என்னவிட்டு போயிடுவிங்கன்னு வேற யாராவது வந்து சொன்னா நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன்.ஆனா நீங்க ஒரு விசயம் சொன்னா அதை நான் கொஞ்சம் கூட யோசிக்காம நம்புவேன்",என்றாள் பூஜா.அவளை பார்த்து லேசாக சிரித்தவன்..
"உண்மையா சொல்லணும் அப்படின்னா எனக்கு அந்த ரிலேடிவ் அப்படி பேசுனப்போ அவங்க முன்னாடியே நான் உன்னதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல நினைச்சேன்..ஆனா எங்க அம்மா எனக்கு முன்னாடி பேசிட்டாங்க..அவங்க சொன்னாங்க எங்க வீட்டுக்கு நீதான் மருமகன்னு.அவங்களுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம்.அதை எல்லாம் தாண்டி நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு.அதனால அம்மா நம்ம கல்யாணத்துக்கு ok சொல்லிட்டாங்க..உன்ன பாக்கணும்ன்னு சொன்னாங்க ",என்று சொன்னான் ஜெய்.அவன் சொன்னதை கேட்ட பூஜாக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
கொஞ்சம் நேரத்துக்கு முன்புவரை அவள் மனதில் பல கேள்விகள் பல குழப்பங்கள் எல்லாம் இருந்தது.ஆனால் இப்போது இந்த நொடி அவள் மனம் முழுவதும் நிம்மதியாக இருந்தது.அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.அதில் அவள் முகம் சிவந்து போனது.அதை பார்த்தவன்.
"டேய் டேய் என்னடா நீ அழுற. ஐ ஆம் சாரி..நான் சும்மா விளையாடி பாத்தேன்..சாரி", என்று சொன்னான் அவன் குரலில் அவ்வளவு பதட்டம் தெரிந்தது.அதை பார்த்து சிரிக்க ஆரம்பித்த பூஜா.
"என்ன பதட்டத்துல டே டேன்னு சொல்றிங்க?",என்று கேட்டாள்.
"இது ரொம்ப முக்கியமா?", என்று கேட்டான் ஜெய்..
"எனக்கு முக்கியம்தான்", என்றவள் கண்ணை துடைத்தாள்.
"எனக்கு உன்ன டேய் போட்டு கூப்பிட பிடிச்சிருக்கு அதான் ..சரி நீ சொல்லு ஏன் திடீர்னு அழுத",என்று கேட்டான் ஜெய்..
"திடீர்னு எதையாவது யோசிச்சு நான் எமோசனல் ஆனா இப்படிதான் எனக்கு அழுகை வந்துடுது என்று சொன்னாள் பூஜா.
ஜெய் அவளை பார்த்து "நான் சொன்ன விஷயத்தை கேட்டா நீ இவ்ளோ எமோசனல் ஆன ?",என்று கேட்டான்..
"இல்ல நான் அதை நினைச்சு எமோசனல் ஆகல .இப்போ நம்ம சொல்ல போற விசயத்தை நினைச்சு எமோசனல் ஆகுறேன்",என்று சொன்னாள் பூஜா..
"அப்படி என்ன சொல்ல போற?",என்று கேட்டான் ஜெய்.
"நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?", என்று கேட்டாள் பூஜா.
அவள் அப்படி கேட்டதும் சந்தோஷ பட வேண்டிய ஜெய் பாவம் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டான்..பாவம் அவனும் எத்தனை முறை அவளிடம் இதைப்பற்றி பேச நினைத்து இருப்பான்.ஆனால் அவனுக்கு பூஜாபற்றி தெரியும்.அவள் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று இருந்தாள்.ஆனால் இப்போது அவளே கேட்கும்போது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"உண்மையாதான் சொல்றியா", என்று கேட்டான் ஜெய்..
"ஏன்பா ஒரு லவ் பண்ணுற பொண்ணு கல்யாணம் பண்ணுறியான்னு கேக்குறா நீங்க என்னன்னா உண்மையா பொய்யான்னு பட்டிமன்றம் நடத்த சொல்லுவ போல",என்று கேட்டாள்..
"அது இல்ல பூஜா உனக்கு இப்போதைக்கு மேரேஜ் பண்ண எண்ணம் இல்லாமதானே இருந்துச்சு அப்புறம் என்ன திடீர்னு", என்று கேட்டான் ஜெய்.
"என்னவோ தெரியல திடீர்னு என் மனசு உன்கூட வந்துடுன்னு சொல்லிடுச்சு..இங்க வர்றதுக்கு முன்னாடியே இல்ல எப்போவுமே நம்ம கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்ன்னு நான் யோசிக்கல..ஆனா நான் இப்போ யோசிக்கிறேன்.உன்கூட இருந்தாலும் நான் நானா இருப்பேன்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு.உன்கிட்ட பேசுறப்போ அந்த நம்பிக்கை அதிகமாகுது.என்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பெரிய பயமாக காரணமே எங்க கல்யாணத்துக்கு பிறகு நாங்க நாங்களா இருக்க முடியாதோ அப்டிங்கற பயம்தான். ஆனா இப்போ அந்த பயம் என்கிட்டே இல்ல.எனக்கு தோணுது உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு..என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?", என்று கேட்டாள் பூஜா.
"நான் எப்போவோ ரெடிதான்..நம்ம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்", என்று சொன்னான் ஜெய்.அவனை பார்த்து சிரித்தாள் பூஜா.
"ஏன் சிரிக்கிற?', என்று கேட்டான் ஜெய் .
"இல்ல ஒருவேளை இந்த இடத்துல யாருமே இல்லன்னா நான் உங்களுக்கு நூறு முத்தம் கூட கொடுத்துருப்பேன் ஜஸ்ட் மிஸ்", என்றாள் பூஜா.
"இதை இந்த இடத்துல சொல்லியே ஆகணுமா.ஏண்டா சும்மா இருக்கவன இருக்க விட மாட்டிங்களா", என்று கேட்டான்ஜெய் =
"ஏன் என்ன பண்ணுவிங்க?", என்று கேட்டாள் பூஜா.
"ம்ம்..கல்யாணத்துக்கு அப்புறம் வட்டியோட திருப்ப தருவேன் அப்போ தெரிஞ்சிகோங்க", என்று சொன்னான் ஜெய்.அதைகேட்டு சிரித்தவள்.
"என் அக்கா வீட்டுக்கு போலாமா", என்று கேட்டாள்.அதை கேட்டதும் உடனே சம்மதித்தான் ஜெய்.அவனுக்கும் பூஜா குடும்பத்துடன் பழக வேண்டும் என்ற ஆசை இருந்தது அவன் எதற்காகவும் தயங்கி நிற்க விருப்பம் கொள்ளவில்லை எனவே அவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்..
செல்லும் வழிகளில் பூஜா என்றும் பார்க்கும் காட்சிகள்தான் இருந்தன..ஆனால் இன்று அந்த சாதாரண காட்சிகள் அவள் கண்ணுக்கு மிகவும் அழகாக தெரிந்தது
என்ன செய்ய மனதில் மகிழ்ச்சி இருந்தால் பார்க்கும் காட்சிகள் எல்லாம் அழகாகத்தானே இருக்கும். அதனால்தான் இன்று பூஜாவிற்குஎலாம் அழகாக தெரிந்தது .காலையில் இருந்த பிரச்னைகள் எல்லாம் மாலையில் மறைந்து போனது .புவனா .தேவா இனி எல்லோரும் அவர்கள் வாழ்க்கையை நிறைவாக வாழ்வார்கள் என்று தோன்றியது.பூஜா அப்படியே அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .ஜெய்யும் அவள் இவ்வளவு உருமையாக நடந்து கொள்வதை ரசித்தான்..
அப்படியே கொஞ்சம் நேரத்தில் இருவரும் சூர்யா வீட்டுக்கு சென்றனர்..உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீட்டுக்கு வரும்வரை கொஞ்சம் தைரியமாக இருந்த ஜெய்க்கு இப்போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது..ஜெய்யும் பூஜாவும் வீட்டுக்கு வரும்போது நேரம் இரவு 8 மணியை தாண்டி இருந்தது அவர்கள் வீட்டுக்கதவும் பூட்டப்பட்டு இருந்தது. தேவா பூஜாவிற்கு இந்த விசயத்தை சொல்ல போன் செய்தாள்தான்.ஆனால் பூஜாதான் வீட்டுக்கு வருகிறேன் நேரில் பெசிகொல்ள்ளலாம் என்று சொல்லி விட்டாள்.அதனால் சூர்யாவும் தேவாவும் கூட அவளுக்காக காத்திருந்தார்கள்.
கதவை தட்டிய உடன் சூர்யாதான் கதவை திறந்தான்.அவனை பார்த்து லேசாக புன்னகை செய்தான் ஜெய்.பின்னால் நின்ற பூஜாவும் லேசாக புன்னகை செய்தாள்.அவளை பார்த்தவன் இருவரையும் உள்ளே வர சொன்னான்.
"ஹே என்னப்பா உன் அக்கா husband என்ன அப்படி முறைக்கிறாரு", என்று கேட்டான் ஜெய்.
"அவர் பாக்குறதே அப்படிதான் இருக்கும் வா",என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றாள் பூஜா.
கிருஷ்ணா பூஜாவை பார்த்து சிரித்தான்..
"டேய் கிருஷ்ணா எப்படி இருக்க?", என்று கேட்டாள் பூஜா.
"நல்லா இருக்கேன்கா",என்றவன் சிரித்தான்..
"என்னடா தனியா சிரிக்கிற", என்று கேட்டாள் பூஜா..
"இல்லக்கா ஒண்ணுமில்ல சும்மாதான்", என்றான் கிருஷ்ணா.
அப்போது அங்கே வந்த செல்வம் ஜெய்யை பார்த்து யார் என்று கேட்டார்.தேவாவும் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள்..
ஜெய் பூஜாவை பார்க்க..
"இவங்களதான் அங்கிள் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்", என்று சொன்னாள் பூஜா அவள் குரலில் ஒரு தெளிவு இருந்தது.அதைகேட்ட செல்வம் சந்தோசமாக சிரித்தார்.ஜெய் அவர்களை எல்லாம் பார்த்தான்.கிருஷ்ணா,தேவா எல்லாம் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்..சூர்யா மட்டும் இன்னும் முறைத்து கொண்டு இருப்பது போல இருந்தது.
அங்கே நிலவிய அமைதியை முதலில் செல்வம்தான் கலைத்தார்..
"ரொம்ப சந்தோசமான விசயம்மா..வாழ்த்துக்கள்.இன்னைக்கு நிறைய நல்ல விஷயம் நடந்துருக்கு ", என்று சொன்னார் செல்வம்..அதைகேட்ட பூஜா..
"என்ன அங்கிள் சொல்றிங்க நிறைய நல்ல விசயமா..ஏண்டா கிருஷ்ணா காம்படிசன் ஏதாவது வின் பண்ணியா?", என்று கேட்டாள்..
நான் காம்படிசன்ல வின் பண்ணல.அண்ணாவும் அண்ணியும்தான் அம்மாஅப்பா ஆக போறாங்க", என்று உற்சாகமா சொன்னான்.அதைகேட்ட தேவா முகம் வெக்கத்தை வெளிபடுத்த சோபாவில் அமர்ந்திருந்த பூஜா எழுந்துவந்து தேவாவை அணைத்துக்கொண்டாள்.
"எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு", என்று சொன்னாள்.தேவா அவளை பார்த்து சிரித்தாள்.
"நான்தான் இந்த உள்கதுலையே பெஸ்ட் சித்தியா இருப்பேன்", என்று சொன்னாள் பூஜா அதைகேட்டு சரி என்று தலை அசைத்தாள்.
"வாழ்த்துக்கள் மாமா..நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட்அப்பா அம்மாவா இருப்பிங்க", என்று சொன்னாள்.எப்போதும் தேவைக்கு அதிகம் பேசாதவள் இன்று அதிகம் பேசினாள்.
ஜெய் சூர்யா மற்றும் தேவா இருவருக்கும் வாழ்த்துகள் சொன்னான்,,கொஞ்சம் நேரம் எல்லோரும் சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.இரவு சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டும் என்று சொன்ன செல்வம் சமையலில் இறங்க பூஜா சூர்யாவுடன் ஜெய்யை பேச சொல்லிவிட்டு தேவா உடன் சென்று விட்டாள்..
ஜெய் என்ன பேச என்று தெரியாமல் தடுமாற அவனை மாடிக்கு அழைத்தான் சூர்யா..
ஜெய்யும் மாடிக்கு சென்றான்..
"இங்க பாருங்க ஜெய் உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும். ஏன்னா நான் உங்கள இதுக்கு முன்னவே பூஜா கூட பாத்துட்டேன். சோ உங்களை பத்தி விசாரிச்சேன். நல்ல பையன்தான் எல்லாரும் சொன்னாங்க.அதான் அமைதியா இருந்தேன்,பூஜா தெளிவான பொண்ணு அவளுக்கு என்ன வேணும்ன்னு அவளுக்கே தெரியும்.அதனால நான் எதுவும் அவளுக்கு சொல்ல தேவையில்ல.ஆனா உங்ககிட்ட சொல்ல வேண்டியது இருக்கு" என்று ஆரம்பித்தான் .ஜெய்யும் சூர்யா என்ன சொல்ல போகிறான் என்று கேட்க ஆர்வமாக இருந்தான்..
"பூஜா தங்கமான பொண்ணு. மத்தவங்க மாதிரி தனக்கு என்னன்னு போற பொண்ணு இல்ல.அவ அப்படி இல்லன்னா இன்னைக்கு எனக்கு என் தேவா கிடைச்சிருப்பாளாந்குறதே அதிசயம்தான்.அந்த பொண்ணு நிறைய கஷ்ட பட்டுருக்கா.சோ அவளுக்கு இனிமே கிடைக்க போற life நல்லபடியா இருக்கணும்.நீங்க நல்லபடியா பாத்துக்கணும்.ஒரு குடும்பமா சந்தோசமா இருக்கணும்.அவளை கஷ்ட படுத்துனா யார் வந்து கேப்பாங்கங்குற மாதிரி இருக்க கூடாது.அவளுக்காக இங்க ஒரு குடும்பம் இருக்கு அதை எப்போவும் நியாபகத்துல வச்சிக்கணும்", என்று சொன்னான் சூர்யா.
அதைகேட்ட ஜெய் லேசாக புன்னகை செய்தான்..
"சூர்யா நான் கூட நீங்க ரொம்ப டெரர்ன்னு நினைச்சேன்..ஆனா உண்மையாவே நீங்க ரொம்ப சாப்ட்டா இருக்கீங்க .நான் கண்டிப்பா பூஜாவை ரொம்ப சந்தோசமா வச்சி பாத்துப்பேன்", என்று சொன்னான் ஜெய்.அதைகேட்ட சூர்யா சிரித்தான்..
"அடிக்கடி சிரிங்க பாஸ் உங்களுக்கு அது கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு", என்று சொன்னான் ஜெய்..
அப்போது பூஜா வந்து எல்லாரையும் சாப்பிட வர சொன்னாங்க என்று சொல்லி அழைக்க ஜெய் மற்றும் பூஜா கீழே சென்றார்கள்..
அப்போது பிரசாத் மற்றும் அமிர்தா அவர்கள் குழந்தையுடன் வந்தார்கள் .பூஜா அவர்கள் உடல்நலன் பற்றி விசாரித்தாள்.அவர்களும் தங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்...கொஞ்சம் நேரத்தில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர்..
எல்லோரும் தரையில்தான் அமர்ந்திருந்தார்கள்..சூர்யா தேவாவை பரிமாறவிடவில்லை.அவன்தான் வந்திருந்த எல்லோருக்கும் பரிமாறினான்..கிருஷ்ணா அவனுக்கு உதவி செய்தான்.வீடே கலகலப்பாக சந்தோசமாக நிறைந்திருந்தது.தேவா சஞ்ச்னாவிற்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள்...[me - லல்லலா லால லலலாலா}
அந்த இடத்தில் அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது..கொஞ்சம் நேரம் கழித்து எல்லோரும் சாபிட்டுவிட்டு அவரவர் வீட்டுக்கு செல்ல தேவா அவளுடைய அறைக்கு செல்ல போனாள்.அப்போது அவளை அழைத்தார் செல்வம்..
தேவா அவர் அருகே வந்தாள்.
"இந்த கட்டிடத்துக்கு உயிர் கொடுத்ததுக்கு நன்றிம்மா..நீ வந்த பிறகுதான் வீடு வீடா இருக்கு..எப்போவும் சந்தோசமா இரு..உனக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்.சாப்பிட்டு படு", என்று சொல்லிவிட்டு சென்றார்..தேவா அவரை பார்த்து சிரித்தபடி கிச்சனுக்கு வர.கிச்சனை கிளீன் செய்து வைத்த சூர்யா அவளுக்காக சாப்பாடு எடுத்துக்கொண்டு திரும்பினான்.
அவனை கிட்சன் வாசலில் இருந்து சைட் அடித்துக்கொண்டிருந்தாள் தேவா..
"என்ன ரகசியமா சைட் அடிக்கிற மாதிரி இருக்கு", என்று கேட்டான் சூர்யா..
எனக்குதான் உரிமை இருக்கே என்பது போல பார்த்தாள் தேவா..{me - உங்களுக்கு இல்லாத உரிமையா }
உனக்குதான் உரிமை இருக்கு.உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு என்று சொல்லி சிரித்தான் சூர்யா.
தேவா வெட்கம் கொள்ள..
"மேடம் வெட்கம் எல்லாம் அப்புறம் படலாம். இப்போ..", என்று அவன் நிறுத்த அவனை என்ன என்பது போல பார்த்தாள் தேவா..
நிறைய யோசிக்காத நீ சாப்பிடனும் அதை சொன்னேன் என்றான்.அதைகேட்ட தேவாக்கு கொஞ்சம் மொக்கையானது..சூர்யா சாப்பாடை எடுத்துக்கொண்டு ரூமுக்கு வந்தவன்.அவளுக்கு பல கதைகள் பற்றி பேசி ஊட்டிவிட ஆரம்பித்தான்.அவர்கள் பார்த்தது ,கல்யாணம்,காதல் என எல்லா கதையையும் பேசினார்கள்.வார்த்தைகள் தீர்ந்த இடத்தில அவர்கள் பார்வை பேசியது..சாப்பிட்ட பாத்திரத்தை எல்லாம் எடுத்துவைத்துவிட்டு வந்தவன் ..தேவாவை பார்த்து
"தேவா உன்கிட்ட ஒன்னும் சொல்லணும் ",என்றான் ..தேவா கண்களால் என்ன என்று கேட்டாள்..
அவளை நெருக்கமாக கொண்டு வந்தவன் அவள் கண்களை அவள் வயற்றில் கை வைத்து அவள் நெற்றியில் ஒரு முத்தமும் கொடுத்து
ஐ லவ் யு என்றான்..
அதைகேட்ட தேவா அவனை பார்த்து சிரித்தாள்.அவள் காதலையும் மகிழ்ச்சியையும் அவள் கண்கள் சொன்னது..
எங்கோ ஒரு மூலையில் அழகே அழகே பாடல் ஓட அதன் வரிகளான வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு இவர்களுக்கு பொருந்தி போனது......
முற்றும்...
அழகு என்பது பார்க்கும் பார்வையில்தான் உள்ளது..அதை உணர்ந்து வாழ தொடங்குபோது நிம்மதிக்கு அருகில் சென்று விடுகிறோம்..
இங்கே எல்லாம் அழகுதான் ..எல்லோரும் அழகுதான்..
சில கதைகளுக்கு சில முடிவுகள் சரியாக இருக்கும்..எனக்கும் இந்த முடிவுதான் சரி என்று தோன்றியது..
வழக்கம் போல நமக்கு ரொம்ப பிரம்மாண்டமா எழுத வரல ..ஆனா நமக்கு வர்ற ஸ்டைல்ல எழுதியாச்சி..இந்த கதைக்குதான் நான் ரொம்ப நாள் எடுத்துருக்கேன்..சொல்லப்போனா வருஷம்ன்னு கூட சொல்லலாம்.என்னால கமெண்ட்ஸ்க்கு பதில் கூட சொல்ல முடியாம போன நாட்கள் அதிகம்..ஆனா உங்க கமென்ட்தான் என்ன எழுத வச்சிது..உண்மையா நீங்க பெஸ்ட் ரீடர்ஸ்.நான்தான் சொதப்பிட்டேன்..ஆனா அடுத்த கதைகள்ல இப்படி நடக்காது..ப்ளான் பண்ணி ஒழுங்கா பண்ணுவோம்...
அடுத்து என்ன கதை எழுதலாம்ன்னு யோசிச்சப்போ ஹீரோவை வில்லன் மாதிரி {wife அ அடிக்கிறது .போதைக்கு அடிமையா இருக்குறது..அந்த மாதிரி}
வச்சி கதை எழுதுனா ரீச் அதிகமா இருக்கும்ன்னு கேள்வி பட்டேன்..ஆனா அதுக்காக என்னால அப்படி ஒரு கதை எழுத முடியாது..
அர்த்தமே இல்லாம அடிக்கிறது..அப்புறம் வந்து சாரி கேட்டா பெரிய உத்தமன் அப்படி ஒரு கதாபாத்திரத்தை சொல்ல என்னால முடியாது.இந்த தெளிவு வர்றதுக்கு முன்னாடி எதாவது கதையில அப்படி எழுதி இருந்தால் அதுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.. நான் இந்த ஒரு வருச்டஹுல எழுதுன ஒரே கதை இது மட்டும்தான் அதுவும் 11 episodes. யாருக்குள் இங்கு யாரோ கூட இந்த தளத்துல இல்ல.அப்படி இருக்கும்போது நான் உங்களுக்கு மகிழ்ச்சி தர கூடிய கதையை தர விரும்புறேன்..என் கதை இத்தனை நாள் எந்த ஒரு வழியில இருந்ததோ அப்படியேதான் தொடரும்..
அடுத்து பண்ண போற கதை சில்லுகருப்பட்டி - சின்ன கதைமாற்றம் இருக்கும். ஏனா எனக்கு ஒருத்தங்க உண்மையான காதல்கதை தெரிஞ்சிருக்கு.. எனக்கு எதார்த்தமா ஒரு கதை உண்மையா சொல்லணும்ன்னு ரொம்ப ஆசை சோ நான் அந்த கதையை நான் எழுதுவேன்...
அடுத்ததா சொல்லணும் அப்படின்ன உணகேன்றே உயிர் கொண்டேன். சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் மாதிரி கதை நிறைய பேர் கேட்ருந்தாங்க .சோ ஒரு fantasy கதை .அது எந்த இடைவெளியும் இல்லாம சிறப்பா வந்து சேரும்..
சோ இவ்வளவுதான் நான் சொல்ல வந்த விசயம்.. epiloge போடணும்ன்னா சொல்லுங்க போட்ருவோம்..ஆனா இதான் நான் நினைச்ச முடிவு..
சூர்யா - தேவா ,ஜெய் -பூஜா,பிரசாத் - அமிர்தா .கிருஷ்ணா செல்வம் எல்லா கதாபாத்திரமும் உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நம்புறேன்.அடுத்த பதிவில் சந்திப்போம்..
ok மக்களே நம்ம அடுத்த கதைகள்ல சிந்திப்போம்.அதுவரை உந்கலிடமிருந்து விடைபெறுவது அபிராமி கணேசன் உங்க எல்லாரோட ஒத்துழைப்புக்கும் நன்றி .......................................................................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro