நிலா - 4
இலக்கியாவிற்கு நெஞ்சம் பதைபதைத்து. மற்றவர்களிடம் சரியாக பேசாவிடினும், அர்ஜுனிடம் அவள் காட்டும் நெருக்கம், அவர்கள் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்னையும் வராது என எண்ணையிருக்க, அவள் சிந்தனையில் இப்படி ஒரு அழுக்கான எண்ணம் உள்ளதென நம்ப முடியவில்லை.
குடும்பமாக திட்டமிட்டு ஒரு பெரிய நிறுவனத்தையே வீழ்த்தும் செயல் அல்லவா இது?
"சிஸ்டர் என்னாச்சு?" நடுக்கத்துடன் படிகளில் இறங்கிய இலக்கியாவை அக்கறையாக பார்த்து கேட்டாள் அங்கு புதிதாக சேர்ந்திருந்த சுதிக்ஷா என்னும் பெண் கவலையோடு.
பிரமை பிடித்திருந்த இலக்கியாவிற்கு வார்த்தை வரவில்லை. 'இல்லை' என தலை அசைத்தும் முகத்தில் வழியும் அந்த வியர்வை அவள் சரியில்லை என காட்ட, "தண்ணி கொண்டு வரவா சிஸ்டர்?" மேலும் கேட்டாள் அந்த பெண்.
தன்னை மீட்டு முகம் உயர்த்தி பார்த்த இலக்கியா சன்னமான சிரிப்போடு, "தங்க்ஸ், வேணாம்" என லாக்கர் ரூம் நோக்கி செல்ல அவளை தனியாக விட மனம் வராமல் பின்னாலே சென்றாள் அந்த பெண்.
"ஏதாவது ஹெல்த் ப்ராப்லம்மா சிஸ்டர்? டாக்டர்கிட்ட போகலாமா?"
"இல்ல நான் நல்லா தான் சிஸ்டர் இருக்கேன். காலைல சாப்பிடல அதான் கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி ஆகிடுச்சு" எனவும் அந்த பெண் இலக்கியாவிற்கு தண்ணீர் கொடுத்தாள்.
சில நேரம் ஆசுவாசமடைய ஒரு செவிலியர் மூலம் அர்ஜுன் அழைப்பதாக தகவல் வர உடனே எழுந்து சென்றாள். வெளி நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைக்காக வந்திருக்க அதை கவனிக்கும் வேலை கொடுத்து அனுப்புகினான் அர்ஜுனன்.
அந்த தீவிரத்தில் இருந்தாலும் மனம் ஒன்றாமல் வேலை செய்வது போல் தவித்தது இலக்கியாவிற்கு. யாரிடம் இதை கூறி விடை தேடுவது? பெரியவரிடம் கூறிவிடலாமா என யோசித்தாள்.
மற்றவரிடம் கூறுவதை விட அவரிடம் தகவல் போவது தான் சரியாக பட்டது, வீட்டின் மூத்தவர் என்னும் பொழுது பல கோணங்களில் அலசி ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பார் என தோன்ற அவரை எப்பொழுது பார்த்தாலும் தகவலை காதில் போட்டுவிட முடிவெடுத்து நிதானமானாள்.
இலக்கியா யோசித்ததை விட நேர் மாறாக சென்றது அதன் பிறகான நாட்கள்.
அஞ்சுஸ்ரீ பற்றிய உண்மை தெரிந்ததும் ராமகிருஷ்ணனிடம் தகவல்களை கூற வேண்டும் என்றே ஒரே நாளில் குறைந்தது மூன்று முறையாவது மேல் தளம் சென்று அவரை தேடும் அவள் கண்கள்.
அதே போல் அஞ்சுஸ்ரீ மருத்துவமனை வரும் நேரங்களில் எல்லாம் தன்னுடைய வேலையை விட அவளை கவனிப்பதே வேலையாகிப் போனது. பின்னாளில் அதுவே பெரிதாகி அவர்கள் மருத்துவமனையிலே அஞ்சு ஸ்ரீ வேலை செய்ய துவங்கிவிட, அடுத்த செய்தியாய் அவர்கள் திருமணமும் இன்னும் ஒரு மாதத்தில் என வர தலையே சுற்றியது பெண்ணுக்கு.
எந்த வேலையும் சரியாக ஓடாமல் ராமகிருஷ்ணனையே எதிர் பார்த்து ஒரு மாதம் ஓடியிருந்தது. பலமுறை ஏதேனும் சாக்கு ஒன்றை கூறி அஞ்சுஸ்ரீ இருக்கும் பிளாக் சென்று அவளை கவனித்த இலக்கியாவிற்கு, அவள் அடிக்கடி மருந்துகளை வைத்திருக்கும் ஸ்டாக் ரூம் சென்று வருவது தெரிந்தது.
இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்னும் நிலை வர, ராமகிருஷ்ணன் திருமண வேலை, பத்திரிகை கொடுத்தல் என மகன் மருமகளுக்கு இருக்கும் வேலையை பார்த்து தானே எல்லா பக்கமும் சென்று வர வேண்டி இருக்க,
மருத்துவமனை வர முடியாமல் போனது. மருத்துவமனையின் மருந்துகளை பராமரிக்கும் அறைக்கு செல்ல அஞ்சு ஸ்ரீயின் தந்தைக்கு முழு அதிகாரமும் கிடைத்துவிட, மிகவும் உல்லாசமாக வளைய வந்தாள்.
இதில் அர்ஜுன் அறைக்குள் செல்லும் பொழுது சில நேரம் அவள் அவனோடு காட்டும் நெருக்கம் வேறு மனதை குத்தி கிழிக்க, தலையை தூக்கி அர்ஜுன் முகத்தை பார்க்காமல் வந்த வேலையை முடித்து அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியேறிடுவாள்.
சாதாரண நாட்களிலே அவன் பேச்சு அளந்து தான் வரும், இப்பொழுது அவனிடம் வேலை சார்ந்த சந்தேகங்களுக்கு கூட இலக்கியா அரிதாக செல்ல இருவருக்குமான பேச்சுவார்த்தை இன்னமும் குறைந்து நலிந்து போனது.
இடையில் வருண், தர்ஷன் வந்து இலக்கியாவிடம் பேச்சை வளர்க்க சூசகமாக நழுவி சென்றிடும் அந்த பெண் மீன்.
"இலக்கியா ஆபரேஷன் க்ளவ்ஸ் எல்லாம் தீந்து போச்சு மெடிக்கல்ல இருந்து கொஞ்சம் வாங்கிட்டு வந்துடுங்க"
ஒருவர் நினைவு படுத்தி செல்ல மருத்துமனை மெடிக்கல் சென்ற இலக்கியா க்ளவ்ஸ் மற்றும் தேவையான மற்ற பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த நேரம், "ஜெல் பேட் ஸ்டாக் இல்ல சிஸ்டர், நான் அனுப்பி வைக்கவா?" அங்கிருந்த ஒருவன் கூட்டம் கருதி கேட்க இலக்கியாவிற்கு இது ஒரு சாக்காகி போனது.
"இருக்கட்டும் சார், நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என கூறி ஸ்டாக் ரூம் செல்ல அங்கு இவளுக்கு முன்பாக தந்தையோடு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள் அஞ்சு ஸ்ரீ.
அவளை பார்த்து பெயருக்கு வணகத்தை வைத்து தேவையான பொருளை அங்கிருந்த நபரிடம் கூறி வாங்கும் சாக்கில் அவ்விடத்தை நோட்டம் விட, சந்தேகத்திற்கினங்க ஒரு ஒரு வகை மருந்து மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.
மற்ற மருந்து பெட்டிகள் சரியாக ஒரே வரிசையில் நேர்த்தியாக இருக்க அதனை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இலக்கியாவிற்கு அதிகம் வந்தது.
கால்கள் தன்னாலே அவ்விடம் நோக்கி நகர அந்த பெட்டியின் வெளியே இருந்த 'ரிகிரியேஷனல் ஹைட்றோகிளோராய்ட் கிராக் (Recreational Hydrochloride Crack)' என்னும் அதன் பெயரை வாசித்த இலக்கியா அதனை எடுக்க சென்ற நேரம்,
"இலக்கியா உள்ள வர உனக்கு பெர்மிஷன் யார் குடுத்தா?" குரலை உயர்த்திக்கொண்டு வந்த அஞ்சுவின் கண்கள் தீயாய் இருந்தது.
"சாரி டாக்டர்" அவள் எடுக்க சென்ற பெட்டிக்கு அருகில் இருந்த வேறொரு மருந்து பெட்டியை எடுத்தவள், "மெடிசின் எடுக்க வந்தேன்" என சமாளித்தாள்.
இலக்கியா கையிலிருந்த மருந்தை வாங்கி பார்த்த அஞ்சு ஸ்ரீ அவள் எடுத்தது நரம்பியல் சார்ந்த மருந்து தானா என்பதை சந்தேகத்தோடு ஆராய, சரியாக இருந்தது.
இலக்கியா அதை கவனித்து தானே அந்த இடத்திற்கு வந்தது... "சரி கெளம்பு" என்ற அஞ்சுவை உன்னிப்பாக பார்த்த இலக்கியா மனதில் அத்தனை கேள்விகள்.
இது வெளி நோயாளிகளை கவனிக்கும் நேரம், நிச்சயம் அவள் துறைக்கு இது போல் நிற்க கூட நேரம் கிடைக்காத பொழுது.
அப்படிப்பட்ட நேரத்தில் இவ்வளவு சாவகாசமாக இவள் நிற்கிறாள் என்றால் நிச்சயம் ஏதேனும் வேலை அவள் தந்தைக்காக செய்திருக்க வேண்டும்.
அதோடு தான் இது போல பல முறை அந்த இடத்திற்கு வந்த பொழுதெல்லாம் உள்ளே சென்று இலக்கியாவே தனக்கு தேவையானதை எடுத்துள்ளாள், இப்பொழுது மட்டும் என்ன திடீர் தடை?
யோசனையோடு தன்னுடைய பிளாக் வந்தவளுக்கு அந்த நொடி தான் உரைத்தது கிராக் என்பது கொக்கைனை குறிக்கும் வேறொரு சொல்.
வேகமாக அர்ஜுன் அறைக்கு சென்ற இலக்கியா கதவை கூட தட்டாமல் புயல் வேகத்தில் உள்ளே செல்ல, அங்கு அவனின் சகோதரர்கள் அமர்ந்திருந்தனர்.
தடாலென திறந்த கதவின் பக்கம் மூன்று ஜோடி கண்களும் திரும்ப, "ராமகிருஷ்ணன் சார் எப்போ சார் வருவாங்க?" கேள்வி அர்ஜுனிடம் வைத்தாள் மூச்சு வாங்கிய குரலில்.
புருவத்தை தூக்கி, "அவரை ஏன் நீ பாக்கணும்?" என்றான் மறு கேள்வியாய்.
"ஒரு முக்கியமான விசியம் பேசணும் சார், அவசரம்"
"ஏன் இலக்கியா இப்டி வேற்குது? ஜஸ்ட் சிட்" என வருண் சொல்ல தர்ஷன் ஒரு நாற்காலியை அவள் நோக்கி திருப்பினான்.
இருவரையும் முறைத்த அர்ஜுன் அவளிடம், "அத என்கிட்டே சொன்னா ஆகாதா?" என்றாரன் காட்டமாக.
அஞ்சுஸ்ரீ மேல் பித்தாகி மயங்கி நிற்கும் அவனிடம் எப்படி அவளின் தவறை இலக்கியாவால் கூற முடியும்?
"கமான் அர்ஜுன், ஏன் இப்டி ஸ்ட்ரிக்ட் ஆபிஸ்ர் மாதிரி இருக்க? நீ வந்து ஒக்காரு இலக்கியா" எழுந்து சென்று தண்ணீர் பாட்டிலை அவள் கையில் திணித்தான் ப்ரியதர்ஷன்.
அவன் செய்கையில் எந்த வித தவறான பார்வையும் இல்லை, ஆனாலும் வம்படியாக வந்து பேசுபவனிடம் லயிக்காத அவள் மனதிற்கு தீங்கு செய்யாமல் சுமூகமாக மறுத்தாள்.
"வேணாம் சார்" என அர்ஜுன் பக்கம் திரும்பி, "ப்ளீஸ் சார்" என்றாள் கெஞ்சலாய்.
"ஹி இஸ் பிஸி. என்கிட்ட என்னனு சொல்றதா இருந்தா சொல்லு இல்லையா, யூ மே வாக் அவுட்" என்றான் கையிலிருந்த நிர்வாகம் சார்ந்த ஒரு கோப்பை ஆராய்ந்து.
வேளையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் அதிகம் அஞ்சு ஸ்ரீக்கு, அவள் தந்தைக்கோ மொத்த வளாகமும் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது போல் எந்நேரமும் எவ்விடத்திற்கும் செல்லும் அதிகாரம்.
காரணம் அர்ஜுனை மணக்கும் பெண்ணின் தந்தை என்பதால் தானே? ஒருவேளை அந்த அதிகாரம் பொய்யானால், இருவரும் இந்நிறுவனத்தை சுயநலனிற்காக பயன்படுத்த முடியாதல்லவா?
ஒருவேளை தான் பார்த்தது போதை பொருளாக இல்லாவிடினும் அன்று அவள் பேசியது இதை பற்றி தானே, அழைத்து சென்று காட்டிவிடலாம் என்ற வரவழைத்த நம்பிக்கையோடு அவனிடமே சொல்ல முடிவெடுத்தாள்.
சில நிமிடங்களாகவே தீவிர யோசனையில் இருந்தவளை விழி உயர்த்தி பார்த்த அர்ஜுன் மீண்டும் தன்னுடைய வேலையில் மூழ்க, அவளை பார்ப்பதையே வேலையாக வைத்திருந்தனர் வருணும் தர்ஷனும்.
"நேரமாச்சு கெளம்பலையா?" இருவரையும் பார்த்து அர்ஜுன் வினா எழுப்ப,
"நீ மட்டும் பாக்குற?" இலக்கியாவை சுட்டிக்காட்டி குரலை தாழ்த்தினான் வருண் எரிச்சலாய்.
பற்களை கடித்து, "ஒழுங்கா கெளம்பிடுங்க, இல்ல ஒரு மாசத்துக்கு நைட் டியூட்டி தான்" எனவும் வேகமாக எழுந்து போகும் பொழுது இலக்கியாவிற்கு டாட்டா காட்டிய பிறகே வெளியே நகர்ந்தது அவர்கள் கால்கள்.
"இப்ப சொல்லு, என்ன பிரச்சனை உனக்கு" கோப்பை மூடி வைத்து சிஸ்டம் கிளாஸ் அணிந்து தன்னுடைய கம்ப்யூட்டரில் ஏதோ வேலை பார்க்க துவங்கினான்.
ஒரு வேகத்தில் அவனிடம் உண்மையை சொல்லிவிட துணிந்தாள் தான், ஆனால் இப்பொழுது கணீரென ஒலிக்கும் அவன் குரலின் ஆளுமையில் பயம் கூடியது.
"அஞ்சு மேம நீங்க கல்யாணம் பண்ணாதீங்க சார்" சட்டென கூறிவிட்டாள் கண்களை மூடி.
தகவல்களை தட்டிக்கொண்டிருந்த அர்ஜுனின் கைகள் அப்படியே காற்றில் நின்றது.
தலையை திருப்பி அவள் முகம் பார்த்தான், "கம் அகைன்" என.
அவன் தீ பார்கவியில் அனலில் நின்றவள் மனம் அந்த தீ தன்னை பொசுக்கினாலும் கவலை இல்லை என்னும் நிலைக்கு சென்றிருந்தது.
"அவங்க வேணாம் சார், அந்த குடும்பமே பித்தலாட்டம் பன்றாங்க" - இலக்கியா
"ஓ" என்றான் நம்பாத கோப குரலில்.
"சார்... எனக்கு தெரியும் நீங்க என்ன நம்ப மாட்டீங்கனு ஆனா நான் சொல்றது உண்மை சார். அவங்க பேசுனது நான் என் காதலயே கேட்டேன்" தன்னை நம்ப மாட்டானா என தவித்தது அவள் உள்ளம்.
"அப்டி என்ன கேட்டீங்க மேடம்?" என்றான் கண்ணாடியை அவிழ்த்து நேராய் அவளை பார்த்தான்.
"அஞ்சு மேடம், அவங்க அப்பாகிட்ட பேசுனத கேட்டேன் சார். நம்ம ஹாஸ்பிடல் வச்சு ஏதோ ட்ரக்ஸ் மாத்துறதா பேசிக்கிட்டாங்க" அவள் கூறிய பதிலில் ஆத்திரமாக மேஜையிலிருந்த கடிகாரத்தை எடுத்து தரையில் எரிய, துண்டு துண்டாக சிதறியது.
"ஏய் வார்த்தையை அளந்து பேசு, ஷி இஸ் மீ பியான்ஸி. இந்த ஹாஸ்பிடல் ஒருநாள் அவளோடதாக போகுது" கடிகாரம் சிதறியதிலே அரண்டு போன பெண், அவன் எச்சரிக்கையில் இன்னும் பயந்தாள்.
"நான் கேட்டது பொய்-னு சொல்றிங்களா சார்?" கலங்கியது அவள் விழிகள்.
"நீ என்ன கேட்டியோ எனக்கு தெரியாது, நீ பேசுறது அப்பட்டமான பொய். வெளிய போய்ட்டு, இதுக்கு மேல நீ இங்க இருந்தா என்னால என்னோட கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது" - அர்ஜுன்
"பொய் சொல்ற அளவு எங்க வீட்டுல என்ன வளர்க்கள சார். என்னால உங்களுக்கு நிரூபிச்சு காட்ட முடியும்" - இலக்கியா
"உன் பேச்ச கேட்டு உன் பின்னாடி வந்தா என்னோட வருங்கால மனைவியை நானே சந்தேகப்படுற மாதிரி ஆகிடும். எனக்கு ஸ்ரீ பத்தி தெரியும். உன்கூட வந்து தான் அத நான் நிரூபிக்கணும்னு எந்த விதமான அவசியமும் இல்ல" அறையே அதிரும் வகையில் கத்தினான்.
இலக்கியாவிற்கும் அப்படியே விட மனம் இல்லை, இவன் அவள் மேல் போதையில் உள்ளான் என புரிந்து வைத்திருந்தாளே...
"அப்போ வாங்க சார், நான் சொல்ற மாதிரி ஹாஸ்பிடல்ல போதை பொருள் இருக்கானு செக் பண்ணுங்க. அப்டி இல்லனா நான் இனிமேல் இந்த ஹாஸ்பிடல் பக்கமே வர மாட்டேன்" என்றாள் பிடிவாதமாக.
அவளை சற்று நெருங்கி வந்தவனுக்கு இலக்கியாவை அடித்து துவைக்கும் ஆத்திரம், "சும்மா கத்திட்டே இருக்காத. நீ என்ன போறது? இனிமேல் உனக்கு இந்த ஹாஸ்பிடல்ல இடம் இல்ல" சொடக்கிட்டு, "வெளிய போ" என்றான் முகமெங்கும் அப்பிக்கிடந்த கோவத்தோடு.
"உங்களுக்கு அவங்க மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தா என் கூட வந்து செக் பண்றதுல தப்பில்லையே சார்"
அவ்வளவு தான் என ஆகிய பிறகு, பொய்க்காரி என்ற பட்டத்தோடு வெளியேற இலக்கியாவிற்கு விருப்பமில்லை.
அவள் பேசி முடிக்கும் முன்பு அவன் அறையை விட்டு வெளியேற, அவளும் அவன் வேகத்திற்கு இணையாக ஓடினாள் பின்னாலே.
அவனின் வேகத்தையும், அவன் பின்னால் எப்பொழுதும் இதே போல் ஓடும் ஓட்டத்தையும் அந்த மருத்துவமனைக்கு பழக்கமானதால் எவருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை.
ஸ்டோரேஜ் ரூம் சென்று பார்க்க அங்கு எவரும் இல்லை, முக்கால்வாசி மூடி இருக்க, அதை முழுதாக திறந்துவிட்ட அர்ஜுன் அவளை பார்த்து, "இப்ப எனக்கு ட்ரக்ஸ் ஒரு டேப்லெட் அளவாவது வேணும்"
பிடிவாதமாக கேட்டு கை கட்டி நிற்க, தயங்காமல் உள்ளே சென்று பார்த்த இலக்கியாவிற்கு பகீரன ஆனது. சில நிமிடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு பெட்டி கூட இப்பொழுது இல்லை.
வேகமாக ஒவ்வொரு பெட்டையையும் எடுத்து எடுத்து மொத்த இடத்தையும் புரட்டி பார்த்தாள் ஐந்தே நிமிடத்தில்.
ஆனால் ஒரு மருந்து கூட தெரியாமல் போக வேகமாக அவனிடம் வந்தவள், "சார் இப்ப தான் எடுத்துட்டு போயிருக்காங்க, ப்ளீஸ் அவங்கள கூப்பிட்டு கேளுங்க உண்மை தெரிஞ்சிடும்" வேண்டினாள் அவசரமாக.
அவனோ அவளை கூர்ந்து பார்த்து, "இந்த ஹாஸ்பிடல்ல இன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள். யாருக்கெல்லாம் சொல்லணுமோ சொல்லிட்டு கெளம்பிட்டே இரு. இல்ல மறுபடியும் வந்து டிடெக்ட்டிவ் வேலை பாப்பேன்னு நின்ன, ஜெயில்ல தான் நிக்கணும்"
எச்சரித்து அர்ஜுன் தன்னுடைய அறை நோக்கி செல்ல, பின்னாலேயே, "சார் நான் சொல்றதே கேளுங்க... சார்... சார்" என கெஞ்சிக்கொண்டே ஓடினாள்.
எவரேனும் அருகே நெருங்கினால் அமைதியாக இருந்தவளை அவனும் தடுக்காமல் போக, மீண்டும் அர்ஜுன் அறைக்கு வந்து ஆவேசமாக கதவை திறந்து போக, பயத்தோடு அவனுக்கு பொறுமையாக புரிய வைக்கும் நோக்கோடு உள் நுழைந்தாள்.
"இப்ப தான் சார் பாத்துட்டு வந்து உங்ககிட்ட சொல்ல வந்தேன், அதுக்குள்ள அவங்க வேற எங்கையோ மாத்தி வச்சிட்டாங்க போல. ப்ளீஸ் சார் என்ன நம்புங்க" கண்ணீரோடு அவன் முன்னாள் வந்து நின்றாள்.
"ஏய் மறுபடியும் மறுபடியும் என்ன பேச வைக்காத, இவ்ளோ நேரம் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன், இனி உன்ன கொன்னே போட்டாலும் கவலை பட மாட்டேன்" - அர்ஜுன்
"என்ன கொன்னாலும் பரவால்ல, ஆனா உங்க கல்யாணத்த நான் நடக்க விட மாட்டேன். அவங்க பொய் சொல்றாங்க சார், நா... நாடகம் ஆடுறாங்க"
அவன் முகத்தை திருப்பிய பக்கம் எல்லாம் சென்று நின்றாள், "ஹாஸ்பிடல் பேர் வச்சு, அவங்க தொழிலை வளத்துக்க பாக்குறாங்க சார்" அவளை நோக்கி அடி எடுத்து அவன் வைக்க, பயத்தில் உடல் வெடவெடத்து பின்னால் சென்றது அவள் கால்களும்.
"இல்ல தெரியாம கேக்குறேன், உனக்கு அப்டி என்னடி அவ மேல வெறுப்பு? நானும் எனக்கு நிச்சயம் ஆன நாள்ல இருந்து பாத்துட்டே தான் இருக்கேனே. உன் நடவடிக்கையே சரி இல்லை. சரி சோறு போட்ட வேலைக்கும், ஹாஸ்பிடல்க்கும் உண்மையா இருக்கணும்னு ஒரு நிமிஷம் கூட தோணாதா? இல்லை உறுத்தலயா?"
"எனக்கு ஏன் சார் உறுத்தணும்? நான் எந்த தப்பு பண்ணேன்? நிம்மதியா மூணு வேலை நான் சாப்பாடு சாப்புடுறதுக்கு காரணம் இந்த ஹாஸ்பிடல். அதோட பேர் இவங்கள மாதிரி ஆளுங்களால கெட்டு போய்ட கூடாதுன்னு தவிச்சிட்டு இருக்கேன் நான்" - இலக்கியா
"அடேங்கப்பா... ரொம்ப தான் தவிக்கிற ம்மா நீ. நீ யாரு ரெண்டு வருஷம் மூணு வருசமா தெரிஞ்சவ. ஆனா ஸ்ரீய எனக்கு கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் தெரியும். இந்த மாதிரி கேவலமான வேலை பாத்து தான் சொத்து சேமிக்கணும்னு அவங்களுக்கு அவசியமே இல்ல"
அர்ஜுன் பேசுவது இலக்கியாவிற்கு கோவத்தை தூண்டியது, "காசு இருக்குறவங்களுக்கு தப்பே பண்ண தெரியாதுன்னு சொல்றிங்களா சார்?"
"தேவை இல்லனு சொல்றேன்" அழுத்தமாக அவளை தான் குற்றம் சாட்டினான்.
"உங்க பியான்ஸிய குறை சொல்றதுல எனக்கென சார் ஆக போகுது?" - இலக்கியா
"யாருக்கு தெரியும் காசு பறிக்க கூட இந்த மாதிரி மூவ் பண்ணலாம் நீ" உடைத்து போட்டது அவன் வார்த்தைகள் இலக்கியாவின் மனதை.
விழிகள் கலங்கி கண்ணீர் பெருகி வர, "நீங்க பொண்ணு ஆசைல மயங்கி கெடக்குறிங்க சார், அதான் சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்க முடியல"
சுள்ளென அவள் வார்த்தைகள் அவன் மூளையை குத்த அவள் கழுத்தை பிடித்து பின்னாலிருந்த சுவற்றில் அவளை தள்ளி நிறுத்தினான்.
வேதனை தெறிக்கும் அந்த கண்களை உன்னிப்பாக பார்த்தவன், "பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன் கொன்னு பொதைச்சிடுவேன்" உறுமினான்.
"உண்மைய தானே சார் நான் சொல்றேன், உங்களுக்கு அஞ்சுஸ்ரீ பைத்தியம் புடிச்சிடுச்சு. நாளைக்கு உங்க கண்ணு முன்னாடியே எல்லா வேலையும் நடக்கும், அப்பயும் இதே மாதிரி அமைதியா தான் இருப்பிங்க. என்ன பண்றது நீங்களும் சாதாரண ஆம்பள தானே?"
அவன் கைகள் தந்த வலியோடு இளக்காரமாக பேசியவளை அவ்விடத்திலே வெட்டி போடும் ஆவேசம் அவனிடம். தன்னுடைய கைகளை பற்றியிருந்தவள் கையை வலிக்க பிடித்தவன், "என்னடி தெரியும் உனக்கு என்ன பத்தி? ஆஹ்?"
இன்னும் கையை முறுக்கினான், வலியில் இலக்கியா கண்களை மூட அதையும் பொருட்படுத்தவில்லை அந்த மிருகம்.
அவனின் கர்வத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்பவளை உரு தெரியாமல் அழிக்க தோன்றியது, "என்ன பாத்து இன்னைக்கு இளக்காரமா சிரிச்ச இதே வாய் இன்னும் ரெண்டே நாள்ல என் முன்னாடி மண்டி போட்டு கதறி அழுக வைக்கவா?"
அவளிடம் எந்த பதிலும் இல்லை, "என்ன பத்தி பேச நீ யாருடி மொத? ஸ்ரீ என்..." சட்டென கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினர் இருவரும்.
உள்ளே நுழைந்த அவன் தாத்தாவை பார்த்ததும் அர்ஜுன் இலக்கியாவிடமிருந்து கையை விளக்கி தள்ளி நிற்க, அவர் பின்னாலே வந்தனர் அவன் வீட்டு ஆட்களும்.
"என்ன அர்ஜுன் இது?" ராமகிருஷ்ணன் குரலை உயர்த்தி பேசுவது இதுவே முதல் முறை, அதுவும் பிரியமான பேரனிடம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் போர்டு மீட்டிங் இன்று. ராமகிருஷ்ணா குடும்பத்தை சேர்ந்தவர்களும், இதர முதலீட்டாளர்களும் பங்குபெறும் இந்த சந்திப்பை அர்ஜுனின் திருமணத்தை காரணம் காட்டி, அர்ஜுன் தந்தை வரதராஜன் அடுத்த மாதம் வைக்கலாம் என கூற, ராமகிருஷ்ணன் தான் எதையும் தள்ளி போட வேண்டாமென்று இன்றே ஏற்பாடு செய்திருந்தார்.
வீட்டினர் அனைவரும் கூடியிருக்க, மற்ற முதலீட்டாளர்களும் வந்திருக்க சில நேரம் அர்ஜுன் வருவான் என எதிர் பார்த்திருந்த வீட்டினருக்கு நேரம் போவது தெரிந்து அவன் கைபேசிக்கு அழைத்து பார்த்தனர்.
அந்த நேரம் அர்ஜுன், இலக்கியாவோடு ஸ்டார் ரூம் சென்றிருக்க கைபேசி அவன் அறையில் தான் இருந்தது. வீட்டினர் அந்நேரம் அழைத்து ஏற்காமல் போயிருக்க வேலையாக இருப்பான் என விட்டனர்.
அதுவே இன்னும் நீடிக்க, விளையாட்டாக அர்ஜுன் என்ன செய்கிறான் என அவனுடைய அறையிலிருந்த கேமராவை அந்த அறையிலிருந்த பெரிய ப்ரோஜக்டர் திரையில் ஒளிரவிட, சரியாக இலக்கியாவை நெருங்கி நின்று அவன் பேசுவது தெரிந்தது.
அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க அவர்கள் பேசுவது கேட்கும் விதத்தில் அந்த காணொளி இல்லாமல் போனது தான் அர்ஜுனின் கெட்டநேரம். பார்ப்பவர்களுக்கு வேறு மாதிரி தெரிந்தது.
"என்ன ராமகிருஷ்ணன் சார், உங்க வீட்டு மருமக டாக்டர்னு நினைச்சேன். நர்ஸ்-னு சொல்லவே இல்ல" ஒருவர் சூசகமாக கேட்க படித்தவர்கள் இருந்த சபையில் முணுமுணுப்பு இல்லை.
"வருண் ஆப் பண்ணு" பானு மகனுக்கு உத்தரவிட, "அர்ஜுனுக்கு புடிச்ச லைப்ப அமைச்சு குடுக்குறதுல தப்பில்ல பானு. சொசைட்டி பாத்து பிள்ளைங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிடாதீங்க" என்றார் ஒரு பெண்மணி.
"ராமகிருஷ்ணன் எல்லாத்தையும் பாத்துக்குவான், அவன் வளர்ப்பும் தப்பாகாது" வேறொருவர் கூற வருண் கேமராவை அணைத்திருந்தான்.
"மீட்டிங் அடுத்த மாசம் வச்சுக்கலாம், எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க" என ராமகிருஷ்ணன் அங்கிருந்தவர்களிடம் கூற, அனைவரும் தாங்கள் எதையும் பெரிதாக நினைக்கவில்லை என பெருந்தன்மையோடு விலகினர்.
அவர்கள் சென்றதும் பேரனை பார்க்க கோவமாக வந்த ராமகிருஷ்ணனின் மனதில் பேரன் மேல் துளி கூட சந்தேகம் வரவில்லை. ஆனாலும் அந்த பெண்ணிடம் பேசி தான் முடிவுக்கு வர வேண்டுமென கதவை திறக்க அவளை நெரித்துக்கொண்டிருந்தான் கை கொண்டு.
"ஒரு சின்ன பிரச்சனை, நான் பாத்துக்குறேன்" முகம் கோவத்தில் இன்னமும் சிவந்திருந்தாலும், தாத்தாவிடம் பேசுவதால் வார்த்தைகளில் அமைதியை காட்டினான்.
"என்னடா சின்ன பிரச்சனை? உன் முகமும் சரியில்ல, அந்த பொண்ணு முகமும் சரியில்லை" - வரதராஜன்
"ப்பா, இதுல நீங்க தலையிடாதீங்க. அவ்ளோ தா பிரச்சனை முடிஞ்சது" முகத்தை வேறு பக்கம் திருப்பி வைத்தான் அர்ஜுன்.
"அத அந்த பொண்ணு சொல்லட்டும் அர்ஜுன்" ராமகிருஷ்ணன் இலக்கியாவை வந்ததிலிருந்தே கவனித்துக்கொண்டு தான் உள்ளார், அவள் முகமே சரியில்லை. இன்னமும் கணங்களில் கண்ணீர் நின்றபாடில்லை.
"அவ பேசுனா மொத்தமும் பொய் தான் தாத்தா வரும். நீங்க எல்லாரும் போங்க என்னால இத சமாளிக்க முடியும். எல்லாரும் மொத்தமா இங்க கூடி நின்னா வெளிய தப்பா நியூஸ் போகும். போங்க" - அர்ஜுன்
"ஏற்கனவே போச்சுடா... நீ பண்ண எல்லாமே வெளிய ஏற்கனவே தெரிஞ்சு போச்சு. தலையை தூக்க முடியல" ஆத்திரமாக மகனை அதட்டினார் வரதராஜன்.
இலக்கியா விழிகளை சோர்ந்து தலையை கவிழ்த்து மௌனமாய் அழத் துவங்கிவிட்டாள்.
"டேட் என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க. ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன்" - அர்ஜுன்
"உன் கோவத்தை தூக்கி குப்பைல போடு, அப்டி என்னடா ஒரு பொண்ணு கூட இவ்ளோ நெருங்கி நிக்கிற? அதுவும் வேலை செய்ற இடத்துல?" - பானு
"மாம் அவ..." - அர்ஜுன்
"அர்ஜுன் நீ அமைதியான இரு" பேரனை அடக்கி இலக்கியா அருகில் சென்றார், "நீ சொல்லு ம்மா, இங்க என்ன நடக்குது" என்றார் பொறுமையாக.
"பொய்க்காரி தாத்தா அவ..." திரும்பி பேரனை பார்த்த பார்வையில் அவன் அமைதியாகிவிட்டான்.
ஆயிரம் சிந்தனைகள் அவளுள், தந்தை பற்றி, தன் எதிர்காலம் பற்றி, ஆனால் இந்த நொடி பல ஆயிரம் மனிதர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் தரும் அந்த மருத்துவமனையின் பெயரும், அவள் மனம் துடியாய் துடிக்கும் அர்ஜுனின் எதிர்காலத்தை மட்டுமே நினைத்தது.
"நா... நாங்க லவ் பண்ணோம்" எதிர்பாராமல் வந்த இலக்கியாவின் பேச்சில் எவரையும் பார்க்காமல் ஓங்கி கன்னத்தில் அறைத்திருந்தான் அர்ஜுன்.
"ச்சீ... அசிங்கம் புடிச்சவ" அத்தனை அசூசை அவன் முகத்தில் அவளை பார்த்து.
"அர்ஜுன் என்ன இது பொண்ணு மேல கை வைக்கிறது?" பானு மகனை அதட்ட, அர்ஜுன் இன்னும் அவளை என்ன செய்யலாம் என்ற ஆத்திரத்தில் இருந்தான்.
இலக்கியா தரையில் மடிந்து அமர்ந்து முகத்தை மூடி அழத் துவங்கிவிட அர்ஜுனை தவிர அனைவருக்கும் அவள் மேல் இரக்கமே தோன்றியது. ஆனாலும் அர்ஜுனின் அத்தை பரிமளா,
"என்ன ம்மா இது, யாரு மேல பலி போடுற, அவன் எங்க வீட்டு வளர்ப்பு. யாரும் நம்பி ஏமாத்துற குணம் இருக்காது அவனுக்கு" என்றார் கோவமாக.
"அப்ப ஏன் உன் மருமகன் அந்த பொண்ணு பக்கத்துல அவ்ளோ நெருக்கமா நின்னான்?" வரதராஜன் மகன் மேல் கோவத்தை திருப்பினார்.
"வேற ஏதாவது காரணம் இருக்கும் மச்சான், நம்ம அர்ஜுன் தப்பு பண்றவன் இல்ல" பரிமளாவின் கணவர் சுந்தராஜன் அர்ஜுனுக்கு ஆதரவு கொடுத்தார்.
"அப்போ அந்த பொண்ணு கண்ணீருக்கு என்ன பதில் சொல்ல போறீங்க எல்லாரும்?" வரதராஜன் கேள்விக்கு,
"அவ தலைல அவளே மண்ண அள்ளி போட்டா அதுக்கு நான் பொறுப்பேத்துக்க முடியுமா?" எரிச்சலாக பதில் சொன்னான் அர்ஜுன், "எல்லாம் இவளால வந்தது. போக சொல்லுங்க இவளை இங்க இருந்து"
அந்த இடத்தில் மௌனம் வியாபிக்க, "அந்த பொண்ணு இனி எங்கையும் போக மாட்டா?" ராமகிருஷ்ணன் அழுத்தமாக பேரனுக்கு சொல்ல, மற்றறவர்களுக்கு பயம் எடுத்தது.
இலக்கியாவின் நோக்கமும் ராமகிருஷ்ணன் மனதை தான் கூறிய வார்த்தை சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே இருக்க. அது சென்றடைந்த செய்தி உணர்ந்து இன்னும் அழுதாள்.
"ப்பா நீங்க என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறிங்களா? தப்பு ப்பா" பீதியானார் பரிமளா.
"மாமா வேணாம் மாமா, அர்ஜுன் காலத்துக்கும் இத ஏத்துக்க மாட்டான்" விழி நீரோடு மகனின் எதிர்காலம் தந்த பயத்தில் மாமனாரிடம் கெஞ்சினார் பானு.
அர்ஜுன் வெறி கொண்டு இலக்கியாவை பார்க்க அவள் உடல் குலுங்குவதை தவிர வேறு எந்த அசைவும் இல்லை, செத்து மடிந்து போனாள் உள்ளுக்குள்.
"நான் முடிவு பண்ணது பண்ணது தான். குறிச்ச நாள், குறிச்ச நேரத்துல இந்த பொண்ணுக்கும் அர்ஜூனுக்கும் தான் கல்யாணம், யாரோட விருப்பமும் எனக்கு தேவையில்லை" அர்ஜுனை பார்த்தவர், "இவனையும் சேர்த்து தான் சொல்றேன்"
How is the chapter? Comment Plz makkale....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro