
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -33(corrected version)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம் குழி விழும்
கன்னத்தில் குடி இரு
என்கிறாள் விலையில்லா
ஆயுள் வரம் ஓஹோ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அதிகாலை 5.30 மணி அளவில் சூர்யாவும் தேவாவும் அந்த இதமான சூழ்நிலையை அனுபவித்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்குள் இருந்த சிறிய இடைவெளியும் முடிந்து ஈருடல் ஓர் உயிராக வாழ ஆரம்பித்து இருந்தார்கள்.இருவரின் வாழ்வின் தொடக்கத்தை இருவரும் மிகவும் ரசித்தார்கள்.
தேவா கண்ணை திறந்து பார்த்தாள் அப்போது சூர்யா அவளைதான் பார்த்து கொண்டிருந்தான் இல்லை ரசித்து கொண்டிருந்தான்.அவனை பார்த்ததும் அவளுக்கு ஏனோ புதிதாக வெட்கம் வந்தது.அவனை பார்த்து சிரித்தவள் கண்ணை மூடி கொண்டாள்.அதை சூர்யா ரசிக்கவே செய்தான்.ஏனோ அவனுக்கும் சிரிப்பு வந்தது.
என்ன ஆச்சு என்று கேட்டான் சூர்யா அவன் அப்படி கேட்டதும் புன்னகை செய்தவள் கண்ணை திறந்து பார்த்து ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் அவளால் புன்னகை செய்வதை நிறுத்தவே முடியவில்லை. அவளை ரசிக்கும் தன்னுடைய கண்களையும் சூர்யாவால் தடுக்க முடியவில்லை.
இப்போது தேவா அவனை பார்த்து கண்ணால் என்ன என்று கேட்டாள்.
ஐ லவ் யூ என்று யோசிக்காமல் சொன்னான் சூர்யா அவன் சொன்னதும் தேவா முகத்தில் புன்னகை தோன்றியது.
நான் இப்போ எந்த அளவுக்கு சந்தோசமா இருக்கேன்னு உனக்கு எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல தேவா. நம்ம வாழ்க்கை வேற வேற பக்கத்துல இருந்துச்சு ஆனா அது தானா சேர்ந்துச்சு யாராவது லவ் பண்ணுறேன்னு என்கிட்ட சொன்னா எனக்கு ரொம்ப வித்யாசமா இருக்கும் ஆனால் இப்போ அது ரொம்ப அழகா தெரியுது. வித்யாசமா தெரியுறத எல்லாம் அழகா மாத்தி ரசிக்க வைக்கிறதுதான் காதல் போல. நீ என்னோட வாழ்க்கைல வந்ததுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் எனக்குள்ள இருந்த கஷ்டம் எல்லாமே இப்போ சரியா போச்சு. இனி நான் எதுக்கும் தேவை இல்லாம ரொம்ப கவலை பட மாட்டேன். இனி நம்ம வாழ்க்கையில எப்போவும் சந்தோசம் மட்டும்தான் இந்த சந்தோசம் நம்ம வாழ்க்கையில வர முக்கிய காரணம் நீதான் அதனால நான் உனக்கு நன்றி சொல்லணும்ன்னு நினைக்கிறேன் என்று சூர்யா சொல்ல இவ்வளவு நேரம் புன்னகை செய்து கொண்டிருந்த தேவா முகத்தில் இருந்த புன்னகை இப்போது காணாமல் போனது. இனி எந்த பிரச்சனையும் இல்லை அவள் நினைத்து கொண்டிருக்கும் போது அவன் இப்படி நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று சொன்ன உடன் தேவாக்கு இன்னும் அந்த இடைவெளி தங்களுக்குள் இருக்கிறதோ என்று தோன்றியது.
தேவா வார்த்தையால நன்றி சொன்னா நல்லா இருக்காது அதனால என்று சூர்யா நிறுத்த அவனை என்ன என்பது போல பார்த்தாள் தேவா.
இங்க பாரு நான் இப்போ உனக்கு நன்றி சொல்ற இந்த டெக்னிக் கடன் மாதிரி இதை எப்போவும் நீ மட்டும் வச்சிக்க கூடாது என்கிட்ட எப்படியும் திரும்ப குடுத்துறணும் என்று சொன்னான் சூர்யா தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.
குட் நல்ல பிள்ளை என்று சொன்ன சூர்யா இப்படித்தான் நமக்குள்ள நன்றி சொல்லிக்கணும் ஓகே என்று சொன்னவன் தேவாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
தேவா கண்ணை மூடி அந்த முத்தத்தை ஏற்று கொண்டாள்.அவள் மூக்கின் நுனியில் முத்தம் கொடுத்தவன் அவள் இதழை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று அதற்கும் முத்தம் கொடுத்தான்.தேவா கண்ணை கூட திறக்கவில்லை அவளுக்கு வெட்கம் வந்தது அந்த வெட்கத்தை ரசித்தவன் அவளை பார்த்து புன்னகை செய்தான்.
தேவா கண்ணை திறந்து பார்த்தவள் அவனை பார்த்து புன்னகை செய்தான்.
ம்ம்ம் இந்த மாதிரி வெக்கபட்டு நீ சிரிச்சிட்டே இருந்தா நான் அவ்ளோதான். இனி ஸ்டேஷன்ல சத்தமா பேச கூட எனக்கு மனசு வராது போலயே. என்ன நீ ரொம்ப மாத்தி விட்ருவ போல.இப்போவே மாத்திட்டதான் இன்னும் அதிகமா மாத்திடுவ போல. நான் ரொம்ப மாறுனா உலகம் வேற தாங்காது என்று சூர்யா சொல்ல தேவா அதற்கும் புன்னகை செய்தாள்.
ஹெலோ மேடம் இந்த மாதிரி சிரிச்சு சிரிச்சு என்ன கவுக்குறது எல்லாம் சரிதான் ஆனால் இப்போ இந்த சிரிப்பு வேலைக்கு ஆகாது. நன்றி நான் சொன்ன மாதிரி இப்போ எனக்கு நீ சொல்லணும் நான் கொடுத்தது எல்லாமே கடனாதான் கொடுத்தேன் அதனால இப்போ நீ எனக்கு நான் கொடுத்தத திருப்பி தரணும் வட்டியோட தந்தாலும் ஓகே இல்லை முதல் மட்டும் வந்தாலும் ஓகே ஆனா கடன் வந்தேதான் ஆகணும் இதுக்கு பேர்தான் நன்றிக்கடன் (me : ஓஹோ எங்களுக்கு தெரியாது 🤷♀️)
என்று சூர்யா சொல்ல தேவா அவனை பார்த்து ஆச்சர்யத்தில் புன்னகை செய்தாள் நேற்றுவரை அவள் பார்த்த சூர்யாக்கும் இப்போது இருக்கும் சூர்யாக்கும் அதிகம் வித்யாசம் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
ஹெலோ இன்னும் எவ்ளோ நேரம் என்ன பாத்துட்டே இருக்க போற பாக்குற நேரம் அதிகம் ஆனா வட்டி இன்னும் அதிகம் ஆகும் அப்படி ஒருவேளை நீ கடன் தர நினைக்கலன்னா வன்முறை கையில எடுக்க வேண்டியது வரும் அதனால குடுத்த முத்தம் எல்லாம் திருப்பி வட்டியும் முதலுமா எனக்கு இப்போ வேணும் என்று சூர்யா சொல்ல அவனை பார்த்து புன்னகை செய்த தேவா அவனை கண்ணை மூடும்படி சைகை செய்தாள்.
கண்ண மூடணுமா அது எதுக்கு என்று கேட்டான் சூர்யா.
தேவா மீண்டும் கண்ணை மூடும்படி சைகை செய்தாள்
ஓ உனக்கு வெக்கமா இருக்கா என்று சூர்யா கேட்க தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
ம்ம்ம் உன்னோட வெக்கத்துக்கு அர்த்தமே இல்லையே முத்தம்தான கேட்டேன் சரி என்னவோ எனக்கு முத்தம் கிடைச்சா சந்தோசம்தான் என்று சொன்ன சூர்யா கண்களை மூட தேவா அவனை பார்த்தபடி அப்டியே இருந்தாள்.
கண்ணை திறந்து பார்த்தான் சூர்யா அவள் சிரித்து கொண்டிருந்தாள்.
ஒய் உன்ன நான் என்ன பண்ண சொன்ன நீ என்ன பண்ணிட்டு இருக்க. ஏதோ பாவம்ன்னு பாத்தா நீ என்கிட்டயே விளையாடுறியா நானே வட்டியும் முதலுமா வசூல் பண்றேன் பாரு என்று சொன்னவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான்.தேவா அவனை தடுக்கவில்லை அவர்கள் இருவரும் தங்கள் நாளை இன்னும் மகிழ்ச்சியாக தொடங்கினார்கள்.
ஆனால் பிரசாத் வீட்டில் அந்த மகிழ்ச்சி என்பது இல்லை. அமிர்தா கோபத்தில் ரூமில் உட்கார்ந்து இருந்தாள் . பிரசாத் கூட கோபத்தில்தான் இருந்தார்கள். அனுவை ஏற்கனவே அவளுடைய அம்மா அப்பா ரகு வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டி அவளை அழைத்து கொண்டு ரயில்வே ஸ்டேஷன் செல்ல தயார் ஆகி கொண்டிருந்தார்கள் விட்டார்கள். அமிர்தாவும் பிரசாத்தும் எவ்வளவோ தூரம் அனுவை அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அழைத்து சென்று விட்டார்கள். பெற்றவர்களுக்கு தொந்தரவு தர வேண்டாம் என்று நினைத்து அனுவும் தன்னுடைய கணவன் வீட்டுக்கு செல்வதற்கு ஒப்பு கொண்டாள்.
அமிர்தாவால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.
அம்மு எனக்கு மனசு சரி இல்லை நான் கடைக்கு போறேன் என்று சொன்னான் பிரசாத்.
கடைக்கு போய் அங்க எல்லாம் சரியா இருக்குதான்னு பாருங்க வீட்ட பத்தி கொஞ்சம் கூட யோசிக்க வேண்டாம் என்ன ஆகிட போகுது வீடுதானங்கிற எண்ணம் அப்டித்தான என்று கோபத்துடன் கேட்டாள் அமிர்தா.
அம்மு என்ன அம்மு நீ. நீ கூட என்ன புரிஞ்சிக்காம பேசுற நான் மட்டும் என்ன அனுவ அங்க அனுப்பி வைக்க சம்மதமா சொன்ன நானும்தான அவளை கூட்டிட்டு போக வேண்டாம்ன்னு சொன்ன ஆனால் அம்மா என் பொண்ணு வாழ்க்கை நான் பாத்துக்கிறேன்னு சொல்றப்போ அதுக்கு மேல நான் என்ன பண்றது.
என்று வேதனையுடன் கேட்டான் பிரசாத்
நம்ம தப்பு பண்ணுறோம் பிரசாத் என்ன இருந்தாலும் நம்ம அனுவை போக விடகூடாது . இப்போ அவளை அங்க கூட்டிட்டு போய் கெஞ்சி கூத்தாடி வாழ வைச்சா அவளுக்கு அங்க என்ன மதிப்பு இருக்கும். அம்மா அப்பா அண்ணன் அண்ணின்னு இத்தனை பேர் இருந்தும் ஏன்டா அவளை இப்படி போக இடமே இல்லாதவ மாதிரி அந்த நரகத்தில தள்ளி விடணும் என்று கேட்டாள் அமிர்தா.
அம்மு நீ கவலை படாத. அம்மா அப்பா போறாங்கங்கல்ல நிச்சயம் அவங்க பாத்துப்பாங்க என்று சொன்னான் பிரசாத்.
அம்மா அப்பா பாத்துப்பாங்க இந்த ஒரு வார்த்தைதான் எல்லாத்துக்கும் காரணம்
காசு வேணும் நீ வேண்டாம்ன்னு துரத்தி விட்டவன்கிட்ட நம்ம பொண்ண விட போறாங்க இவங்க என்ன பாத்துப்பாங்க . சின்ன வயசுல இருந்தே ஒரு பொருள் ஒரு பொண்ணு ஆசை பட்டா உனக்கு வர்றவன் இதெல்லாம் வாங்கி தருவான். இல்லை வளர்ந்து இப்படி ஆகணும்ன்னு கனவு கண்டா போற வீட்ல இதுக்கெல்லாம் ஒத்துக்குவாங்களான்னு சொல்லிடுவாங்க. இப்படி தொட்டதுக்கு எல்லாம் இன்னொருத்தர சார்ந்துதான் வாழனும்ன்னு பிறந்ததுல இருந்தே சொல்லி வளக்குற அம்மா அப்பா எதை பாத்துப்பாங்கன்னு நீங்க நினைக்கிறிங்க பிரசாத். ம்ம்ம் ஓ இந்த வேலையே இல்லாத 4 பேர் 4 விதமா பேசுவாங்களே அவங்க வாயில இருந்து ஒரு வார்த்தை தப்பா வராமல் பாத்துப்பாங்களா. அந்த யாருன்னே தெரியாத நாலு பேர் கிட்ட நல்ல பேர் வாங்க மரியாதை இல்லாம நரகத்துல வாழுற மாதிரி ஒரு வாழ்க்கை நம்ம பொண்ணு வாழணுமா. இங்க பாருங்க பிரசாத் இப்போ காசு வேணும்னு கேட்டேவர் நாளைக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவாரு அதை நல்லா புரிஞ்சிக்கோ. அவங்க அம்மா அப்பான்னா நம்ம அண்ணன் அண்ணி. உன் ரத்தம்டா அவ அவளை எப்படி நீ போக விடலாம். கூட நீ போ பாப்பாவை வேணா கூட்டிட்டு வா. இதே மாதிரி ஒரு நிலைமை நாளைக்கு நம்ம பொண்ணுக்கு வந்தா அப்போவும் அத்தை மாமா பெரியவங்க எங்களுக்கு தெரியும்ன்னு சொல்றத கேட்டுட்டு இப்படித்தான் நிப்பியா. இங்க பாரு இப்போ நான் போய் பேசுறதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் அவங்க வருத்த பாடுவாங்க என்று அமிர்தா சொல்ல பிரசாத் எழுந்து வெளியே வந்தான்.
அப்போதுதான் அனு மற்றும் அவள் அம்மா அப்பா கிளம்பி கொண்டிருந்தார்கள்.
அப்பா நானும் வர்றேன் என்று சொன்னான் பிரசாத்.
நீ எதுக்குடா நீ இங்க இரு அமிர்தா எப்படி தனியா இருப்பா என்று கேட்டார் பிரசாத் அப்பா
அதெல்லாம் நான் இருப்பேன் மாமா என்றாள் அமிர்தா.
இல்லை அதெல்லாம் வேண்டாம் நீ இங்க இரு என்றார் பிரசாத் அப்பா
இல்லை நான் வருவேன். என்று சொன்னான் பிரசாத்
அதான் அம்மா அப்பா நாங்க போறோமே அது போதும்டா என்றார் பிரசாத்தின் தாய்
இல்லை அனுக்கு அம்மா அப்பா மட்டும்தான்னு மாப்பிள்ளை வீட்ல நினைச்சிட்டு இருக்காங்க போல அவளுக்கு அண்ணன் இருக்கான்னு அவங்களுக்கு தெரியணும் அம்மா நானும் வர்றேன் .
அனு நீ வா அனு. இண்ணைக்கு அங்க போய் என்ன பேசணுமோ பேசு நான் இருக்கேன். உன் மனசுல உள்ளத பேசு என்ன ஆனாலும் பாத்துக்கலாம் உன் குழந்தை உன்கிட்டதான் இருக்கும் நீ தைரியமா இரு நான் இருக்கேன் என்று பிரசாத் சொல்ல அவ்வளவு நேரம் மனதில் வேதனையுடன் இருந்த அனுக்கு அப்போதுதான் கொஞ்சம் நிம்மதியானது. அவனுடன் சேர்ந்து தைரியத்துடன் வெளியே வந்தாள் அனு அப்போதுதான் அமிர்தாக்கு நிம்மதியானது. ஆனால் பெற்றோர் இருவருக்கும் பதட்டம் ஆனது.
Me :குடும்பம் அப்படிங்கிறது கணவன் கொடுமை படுத்துறான்னு பொண்ணு வீட்டுக்கு வந்தா உண்மை தெரிஞ்சு சப்போர்ட் பண்ணனும் சமூதாயத்துக்கு பயந்து நரகத்துக்கு தள்ளி விட கூடாது. பையனோ பொண்ணோ சொந்த கால்ல நிக்கணும் இதான் கருத்து மக்களே
அடுத்த பதிவில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது Abirami G. N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro