Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அறிமுகம்

"உங்களைப் பத்தி ஒரு ஸ்மால் இன்ட்ரோ குடுங்க" என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்த்திருந்தனர் நேர்முகத்தேர்வு எடுக்கவிருந்த மூவரும்.

அவர்களின் எதிரே உள்ள இருக்கையில் இருந்தவள் "ஐ அம் அஸ்மிதா சஞ்சீவினி" என்று ஆரம்பித்து தனது கல்வித்தகுதி, கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்பு, குடும்பத்தைப் பற்றிய சிறுவிபரத்தையும் கூறிவிட்டு வேறு என்ன கேள்வி என்று அவர்களை நேரிடையாகப் பார்த்தாள்.

அவர்களில் ஒருவர் "ஓகே சஞ்சீவினி" என்று ஆரம்பிக்கவும்

"ஐ அம் அஸ்மிதா சார்... சஞ்சீவினி இஸ் மை மாம்" என்று புன்னகையுடன் இடைவெட்டினாள் அவள்.

அதைக் கேட்டதும் மூவரின் நெற்றியிலும் யோசனைக்கோடுகள். அவளிடம் கேள்வி கேட்டவரே மீண்டும் "வாட்? அம்மாவோட நேமை சேர்த்து யூஸ் பண்ணுறதை நாங்க இப்போ தான் கேள்விப்படுறோம்... இட்ஸ் ரியலி வியர்ட்" என்று சொல்ல அவருடன் சேர்ந்து ஆமோதித்தனர் மற்ற மூவரும்.

அவர்களைப் பார்த்து மரியாதையுடன் புன்னகைத்த அஸ்மிதா "இதுல விசித்திரமாவோ வினோதமாவோ நினைக்கிறதுக்கு என்ன இருக்கு சார்? இன்கம்டாக்ஸ் பான் கார்ட்லயே அப்பா நேமுக்குப் பதிலா அம்மா நேமை யூஸ் பண்ணிக்கலாம்னு ரூல் வந்தாச்சு... இதுல நான் ஜஸ்ட் என் நேமோட அவங்க நேமை ஆட் பண்ணிக்கிட்டேன்.. அவங்களோட நேமை சேர்த்துச் சொல்லுறது என் கூட அவங்களே இருக்கிற மாதிரி ஃபீல் ஆகும்" என்று சொல்ல மூவருக்கும் அவள் கொடுத்த விளக்கத்தில் திருப்தியே.

*********

"இஷானி சஞ்சீவினி...ம்ம்ம்... நேம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு... உங்களை இஷானினு கூப்பிடுவாங்களா? இல்லை சஞ்சீவினினு கூப்பிடுவாங்களா?" என்று கேட்டவனின் பார்வை அவளைத் தீண்டிய விதம் உள்ளுக்குள் அருவருப்பை மூட்ட தனது துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொண்டபடி சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.

தயக்கத்துடன் "ஐ அம் இஷானி... சஞ்சீவினி இஸ் மை மாம்... அவங்க நேமை என் நேமோட சேர்த்துச் சொல்லுறப்போ எனக்குள்ள ஒரு கான்ஃபிடெண்ட் வரும் சார்... அதனால தான் அம்மா நேமை சேர்த்துப்பேன்" என்று உச்சரித்த வார்த்தைகளுக்கு வலித்துவிடுமோ என்னுமளவுக்கு மென்மையுடன் அவற்றை வெளியிட்டாள்.

ஆனால் அவள் எதிரில் இருந்தவனின் கவனம் அவள் வார்த்தையில் பதியாமல் அவள் மேனியில் மொய்க்க இஷானிக்கு உடல் கூசிப் போய்விட்டது. அவளது அமைதியும் தயக்கமும் அவனது கேவலமான எண்ணத்துக்கு வலுவூட்ட மேஜையின் மீதிருந்த அவளது கரங்களில் அழுத்தத்துடன் தனது கையை வைத்தான் அக்கயவன்.

இஷானி தீச்சுட்டாற்போல கரத்தை வெடுக்கென்று எடுத்துக் கொள்ள அவனுக்குப் பெருத்த ஏமாற்றம் அவளது கரத்தை மட்டும் தீண்டியதில். அவளால் அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாமல் நாற்காலியிலிருந்து எழுந்தவள் "நான் கிளம்புறேன் சார்" என்று சொல்ல அவனும் கூடவே எழுந்து

"இண்டர்வியூ இன்னும் முடியலை மிஸ் இஷானி... எனி ஹவ் உன்னை மாதிரி அழகானப் பொண்ணுக்கு இண்டர்வியூ தேவையே இல்லைங்கிறது என்னோட ஒபீனியன்" என்று சொன்னபடி அவளைத் தலையிலிருந்து கால் வரை அளவிட்டவனைப் பார்க்கவும் விருப்பமின்றி விருட்டென்று கதவைத் திறந்து கொண்டு வெளியேறியவளின் கண்ணில் கண்ணீர்த்திரை.

எதிரில் வந்தவர் அதில் தெரியாமல் போக அவள் கிட்டத்தட்ட மோதியேவிட்டாள் யார் மீதோ.

"என்னாச்சு இஷி? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஓ மை காட்! நீ அழுறியா? என்னடி ஆச்சு?" என்று பொரிந்து தள்ளியவாறு அவளைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டிருந்தாள் அஸ்மிதா.

இஷானி நடந்ததைக் கூறிவிட்டுக் கேவ ஆரம்பிக்க அஸ்மிதாவுக்கு சுருசுருவென்று ஏறிய கோபத்தில் முகம் சிவக்க இஷானியை இண்டர்வியூ எடுத்தவனின் அறைக்குள் சென்று பத்திரக்காளியாக நின்றாள் அவள்.

அவளை ஏறிட்டவனின் அருகில் சென்றவள் அவனது சட்டைக்காலரைப் பிடித்து "ஏன்டா பொறுக்கி ராஸ்கல்! இண்டர்வியூவுக்கு வர்ற பொண்ணு கிட்ட இப்பிடியா அசிங்கமா நடந்துப்ப?" என்று சொல்லிவிட்டு பளார் பளாரென்று இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்துவிட்டு

"இனிமே நீ எந்தப் பொண்ணையும் கேவலமா பார்க்கக் கூடாது.. அப்பிடி பார்க்கிறப்போ உனக்கு இந்த அறை தான் நியாபகம் வரணும்" என்று விரலை நீட்டி பத்திரம் காட்டிவிட்டு வெளியேறினாள்.

வெளியே இஷானி என்னவாயிற்றோ என்று கலக்கத்துடன் அமர்ந்திருந்தவள் அஸ்மிதா வந்ததும் அவளைக் கட்டிக் கொண்டாள்.

"நான் பயந்துட்டேன் அஸ்மி! அவன் பேசுனதைக் கேட்டு ரொம்ப பயந்துட்டேன்" என்று தேம்பியவளை ஆறுதலுடன் அணைத்துக் கொண்டாள் அவளது சகோதரி அஸ்மிதா.

*******

"சாரி சார்! எங்களுக்கு மாமானு யாரும் கிடையாது" என்று அழுத்தமானக் குரலில் உரைத்துவிட்டு எழுந்தாள் இஷானி.

அதைக் கேட்டதும் அதிர்ந்தவன் "அஸ்மி கொஞ்சம் அவசரப்படுவா... நீ நிதானமானவனு நினைச்சேன் இஷி... நீயும் இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுனா என்ன அர்த்தம்?" என்று ஆதங்கத்துடன் பேசினான் அவன்.

"பாருங்க மிஸ்டர் ருத்ரா... உங்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை... எங்களை ஏன் சார் உங்களோட ரிலேட் பண்ணிப் பேசுறிங்க? எதுக்கு வந்திங்களோ அந்த வேலையை மட்டும் பார்த்துட்டுக் கிளம்புங்க" என்று நுனிமூக்குச் சிவக்கப் பேசியவளைக் கண்டு திகைத்துப் போனான் ருத்ரா.

அவளது கோபம் அவனுக்குச் சிறுகுழந்தையின் செல்லக்கோபத்தை நினைவூட்ட கேலியாக "நீ என்ன தான் இல்லை இல்லைனு தண்டோரா போட்டு கத்துனாலும் இது தான் உண்மை... சோ இனிமே ருத்ரானு நேம் சொல்லி கூப்பிடாம பிளீஸ் கால் மீ மாமா... டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?" என்று கட்டளையிட்டவனின் பாவனையில் அவள் தான் வாயடைத்துப் போனாள் இப்போது.

**********

"உத்தியோகம் மட்டுமில்ல, தைரியமும் புருசலெட்சணம் தான்... நீ ஏன் இவ்ளோ பயந்தாங்கொள்ளியா இருக்கடா? இதுல கார்பரேட் கம்பெனியில மேனேஜராம் இவன்" என்று கிண்டல் செய்த அஸ்மிதாவை பரிதாபமாகப் பார்த்தான் அவன்.

அவனது பரிதாபமான முகம் அவளுக்குள் இஷானியை நினைவூட்ட உள்ளுக்குள் உருகியபடி அவன் தோளில் கைவைத்தவள் "லிசன் ஜெய்! வாழ்க்கையில நமக்கு வர்ற பிரச்சனைகளைச் சமாளிக்க நம்ம தைரியமா இருக்கிறது ரொம்ப அவசியம்... நீ இவ்ளோ பயந்தவனா இருந்தா ஒன்னும் பண்ண முடியாதுடா... ஒரு நாலு பேரை உன்னால பேசி சமாளிக்க முடியாம கன்னத்துல அறை வாங்கிட்டு வந்திருக்க... நீ எப்பிடி வருங்காலத்துல பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணுவ?" என்று அமைதியாக அவனுக்கு அறிவுரை சொன்னவளைப் புன்னகையுடன் ஏறிட்டான் ஜெய்.

தன் தோளில் இருந்த அவளது கரத்தைப் பிடித்துத் தன் கன்னத்தில் அழுத்திக் கொண்டவன் "நீங்க என் கூட இருக்கிங்கல்ல அஸ்மி... நீங்க என்னைப் பார்த்துக்க மாட்டிங்களா? இன்னைக்கு அந்த ரவுடிப்பசங்க கிட்ட இருந்து காப்பாத்துன மாதிரி வாழ்க்கையில எனக்கு வரப்போற எல்லா பிரச்சனைகளை நீங்க பார்த்துக்க மாட்டிங்களா?" என்று கேட்ட அந்த ஆறடி உயர மனிதனின் அப்பாவித்தனத்தில் எப்போதும் போல தொலைந்து போனாள் அஸ்மிதா.

பின்னர் சுதாரித்தவள் "அது சரி! கதை, சினிமால்ல எல்லாம் ஹீரோ தான் ஹீரோயினைக் காப்பாத்துவான்... இங்கே எல்லாம் தலை கீழ இருக்குடா... பட் கவலைப்படாதே ஜெய்.. நான் உன்னைப் பத்திரமா பார்த்துப்பேன்" என்று அவனுக்கு வாக்களித்தவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ஜெய்.

"எனக்குத் தெரியும் அஸ்மி" என்று அவனது உதடுகள் முணுமுணுத்து அடங்கின.

*******

"வேண்டாம்... நீ யாரு கூட மோதுறேனு தெரியாம மோதுற தேவ்... பிசினஸ் வேர்ல்டுக்கு நீ புதுசு... சொல்லப் போனா நேத்து பெய்ஞ்ச மழையில இன்னைக்கு முழைச்ச காளான் நீ... ஒரு தடவை என்னை ஜெயிச்சிட்டா நீ நம்பர் ஒன் ஆயிட முடியாதுடா" என்று ஆவேசத்துடன் உரைத்தவரைப் பார்த்து கேலியாக உச்சுக் கொட்டினான் தேவ்.

"ரொம்ப கோவப்படாதிங்க மிஸ்டர் சந்திரசேகர்... இது ஆரம்பம் தான்... இப்போ தான் உங்களோட நம்பர் ஒன் பொசிசன் எனக்குக் கிடைச்சிருக்கு.. இனிமே வரிசையா உங்களுக்குச் சொந்தமான எல்லாமே எனக்குச் சொந்தமாகும்... அதை நீங்களும் பார்க்கத் தான் போறிங்க... இந்தத் திமிரு, அகம்பாவம்லாம் ஒடுங்கி என் கிட்ட வந்து உங்களைக் கெஞ்ச வைக்கல, என் பேரு தேவ் இல்லை" என்று வன்மத்துடன் உரைத்தவன் அங்கிருந்து வெளியேறினான்.

முகம் நிறைய கோபம், மனம் நிறைய பழிவெறியோடு வெளியேறிவனின் செவிகளில் "ஐ லவ் யூ தேவ்" என்று பேசிய தேன்மொழியாளின் கடைசிவார்த்தை இன்னும் ஒலித்தது. "ஐ லவ் யூ மனு" என்று அவனது இதழ்களும் முணுமுணுத்தது.

************

டைட்டில் எனக்கு சொந்தமாகிவிட்டது என்பதற்கான போஸ்ட் இது... கதை முற்றுப்பெற்றுவிட்டது...


நன்றி!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro