
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -23
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அன்று பாா்த்தது
அந்த பாா்வை வேறடி
இந்த பாா்வை வேறடி
நெஞ்சில் கேட்குதே
உள்ளம் துள்ளி ஓடி நீ
வந்து போன காலடி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது .கிருஷ்ணா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருந்தான்.செல்வம் அவனுடன் கிளம்பி கொண்டிருந்தார்.தேவா கிச்சனில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.சூர்யா இன்னும் எழுந்திருக்கவில்லை அவன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.
தேவா அவன் ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை என்று யோசித்தப்படி காபி எடுத்து கொண்டு வந்து தன்னுடைய மாமனாருக்கு கொடுத்துவிட்டு கிருஷ்ணாக்கு பால் கொடுத்தாள்.
என்னமா அவன் இன்னும் எழுந்திருக்கலையா என்று கேட்டார் செல்வம்.
இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைத்தாள் தேவா.
சரி இண்ணைக்கு லீவ் போடுறேன்னு சொன்னான் அதான் தூங்குறான் போல.முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்புறம் எங்கேயாவது போங்க .அப்டியே உனக்கு ஏதாவது பிடிச்ச மாதிரி இருந்தா வாங்கிக்கோ என்று சொன்னவர் இரண்டாயிரம் ரூபாய் நீட்டினார்.தேவா வேண்டாம் என்பது போல தலை அசைத்தாள்.
இந்தாமா வேண்டாம்னு சொல்லாத உனக்கு ஏதாவது பிடிச்சா வாங்கிக்கோ .என்று அவர் சொல்ல தேவா தயங்கி நின்றாள் .
என்னம்மா நீ ஏன் இந்த மாதிரி தயங்குற.நீ இந்த குடும்பத்து பொண்ணு அதனாலதான் நான் தர்றேன்.நீ என்ன உன் குடும்பமா நினைச்சா இதை வாங்கிக்கோ என்று செல்வம் சொல்ல தேவா அந்த பணத்தை வாங்கி கொண்டாள்.செல்வத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கொஞ்சம் நேரத்தில் அவர்கள் கிளம்பினார்கள்.அப்போது கிருஷ்ணா தேவா அருகில் வந்தான்.
அண்ணி என்னோட அண்ணன் கோவிலுக்கு போய் அப்டியே பொங்கல் புளியோதரை வாங்கி குடுத்துட்டு வேலை இருக்கு அது இருக்குனு சொல்லி பாதியில் போக முயற்சி பண்ணாலும் பண்ணுவான்.அதனால நீங்க என்ன பண்ணுறீங்க கொஞ்சம் தைரியமா அடம்பிடிச்சு இந்த சிங்கார சென்னையை சுத்தி பாத்துட்டு வாங்க என்று சொன்னான் கிருஷ்ணா.அப்போது செல்வம் வந்தார் .
என்னடா அண்ணிக்கிட்ட ரகசியம் பேசிட்டு இருக்க என்று அவர் கேட்க ஒன்றுமில்லை என்று சொன்ன கிருஷ்ணா அவர் உடன் நடக்க ஆரம்பித்தான்.
தேவா அவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தவள் மீண்டும் ரூமுக்கு வந்தாள் .சூர்யாவை பார்த்தாள் சூர்யா இன்னும் உறங்கி கொண்டுதான் இருந்தான்.அவன் அருகில் சென்றவள் அவனை பார்த்தாள் .நன்றாக உறங்கி கொண்டிருந்தான் அவன்.
அவனை எழுப்பலாம் என்று அவள் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்தவள் அவனை பார்த்தாள்.உறங்கி கொண்டிருக்கும்போது அவனை பார்க்க மிகவும் அழகாக இருந்தான் .அவள் கண்ணுக்கு அழகாக தெரிந்தான்.ஆவணி பார்த்து கொண்டிருந்தவள் அவனை எழுப்ப நினைத்தாள்.ஆனால் அவன் குழந்தை போல உறங்குவதை பார்க்கும்போது அவனை அவளுக்கு எழுப்ப தோன்றவில்லை.அவன் தலையை வருடி கொடுக்க வேண்டும் போல இருந்தது .
அவன் முடிக்கு அருகே அவள் கையை கொண்டு செல்ல சூர்யா லேசாக அசைந்தான்.கையை கொண்டு சென்றவள் மீண்டும் பின்னால் கொண்டு வந்தாள்.அவள் கிட்டத்தட்ட 5 நிமிடம் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவளுக்கு கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை அவனை அப்படி அமைதியாக பார்க்க அவனுக்கு பிடித்திருந்தது.
அப்படி என் முகத்துல என்ன தெரியுது என்று கேட்ட படி சூர்யா எழுந்திருக்க தேவா பயந்து எழுந்திருக்க போக அவள் கையை பிடித்து நிறுத்தினான் சூர்யா.
எங்க போற என்று சூர்யா கேட்க தேவா இடப்பக்கம் வலப்பக்கம் தலை அசைத்தாள்.
சரி என் முகத்துல அப்படி என்ன தெரிஞ்சுச்சு ஏதாவது கதை எழுதி இருக்கா என்ன நீ அவ்ளோ நேரம் என்னோட முகத்தை உத்து உத்து பாத்துட்டு இருந்த என்று சூர்யா கேட்க தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள்.அவளுக்கு சூர்யா தூங்காமல் இருந்தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.
சரி இப்போ என்ன பண்ண வந்த என்று சூர்யா கேட்க தேவா அதற்கும் ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள்.
அப்போ ஒண்ணுமே இல்லையா என்று சூர்யா கேட்க இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா.
சரி போ என்ற சூர்யா அவள் கையை விட்டான் தேவா எழுந்தவள் ஒரு அடி எடுத்து வைத்து விட்டு மீண்டும் சூர்யா பக்கம் திரும்பினாள்.
என்ன ஆச்சு என்று சூர்யா கேட்க ஒரு நொடி தயங்கியவள் பிறகு அவன் முகத்தை பார்த்தாள்.அவன் அருகில் வந்தவள் அவன் முடியை மெல்ல கோதி விட்டாள்.சூர்யாக்கு அவள் அப்படி செய்வது இதமாகவும் வித்யாசமாக இருந்தது .அவன் யாரிடமும் மனதளவில் இவ்வளவு நெருங்கி இருந்தது இல்லை.அவன் தேவாவிடம் நெருங்கி செல்ல உண்மையில் நினைத்ததும் இல்லை.ஆனால் தேவா நெருங்கி வந்தால் அவனால் விலகி செல்லவும் முடியவில்லை. மற்றவர்களுக்கு எல்லாம் இரும்பு கதவு கொண்டு மூடபட்ட அவனுடைய இதயம் இவளுக்கு மட்டும் வாசல் திறந்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது.இதெல்லாம் அவனுக்கு மிகவும் புதிய உணர்வுதான்.இருந்தாலும் அவன் இதை எல்லாம் ரசிக்கவே செய்தான்.தேவா அவனுடைய தலையை வருடி கொடுத்தவள் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் ரூமை விட்டு சென்றாள்.அவளுக்கு பதட்டமாக இருந்தது.அவள் ஹாலில் அமர்ந்திருந்தாள்.
சூர்யா அப்படியே கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தான் அவன் எதுவும் யோசிக்கவில்லை.அவன் மொத்தத்தில் அதிர்ச்சியில் இருந்தான்.கொஞ்சம் நேரம் கழித்து எழுந்தவன் குளித்து விட்டு வெளியே வந்து கலர் ட்ரெஸ் எடுக்க அப்போது போன் வந்தது.அவனுக்கு ஒரு அவசர வேலை இருப்பதாகவும் ஆவணி உடனே வர சொல்லியும் அந்த அழைப்பு இருந்தது.போனை வைத்தவன் யூனிபார்ம் எடுத்து அணிந்து கொண்டான்.அவனுக்கு கவலையாக இருந்தது.தேவாவை வெளியேஅழைத்து செல்கிறோம் என்று சொல்லிவிட்டு இப்படி வேலைக்கு செல்கிறோம் என்று ஆனாலும் கடமை முக்கியம் என்பதால் கிளம்பினான்.
தேவா அவனுக்காக காபி போட்டு எடுத்து வரவும் அவன் வெளியே வரவும் சரியாக இருந்தது.
அவன் யூனிபார்ம் அணிந்து இருப்பதை பார்த்து அவளுக்கு குழப்பம் ஆனது.அவள் அவனை புரியாமல் பார்க்க சூர்யா அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டான்.
சாரி தேவா அது ஒரு கலவரமா நான் உடனே போணும் நிச்சயம் நான் உன்ன இன்னொரு நாள் கூட்டிட்டு போறேன்.இப்போ நான் போயே ஆகணும் நான் போய்ட்டு வரேன் என்று சொன்னவன் நடக்க அவன் பின்னே சென்றாள்.சூர்யா திரும்பி என்ன என்று கேட்டான் .
அவள் சாப்பாடு என்று வாய்க்கு அருகில் கையை கொண்டு சென்று சைகை செய்தாள்.அவனை பார்த்து புன்னகை செய்தான் சூர்யா.
சாப்பிடு சாப்பிட்டு எல்லாம் கலவரத்துக்கு போக முடியாது .நான்அங்க போய் கலவரம் எப்ப்டின்னு பாத்துட்டு எல்லாம் பண்ணிக்கிறேன். என்றவன் திரும்ப போக ஏதோ எண்ணம் வந்து அவளை திரும்பி பார்த்தான் .
சாப்பிட்டியா நீ என்று கேட்டான் சூர்யா
இல்லை என்று தலை அசைத்தாள் தேவா.
இன்னும் ஏன் சாப்பிடாம இருக்க.சரி நீ என்ன பத்தி யோசிக்காத சாப்பிடு நான் போயிட்டு வர்றேன் ஏதாவது வேணும்னா அமிர்தா கிட்ட கேட்டுக்கோ என்று சொன்னவன் அவளை பார்த்து புன்னகை செய்துவிட்டு அவள் தலையில் ஆதராவாக அவன் தலையில் கை வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்று விட்டான்.அவேன் அப்படி செய்தது தேவாக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
அவனை சிறு புன்னகையுடன் வழி அனுப்பி வைத்தாள் தேவா.
சூர்யா சென்ற கொஞ்சம் நேரத்தில் அவளுடைய தோழர்கள் கருமி மற்றும் சஞ்சனா வந்தார்கள்.அமிர்தா கடைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சஞ்சனாவை விட்டு சென்று விட்டாள்.
தேவாவின் நாள் என்பது நன்றாக சென்றது.
அன்று சாயங்காலம் நேரம் பூஜா தன்னுடைய தோழி நித்யாவிற்காக ஹோட்டலில் காத்து கொண்டிருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது நித்யாதான் ஆனால் அங்கே ஜெய் வந்தான்.
ஹாய் என்றான் ஜெய்.பூஜா ஹாய் என்றாள்.
சாரிங்க நேத்து அம்மா ரொம்ப நேரம் பேசி உங்களை கோப படுத்திட்டங்க இல்ல என்று கேட்டான் ஜெய்.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல .உங்க அம்மா நல்லாத்தான் பேசிட்டு இருந்தாங்க .உங்களை பத்தி நிறைய சொன்னாங்க அதை தவிர அவங்க சொன்னது எல்லாமே எனக்கு பிடிச்சிச்சு என்றாள் பூஜா.
ம்ம்ம் என்ன பத்தி பேச பிடிக்கலன்னு நீங்க மறைமுகமா சொல்லுறிங்க எனக்கு நல்லா புரியுது.நான் உங்களை தேவை இல்லாம டஸ்டர்ப் பண்ண விரும்பல நான் போறேன் என்றவன் எழுந்திருக்க போக அவர்கள் டேபிள் அருகே ஒரு பெண் வந்து நின்றாள் .ஜெய் அவளை பார்த்து குழம்பினான்.
என்னடா ஜெய் எப்படி இருக்க என்ன தெரியுதா என்று கேட்டாள் அந்த பெண்.ஜெய் புருவம் குழப்பத்தில் முடிச்சிட்டது.
யார் நீங்க என்றான் ஜெய்.
என்ன யாருன்னு கேக்குற நான் மயூரி உன்னோட பர்ஸ்ட் லவ்.என்னதான் நம்ம பிரேக் அப் பண்ணி இருந்தாலும் நீ என்ன பார்த்து இப்படி எல்லாம் பேச கூடாது என்று சொன்னாள் அவள்.
பூஜா குழப்பத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இன்னொரு பெண் ஜெய்யை உரிமையுடன் அழைத்து பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லை.
என்னங்க யாரு நீங்க எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க என்று கேட்டான் ஜெய்.
கொஞ்சம் தள்ளி உக்காரு என்று சொன்னவள் அவன் அருகில் அமர்ந்தாள் பூஜாக்கு கோபம் கோபமாக வந்தது.
எனக்கு புரியுது பணம் காசு பெருசுன்னு உன்ன விட்டு போனது என்னோட தப்புதான்.ஆனா அசோக் என்ன ஏமாத்துன பிறகு நான் உன்னோட வலியை புரிஞ்சிகிட்டேன் .என்ன ஏத்துக்கோ ப்ளீஸ் என்று அவள் சொல்ல ஜெய்க்கு என்ன சொல்ல என்றே புரியவில்லை.
என்னங்க நீங்க சொல்லுங்க இவன் என்னதான லவ் பண்ணா ஏதோ தப்பு பண்ணி விட்டுட்டு போயிட்டேன் .அது தப்புதான் இருந்தாலும் இப்போ இவரைத்தான் லவ் பண்ணுறேன்.நீங்க அவர் பிரண்ட் தான கொஞ்சம் சொல்லுங்க என்று சொன்னாள் அவள்.
இல்ல நானும் அவரும் பிரன்ட்ஸ் இல்ல என்று பூஜா கொஞ்சம் கோபமாக சொல்ல ஜெய் அவளை பார்த்து பேசினான்.
பூஜா அமைதியாக இருங்க என்று அவன் சொல்ல பூஜா அவன் சொல்வதை கேட்பது போல தெரியவில்லை.
இங்க பாருங்க நானும் இவரும் பிரண்ட் இல்ல .இவரும் நானும் லவ் பண்ணுறோம் அடுத்த மாசம் கல்யாணம் .தேவை இல்லாம பழைய கதை பேசி எங்க நேரத்தை வீணாக்காதிங்க என்று பூஜா கோபமாக சொல்ல அந்த பெண் அதிர்ச்சி ஆனாள்.
ஜெய் அந்த பொண்ணு சொல்லுறது உண்மையா என்று அவள் கேட்க ஜெய் அவளை இன்னும் குழப்பத்துடன் பார்த்தான்.பூஜா பேசியது ஒரு அதிர்ச்சி என்றால் இவள் இப்படி கேட்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
இப்போ எதுக்கு நீங்க அவர் கிட்ட பேசறீங்க நான்தான் சொல்றேன்ல .ஜெய் அந்த பொண்ணு இங்க இருந்தா நான் இங்க இருக்க மாட்டேன் என்று சொன்னவள் எழுந்திருக்க போக அந்த பெண் தடுத்தாள்.
ஐ ஆம் சாரி.என் தப்புதான் நான் போறேன் நீக்க சந்தோசமா இருங்க என்று சொன்ன அந்த பெண் எழுந்து சென்று விட ஜெய் என்ன நடந்தது என்று புரியாமல் பார்த்தான்.
அவள் சென்ற பிறகு பூஜா பேசினாள்.
என்னங்க இந்த பொண்ணதான் நீங்க லவ் பண்ணிங்களா பாக்க நல்ல பொண்ணு மாதிரி இருக்கா பேசுறதுதான் சரி இல்ல.ஒருவேளை உங்களுக்கு அந்த பொண்ணு உங்க வாழ்க்கையில வரணும்னு நீங்க நினைச்சா நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க என்றாள் பூஜா.
ஏங்க எனக்கு உண்மையாவே அந்த பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாதுங்க என்றான் ஜெய்.
எங்க சொல்றிங்க .அந்த பொண்ணுதான லவ் பண்ணிங்க அப்படின்னு சொன்னா என்றாள் குழப்பத்துடன் பூஜா.
அதான் எனக்கும் புரியல.நான் கேக்கலாம்னு நினைக்கும்போதுதான் நீங்க பேசி எல்லாத்தையும் முடிச்சிட்டீங்க என்றான் ஜெய்.
அய்யோ உண்மையா தெரியாதா அப்போ அந்த பொண்ணு யாரு என்று கேட்டாள் பூஜா.
எனக்கு உண்மையா தெரியாதது என்றான் ஜெய்.
உங்க பேர் சொன்னாங்க எப்படி என்றாள் பூஜா.
எங்க கேக்க விட்டிங்க ஆறு பால்ல ஆறு ரன் அடிக்க வேண்டிய மேட்ச்ல முதல் பால்லயே சிக்ஸ் அடிச்சு எல்லாத்தையும் முடிச்சிட்டீங்க அந்த பொண்ணு போயிட்டா இப்போ யாருன்னு கண்டு பிடிக்க எண்டான் ஜெய்.
நான் இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்லையே என்றாள் பூஜா .
சரி விடுங்க.ஆமா என்ன டக்குன்னு லவ் பண்ற கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னிங்களே அது எப்படி என்று கேட்டான் ஜெய்.
ம்ம்ம் அதுல உண்மை துளி கூட இல்ல அதான்.அந்த பொண்ணு கொஞ்சம் ஓவரா பேசுனா அதான் நான் அவ வாயை அடைக்க அப்படி சொன்ன ஆனா அந்த பொண்ணு யாருன்னு தெரியாமலேயே போயிடுச்சுல்ல என்று பூஜா சொல்ல.ஜெய் போன் அடித்தது அவன் அம்மாதான் அழைத்திருந்தார்.போன் பேசியவின் ஒரு நிமிடத்தில் வைத்து விட்டு போனை ஆன் செய்து வாட்டஸ் ஆப் ஓபன் செய்தான்.அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.அதே ஆச்சர்யத்துடன் பூஜாவை பார்த்தான்.
பூஜா என்ன என்று கண்ணால் கேட்டாள்.
இப்போ வந்த பொண்ணு உண்மையான பேரு மோனிஷா .இந்த பொண்ணு வேற யாரும் இல்ல எங்க வீட்ல எனக்கு கல்யாணம் பண்ண பாதுருக்க பொண்ணு என்றான். (me;oh no oh no oh no no ].அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியானாள் பூஜா.
☺️அதே அதிர்ச்சியுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro