Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -41

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️

உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை
எதுவும் இங்கு மாயம்தான்
எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️

🦋இதுவரை என்ன பண்ணி வச்சிருக்கோம்ன்னா நம்ம பூஜா லவ் கொஞ்சம் சேர்ந்துருக்கு.புவனா சென்னை வந்தாச்சு and ரகு அனுவை கூட்டிட்டு போக வந்துருக்குறதா சொல்லறாரு. இதுதான் நடந்துருக்கு 🦋

வாசலில் புவனா நிற்பதை பார்த்ததும் தேவா அதிர்ச்சியானாள். அவளுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.

"என்ன மக்கா என்ன பாத்துட்டு அப்டியே நிக்கியா.. உள்ள வான்னு கூப்பிடு ",என்று சொன்னாள். அப்போது வாசலில் ஏதோ ஒரு சத்தம்கேட்டு ரூமைவிட்டு வெளியே வந்த சூர்யா வாசலில் புவனாவை பார்த்து அதிர்ச்சி ஆனான்.அவனை பார்த்ததும் புவனா போலியான புன்னகையுடன்

"மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை ", என்று கேட்டார்.

"இதுவரைக்கும் நல்லாதான் இருந்தேன்",. என்றான் சூர்யா முகத்தில் அடித்தது போல. அப்போதுதான் ரூமிலிருந்து வந்த செல்வம் மற்றும் கிருஷ்ணா இருவரும் வாசலில் நிற்கும் புவனாவை பார்த்து குழம்பி போனார்கள். செல்வம் சூர்யாவை பார்க்க சூர்யா பெருமூச்சு விட்டவன்

"இவங்கதான் தேவாவோட சித்தி", என்றான். உடனே செல்வம்.

"என்னப்பா நீ சித்தின்னு சொல்லிட்டு வாசல்ல நிக்க வச்சி பேசிட்டு இருக்க உள்ள வாங்க ",என்று அழைத்தார். சூர்யா எதுவும் பேசவில்லை அமைதியாக உள்ளே சென்று விட்டான் அவன் முகத்திலேயே தெரிந்தது அவன் எந்த அளவுக்கு கோபத்தில் இருக்கிறான் என்று. புவனா இதை எல்லாம் நினைத்து கவலை கொள்வாளா  என்ன அவர் பாட்டுக்கு வீட்டுக்குள் வந்தார்.

கிருஷ்ணாக்கு புவனாவை பார்த்ததும் ஏதோ படத்தில் வரும் வில்லியை பார்ப்பது போல இருந்தது. அவன் எதுவும் பேசாமல் இருக்க வீட்டுக்குள் வந்த புவனா வீட்டை சுற்றி பார்த்தாள். பெரிய மாளிகை என்று சொல்ல முடியாவிட்டாலும் வீடு அழகாகதான் இருந்தது.

"தேவாம்மா நீ உன் சித்தி கூட பேசிட்டு இரு இப்போ நாங்க காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்", என்றார். அதை கேட்டதும் புவனா

"என்ன சம்மந்தி நீங்க எதுக்கு காஃபி எல்லாம் போடுறீங்க அதை எல்லாம் பண்ணுறதுக்கு தானே இந்த தேவா இருக்கா. என்ன தேவா ஊருல அவ்ளோ வேலை செய்வ இங்க வந்ததும் எல்லாதையும் மறந்துட்டியோ", என்று கேட்டார். அவர் அப்படி கேட்டதும் தேவாக்கு ஒரு மாதிரியானது.

"இங்க எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்வோம். அது ஒன்னும் தப்பில்லையே ஆன்டி?", என்று கேட்டான் கிருஷ்ணா அதை கேட்டதும் புவனா.

"இங்க பாருப்பா சில வேலைங்க பொண்ணுங்க செய்யன்னு இருக்கு அதை அவங்கதான் செய்யணும். இதெல்லாம் உனக்கு இப்போ புரியாது"" என்று சொன்னார் புவனா. இதை எல்லாம் கேட்ட தேவாக்கு தர்ம சங்கடமானது.

அப்போது சூர்யா சத்தமாக" தேவா இங்க வா ",என்று அழைத்தான். அவன் கூப்பிட்ட விதத்திலேயே அங்கிருந்த எல்லோருக்கும் சூர்யா பயங்கர கோபத்தில் இருக்கிறான் என்று புரிந்தது. செல்வம் பேச்சை மாற்ற நினைத்து,"கிருஷ்ணா போ போய் டீ கொண்டு வா. தேவாம்மா நீ போம்மா அவன் எதுக்கோ கூப்பிடுறான் பாரு", என்று சொன்னான். அதன் பிறகு புவனா எதுவும் பேசவில்லை அவர் அமைதியாக இருந்தார்.

தேவா,சூர்யா நிச்சயம் பயங்கர கோபத்தில் இருப்பான் என்று வேகமாக ரூமுக்குள் வர அவளை சட்டென்று இழுத்த சூர்யா சுவற்றை ஒட்டி நிற்கவைத்துவிட்டு கதவை காலால் சாத்தினான். அவனின் இந்த செயல் தேவாவை கொஞ்சம் குழப்பியது.அவள் அவனை வினோதமாக பார்க்க அவளை பார்த்தவன்.

"என்ன தேவா கோபமா கூப்பிட்டு இங்க வந்து கொஞ்சிட்டு இருக்கேன்னு யோசிக்கிறியா?",என்று கேட்டான். ஆமாம் என்பது போல. தலை அசைத்தாள் தேவா.அவளை பார்த்து சிரித்தவன்.

"இப்போவும் எனக்கு கோபம் இருக்குதான் ஆனா அது உன்மேல இல்ல உன் சித்தி மேலதான். எதுக்கு அவங்க சம்மந்தமே இல்லாம இங்க வந்துருக்காங்க ",என்று கேட்டான்

தேவா தனக்கு தெரியாது என்பது போல தலை அசைத்தாள். அதை பார்த்தவன்.

"ம்ம் அது சரி உனக்கே தெரியலயா. ஆனாலும் தேவா இவங்கள இங்க இருந்து  சீக்கிரமா அனுப்பணும் இவங்க இங்க இருக்குறது எனக்கு சரியா படல ",என்று சொன்னான் அவன் சொல்வது தேவாக்கும் சரி என்றுதான் பட்டது ஆனாலும் வீடு தேடி வந்திருக்கும் சித்தியை அவளுக்கு முகத்தில் அடித்தது போல துரத்தி விட மனம் வரவில்லை. எனவே அவள் அவனை பாக்காமல் இருக்க. அவள் மனதை புரிந்துகொண்ட சூர்யா

"தேவா நீ கவலை படாத அவங்க இங்க இருக்க வரைக்கும் நானா போய் அவங்கள எதுவும் சொல்ல மாட்டேன்
ஆனா என்ன வெறுப்பேத்துற மாதிரி பண்ணா நான் நிச்சயம் அவங்கள. சும்மா விட மாட்டேன் சரியா ",என்று கேட்டான் சூர்யா. சரி என்பது போல தலை அசைத்தவள் போகவா என்று கேட்க அவளை பார்த்தவன்

"இல்ல போக வேண்டாம் ",என்றான் சூர்யா.

தேவா ஏன் என்பது போல அவனை பார்க்க.

"என்னன்னு எனக்கே தெரியல..நீ பாக்க அப்படியே தேவதை மாதிரி இருக்க தேவா. என்னால உன்னவிட்டு தள்ளி இருக்க முடியல. உன்ன பாத்தாலே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனா உன் சித்தியை பார்த்தாதான் கடுப்பா இருக்கு. அவங்கள பார்த்த உடனே எப்போ வெளிய போறீங்கன்னு கேக்க தோணுது ",என்று சொன்னான் அவன் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் தேவா.

"அடடா நான் கூட உன் அருமை சித்தியை திட்டுன உடனே நீ கோபப்பட்டு கண்ணாலேயே முறைப்பன்னு நினைச்சேன். நீ என்னன்னா சிரிக்கிற. இதை போய் உன் சித்திக்கிட்ட சொல்வா?",என்று கேட்டான் சூர்யா. அவன் அப்படி கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தேவா வேண்டாம் என்பது போல தலை அசைக்க. அவளை பார்த்தவன்.

"சரி அப்ப நான் எதுவும் உன் சித்திக்கிட்ட சொல்ல கூடாதுன்னா நீ எனக்கு ஒன்னு தரணுமே", என்று சூர்யா கேட்க அவனை பேச விடாமல் வாயை கையால் மூடியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனே ஒரு கப் எக்ஸ்ட்ரா டீதான் கேட்க வந்தான் தேவாதான் அவசரப்பட்டு விட்டாள்.

"என் பொண்டாட்டி தேவா இப்போ எல்லாம் கொஞ்சம் முன்னேறுன மாதிரி தெரியுதே. நான் டீ மட்டும் போதும்ன்னு நினைச்சாலும் என் பொண்டாட்டி எனக்கு முத்தம் எல்லாம் தர்றாங்களே ",என்று சூர்யா சொல்ல தேவாக்கு ஆச்சர்யம் மற்றும் வெட்கம் ஒரே நேரத்தில் சேர்ந்து வர அவனை விட்டு விலகி ரூமைவிட்டு வெளியே செல்ல போக அவனோ இன்றைக்கு அவளை விடப்போவது இல்லை என்பது போல அவளை  நெருக்கமாக பிடித்தான். தேவா தன்னை விடும்படி கண்ணால் சைகை செய்ய.

"அதெல்லாம் விட முடியாது நான் சும்மா சிவனேன்னுதான் இருந்தேன் நீதான் முத்தம் கொடுத்து நல்லா இருந்தவன் மனசை கெடுத்த. அதனால நீதான் இப்போ என் மனச சரி பண்ணனும்", என்று சொன்னான் அவன் சொன்னதை கேட்ட தேவா என்ன என்பது போல அவனை பார்த்தபடி அவனைவிட்டு விலகபார்க்க அவளை பார்த்து சிரித்த சூர்யா.

"இன்னைக்கு என்ன பண்ணாலும் உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது தேவா ",என்று சொன்னபடி அவள் முகத்துக்கு அருகே தன்னுடைய முகத்தை கொண்டு சென்றான் அவன் கண்களை பார்த்த தேவா ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அவனை இமைக்காமல் பார்க்க அவளை பார்த்து ரசித்தவன் அவள் உதட்டுக்கு அருகே செல்லப்போக அப்போது கிருஷ்ணா அண்ணா என்று அழைத்தான். அதில் முத்தம் கொடுக்க வந்தவன் கவனம் திசை மாற அதை சரியாக பயன்படுத்திய தேவா வெளியே செல்லபார்க்க அவளை பிடிக்க முயற்சி செய்ய வந்த சூர்யாவை கிருஷ்ணாவின் பதட்டம் நிறைந்த குரல் கலைத்தது.

அண்ணா என்று அவன் மீண்டும் பதட்டம் நிறைந்த குரலில் அழைக்க  இப்போதுதான் சூர்யாக்கு அவன் பதட்டம் புரிய தேவா கதவை திறக்க அவனும் வேகமாக வெளியே வந்தான்.

"என்ன ஆச்சு?", என்று கேட்டான் சூர்யா.

"அண்ணா பிரசாத் அண்ணா வீட்ல சண்டை போல அமிர்தா அக்கா ஹஸ்பண்ட் வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு போல ",என்று சொன்னான் இதைக்கேட்டதும் சூர்யாக்கு பயங்கர கோபம் வந்தது.

"இன்னைக்கு ஒருத்தனுக்கு நேரம் சரி இல்ல என்று சொல்லியவன் வேகமாக பிரசாத் வீட்டை நோக்கி செல்ல  செல்வம் அவன் கோபத்தில் எதுவும் செய்து விட கூடாது ",என்று வேகமாக அவன் பின்னே சென்றார். டீ குடித்துக்கொண்டு இருந்த புவனாவும்

"அடடா இன்னைக்கு நல்ல சண்டை இருக்கும் போலையே இதை வச்சே என் ஆட்டத்தை நான் ஆரம்பிக்கிறேன்", என்று மனதுக்குள் நினைத்தான்.

சூர்யா கோபமாக அங்கே செல்ல அப்போது பளார் என்று அறை விழும் சத்தம் கேட்டது. சூர்யா உள்ளே சென்று பார்க்க அங்கே கன்னத்தில் கை வைத்தப்படி ரகு நிற்க அவனுக்கு முன்னால் நின்றார் பிரசாத்தின் அப்பா.

"யோவ் மாமா நீ ஏன்யா என்ன அடிச்ச", என்று கேட்டான் ரகு.

"யாரு யாருக்குடா மாமா. என் பொண்ணே உன்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டா. அப்புறம் நீ என்ன எங்க வீட்ல உரிமையா உக்காந்துட்டு இருக்க. காசு பணம் இல்லன்னாலும் அவளை நாங்க ராணி  மாதிரி பாத்துக்கிட்டோம். நீ எங்ககிட்ட இருந்து கூட்டிட்டு போய் அவளை வேலைக்காரி மாதிரி நடத்த போறியா. விட மாட்டேன். என் பொண்ணு உன்கூட வரமாட்டா அவளை பாத்துக்க அவளுக்கு தெரியும்  ",என்று சொன்னார். அவர் பேசுவதை கேட்கவே எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

நேற்று முழுவதும் அவர் அனுவை பற்றிதான் யோசித்தார். எப்படியாவது அனுவை அவள் கணவனுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால் இன்று வீட்டுக்கு வந்த ரகு அனுவை அவமானப்படுத்தும் வகையில் பேசி விட்டான். அவன் நாக்கில் நரம்பில்லாமல் பேசிய வார்த்தைகளை தாங்க முடியாமல் அடித்து விட்டார்.அனுவிற்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது என்னதான் பிரசாத் அமிர்தா அவளுக்கு சப்போர்ட் செய்ய  இருந்தாலும் அப்பாவின் அரவணைப்பு என்பது அவளுக்கு வேண்டும் என்பதாக இருந்தது.

"யோவ் உன் பொண்ண நீ வச்சிக்கோ என் குழந்தை எனக்கு வேணும்", என்று சண்டை போட்டான் ரகு. அவனை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை அனுவின் அப்பா.

"என் பேரன் உன்கிட்ட வளந்தா உருப்படியா இருக்க மாட்டான். அதனால நான் அவனை உன்கிட்ட தர மாட்டேன் வெளிய போ ",என்றார். அப்போது ரகு எதிர்த்து பேச போக

"டேய் என்ன வெளிய போக மனசு வரலயா ஏன் முறைவாசல் பண்ணனுமா ",என்று வாசலில் இருந்து குரல் வர அங்கே நின்று இருந்தான் சூர்யா. அவனை பார்த்த ரகு இன்னும் பயந்தான் எனவே தேவை இல்லாமல் இன்னும் வாங்கி கட்டிக்கொள்ள மனம் இல்லாமல்

கோர்ட்டில் பார்ப்பதாக சொல்லி அங்கிருந்து சென்றான். அவன் சென்றதும் அனு அவள் அப்பாவை அணைத்துக்கொண்டாள்.

"Thanks பா. நீங்க மட்டும் இன்னைக்கு அவன் கூட போக சொல்லி இருந்தா நான் ரொம்ப கஷ்ட பட்டுருப்பேன்பா", என்றாள் அனு.

"இல்லம்மா இனி நீ எப்போவும் கஷ்ட பட மாட்ட நாங்க இருக்கோம் உன்கூட", என்றார். அதைக்கேட்ட பிறகுதான் அங்கிருந்த எல்லாருக்கும் மகிழ்ச்சி ஆனது.

"இன்னைக்கு இந்த இடத்துல அப்பா நீங்கதான் ஹீரோ", என்றான் பிரசாத். அதைகேட்டவர் என் பொண்ணுக்கு நான் எப்போவும் ஹீரோதான் என்றார்.(me : சில நேரத்துல சில பெற்றோர்கள் ஹீரோவா இருக்குறத விட வில்லனா இருக்கதான் விரும்புறாங்க கேட்டா மானம் மரியாதைன்னு சொல்வாங்க. அந்த மானம் மரியாதைக்கு விலையா பிள்ளைங்க உயிர் கூட முக்கியம் இல்லாம போயிடுது. இப்படியும் சில மனிதர்கள் )

அனுவிடம் இங்கே எல்லாரும் மகிழ்ச்சி யாக பேச.கிட்சனில் இருந்த தேவா அருகே முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி சென்றார் புவனா.

🦋மன்னிக்கவும் மக்களே அக்னி வெயில் வராம மழை வந்ததால எனக்கும் பீவர் வந்துடுச்சி அதான் இந்த தாமதம். இனி சரியா அப்டேட் பண்ணிடறேன் 🦋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro