
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -3
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூர்யா அமைதியாக கிட்சனில் நின்று கொண்டிருந்தான். அவன் பாட்டுக்கு பாலை அடுப்பில் வைத்துவிட்டு எங்கோ பார்த்து கொண்டு இருந்தான். அவனுக்கே தெரியாமல் அவன் மனம் அவளை நினைத்தது.(me:நினைக்க வச்சது நான்தான்🤣)
சில மாதங்களுக்கு முன்பு சூர்யா அவன் உடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன் திருமணத்துக்காக சென்றிருந்தான். பிரசாத் மனைவிக்கு அப்போதுதான் இரண்டாவது குழந்தை பிறந்திருந்ததால் அவனால் வர முடியாத சூழ்நிலை எனவே சூர்யா மட்டும் கன்னியாகுமரி வந்திருந்தான் .சூர்யாக்கும் கன்னியாகுமாரியில் நாகர்கோவில் பக்கம்தான் சொந்த ஊர் என்றாலும் அவன் அவ்வளவாக ஊர்பக்கம் வர மாட்டான். சூர்யா சிறு வயதில் இருந்தே எதை பார்த்தும் அதிகம் பயப்பட மாட்டான் ஆனால் அவன் பயப்படும் ஒரு விஷயம் இருக்கிறது அது அவன் கோபம்தான்.அவன் எல்லாவற்றிற்கும் கோபம் கொள்பவன் அல்ல ஆனால் தன்னுடைய தவறு இல்லாத தன்னுடைய அமம்மாவின் செயலுக்கு தன்னை யார் கேள்வி கேட்டாலும் அவனுக்கு பிடிக்காது அதனால் அவன் அந்த மாதிரி இடத்தில் நிற்க கூட விரும்ப மாட்டான் .மொத்தத்தில் துஷ்டனை கண்டால் தூர விலகு என்னும் எண்ணத்தில் அவன் வாழ்ந்து கொண்டு இருந்தான் .இப்போது கல்யாணத்துக்கு வந்தது கூட வேறு வழி இல்லை என்பதால் தான்
இந்த கல்யாணத்துக்கு கூட வந்திருந்தான்.அவன் என்னதான் பிரச்சனை விட்டு தள்ளி இருக்க நினைத்தாலும் அவனை தேடி பிரச்சனை வந்தது அவனுடைய அம்மா உருவத்தில் .அவன் ஊர் பக்கம் வராமல் இருக்க காரணமே அவ்னுஇடைய அம்மா பற்றி தன்னிடம் யாராவது பேசுவார்கள் என்றுதான் ஆனால் இப்போது அவன் அம்மா இந்த கல்யாண வீட்டுக்கே வந்திருந்தார் அவரை பார்க்கவே அவ்வளவு மகிழ்சியாக தெரிந்தார்.அதை பார்த்த சூர்யாக்குதான் அவ்வளவு வேதனையாக இருந்தது .அவனுக்கு எப்படி தங்களை விட்டு சென்று விட்டு தங்கள் அம்மாவால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் அவன் அவரிடம் சென்று பேசவோ இல்லை அவரை அங்கேயே நின்று தொடர்ந்து பார்க்கவோ விருப்பம் கொள்ளாவில்லை .அவன் அருகில் இருந்த நண்பனிடம் சொல்லிவிட்டு நண்பன் பைக் எடுத்துவிட்டு சென்று விட்டான்.அவனுக்கு அவ்வளவு கோபமாக வந்ததது அவன் மனம் போன போக்கில் சென்று கொண்டு இருந்தான் அவன் அம்மாவால் அவன் பட்ட அவமானங்கள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து போக கோபம் அதிகம் ஆனது கோபம் அதிகம் ஆக ஆக அவன் பைக்கில் செல்லும் வேகம் அதிகம் ஆனது ஒருகட்டத்தில் இவ்வளவு கோபத்தில் வேகமாக வண்டி ஓட்ட வேண்டாம் என்று முடிவு செய்தான் .அவனுக்கு தனக்கு ஏதேனும் ஆபத்து வந்தாலும் பிரச்சனை இல்லை தான் வேகமாக சென்று யாரையாவது இடித்து அவர்களுக்கு ஆதி பட்டால் என்ன செய்வது என்று பைக்கை ஒரு இடத்தில் நிறுத்தியவன் அப்படியே குளத்துக்கு அருகில் இருந்த கல்லில் அமர்ந்து விட்டான்.அங்கே வீடுகள் எல்லாம் இல்லை .ஆனால் அருகில் ஒரு கோவில் இருந்தது .அதனால் மக்கள் நடமாட்டம் உள்ள இடம்தான் .அவன் அந்த கல்லில் தலையை குனிந்து அமர்ந்து இருக்க கொஞ்சம் நேரம் கழித்து அவன் தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்ந்தான் .எனவே சட்டென்று தலையை நிமிர்ந்து பார்த்தான் .அவன் சாதாரணமாக பார்த்தாலே கொஞ்சம் முறைப்பது போல இருக்கும் .இப்போது கோபத்தில் வேறு இருந்ததால் கொலை வெறியில் பார்ப்பது போல இருந்தது .அவனை அப்படி பார்த்த தேவாக்கு பயம்தான் வந்தது .யாரை பார்த்தாலும் பயப்படும் தேவா இப்படி அவன் முறைப்பதை பார்த்து இன்னும் பயந்தாள்.அவள் பயம் அவள் கண்ணில் தெரிந்தது .
தேவா அந்த குளத்தில் தான் கொண்டு வந்த துணி எல்லாவற்றையும் துவைத்து விட்டு வேஷ்டி வைத்து இடைகட்டி [ படத்துல எல்லாம் பாதுருப்பிங்க குளிக்க போறப்போ வேஷ்டி இல்லை பாவாடை வைச்சுதான் உடுத்து குளிப்பாங்க அதுக்குதான் இந்த பேர் சொல்லுவோம் ] குளித்துவிட்டு துப்பட்டாவை இடையில் கட்டி கொண்டு இன்னொரு துப்பட்டா எடுத்து முழுவதும் போர்த்தி கொண்டு கோவில் அருகில் இருப்பதால் கோவிலுக்கு சென்றாள். கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது தான் சூர்யா அந்த குளத்துக்கு அருகில் அமர்ந்து இருப்பதை பார்த்தாள் சூர்யா அங்கு அமர்ந்து இருப்பதை பார்த்து அவளுக்கு பயம்தான் வந்தது.ஏன் என்றால் இது பெண்கள் குளிக்கும் கரை இங்கு ஆண்கள் வந்து குளிக்க மாட்டார்கள் ஆண் குளந்தைகள் கூட பெரும்பாலும் ஆண்கள் கரையில் தான் குளிப்பார்கள் அப்படி இருக்கும்போது இந்த ஊரில் முன்ன பின்ன பார்த்து அறியாத ஒருவன் இப்படி பூதம் போல அமர்ந்து இருப்பதை பார்த்துப் அவளுக்கு பயம் வந்தது இயற்கை தான் .அவளுக்கு துணி எடுக்க வேண்டும் ஆனால் அவன் அருகில் செல்ல பயந்து அப்படியே நின்று கொண்டு இருந்தாள்.
தனக்கு எதிரே பயந்து போன பூனைக்குட்டி போல நிற்கும் தேவாவை பார்த்து குழப்பம் ஆனான் சூர்யா.அவனுக்கு தெரியவில்லை அவன் கோபமான முகம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று .அவள் அவன் பார்ப்பதை பார்த்து தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள்.
எதுக்கு இப்டி என்ன பார்த்து பயந்து நிக்குறிங்க என்று அவன் ஏதோ குற்றவாளியை விசாரிப்பது
கேட்டான் .அவனுக்கு குற்றவாளிகளுடன் பேசி அதே மாதிரிதான் பேச வந்தது மற்றபடி அவன் தேவா மீது தன்னுடைய கோபத்தை காட்டவில்லை .அவனை பொறுத்தவரையில் அவன் மிகவும் சாதாரணமாக பேசினான் ஆனால் அவன் சொன்னதை கேட்ட தேவாக்கு ஏதோ ஒரு பூதத்திடம் வந்து மாட்டி கொண்டது போல இருந்தது.தன்னுடைய துணிகள் எல்லாம் எடுக்க வேண்டும் என்பதால் அவள் தன்னுடைய துணியை கை காட்டினாள்.அவள் கை நடுங்கியது .அவள் அவ்வளவு வினோதமாக நடந்து கொள்வதை பார்த்த சூர்யாவின் புருவங்கள் முடிச்சிட்டது .
அவனுக்கு அவள் பயப்படுகிறாள் என்பது புரிந்தது ஆனால் தன்னால் தான் அவள் பயப்படுகிறாள் என்று புரியவில்லை.ஒருவேளை அவளை யாரேனும் பயமுறுத்தும் வகையில் இங்கு இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்தான் ஆனால் அங்கு அப்படி யாரும் இல்ல.
எதுக்கு பயப்படுறீங்க என்று கேட்டான் சூர்யா,.உன்னை பார்த்துதான் பயப்படுகிறேன் என்று சொல்ல
முடியாமல் தன்னுடைய துணியை மீண்டும் காண்பித்தாள்.அவள் துணியை பார்த்தவன் அந்த கல்லில் இருந்து எழுந்து அவன் பைக் அருகில் சென்றான்.
தேவா அவன் அந்த இடத்தை விட்டு நகரந்ததும் ஓர கண்ணால் அவனை பார்த்தபடி அவள் துணியை எடுக்க சென்றாள்.சூர்யா அவள் தன்னை பார்த்து தான் பயப்படுகிறாள் என்று புரிந்து கொண்டான்.அவனுக்கு ஏதோ சம்மந்தமே இல்லாமல் அவள் தன்னை பார்த்து பயப்படுது போல இருந்தது .அவன் அவளைதான் பார்த்து கொண்டிருந்தான்.அவள் துவைத்த துணி எல்லவற்றையும் எடுத்து கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக செல்ல அப்போது அவள்செருப்பு வேறு அறுந்து அவளை தடுமாற வைத்தது .சூர்யா அவனையும் அறியாமல் பாத்து பாத்து என்று சொன்னான்.ஆனால் பயத்தில் இருந்த தேவா அறுந்த செருப்பை இழுத்து கொண்டே திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டாள் அவனுக்கு என்ன சொல்ல என்று கூட தெரியவில்லை அவனுக்கு அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது .அப்போது கல்யாண மண்டபத்தில் இருந்து நண்பர்கள் அழைக்க அங்கே வருவதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் .
கொஞ்சம்நேரத்துக்கு முன்பு அவன் என்ன வேதனையில் இருந்தானோ அது இல்லாமல் போனது .
----
சம்மந்தமே இல்லாமல் இத்தனை மாதம் கழித்து அவளை பற்றி யோசித்தவன் கொஞ்சம் நேரத்தில் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான் .சாப்பிட்டுவிட்டு கிச்சன் கிளீன் செய்தவன் பாலில் சக்கரை எல்லாம் போட்டு அதனை தன்னுடைய தம்பிக்கு எடுத்து சென்று கொடுத்தான் .அப்பா தூங்கி கொண்டு இருந்தார்
அடடா வழக்கமா நான்தான் எடுத்து குடிப்பேன் இன்னைக்கு என்ன சர் கொண்டு வந்திருக்கிங்க என்று கேட்டான் கிருஷ்ணா
உனக்கு எடுத்து குடிக்க அவ்ளோ ஆசைன்னா நான் பால் கொண்டு போய் கிச்சன்ல வைக்கிறேன் நீயே எடுத்து குடி என்று சொன்னான் சூர்யா .
எதுக்கு கோப படுற நான் குடிக்கிறேன் குடு என்று சொன்ன கிருஷ்ணா பாலை ஒரு மடக்கு குடித்தான் அவன் முகம் மாறியது அதனை சூர்யா கவனிகத்தான் செய்தான் .
என்ன ஆச்சு பால் அவ்ளோ சூடு ஒண்ணும் இல்லையே என்று கேட்டான் சூர்யா
இல்ல நீ எப்போல இருந்து பால்ல சக்கரை போட ஆரம்பிச்ச அதுவும் இப்டி பாயசம்ல போடுற மாதிரி போட்டுருக்கஎன்று சாதாரணமாக கேட்டான் கிருஷ்ணா .
ம்ம்ம் ஏதோ பஃஆவம்பனு சக்கரை போட்டேன் .என்கிட்ட ஓவரா கேள்வி கேக்காம பால் குடிச்சிட்டு தூங்கு எனக்கு தூக்கம் வருது. அப்பா தூங்கிட்டு இருக்காரு தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ணாத என்று சொன்னவன் அந்த ரூமை விட்டு சென்று விட்டான் .
ம்ம்ம் என்ன போலீஸ் சரி இல்லையே .இதுக்கு மேல கேட்டா நமக்குதான் ஆபத்து பால் குடிச்சிட்டு தூங்குவோம் என்று தன்னுடைய மனதில் நினைத்து கொண்டான் கிருஷ்ணா .
இங்கே பிரஷாத்தை வைத்து செய்து கொண்டிருந்தாள் அவன் மனைவி அமிர்தா.
எப்படி எப்படி நீங்க எடுத்து சொல்றதை கேட்ட உடனே உங்க பிரண்ட் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா .எந்த நம்பிக்கைல நீங்க இந்த மாதிரி விபரீத முயற்சி எல்லாம் பண்ணுறீங்க என்று கேட்டாள் அமிர்தா
அதுக்குன்னு அவனை அப்படியே விட முடியுமா இப்போ அவன் இந்த மாதிரி இருக்குறது ஓகே. ஆன இப்டி இருக்குறது எது வரைக்கும் நல்லா இருக்கும்.அதுவும் இல்லாம நான் மட்டும் ஒரு ராட்சசி கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்ட படறேன் .அவகின் வாழ்க்கைளையும் அப்படி ஒரு கஷ்டம் வர வைக்கணும்ல அதான் என்று சொன்னான் பிரசாத் அமிர்தா அவனை முறைத்தாள் .
ஓ உங்களுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கா .இருக்கும் இருக்கும் ஏன் இருக்காது .உங்களை கல்யாணம் பண்ண எவ்ளோ கஷ்ட பட்டு அம்மா அப்பாவை சமாளிச்சு இவ்ளோ வருஷம் உங்களை சமாளிச்சு ரெண்டு அழகான குழந்தை வரைக்கும் வந்த பிறகு உங்களுக்கு நான் ராட்சசி மாதிரிதான் தெரிவேன். அப்புறம் இந்த ராட்சசி உங்களுக்கு சோறு போட மாட்டா.நான் ரொம்பகோபமா இருக்கேன் .என்று உச்சகட்ட கடுப்பில் சொல்வது போல் சொல்ல முயற்சி செய்தாள் அமிர்தா.
அட நான் சும்மா சொன்ன அம்மு .நீ என்னோட அன்பு ராட்சசி. அதோட எனக்கு நீ சோறு போடலன்னா என்ன எனக்குத்தான் சமைக்க தெரியுமே என்று லேசாக புன்னகை செய்தபடி சொன்னான் பிரசாத்
ம்ம்ம் நீங்க ராட்சசின்னு சும்மாதான் சொன்னிங்கனு எனக்கு தெரியும் .ஆனா இப்போ நான் சோறு போடலன்னாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லன்னு சொன்னிங்கல்ல அதனால இனி தினமும் நீங்க சமைச்சு போடுங்க அத்தை மாமா நாளைக்கு அனு வீட்டுல இருந்து வந்ததும் நான் நீங்க சமைக்க ஆசைபடுறிங்கன்னு சொல்லிடறேன் என்று சொன்னாள் .
ம்ம்ம் என் குடும்பத்துக்கு சமைச்சு போட எனக்கு சந்தோசம் தான் .என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னான் பிரசாத் .
இங்க பாருங்க இப்போ எனக்கு சண்ட போட ஆசையா இருக்கு நான் ஏதாவது சொன்னா முடியாதுன்னு சொல்லுங்க நான் சண்டை போடணும்னு நினைக்கிறேன்.எனக்கு போர் அடிக்குது சண்டை போடுவோம் .என்று சண்டைக்கு அழைப்பு விடு அமிர்தா
நீ சொன்ன ,மாதிரி நான் இப்போ உன்னமறுத்து பேசுறேன் .என்னால உன்கூட சண்டை போட முடியாது என்று சொன்னான் பிரசாத்
இல்ல சண்டை போட்டே ஆகணும் என்று குழந்தை போல் சொன்னாள் அமிர்தா அப்போது குல்பி
ஐஸ் வரும் சத்தம் கேட்க அவளை பார்த்து சிரித்தான் பிரசாத்
வேண்டாம் எனக்கு குல்பி வாங்கிட்டு வந்து சண்டை போடாம தப்பிக்கலாம்னு பாக்காதிங்க என்று சொன்னாள் அமிர்தா.
இப்போவும் நீ சொன்னதுக்கு நான் மறுத்துதான் பேசுறேன் .நான் இப்போ உனக்கு குல்பீ வாங்கிடு வந்து தர போறேன் என்று சொன்ன பிரசாத் .
இது இவர்களுக்குள் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான் .ஏதாவது ஒரு வகையில் சம்மந்தமே இல்லாமல் சண்டை போடுவார்கள் பெரும்பாலும் அது மிகவும் சாதரணமாகக் முடிந்து விடும்.சில நேரத்தில் விளையாட்டு வினை ஆகும்படி. சண்டை. பெரிதாக மாறி விடும் ஆனால் அவர்கள் சண்டை
சீக்கிரம் முடிந்து விடும் அவர்கள் சண்டை முடிவு பெற பெரும்பாலும் உதவுவது இந்த குல்பிதான்.அமிர்தா எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் இந்த குல்பி போதும் அவள் கோபத்தை குறைக்க ,பிரசாத் கோபம் எல்லாம் அமிர்தாவின் ஒரு புன்னகையில் மறைந்து விடும்.
இதோ இப்போது கூட அவர்கள் இருவரும் ஏதோ சண்டை போட முயற்சி செய்கிறோம் என்று அந்த முயற்சி செய்துவிட்டு அது தோல்வியில் முடிந்ததால் இப்போது மகிழ்ச்சியாக உட்கார்ந்து குல்பி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
என்னங்க நம்ம கல்யாணம் ஆன புதுசுல எவ்ளோ சண்டை போட்டோம் இப்போ எல்லாம் நம்ம ரொம்ப மாறிட்டோம்ல .இப்போ எல்லாம் சண்டை போட ட்ரை பண்ணா கூட வர மாட்டேங்குது என்று ஆச்சர்யத்துடன் சொன்னாள் அமிர்தா .
ம்ம்ம் ஆமா கல்யாணம் ஆன புதுசுல நம்ம சண்டை போட்டதை பார்த்த யாரா இருந்தாலும் நம்ம பிரிஞ்சிருவோம்னு நினைச்சிருப்பாங்க .நல்லவேளை பாப்பா வந்துட்டா .அப்புறம்தான் மாறுனோம்ல என்று சொன்னான் பிரசாதத்.ஆமா என்பது போல தலை அசைத்தாள் அமிரதா.
நம்ம வாழ்க்கை கல்யாணம் குழந்தைன்னு வந்தப்போ மாறிச்சு அந்த அழகான மாற்றம்தான் நான் சூர்யா வாழ்க்கையிலயம் வர்தனும்னு ஆசை பப்பிடறேன். என்று சொன்னான் பிரசாத்
ஆமா நீங்க சொல்றதும் சரிதான் .ஆனா உங்க பிரண்ட் அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாரு .எனக்கு என்னவோ அவருக்கு ஒரு கட்டாயம் இருந்தாதான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாருன்னு தோணுது.மத்தபடி அவர் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணனுமன்னா ரொம்ப கஷ்டம் என்று சொன்னாள் அமிர்தா.
நீ சொல்றதும் சரிதான் .அவனுக்காக ஒரு பொண்ணு நிச்சயம்
காத்துட்டு இருப்பா.அந்த பொண்ணு கொஞ்சம் சீக்கிரம் அவன் வாழ்க்கைல வந்தா நல்லா இருக்கும் .அவ எங்க இருகாளோ என்று மேலே பார்த்து சொன்னான் பிரசாத்
எங்க இருந்தாலும் நம்ம ஒரு நாள் பாக்க தானே போறோம் சரி எனக்கு தூக்கம் வருது வாங்க போய் தூக்குவோம் என்று எழுந்தாள் அமிர்தா
என்னது தூங்க போறியா என்று கேட்டான் பிரசாத்
ம்ம்ம் ஆமா. வேற என்ன பண்ணணும் என்று அவனை பார்த்து புரிந்தும் புரியாத மாதிரி கேட்டாள் அமிர்தா
என்ன கொஞ்சம் கவனிங்க அம்மு என்று சொல்லிவிட்டு அவள் அருகே நெருங்கி வந்தான் .அமிர்தா அவனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். அவன் அருகில் வந்தவன் அவளை தனக்கு அருகில் இழுக்க அவன் அருகில் நெருங்கி வந்தவள் என்ன என்று கண்ணால் கேட்டாள்.
கொஞ்சம் கவனிங்க அம்மு என்று சொன்னவன் அவளுக்கு முத்தம் கொடுக்க நெருங்கி வர சரியாக குழந்தை அழும் சத்தம் கேட்டது .அமிர்தா அவனை பார்த்து சிரித்தாள் .
அச்சச்சோ என்னங்க உங்க பையன் இப்போ என்ன கவனிக்க கூப்பிடுறான்னே என்று சொன்னவள் குழந்தையை பார்க்க சென்றாள்.அவனும் அவளுடன் சென்று குழந்தையை சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்
என்ன ஆச்சு பசிக்குதா அவனுக்கு என்று கேட்டான் பிரசாத்
இல்லைங்க தூக்கத்துலதான் இருக்கான் .இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கி வைச்சு தட்டி கொடுத்தா தூங்குவான் என்று சொன்னவளிடம் இருந்து குழந்தையை வாங்கினான் பிரசாத் .
நான் அகரன தூங்க வைக்கிறேன் .நீ சஞ்சனா கூட படுத்து தூங்கு .என்று சொன்னவன் குழந்தையை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்தான் .அமிர்தா குழந்தை அருகில் படுத்து உறங்கி விட்டாள். பிரசாத் ஒருமணிநேரம் குழந்தையை தூக்கி கொண்டு சுற்றியவன் குழந்தை உறங்க வைத்து விட்டு தன்னுடைய மகள் சஞ்சனா மற்றும் அமிர்தாக்கு முத்தம் கொடுத்துவிட்டு படுத்து கொண்டான்.
-------
அடுத்த நாள் பூஜா மற்றும் தேவா இருவரும் திங்கள் சந்தைக்கு சென்று சில பொருள்கள் வாங்கி வருவதற்காக கிளம்பினார்கள் .பூஜா இங்கு வரும் போது இப்படிதான் ஏதாவது காரணம் சொல்லி அவளை வெளியே அழைத்து செல்வாள் .இன்று அவள் அடுத்து தைக்க போகும் துணிக்காக சில பொருள்கள் வாங்க வேண்டியது இருந்ததால் புவனா அனுமதி கொடுத்தார். போகிற வழியில் இன்னொரு வீட்டில் துணி கொடுத்து விட்டு செல்லலாம் என்று தேவா மற்றும் பூஜா இருவரும் அங்கு சென்று துணி கொடுக்க போக அவர்கள் இருவருக்கும் சர்பத் மற்றும் வாழைப்பழம் [me; கன்னியாகுமாரி பக்கம் எந்த வீட்டுக்கு போனாலும் உங்களுக்கு சர்பத் கிடைக்கிதோ இல்லையோ கண்டிப்பா வாழைப்பழம் கிடைக்கும் அனுபவத்தில் சொல்றேன்]கொடுத்து உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்தாள் அந்த வீட்டில் இருந்த வள்ளி
மக்கா நான் அம்மைகிட்ட பைசா கொடுத்தேன் எந்து .ட்ரெஸ் நல்ல அழகா தச்சிருக்க. அப்புறம் ஓய் மெட்ராஸ் என்ன எப்படி இருக்கா என்று கேட்டார் வள்ளி அவருடன் பூஜா பேச ஆரம்பிக்க அவள் போன் அடித்தது. அவள் தோழி அழைத்திருந்தாள் உள்ளே தெளிவாக கேட்காததால் எழுந்து வெளியே வந்தாள் ஹெலோ ஹெலோ தேஜு ஹெலோ என்று அவள் தோழிக்கு தான் பேசுவது கேட்கிறதா என்று கேட்டு கொண்டே வந்தவள் எதிரில் வந்தவனை கவனிக்காமல் இடித்து விட யாரை இடித்தோம் என்று கூட பார்க்காமல் சாரி என்று சொல்லிவிட்டு கடந்து சென்றாள் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கல்யாண பத்திரிகை கொண்டு உள்ளே சென்றான் அவன்.
சில நேரத்தில் எதேச்சையாக சந்திக்கும் மனிதர்கள் தான் எதார்த்த உலகில் உண்மையான உறவாகி போகிறார்கள்(me: கருத்து மக்களே💐)
அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை விடை பெறுவது
அபிராமி G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro