நிலா - 18
"புடிக்காம தான் பண்ணீர்ல இருக்க எல்லா ரெசிபியும் கரைச்சு குடிச்சு வச்சிருக்கியா?"
"உங்களுக்கு மட்டும் இல்லையே எனக்கும் பண்ணீர் புடிக்கும். அதுனால தெரிஞ்சு வச்சிருக்கேன்"
வேகமாக அவள் இடை வளைத்து தன்னை பார்த்து திருப்பினான், "பொய் சொல்லாதடி. உனக்கு என்ன புடிக்கும். அப்றம் எதுக்குடி என்ன டெய்லி அப்டி பாக்குற?"
"எப்படி பாத்தேன்?"
"ஏதோ உன் உலகமே நான் தான்னு"
இலக்கியா, "அது உங்க கற்பனை"
"அன்னைக்கு தாத்தா வீட்டுல கூட என்ன எப்போ இருந்து பிடிக்கும்னு ஒரு லிஸ்ட் போட்டியே அதுவும் பொய்யா?" இதை எப்பொழுது இவன் கேட்டானென விழித்தாள்.
பிரியங்கா, வருண் தர்ஷனிடம் அவள் பகிர்ந்த உண்மை அவனுக்கு சில நாட்கள் முன்பு தான் காட்சிப்படமாக தர்ஷன் மூலம் பகிரப்பட்டதை பெண்ணவள் அறிந்திருக்கவில்லை.
"அது சும்மா அவங்கள எல்லாம் நம்ப வைக்கிறதுக்கு"
அன்பை அடக்கி வைத்து ஒருவரிடமிருந்து பின் வாங்குவது அவ்வளவு எளிதல்ல, நாவிலிருந்து, உடல் மொழி, கண்கள் என எல்லாம் ஒன்றாய் இணைந்து வேலை செய்ய வேண்டும்.
இங்கோ இலக்கியாவிற்கு நாவானது மட்டும் அந்த வேலையை செய்ய கண்கள் முற்றிலும் அவளுக்கு முரணாய் நின்றது.
"பொய் மேல பொய் சொல்லாத. கடிச்சு வச்சிடுவேன். அப்றம் என்னத்துக்கு அன்னைக்கு என்ன தேடி அந்த நெடுஞ்செழியனை விட்டு ஓடி வந்த?"
"நீங்க தான சார் ஹாஸ்பிடல் பொறுப்பாளி. அதான் வந்தேன்"
அவளை முறைத்தவன், "அந்த நம்பிக்கை வச்சேன்னு சொன்னது?"
இலக்கியா, "அப்போ ஏதோ ஒரு எமோஷன்ல சொல்லிருப்பேன்" எழுந்த கோவத்தில் கட்டிலில் அர்ஜுன் எழுந்து அமர்ந்துவிட இலக்கியா அவன் முதுகை பார்த்து சிரித்துக்கொண்டாள்.
"தூங்கலையா சார்?" சீண்டலோடு பெண்ணவள் கேட்க, திரும்பி மனைவியை முறைத்தவன் கட்டிலிலிருந்து இறங்கி வெளியே சென்றான்.
இலக்கியா கணவனை தொடர்ந்து எழுந்து அமர்ந்திருக்க சென்றவன் அதே வேகத்தில் உள்ளே வந்தவன் அவிழ்த்து வைத்திருந்த சட்டையை எடுத்து மாட்ட, இலக்கியாவிற்கு கலவரமானது.
அவன் அருகாமை வேண்டும், அவன் வேண்டும் என அர்ஜுன் எழுந்து சென்ற பொழுது கதறிய மனதை உள்ளே வரட்டும் என நினைத்திருக்க அவனோ கிளம்பும் எண்ணத்திலிருந்தான் போல.
அவசரமாக சட்டையை போட்டு வாகனத்தின் சாவியை தேட, "உங்களுக்கு டாக்டர் தான வேணும்னு சொன்னிங்க?" குரல் கமர அவனை பார்த்தாள்.
"உன்ன ஒரு பக்கம் வச்சிட்டு டாக்டர மெயின் பொண்டாட்டியா வச்சுக்க போறேன்" எள்ளலாக கூறியவன் முகம் இறுகி போயிருந்தது.
"எங்க வீட்டுக்கு வரவே உங்களுக்கு இவ்ளோ நாள் ஆகியிருக்கு. இந்த சின்ன வீடு, படிப்பறிவு இல்லாத அப்பா, நர்ஸ் டிகிரி. இது எல்லாம் தான் இலக்கியா"
"உன்ன பத்தி செல்ப்-இன்ட்ரோ நான் கேட்டேனா இல்ல எதுவும் தெரியாம தான் வந்தேனாடி? புடிக்காதாமே..."
சாவியை தேடுவதில் மும்முரமாய் இருந்தவன் கண்களில் கட்டிலின் ஓரம் அது தென்பட அதனை எடுக்க சென்றவன், "இவளுக்காக ராத்திரி பகல் தூங்காம பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன். தேவை தான்டி எனக்கு"
அவளது நிராகரிப்பை அவனால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை மாதங்கள் அதே நிராகரிப்பை தான் அவளும் தங்கியிருப்பாள் என்பது கூட மறந்து போனான்.
சாவியை குனிந்து எடுத்து அவன் வெளியே நகர போகும் பொழுது, "என்னங்க..." என்கிற மனைவியின் அழைப்பில் கால்கள் அசையாமல் நின்றது.
"கெளம்புறீங்களா?"
"வந்ததுல இருந்து போக தான சொல்லிட்டு இருக்க"
"என் மனசுல என்ன ஓடுதுனு யோசிக்கவே மாட்டிங்களா?"
"எதுக்கு யோசிக்கணும், அதான் என்ன நினைச்சாலே வெறுப்பா இருக்குன்னு சொன்னியே"
"உங்கள வெறுப்பேத்த சொன்னேன். அன்னைக்கு எவ்ளோ ஈஸியா செழியன் கைய புடிச்சதுக்கு கூசலையானு கேட்டீங்க. ஏன் எனக்கு அந்த கோவம் இருக்க கூடாதா?" குரலை சற்று உயர்த்தி தான் அவனை முறைத்தாள்.
"சுலபமா என் பக்கம் திருப்பி விடுறல. பர்ஸ்ட் ஆரமிச்சது யாரு, என்னோட கேரக்டர நீ அசாசினேட் பண்ண. அதுக்கு பதிலடி குடுத்தா ஒடனே நான் கொடுமைக்காரனா?" என்றான் இவனும் விடாமல்.
"இன்னுமா உங்களுக்கு புரியல, நான் அதை அந்த..." ஒரு நொடி நிறுத்தி, "அவனை வச்சு சொன்னேன். அதுக்காக என்ன அப்டி பேசுனீங்களா?" அயர்வோடு அர்ஜுனை அவள் பார்க்க, கண் மூடி நெற்றியை நீவியவன் வந்து மனைவி அருகே அமர்ந்தான்.
அர்ஜுன் அமரவும் எப்பொழுதும் வரும் கூச்சம் நெட்டித்தள்ள அர்ஜுன் மனைவி இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.
கொஞ்சம் மலையிறங்கியிருந்தவன் மீண்டும் அதில் விழிக்கப்பெற்று அவளை முறைத்தவன் அடுத்த நொடி அவளை அள்ளி மடிக்கு இழுத்திருந்தான்.
அவனது திடீர் செயலில் அதிர்ந்தவள் உடல் வெடவெடக்க தன்னுடைய மார்பில் கை வைத்து அவனை பயத்தோடு பார்த்தாள்.
"எதுக்கு இந்த நடிப்பு?" மார்போடு ஒட்டியிருந்த கையை பார்த்தவன், "இத நடிப்புனு நினைக்கிறதா, இல்ல" அர்ஜுன் விரல்கள் மார்போடு ஒட்டியிருந்த இலக்கியாவின் சேலையை உரசி அவளது கையை பற்றிவிட ஏறி இறங்கிய மூச்சு அவனுக்கு இன்னும் வசதியாகி போனது,
"முன்னாடி இருந்த இலக்கியா தான் உண்மை, உன்ன மீறி நீ நீயா இருக்கறதா நினைச்சுக்குறதா?"
அவளுக்கு எப்படி பேச்சு வரும், அவனுள் அவளை மொத்தமாய் இழுத்துக்கொண்டு அமர்ந்திருப்பது போதாமல் அவள் கைகளை தளர்த்திய பிறகும் விடாமல் அதே இடத்தினில் அவளது விரல்களை பற்றி நிற்கும் அர்ஜுனின் செயலில் திக்கும் மறந்து போனது.
"ம்ம்ம்?" புருவம் உயர்த்தி கேள்வி கேட்டவன், சொக்கி நிற்கும் அவளது கண்களில் தானும் மயங்கி, பேதையை மேலும் போதையேற்ற மெல்ல குனிந்து தான் பற்றியிருந்த பெண்ணின் விறல் மேல் மீசை உரச முத்தம் வைத்தான்.
அவனது அந்த நிதான செயலில் இலக்கியாவின் மற்றொரு கரம் அவனது கன்னத்தை வேகமாக பிடித்தது.
"என்னாச்சு?" எதுவுமே தெரியாதது போல் அவன் கேட்டதற்கு வழக்கம் மாறாமல் விழிக்க மட்டுமே செய்தாள்.
குனிந்து முத்தமிட்டதே, அவளது விரல்களை தாண்டி மேனியில் நேரடியாக அவன் முத்தமிட்டது போல் சிலிர்க்க, அவனோடு சிகையானது அவளது உடை மறைக்காத கழுத்தில் சரசரத்து மனைவியை வேறொரு உலகிற்கே இழுத்து சென்றிருந்தது.
"சார்..." தடுமாறினாள் அவனது முன்னேற்றத்தில்.
"சார் வேணாம் இலக்கியா" அவளுக்கு மூச்சை விட அனுமதித்து அவள் முகம் பார்த்தான், வாகாய் அணைத்து அமர்ந்து.
"என்னாச்சு உங்களுக்கு, உங்கள புடிச்சு வச்சிருக்க கூடாது. விடுங்க என்ன" கூச்சத்தில் அவள் நெளிவதை பார்க்கவே ரசனையாக இருந்தது.
"ம்ம் இப்டி சொல்லு. ங்க போட்டு, இல்லையா அர்ஜுன் கூட எனக்கும் ஓகே தான்"
'நான் என்ன கேட்டால் இவர் என்ன பேசுகிறார்?' அரிவை விளங்காத பார்வை பார்க்க, "அதெல்லாம் முடியாது" அவனிடமிருந்து கையை விலக்கி இடைவேளை உருவாக்க பார்த்தாள்.
"ப்ச் போகாதடி. நம்ம சண்டை இன்னும் முடியல" தீரமானான் மருத்துவன்.
"நீங்க எதுக்கு முறைக்கிறீங்க, நான்ல கோவப்படணும்"
இவளும் முறுக்கிக்கொண்டாள், பேச்சுக்காக கோவத்தை காட்டினாலும் ஒருவர் அருகாமையை மற்றவர் விட்டு பிரியாமல் இருப்பது தான் அவர்கள் காதலின் முதல் வெளிப்பாடு.
"கோவப்படுங்க மேடம். நான் என்ன உன்ன தப்பா பேசுனேனா, இல்ல அவனோட சேர்த்து வச்சு தான் பேசுனேனா" "
அது வேற பேசுவீங்களா? பேசிருந்திங்க, டாக்டர்க்கு அவர் ஹாஸ்பிடல்லயே ஸ்பெஷல் வார்ட் ஏற்பாடு பண்ணிருப்பேன்"
"எப்படி இந்த பெட் மாதிரியா?" அவர்கள் அமர்ந்திருக்கும் இரும்பு கட்டிலை காட்டினான் கேலியாக.
"பாத்திங்களா, இதான் நீங்க. என்கிட்ட குறை மட்டும் தான் பாப்பிங்க. அவன் கைய புடிச்சிட்டேன்னு சொன்னிங்களே, அப்போ என்ன பாக்காமயா இருந்திருப்பிங்க, நான் அழுகுறதை கூட கவனிக்காம போயாச்சு. என்ன விட்டு போக உங்களுக்கு அது ஒரு காரணமா போச்சு"
"இந்த வீடு உனக்கு குறையா தெரியிதா?" இந்த சிறிய வீடு என்னைக்குமே அவளுக்கு குறையாக தெரியாத அளவு நிறையாகவும் தெரிந்ததில்லை.
பெற்றோரை இரண்டு படி உயர்த்தி வைக்க பார்க்கும் சாதாரண நடுத்தர பிள்ளையின் ஆசை தான் இலக்கியாவுக்கும். தந்தை வாழ்க்கையில் உழைத்த உழைப்பிற்கு இதை விட சற்று பெரிதாக, குறைந்தது தனி சமையலறை கொண்ட வீட்டில் அவரை அமர்த்தி பார்க்க ஆசை அவளுக்கு.
"வீட்டோட அளவு பெருசு இல்ல இலக்கியா, குடிசையா இருந்தாலும் எங்க நிம்மதி இருக்கோ அது தான் சொர்கம்"
'பேசுவது அவள் மருத்துவன் அர்ஜுனா?' என்கிற சந்தேகம் வலுப்பெற்றது.
"அவன் கூட நீ பேசிட்டு இருந்தப்போ உன் முதுகை தான்டி பாத்தேன்"
"நான் உங்க முதுகை பாக்கலயே..." அஞ்சுஸ்ரீ பக்கம் பேச்சு திரும்பியது
"போதும். அவளை நான் தான் வர சொன்னேன். இல்லனு சொல்லல. அது வேற ரீசன்"
இலக்கியா, "அப்டி என்ன பெரிய ரீசன் உங்களுக்கு, அவளை பாக்க ஆசை வந்திருக்கும்" முகத்தை தூக்கி வைத்துக்கொண்டவளுக்கு அவன் தான் வர கூறினான் என அவனே மொழிந்த பிறகு அழுகையாக வந்தது.
திருப்பியிருந்தவள் முகத்தை பிடித்து திரும்பியவன், "எதுக்கு இவ்ளோ அவசரம் உனக்கு. நம்பிக்கை இருக்கு நம்பிக்கை இருக்குனு சொல்ற உனக்கு தான்டி என் மேல கொஞ்சமும் நம்பிக்கை இல்ல.
அவளை வர சொல்ற நான் எதுக்கு அவ்ளோ பேர் இருக்குற ஹாஸ்பிடல்க்கு வர சொல்ல போறேன். தனியா அவளை பாக்க இடமா ஊர்ல இல்ல? எந்திரிடி"
வலுக்கட்டாயமாக அவளை தன்னிடமிருந்து பிரித்து அர்ஜுன் விலக்க பார்க்க அவன் சட்டையை பிடித்து இலக்கியா விலக மறுக்க, அர்ஜுனின் முறைப்பு இன்னும் கூடியது.
"யோசிக்கல" என்றாள் அழுகையோடு.
"எதையும் யோசிக்காத. என்ன பத்தி தப்பா மட்டுமே யோசி. உன் வீட்டுக்கு வர்றதுனா என் அப்பாவை பாக்கணும் வீட்டுல போய் விடுடா மடையா அர்ஜுன்னு சொல்லணும், சும்மா சும்மா வந்து சண்டை போட்டுட்டு போகிறது தான் உனக்கு தெரியும். எந்திரி நான் வீட்டுக்கு போறேன்"
"ம்ஹூம், உங்க வீடு சாவி உங்ககிட்ட இல்ல சொன்னிங்கல" அப்பாவியாக அவன் சட்டையை இறுக்கமாக பற்றியவள் மேல் கோவம் தான் அதிகமானது அர்ஜுனுக்கு.
"என்னைக்கு உன்ன புடிக்க ஆரமிச்சதோ அன்னைல இருந்து பொய் மூட்டையாகிட்டேன்டி நான். உன்ன புடிக்கலனு உன்கிட்ட பொய் சொல்றதுல இருந்து, காரணமே இல்லாம ஆன்கோ டிபார்ட்மெண்ட் வந்தது, இப்போ இங்க நிக்கிறது வரை பொய் தான் பேசுறேன்"
இலக்கியாவை வம்பாக படுக்கையில் அமரவைத்தவன் தான் எழும் முன்பு இலக்கியா அர்ஜுனை இரும்பாக பக்கவாட்டிலிருந்து அணைத்திருந்தாள்.
காற்றிலாடும் மரத்தின் இலைகள் கீழே சிந்திக்கிடக்கும் காய்ந்த இலைகளை பார்த்து மரத்தின் கிளையை கெட்டியாய் பிடிக்கும் இலையை போல அர்ஜுனை இலக்கியா பிடித்திருந்த இறுக்கமே அவனை அவளை விட்டு நகராவிடவில்லை.
முறுக்கிக்கொண்டாலும் முரடனுக்கு அவளை விட்டு போக பிடிக்கவில்லை, இருந்தும் சீறியது அவளது அவன் மீதான ஆசையில். விடவே மாட்டாள் என்கிற நம்பிக்கை.
"ஒவ்வொரு தடவையும் உன் கண்ணையே பாத்து நின்னு நான் தப்பு பண்ணலன்னு சொல்லிட்டே இருக்கணுமா? இல்ல உன்ன புடிக்கிது, பிடிக்கிதுன்னு போர்ட் புடிச்சு நிக்கவா?" உஷ்ணமாக தான் பேசினான், அவளின் பிடி கூடிக்கொண்டே போகும் உற்சாக கூத்தில்.
"இல்ல" என்றாள் உள் இறங்கிய குரலில்.
எளிமையான மங்கிய நிறத்தில் உடை அணியும் இந்த பெண் மேல் எப்படி பிடித்தம் வந்ததென அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
மொழியில்லா நேரம் வாயடிக்கும் அவளின் விழிகளை எதற்கு ரசிக்க துவங்கினான் என்பதை மறந்தான். ஆசைகள் எல்லாம் ஆசையாகவே போகுமென சினம் கொண்டு சுற்றி திரிந்தவனை ஆசை காதல் காட்டி இழுத்துவிட்டாள்.
இருவருக்கும் மற்றவரை பிடிக்க காரணம் தேவைப்படவில்லை. ஒருவர் குணத்தில் மற்றவர் தானாக ஈர்க்கப்பட்டு மீளவே முடியாத தூரம் சென்றுவிட்டனர்.
"எதுக்கு வர அவங்கள சொன்னிங்க?" தவிப்போடு பார்த்தவள் கேள்வியை நிராகரிக்காமல் கைபேசியை அருகிலிருந்த மேஜையில் காட்டினான்.
அவன் எடுக்கும் தூரம் தான், சற்று நகர்ந்தாலும் அவளின் ஸ்பரிசம் சென்றிடுமோ என அஞ்சி அவளிடம் கேட்க கொஞ்சமும் நகராமல் கையை மட்டும் நீட்டு அவனிடம் கொடுத்தாள்.
அதிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து காட்டினான். அதனை பார்த்தவள் விழிகள் இரண்டும் மகிழ்ச்சியில் மின்னியது.
"நம்ம..."
"ஆமா, அன்னைக்கு மீட்டிங் எண்ட்ல நம்ம கல்யாணத்தை இந்த போஸ்டர் போட்டு அனவுன்ஸ் பண்ணிடலாம் நினைச்சேன். யாருக்கும் வீட்டுல தெரியாது. எல்லாருக்கும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கலாம் தான் என்னோட பிளான்.
அஞ்சுவ வர சொன்னதும் அதுக்கு தான். அவ குடும்பம் பண்ண கேடி வேலைய நான் வெளிய சொல்லியும் என்ன நச்சு பண்றதை அவ விடல. அவ மேல தப்பே இல்லனு.
ஏதோ ஒரு இடத்துல நான் அவளை தேடி போவேன்னு அவளே நம்புனாளா இல்ல என்னை அறியாம நான் நம்பிக்கை குடுத்தேனானு தெரியல. அவளுக்கும் இதான் உண்மைன்னு புரிய வைக்க வர சொன்னேன். நீங்க நினைக்கிற மாதிரி அஞ்சுவால என்ன கொஞ்சம் கூட நெருங்கி வர முடியாது"
"தெரியும்..." என்றாள் இலக்கியா வேகமாக.
"என்ன தெரியும்?"
"நம்ம கல்யாணம் முடிவான அன்னைக்கு என் கழுத்தை நெரிச்சீங்களே. அவங்களுக்கும் அதே நிலைமை தான் வந்துருக்கும்" கூறும் பொழுதே அழுகையோடு இலக்கியா மெல்ல சிரிக்க, அர்ஜுன் கரம் மனைவியின் மென்மையான கழுத்தில் ஊர்ந்தது.
மயிலிறகாய் வருடிய அர்ஜுனின் விரலின் ஜாலத்தில் மொத்தமும் தொலைந்து போனது பெண்மை.
விரலை தொடர்ந்து அர்ஜுனின் இதழ்களும் குட்டி குட்டி முத்தம் வைக்க, மயிரிழைகள் சிலிர்த்து அடங்கியது இலக்கியாவிற்கு. அர்ஜுனின் இந்த திடீர் பரிமாணத்தில் விழித்தவள், அவன் கன்னம் பற்றி அவனின் முத்த வேட்கையை நிறுத்தினாள்.
"இலக்கியா..." ஏமாற்ற குரலோடு அர்ஜுன் கண் விழிக்க அவளும் இளகவில்லை.
"என்ன பண்றீங்க?"
"உனக்கு வலிச்சிருக்கும்ல அதான் ஒத்தடம் குடுக்குறேன்" என்றோ செய்த தவறுக்கு இன்று மன்னிப்பு கேட்க துவங்கினான் மருத்துவன், வாகாக அவளை நெருங்கி அமர்ந்தவன் அவளில் வாசம் பிடிக்க, வீட்டிற்கு வந்தவள் குளித்திருந்தது வாசமாக இருந்தது.
"சார்..."
அவளின் எதிர்வினை பார்த்தவன் ஏமாற்றமாக, "என்னடி?" என்றான் சலிப்பாக அவளை ஏக்கமாக பார்த்து.
"உங்க எண்ணம் மாறிடுச்சா?"
"எந்த எண்ணம்?"
"பிடிக்கல சொன்னிங்க" புரிந்தது அர்ஜுனுக்கு மனைவியின் எண்ண போக்கு, அவள் இன்னும் அவனின் அர்த்தமற்ற பேச்சுகளிலிருந்து வெளிவரவில்லை. தெளிய வைக்க இறங்கினான்.
"இப்போ பைத்தியம் பிடிக்கிற அளவு புடிக்கிது" உண்மையாக அவள் கண்ணிலிருந்து பார்வையை அகற்றாமல் கூறினான்.
இலக்கியா, "நான் வெறும் நர்ஸ் தானே"
அர்ஜுன், "இருக்கட்டுமே. டாக்டர் வெறும் டிரீட்மென்ட்க்கு தான். நர்ஸ்சம்மா தான் கேர்க்கு. டிரீட்மென்ட்க்கு நான் இருக்கேன், நீ கேர் பண்ணு"
இலக்கியா, "நாளைக்கே இந்த எண்ணம் மாறும்ல. யாரோ ஒருத்தர் என்ன அர்ஜுன், டாக்டர் பொண்ணு இல்லையானு கேட்டா இந்த கோவம் திரும்ப வரும்ல"
அர்ஜுன், "நான் நர்ஸ் கட்டுறேன், இல்ல நர்ஸ் அம்மாவை கட்டுறேன் உனக்கென்னடா புண்ணாக்குனு கேப்பேன்"
அவனது தீவிரமான பதிலில் அழுதுகொண்டிருந்தவள் அழுகையோடு சிரிக்க அர்ஜுன் இதழிலும் புன்னகை.
"பேச்சு மாற மாட்டீங்க தான?"
"உயிரே போனாலும் மாற மாட்டேன்" மின்னலாக பளிச்சிட்டது அவள் கண்கள்.
"அந்த ஆள் அன்னைக்கு என்கிட்ட பண்ணதை..."
"வேணாம் இலக்கியா, அதை பதியே பேசாத. நான் குடுத்த தண்டனையை விட தாத்தா அவனுக்கு அதிகம் குடுத்துட்டாரு. உன் பக்கத்துல இருந்து ஆறுதல் சொல்ல கூட முடியாம என்னோட ஈகோவால கீழேயே நின்னுட்டு போய்ட்டேனு இப்போ நினைச்சாலும் அசிங்கமா இருக்கு. நீயும் அதை மறந்துடு" என்றான் அவள் கன்னம் வருடி.
அவளும் அதிலிருந்து கிட்ட தட்ட மீண்டு வந்துவிட்டாள் தான், இருந்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது பேச்சாக கூடாதென அவள் தயங்கியதற்கு காரணம் அர்ஜுன் அவ்வளவு கீழ் இறங்கி போக மாட்டான் என்கிற நம்பிக்கை.
அதனை தொடர்ந்து நெடுஞ்செழியனோடு நிகழ்ந்த சந்திப்பை நினைத்தவள், "அன்னைக்கு செழியன் கூட நான் பேசுனது..."
அவளை இடைமறித்து, "உன் மேல சந்தேகப்படுற அளவு என்னைக்கும் நீ இருந்ததில்லை. அவன் உன் கைய புடிச்சிருந்தது எனக்கு தப்பா படல, சந்தேகம் கூட வரல. இன்பேக்ட் நான் அங்க நிக்கிறது உன்ன சந்தேகப்படுற மாதிரி ஆகிடும்னு தான் போனேன்"
இதழ் துடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள், "இப்டி எல்லாம் பேசாதீங்க" என்றாள்.
"எதுக்கு?" என்றவன் அவளது கண்ணீரை மிருதுவாக துடைத்தான்.
"எனக்கு உங்கள ரொம்ப பிடிக்க ஆரமிச்சிடும்"
அவளது பதிலில் அட்டகாசமாக சிரித்தவன், "அப்போ இதுக்கு முன்னாடி பிடிக்கல?"
"அப்போ பிடிச்சது தான். இப்போ ரொம்ப பிடிக்கிது" என்றாள் மறைக்காமல்.
ஆசையாக மனைவியை பார்த்தவன் அழுத்தமாக அவள் கன்னத்தில் முத்தம் வைக்க கண் மூடி அவனின் முதல் ஆத்மார்த்தமான முத்தத்தில் கிறங்கி மயங்கி போனாள்.
"எதுக்குடி எனக்கு உன்ன இவ்ளோ பிடிக்கிது? எப்படி எல்லாம் எனக்கு வர்ற பொண்ணு இருக்க கூடாதுனு நினைச்சேனோ அதோட மொத்த உருவமா இருந்த உன்ன, இன்னைக்கு இவ்ளோ தூரம் நினைக்கிறன். எதுக்கு? இந்த கண்ணா, இல்ல என்னோட மனசா செயல்படுற உன்னோட மனசா?"
இதற்கு என்ன பதில் கூற முடியும், அவனுக்கு தன் மேல் பிரியம் உருவாகிவிட்டது என்பதே அவளை தரையில் நிற்கவிடவில்லை. உல்லாசமாக மாறியது அவள் உடலே.
ஒற்றை வார்த்தையால் அவளுடைய உலகத்தையே அழகாக்கும் யுக்தியை எப்படி கண்டானோ, அவள் மகிழ்ச்சிக்கு இப்பொழுது அளவே இல்லாமல் போனது.
அவள் நடக்கவே நடக்காது கணவாய் தான் முடியுமென எண்ணிய வாழ்க்கை இப்பொழுது கொத்து கொத்தாய் மலர்களை பூத்து குலுங்கும் அழகில் பேரானந்தம் பெண்ணுக்கு.
அவள் காதல் கைகூடிவிட்டது. கை சேர்ந்துவிட்டது. அவன் கைகளிலும் சேர்ந்தாயிற்று. காதலில் தகித்த அவளது மனமானது இன்று குளிர துவங்கிவிட்டது.
"சொல்லு என் மேல உன்னோட பீலிங்ஸ் என்னனு"
"அப்டிலாம் எதுவும் இல்ல" உடனே ஒரு பொய்யை வைத்தாள் கூச்சத்தை மறைக்க.
"சொல்ல மாட்ட?" கண் சுருக்கி அர்ஜுன் இலக்கியாவை பார்க்க பலமாக தலையை ஆட்டினாள்.
"எப்டி வாங்கணுமோ வாங்கிக்கிறேன். இப்போ தூக்கம் வருதா உனக்கு?" அவள் இல்லை எனவும் எழுந்து மனைவியோடு வெளியே வந்தவன் அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர கூறினான் மனைவியிடம்.
"நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும் நீங்க"
"டியூட்டி மாத்தி விட்டுட்டேன். உனக்கும் லீவ் தான். வா" அவளை அமர வைத்தவன் அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.
ஊரே உறக்கத்தில் இருக்க, இவர்கள் இருவருக்கும் நிலவும் நட்சத்திரங்களும் குடைபிடித்து துணைக்கு நின்றனர். வெப்பமில்லாமல் குளிருமில்லாமல் இதமான இரவு பொழுது.
அவன் மேல் இன்னும் உரிமை பிறக்காமல் கையை சங்கடமாக ஒரு பக்கமும் வைத்திருந்தவளது இடது கையை எடுத்து தன் மார்போடு வைத்துக்கொண்டான். வெளியில் வரும் பொழுதே சட்டையை அவிழ்த்திருக்க, பெண்ணுக்கு கூச்சமாக இருந்தது.
"இந்த செடி எல்லாம் யார் வைக்கிறது?"
அவளை திசை திருப்ப பூகைளை பேச்சில் இழுத்தான். சுற்றிலும் ஒவ்வொரு வகையான பூக்கள் செடிகள் என கண்ணுக்கு குளுமை தான்.
"அப்பா தான். அம்மாக்கு இதெல்லாம் பிடிக்கும். அதுலயும் அங்க பாருங்க சங்கு பூ. எங்ககிட்டையே அஞ்சு கலர்ல இருக்கு. இன்னும் ஒரு கலர் மட்டும் வாங்கணும்"
"உன் கான்ட்ரிபியூஷன் இல்லையா?"
"ஏன் இல்லாம, வாங்கிட்டு வர்றது தான் அப்பா. தொட்டில வைக்கிறது எல்லாம் நான் தான். என் கைக்கு செடி ரொம்ப நல்லா வரும்னு சொல்லி அப்பா என்ன தான் வைக்க சொல்லுவாங்க. நான் ஒரு நேரம் தண்ணி விடுவேன், அப்பா ஒரு நேரம் விடுவாங்க"
என்றவள் தங்களுக்கு எதிரே இருந்த ஒரு செடியை காட்டி, "இது காஸ்மோஸ். எல்லோ, ரெட், ஆரஞ் மூணு கலர்ஸ் இருக்கும். எனக்கு ரெட் தான் கிடைச்சது. தரைல வச்சா தான் நல்லா வரும்னு சொன்னாங்க. நான் வளர்த்து காட்டுறேன்னு சொல்லி வாங்குனேன். அதே மாதிரி தான் சூரிய காந்தி செடி அங்க இருக்கு. மொட்டு விட்ருச்சு சார்"
இதனை வெற்றிகரமாக வளர்க்க அவள் எடுத்த நடவடிக்கைகளை வரிசையாக மகிழ்ச்சி பொங்க அவள் கூற, மனைவியை மெய் மறந்து பார்த்தான் அர்ஜுன்.
இத்தனை வருடங்கள் அவன் அறிந்த இலக்கியா, இந்த உலகம், ஏன் அவள் தந்தை அறிந்த பெண் இல்லை இவள்.
அவளுள் சொல்லப்படாத ஆசைகள், மறைத்து வைத்திருக்கும் எண்ணங்கள், பகிரப்படாத நிகழ்வுல்கள் என பல புதைந்த மெல்லிசை கவிதைகள் உள்ளதென மெல்ல உணர்ந்தான் அர்ஜுன்.
"செடி, ஸ்டார்ட். அப்டினு சொன்னா இந்த டேப் நிக்காது போலயே" தன்னை கேலி பேசிய அர்ஜுனை மெல்ல அடித்தவள், "நீங்க தான கேட்டீங்க" என்றாள்.
"கேட்டேன் தான். அதை விடு, நீ பேசுறதை பத்தி எல்லாம் வச்சு பாத்தா அறிவான புள்ள மாதிரி தான் இருக்குற. அப்றம் ஏன் எம்.பி.பி.எஸ் எடுக்கல? டுவல்த்ல எவ்ளோ மார்க்?"
"1177" என்றாளே பார்க்கலாம், அர்ஜுன் அதிர்ந்து எழுந்தே அமர்ந்துவிட்டான்.
"பயோ-மேக்ஸ் குரூப்பா?"
இலக்கியா, "ஆமா"
அர்ஜுன், "மெடிக்கல் கட் ஆப்?"
இலக்கியா, "197.50"
அவனால் நம்பவே முடியவில்லை, "பொய் சொல்ற தான, நான் கூட 191 தான். எப்படி டி?"
"இருங்க" உள்ளே சென்று தன்னுடைய சான்றிதழை எடுத்து நீட்டினாள்.
"ஸ்கூல் டாபர் நான். மெடிக்கல் சீட் கிடைச்சது. ஆனா சிக்கல் எனக்கு கிடைக்க வேண்டிய சீட் சென்னைல போடுறதுக்கு பதிலா கோயம்பத்தூர்ல மாத்தி போட்டுட்டாங்க. கேட்டு பாத்தோம் மாத்தி தர முடியாதுனு சொல்லிட்டாங்க"
அர்ஜுன், "ஏன் கோயம்பத்தூர் போயிருக்கலாமே"
சங்கடமாக நெளிந்தாள், "ஹாஸ்டல்க்கு பணம் கட்ட அப்பாவால முடியாது சார்" வேதனை மறைத்து அவள் சிரித்தது அர்ஜுன் இதயத்தில் குத்தியது.
"யார்கிட்டையாவது பணம் கேட்ருக்கலாமே" தோள்களை குலுக்கினாள்,
"அப்பா அவரோட ஆபீஸ் ஓனர்கிட்ட பேசுனாங்க. பிடி குடுத்து பேசல அவர். அவரோட பொண்ணு என் செட் தான். அவங்களுக்கு சீட் கிடைக்கல அந்த கோவமோ என்னவோ. நர்சிங் வேணா சிபாரிசு பன்றேன்னு சொன்னார்"
"அதுக்காக உன்னோட கனவையே விட்டுட்டியா இலக்கியா? எவ்ளோடி ஆகிருந்திருக்கும் ஹாஸ்டல் பீஸ்? அதை நீ ஒரே வருசத்துல அடைச்சிருக்கலாமே"
தகுயிற்ற பலர் அந்த பட்டத்தை தலை மேல் வைத்து சுற்றும் பொழுது, அதற்கு முழு தகுதியுடைய பெண் வேடிக்கை பார்த்து வந்திருக்கிறாள் என்பது அர்ஜூனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளது நிலையை கேட்ட பிறகு தானே இந்த படிப்பிற்கு தகுதியற்றவனாக தெரிந்தது.
"எல்லாம் யோசிச்சேன் தான். அந்த நேரம் அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடியாம போக ஆரமிச்சது சார். என்னோட சுயநலத்துக்காக அவரை அப்டியே விட்டு போக மனசு வரல.
நான் கூட இல்லனா வேலை அதிகமா செஞ்சு என்ன படிக்க வைக்கணும்னு அவர் ரொம்ப கஷ்டப்படுவார். எனக்குன்னு இருக்க என் ஒரே உறவு அவரை கஷ்டப்படுத்த என் கனவு கூட காரணமா இருக்க கூடாதுனு நினைச்சேன். தப்பில்ல தான?"
சராசரியாக தந்தை மேல் உண்மையான பாசம் வைத்திருக்கும் எந்த மனிதனும் யோசிக்கும் எண்ணம் தான் மனைவிக்கும் வந்ததென புரிந்தவன் தலை மறுப்பில்லாமல் தலை ஆட்டியது. இருந்தும் மனம் மட்டும் அமைதியாகவே இல்லை.
அவளது குணத்திற்காக, நல்லெண்ணங்களுக்காக இறைவன் கொடுத்த சோதனை அர்த்தமற்றதாக தோன்றி மனதை அரித்தது. உறங்கலாம் என படுத்தவன் அங்கு அருகிலே மனைவியை படுக்க வைத்து யோசனையோடு படுத்திருக்க தன்னையும் மீறி உறங்கியிருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro