Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா - 14


தூரத்தில் காயும் நிலவின் ஒளியானது அந்த அமைதியான தாழ்வாரத்தில் நின்றிருந்த பிரகாஷின் நிழலை அவன் முன்னிருந்த ஆபரேஷன் தியேட்டர் கதவில் பெரிதாய் உருவகப்படுத்தி காட்டியது. 

ஒரு நிமிடம் கூட அப்படியே நிற்க முடியவில்லை. மீண்டும் அங்கும் இங்கும் நடந்தவன் முகம் வெளிறி போய் இருந்தது. திடீரென அவன் மனைவி ஏதோ செய்வதாக கூற, பதறி மருத்துவமனை அழைத்து வந்திருந்தான். 

ஒரு மாதத்திற்கு முன்பு தான் மூளையில் அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அதுவும் வயிற்றில் அவன் சிசுவோடு. 

இன்று மீண்டும் இதோ மருத்துவ வாசம். ஒரு பக்கம் உயிரே போய்க்கொண்டிருந்தது வளர்ந்துக்கொண்டிருக்கும் அவனது குடும்பத்தை எண்ணி. 

கதவு திறக்கும் சத்தம் கேட்க பிரகாஷின் நடை அப்படியே நின்றது. அர்ஜுன் இவனை நோக்கி தான் நடந்தான், இன்னும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உடையில் தான் இருந்தான். 

"டாக்டர், இப்போ என் வைப், பேபி ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?" கண்கள் கெஞ்சியது எனக்கு சாதகமான பதிலை கொடு என. 

அர்ஜுனின் முகம் அமைதியாக அதே சமயம் தீவிரமாக இருந்தது. அவனின் குரல் கூட அளவெடுத்து தான் வந்தது. 

பானு தான் பேசினார் நிதானமாக, "உங்க வைப்க்கு ஒடனே சி-செக்ஷன் பண்ணனும் பிரகாஷ். Late-stage preeclampsia வந்திருக்கு. அதாவது பிளட் பிரஷர் அதிகமாகிடுச்சு, அதுனால மதர், பேபி ரெண்டு பேருக்கும் ஆபத்து" 

பிரகாஷ் கண்கள் விரிந்து கைகள் நடுங்கியது, "அவ நல்லா தானே இருந்தா அந்த ஆக்சிடென்ட்க்கு அப்பறம். எப்படி டாக்டர்?"

அர்ஜுன் இன்னும் அவனை நெருங்கி வந்தான், "ஆரம்பத்துல அவங்க நல்லா தான் இருந்திருப்பாங்க பிரகாஷ். சர்ஜெரி சாதாரண விஷயம் இல்ல, உடம்புல அதிகமா ஸ்ட்ரைன் பண்ணும், வெளிய ரெக்கவர் ஆகுற மாதிரி தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள ரொம்ப எமோஷ்னலா பீல் பண்ணிருக்காங்க போத் பிஸிக்கலி அண்ட் மென்டல்லி. 

உங்க சரவுண்டிங் வச்சு பாக்குறப்போ யாரும் இல்லாதது கூட அவங்க இந்த நிலைமைக்கு ஒரு காரணமா இருக்கலாம். அதோட வெளிப்பாடு தான் இந்த அதிக பிரஷர்" 

பார்வையை வேறு பக்கம் திருப்பி கண்களை சிமிட்டி கண்ணீரை உள் இழுத்துக்கொண்டான், வலுவாக இருப்பது போல் காட்டிக்கொள்ள தோற்றுக்கொண்டிருந்தான். 

"பேபி. என் பேபி?" 

"பேபிக்கு எந்த பிரச்னையும் இல்ல பிரகாஷ்" என்றார் பானு ஒரு நல்ல செய்தியாவது அவனுக்கு கொடுத்திட வேண்டும் என, "நயன் மந்த்ஸ் ஆகிடுச்சு, வெயிட் மட்டும் தான் கொஞ்சம் கம்மியா இருக்கும். மத்தபடி பேபிய வெளிய எடுத்தாலும் பிரச்சினையில்ல, இன்குபேட்டர்ல வச்சு பாத்துக்கலாம்" என்றார். 

கொஞ்சம் நிம்மதி மூச்சு விட்டவனுக்கு மீண்டும் மனைவியை எண்ணி வருத்தம் தோன்றியது, "என் வைப்? அவங்க?" 

"இப்போதைக்கு அவங்கள ஸ்டேப்பில் பண்ணிருக்கோம். அதே நேரம் முழுசா அவங்க நார்மல்னு சொல்ல முடியாது. அடுத்த 48 ஹௌர்ஸ் கிரிட்டிகல் தான். 

Preeclampsia வோட பாதிப்பு எல்லா உறுப்புகளையும் இருக்கு. முக்கியமா கிட்னி. அவங்கள ரொம்ப கிளோஸா தான் மானிடர் பண்ணிட்டு இருப்போம். 

அவுட் ஆப் டேஞ்சர்னு சொல்ல முடியாது, ஆனா முடிஞ்ச அளவு கண்டிப்பா நாங்க அவங்கள பாத்துக்குவோம்" 

சிகையில் கைகள் விட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான் பிரகாஷ், அர்ஜுனின் வார்த்தை இன்னமும் காற்றின் கனத்தை அதிகரித்தது. 

"ரொம்ப கஷ்டபட்டுடா. இதை அவளால தாங்கிக்க முடியாதே டாக்டர்" 

பிரகாஷ் தோளில் தட்டினான் அர்ஜுன், "ஷி இஸ் எ ஃபைட்டர். ஏற்கனவே ஒரு தடவ போராடி வந்தாங்க பிரகாஷ். இப்பவும் வருவாங்க. நம்பிக்கையா இருங்க. அவங்க முழிச்சு வர்றப்போ நீங்க தைரியமா அவங்க பக்கத்துல நிக்கணும்" 

பிரகாஷ் தலை அசைக்க அவனை மீண்டும் ஒரு முறை பார்த்து உள்ளே சென்றான். பிரகாஷ் நிலை மிகவும் மோசமாக தான் இருந்தது. 

இரவு உறக்கத்திற்கு செல்லும் முன்பு அர்ஜுன் ஒரு புத்தகத்தை எடுத்து அமர்ந்த சமயம் தான் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்திருந்தது. 

 மனைவி உறங்குவதை பார்த்து அவளுக்கு ஒரு செய்தியை மட்டும் தட்டிவிட்டு இவன் வேகமாக கிளம்பி வந்திருந்தான். 

இதோ சிகிச்சைக்கு அடிக்கடி அர்ஜுன் ஐ.சி.யு சென்று பார்த்து வர, இவள் ஒரு பக்கம் வேலையில் இறங்கிவிட்டாள் பானுவின் துறையில். 

இன்று காலை ஒருமுறை அந்த பெண்ணை பரிசோதித்தவன் பிரகாஷிடம், "வைட்டல்ஸ் ஸ்டேபில்லா இருக்கு. ஆர்கன் ப்பைய்லியர் எதுவும் இல்ல. அதுவே ரொம்ப நல்ல விஷயம் தான். இன்னும் பிரஷர் மட்டும் குறையல, மெடிசின் வச்சு குறைக்க பாக்குறோம். அவங்க ஹோல்ட் ஆன் பண்றங்க பிரகாஷ்" 

சிறிய முறுவலோடு அர்ஜுன் அன்று அவ்விடம் விட்டு வந்தான் பிரகாஷிடம் சிறிது நம்பிக்கை தென்படுவதை பார்த்து. 

வீட்டிற்கு அவன் வந்த பொழுது இலக்கியா மருத்துவமனையில் இருந்தாள். பிரகாஷ் மனைவியை பிரசவ பிரிவில் சேர்த்திருந்தமையால் அர்ஜூனால் மனைவியை வரும் பொழுதும் பார்க்க முடியவில்லை. 

வீட்டிற்கு வந்த பிறகு முழுதும் அவள் நினைவு தான். ஏனோ இரண்டு நாட்களாக இவள் அமைதி சற்று வித்யாசமாக படுகிறது அவன் கண்களுக்கு. 

அவனே சென்று பேசினாலும் கூட கேட்பதற்கு பதில் கூறுவதோடு நிறுத்திக்கொண்டாள். 

அவளை, அவன் மனைவியை தேற்றி பிறகு அவளோடு வாழ்வதா வேண்டாமா என்பதை பற்றி மட்டுமே அர்ஜுனின் சிந்தனை. 

அப்படி தான் அவன் அன்று நண்பனின் வீட்டிலிருந்து வந்த பொழுது எண்ணி வைத்திருந்தது. 

ஆனால் இந்த ஒரு மாத காலத்தில் அவனை அவளுக்கு அதிகம் பழக்கியிருந்தாள் அவன் நர்ஸ் பெண். 

இதோ வீட்டிற்கு வந்து காலை உணவை எடுத்து உண்ணும் பொழுது கூட அருகில் அவளை தேடும் கண்களை என்ன தான் கூறுவது? 

'ரொம்ப பழக்கிட்டா, முடக்கண்ணி' நின்றவாக்கிலே உண்டு முடித்தவன் உறக்கத்தில் அப்படியே சென்று படுத்துவிட்டான். 

மீண்டும் எழுந்து பார்க்கும் பொழுது மணி மூன்றை தொட்டிருந்தது. உண்டு பார்த்தவன் உடனே தெரிந்த்துக்கொண்டான் இது இலக்கியாவின் தயாரிப்பு இல்லை என. 

ஜோனா மதிய நேரத்திற்கு உணவு செய்து வைத்து சென்றிருந்தார் போல. 

'இவ சாப்பாடு எடுத்துட்டு போகலையா? மதியம் என்ன பண்ணிருப்பா?' அவனே சென்று கேட்கவும் மனம் வரவில்லை, பேசாமல் செல்பவளை இழுத்து பிடித்து தானாக இறங்கி செல்ல தோன்றவில்லை. 

அவளே வந்து பேசட்டும் என இருந்தான். அதுவும் நடந்தது. இரவு இருள் கவ்விய பிறகு ஏழு மணி போல வந்த இலக்கியா அவள் கணவன் கையில் புத்தகத்தோடு அமர்ந்திருப்பதை பார்த்து சுர்ரென கோவம் ஏறியது. 

புத்தகத்தை வெறித்தவள், "எவ்ளோ படிச்சு என்ன யூஸ் சார், கடைசில டாக்டர்ஸ் டூ மேக் மிஸ்டேக்ஸ்ல?" அவனிடம் நேரடியாக சண்டைக்கு அழைப்பு விடுத்திருந்தாள். 

புத்தகத்தை நிதானமாக ஓரம் தூக்கி வைத்தான் ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்து, "என்ன மிஸ்டேக் யார் பண்ணாங்க?" 

இலக்கியா, "சந்தேகமே வேணாம். நீங்க தான் சார். காலேஜ்ல டிஸ்டின்க்ஷன் வாங்குன நீங்க தான்" 

"என்ன மிஸ்டேக்?" 

இலக்கியா, "அந்த ஜனனி பொண்ணு கேஸ் தான். குழந்தையை பாக்க கூட குழந்தையோட அம்மா இல்ல. இப்போ மதியம் பிட்ஸ் வந்துடுச்சு" 

"இது நார்மல் தான்" என்றான் அமைதியாக. 

"எல்லாமே உங்களுக்கு அசால்ட்டு தான? நீங்க டாக்டர் சார், ஆனா அவங்க அப்டி இல்ல. அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் சாதாரண மனுஷன், அந்த பொண்ணு ஒரு நோயாளி. இதை எல்லாம் தாங்கிகிற மனநிலை அவங்களுக்கு இல்ல" தானே அந்த வேதனையை அனுபவிப்பது போல் அவள் முகமே தவித்தது. 

"அன்னைக்கே ஆபரேஷன் தியேட்டர்ல வச்சு எத்தனை தடவை கேட்டேன் பேபிக்கு இதுனால எந்த பிரச்னையும் இல்லையேன்னு?" 

மெல்ல சிரித்தான் அர்ஜுன், "இப்ப என்ன சொல்ல வர்ற, நீ சொல்றதை நான் கேட்கணுமா? நீ நர்ஸ் தான் இலக்கியா. என்னமோ ஹாஸ்பிடலோட ஸ்டார் மாதிரி இவ்ளோ ஏன் பேசணும்?" 

"டாக்டர் நீங்க தான் ஸ்டார்ஸ். அப்றம் ஏன் சார் தப்பு நடக்குது? அன்னைக்கே நீங்க பேபிய ஆபரேட் பண்ணி எடுத்திருந்தா அந்த பொண்ணுக்கு இவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆகியிருக்காது, அந்த பச்சை குழந்தைக்கும் அவ அம்மா பக்கத்துல இருந்திருப்பாங்க" 

அர்ஜுன், "யார் என்ன பண்ணனும்னு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல இலக்கியா. உன்னோட ரோல் எதுன்னு நியாபகம் வச்சுக்கோ. வி டாக்டர்ஸ் கிவ் ஆர்டர்ஸ் அண்ட் யு நர்ஸ் அதை அப்படியே செய்யணும் அவ்ளோ தான்" 

வேதனையோடு விரிந்தது அவள் அதரங்கள், "நீங்க தப்பு செஞ்சதை சொல்லி காட்டுனா எங்க ரோல் இதுனு சொல்லி வாயடைச்சிடனும்" 

"உனக்கு அறிவு அவ்ளோ தான். நீ சொன்ன எதுவுமே பாசிபிள் இல்ல. பேபிக்கு corticosteroids டெவலப் ஆகல அப்பயே பேபிய எடுத்திருந்தா லங்ஸ்ல பிரச்சனை வரும்" 

"எத்தனை பேபிஸ் செவந்த் மந்த்ல பிறக்குது அவங்களுக்கெல்லாம் இந்த பிரச்சனை இல்லையே சார். நீங்க மனசு வைக்கல. உங்க பக்கம் அந்த பொண்ணுக்கு சர்ஜரி பண்ணி நீங்க பெரிய டாக்டர்னு காட்டணும். அதுக்கு தான் இவ்ளோ பெரிய ட்ராமா" 

"உன் லிமிட் மீறி போறடி. என்ன பத்தியே பேச உனக்கு உரிமை இல்ல, இதுல உனக்கு கொஞ்சமும் தகுதியே இல்லாத என்னோட வேலைய பத்தி பேசவே பேசாத" வெகுவாக அடிபட்டது பெண்ணின் மனம். 

மீண்டும் பேச்சு சுதந்திரத்தை அதிகம் பயன்படுத்தி அதில் மீண்டும் தவறு செய்தது உணர்ந்தவன் மன்னிப்பையும் கேட்க தயாராகவில்லை, "சரி இதை விடு. ரியாலிட்டிக்கு வருவோமா? நீயே சொல்லு உன்னோட சரவுண்டிங்ஸ்ல எந்த டாக்டராவது டாக்டர் இல்லாத லைப் பார்ட்னரை ச்சூஸ் பண்ணி நீ பாத்துருக்கியா? 

அப்டி மாறி நடந்தா சுத்தி இருக்குறவங்க எப்படி பேசுவாங்க உனக்கே தெரியும். சாதாரண டாக்டர்கே அப்டினா என்ன பத்தி யோசிச்சு பாரு, என்ன சுத்தி இருக்குறவங்க, இவன் இப்டி தான், இந்த மாதிரி அழகான பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பான், அவளோட குடும்பம் பெரிய இடமா இருக்கும் இப்டி எல்லாம் நிறையா எக்ஸ்பக்டேஷன்ஸ் வச்சிருப்பாங்க" 

"இது அவங்க எக்ஸ்பக்டேஷன்ஸ் இல்ல உங்களோடது" மொத்தமாய் அர்ஜுன் அமைதியானான், அவனுக்கும் உள்ளுக்குள் இருந்த ஏமாற்றம் இன்னும் முழுமையாக போகவில்லையே. 

இந்த எண்ணங்கள் இந்த ஒரு மாத காலமாக போனதாக தான் அவன் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட நினைத்தது. தன்னுடைய எதிர்பார்ப்புகளை தூரம் வைத்து மீண்டு வரும் நேரம் அவனது மறைந்த சிந்தனைகளை, ஆற்றாமையை இன்று மீண்டும் இழுத்து வந்ததே தான் தான் என்பது பெண்ணவள் உணரவில்லை. 

"பாத்தியா, ஒரு இடத்துல கூட நீ என்ன புரிஞ்சுக்கல. முக்கியமா இந்த வாக்குவாதம் ஆரமிச்சம் இடம். நீ டாக்டரா இருந்தா இந்த ஆபரேஷன்ல இருக்க காம்ப்ளிகேஷன்ஸ் எல்லாம் புரிஞ்சு இப்டி கேள்வி கேட்டு சண்டை போட்ருக்க மாட்ட. 

காரணமே இல்லாம சண்டை போட்டு உயிரை வாங்குற. இதுக்கு தான்டி உன்ன வேணாம்னு தலைப்பாடா அடிச்சு சொன்னேன். கேட்டாங்களா. ச்சை" எரிச்சலில் தலையில் அடித்துக்கொண்டான். 

தன்னை துச்சமென கருதும் அவனது பேச்சில் மனமுடைந்து போனவளுக்கு அழுகை பெருகியது. படிப்பு, அழகு தான் ஒருவரின் வாழ்க்கையையே தீர்மானிக்கும் சக்தி கொண்டுள்ளது போல. 

உண்மையான அன்பு, பாசம், நேர்மைக்கு எல்லாம் இவ்வுலகில் இடமில்லை என்பதை மீண்டும் அவள் முகத்தில் அறைந்து. 

"எனக்கு தெரியும் உங்களுக்கோ உங்க குடும்பத்துக்கோ நான் எந்த வகைலயும் ஏத்தவ இல்ல தான்" 

இந்த பித்து பிடித்த காதல் மட்டும் இல்லை என்றால் இவனிடம் தன்னையே தோற்று நிற்கும் இந்த நிலை வந்திருக்காதே என்பதிலே அவளுக்கு கண்ணீர் முட்டி நின்றது, "அதுக்காக நீங்க என்ன இவ்ளோ கேவலமா நடத்தணும்னு அவசியம் இல்லங்க" 

அவனுக்கு பதில் கொடுத்து குளியலறை சென்று உடையை மாற்றி விட்டு வாசல் நோக்கி இலக்கியா செல்ல வேகமாக எழுந்து நின்றான் அர்ஜுன், "எங்க போற" என்னும் கேள்வியோடு. 

நின்றுவிட்டாள் அர்ஜுனை பார்த்து. உதட்டில் சிறு கசந்த புன்னகை, வருத்தத்தின் அளவுகோலோடு, "கண்டிப்பா சாக மாட்டேன். என் அப்பாவை பாக்க போறேன். என் வருத்தத்துக்காக பாக்காம, எனக்காக மட்டுமே வாழுற என் அப்பாவுக்காக ஆவது நான் உயிரோட இருக்கணும்ல"

வாசலை திறந்து சென்றவள் முதுகை வெறித்து அமர்ந்திருந்த அர்ஜுனின் மனம் கதறியது, 'ஒரு சாரி சொல்லிடு அர்ஜுன், அவளை போக விடாத' என்று. 

அவனுள் இருந்த மருத்துவரின் அகம்பாவம் விடவில்லை. தன் மேல் அவள் இல்லாத குற்றத்தை எல்லாம் சுமத்தினாள், இவளிடம் நான் சென்று சமாதான வார்த்தைகளை உதிர்க்கவா என்கிற அழுத்தம் அவனை நிறுத்தியது.

இருந்தும் வாயில் வரை செல்வதும், வருவதுமாக இருந்தான். அவள் சென்று பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியது. என்ன செய்வதென புரியாமல் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தவன் கண்களுக்கு மனைவியின் கைபேசி கிடைத்தது. 

அவளை சென்று பார்ப்பதற்கு அது ஒன்று போதுமே. ஓடினான் அந்த இரவில் அவளை தேடி. நாளை காலை மருத்துவமனையில் கூட ஒப்படைக்கலாம் என்பதும் மறந்தான். 

காரணம் எப்பொழுது வேணாலும் விழ நான் தயார் என நின்ற அவளது கண்ணீர் துளிகளின் தாக்கமும், அந்த கருவிழிகளின் வேதனையும்.

அவளது இல்லம் சென்றதில்லை, ஓரளவிற்கு பெற்றோர் பேசி, இவள் பேசி கேட்டதை வைத்து விசாரித்து சென்றுவிட்டான். வெறும் கையேடு செல்ல விரும்பாமல் சில பழ வகைகளை வாங்கிக்கொண்டான் வரும் வழியிலேயே. 

அவனுக்காக எதேச்சையாக வாயிலிலேயே மணிகண்டன் நின்றார். இரவு டியூட்டி போல. வராத மாப்பிள்ளையை, அதுவும் இரவு ஒன்பது மணிக்கு மேல் பார்க்கவும் துள்ளி குத்திக்காக குறையாக ஓடி வந்தார். 

"வாங்க வாங்க மாப்பிள்ளை, இலக்கியா வரலையா?" வாகனத்தினுள்ளே கண்கள் தன்னாலே தேடி, அவள் இல்லை எனவும் உடனே வாடிய அவரது முகத்தை பார்த்ததும் சற்று நேரம் முன்பு மனைவி கூறியது நினைவு வந்தது. 

அந்த கண்களிலே அத்தனை பாசம் தெரிந்தது அவரின் மகள் மேல்.கூடவே பயம் ஏன் அவள் இன்னும் வரவில்லை என. அவன் கணக்கின்படி அவள் வந்து குறைந்தது கால் மணி நேரமாகியிருக்க வேண்டும். 

"இல்ல இங்க தான் வர்றதா சொன்னா" என்றான் திருதிருத்து. 

"அப்டியா, இருங்க மாப்பிள்ளை நான் போன் அடிக்கிறேன்" அவர் கைபேசியை எடுத்து, "நீங்க உள்ள வாங்க" என்றார் மாப்பிள்ளையை விட்டுவிடாமல். 

"இல்ல அவ போன் என்கிட்ட இருக்கு" தந்தை சிரித்துக்கொண்டார், "புள்ள பஸ் ஸ்டாப்ல தான் இருப்பா. இங்க ரெண்டு தெரு தள்ளி ராத்திரி நேரத்துல கொஞ்சம் நாய் தொல்லை அதிகம் மாப்பிள்ளை. அதுக்கு பயந்துட்டே பஸ் ஸ்டாப்ல நின்னுடும். நீங்க வாங்க நான் உங்களுக்கு வீட்டை காட்டிட்டு போய் கூட்டிட்டு வர்றேன்" 

அவன் அவ்விடத்தை தாண்டி தானே வந்தது, ஆள் நடமாட்டமே இல்லையே. அவரை விட அவனுக்கு இப்பொழுது இலக்கியாவை பார்க்கும் வேகம் வந்தது, "இல்ல நீங்க இருங்க, நான் பாக்குறேன்" அவரை யோசிக்க கூட விடாமல் இவனே சென்றான். 

வாகனத்தில் ஏறி அமர்ந்தவன் நேரத்தை பார்க்க ஒன்பது நாற்பதை தாண்டியிருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் கூட அதிகம் இல்லை. பேருந்து நிறுத்தம் வர, அங்கு அமர்ந்திருந்தாள் அவன் மனைவி. 

கைப்பையை நெஞ்சோடு அணைத்து, கால்கள் இரண்டையும் ஆட்டிக்கொண்டிருந்தவள் கண்கள் இரண்டும் பயத்தில் எந்நேரமும் சுதாரிப்பாக இருந்தது. 

அர்ஜுனின் வாகனம் அவள் முன்பு வந்து நிற்க அதனுள்ளே அமர்த்திருந்தவனை கண்ணாடி வழியே பார்த்தவள் உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள். 

சுற்றி ஒருவர் கூட இல்லை, கும்மிருட்டாக தனியாக அமர்வதற்கு முற்றிலும் பொருத்தமில்லாத இடம். வாகனத்திலிருந்து இறங்கி அவளை நெருங்கி வந்த அந்த மூன்று நொடிகளுக்குள் மனைவியை தலை முதல் கால் வரை ஆராய்ந்துவிட்டான். 

கோவத்தில் புடவையை கூட நேர்த்தி இல்லாமல் கட்டியிருக்க, தரையை சுத்தம் செய்துகொண்டிருந்தது அவள் புடவை. 

கையில் அவள் தினம் வீட்டிற்கு வந்து அணியும் வளையல் கூட இல்லை, அவசரத்தில் தாலியை எடுத்து போட்டு வந்தவள் நெற்றியில் குங்குமம் கூட வைக்கவில்லை. 

கண்கள் சிவந்து, கன்னம், மூக்கெல்லாம் சிவப்பேறி வந்த வழி எங்கும் சுற்றம் மறந்து அழுதிருக்கிறாள் என்பதும் தெரிந்தது. 

அந்த உணர்வே அவனது இதயத்திற்கு எதற்கு வேதனை கொடுக்கிறதென மருத்துவன் அறிந்துகொள்ள முற்படவில்லை. கொட்டிக்கிடக்கும் அன்பை தான் கண்களை மூடி குருடர்களாக மனிதர்கள் வாழ்கின்றனர். 

இவனும் விதிவிலக்கல்ல, வேண்டாம் வேண்டாம் என்பவன் எதற்காக இந்நேரம் அவளை தேடி ஓடி வந்துள்ளோம் என்பதையும் மறந்து போனான். 

"வா போகலாம்" என்றான் உடனே. 

"இல்ல நீங்க போங்க, நான் எங்க வீட்டுக்கு போறேன்" அவனை பார்க்கவே இல்லை இலக்கியா. 

"எப்படி போவ?" 

"நடந்து தான்" 

"ரொம்ப சமத்தான பதில் தான். உன் அப்பாவை பாத்துட்டு தான் வர்றேன்" 

"நீங்க எதுக்கு இங்க வந்திங்க, போங்க. ஏதாவது உதவி செய்யணும்னு ஆசை இருந்தா உங்க போன் மட்டும் தாங்க, அப்பாக்கு பேசிக்கிறேன்" என்றாள் அவன் அருகே வந்து கையை நீட்டி. 

"நான் வராம போயிருந்தா என்ன பண்ணிருப்ப விடிய விடிய இங்கையே இருந்திருப்பியா?" அவள் கேட்டதை கொடுக்காமல் இன்னும் கேள்விகளை வைத்தான். 

"ஏன் உலகத்துலயே நீங்க மட்டும் தான் இருக்கீங்களா? எனக்கு தெருஞ்ச ஒரு அண்ணா பத்து மணிக்கு இந்த பக்கம் வருவார், அவர் கூட வீட்டுக்கு போயிருப்பேன்" 

"முட்டாள் முட்டாள். ஏண்டி உனக்கு அறிவே இல்லையா?" 

"ஆமாங்க அறிவு இல்லாததால தான் நர்ஸா இருக்கேன்" 

தன்னுடைய பேச்சே தன்னை சுற்றி சுற்றி வந்து அடித்தது, "இலக்கியா..." இயலாமையில் அர்ஜுன் இறங்கி வர, 

"அப்பாக்கு கால் பண்ணி தரீங்களா இல்லையா?" இவள் முறுக்கிக்கொண்டு நின்றாள். 

"இப்பவும் என்ன விட சொல்ல மனசு வரல, எவனையோ நம்பி போவ. என்ன நம்பி வர மாட்ட?" 

"எந்த உரிமைல சார் நான் கேக்க முடியும்?" 

அவளை முறைத்தவன், "உரிமை இல்ல ம்ம்?" அவளை மேலும் கீழும் பார்த்தவன், "உரிமையில்லாதவளுக்கு என் போன் தர முடியாது போடி" என்றான். 

சரி போ என இவளும் மீண்டும் சென்று அமர்ந்துக்கொண்டாள் கைக்கடிகாரத்தை பார்த்து அந்த 'அண்ணன்' வருகைக்கு தான் காத்திருப்பதாக மறைமுகமாக கூறி. 

குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் ஒரு முடிவோடு அவள் கையை பிடித்து இழுத்து வாகனத்தினுள் தள்ளினான். 

"என்ன பண்றீங்க நீங்க?" 

"வீட்டுக்கு போறோம்" அவள் வீட்டிற்கு எதிர் திசையில் சென்றது அவன் வாகனம். 

"சார் தப்பான ரூட்ல போறீங்க" அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை. 

"இப்ப நிறுத்த போறிங்களா இல்லையா?" அவனோ நிறுத்தாமல் அவளுடைய கைபேசியை ஒப்படைத்தான். 

"இதை வச்சிட்டே தான் தராம ஸீன் போட்டீங்களா?" அவளோ கோவமாய் பொரிய. 

"உன் அப்பாக்கு கால் பண்ணி வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்னு சொல்லு" 

"முடியாது. நிறுத்துங்க" 

"எங்க நடு ரோட்டுலயா?" 

"என்ன பெரிய வித்யாசம், உங்க வீட்டுல இருந்தாலும் அதே மாதிரி தான் பீல் ஆகுது" அவனிடம் போராடுவதை நிறுத்திவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள். 

புரியாத அவனின் புதிர் நடவடிக்கைகளுக்கு ஒப்பனை அவளது கண்ணீரானது. 

சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்தி தந்தைக்கு அழைத்து, "அவருக்கு ஒரு எமர்ஜென்சிப்பா. இன்னொரு நாள் நான் வர்றேன்" தந்தைக்கு மகள் இவ்வளவு தூரம் அருகே வந்து தன்னை பார்க்காமல் செல்வதில் வருத்தம் தான் இருந்தும் அவளின் நிலை புரிந்து சரி என்றார்.

மணிகண்டனிடம் பேசும் பொழுதே அவளின் தேய்ந்து போன குரலில் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, "கோவமா?" இறங்கிய குரலில் கேட்டான், அவள் தந்தையை பார்க்காமல் அழைத்து வந்ததற்கு. 

"இல்ல கோவப்படுறதுக்கு கூட உங்கள பொறுத்தவரை அறிவு வேணும்ல" குரல் கறகறக்க அவள் கூறவும் அவள் கையை பிடித்து இழுத்தான். 

திரும்பவே இல்லை இலக்கியா. எங்கு தொடங்கினாலும் மீண்டும் இங்கு தான் வந்து நிற்க வேண்டுமா என்கிற அசௌகரியமான மனநிலை அவனிடம். 

"நான் எப்பவும் அப்டி சொல்லவே இல்லடி" நிஜமாக இந்த வார்த்தையை தான் எப்பொழுது பயன்படுத்தினோம் என்பதே அவன் நினைவில் இல்லை. 

"உங்களுக்கு நீங்க பேசுனது எதுவுமே நியாபகம் இருக்காது. அன்னைக்கு கூட சொன்னிங்களே இதுலயும் நான் மக்கு தானான்னு. என்ன எப்படி கிஸ் பண்றது, எப்படி ஹக் பண்றதுன்னு செர்டிபிகேட் வாங்கிட்டு வரவா? இல்ல இதுலயும் டாக்ட்ரேட் டிகிரி பண்ணனுமா?" 

அவனை பார்க்காமல் அழுகையோடு அவள் கேட்க அர்ஜுன் தான் நொந்து போனான். 

உண்மையில் அவன் வெளியே புலம்பிக்கொண்டாலும் உள்ளுக்குள் சில்லென வீசிய காற்றின் குளுமையை அவளிடம் எப்படி சென்று சேர்ப்பதென தெரியவில்லை.

"லூசு..." 

"ஆமா லூசு தான். யாரோ எப்டியோ போங்கனு சொல்லிட்டு உங்க அஞ்சுஸ்ரீ பண்ணதை நான் ஓரமா நின்னு வேடிக்கை பாத்துருக்கணும். வாண்டடா வந்து மாட்டிகிட்டேன் பாருங்க. 

அப்பவும் உங்ககிட்ட உடனே சொல்ல வரல, உங்க தாத்தாகிட்ட தான் சொல்ல வந்தேன், என் நேரம் அவர் வரல அங்க" அவளுள் இன்று எனோ ஒரு வேகம் வந்து அவனை வந்து பார் என நின்றாள். 

"என்ன பண்றது மனசு கேக்கல, ஹாஸ்பிடல் நினைச்சு, உங்கள நினைச்சு என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு உங்க முன்னாடி வந்து நின்னது தான் தப்பா போச்சு. அங்கையும் முழுசா என் தப்புனு சொல்லிட முடியாது" 

அவனை திரும்பி பார்த்தாள், "பணம் சம்பாதிக்கணும்னு முடிவு பண்ணிட்டா யாரு வேணாலும் எப்படி வேணாலும் போவாங்கனு யோசிக்காம ஒரு பக்கமே யோசிக்கிற உங்ககிட்ட வந்து நான் நின்னுருக்க கூடாது. 

சரி வந்துட்டா, இப்டி வந்து சொல்றதால அவளுக்கு என்ன கிடைச்சிட போகுதுனு யோசிக்காம உங்க அஞ்சுஸ்ரீ எதுவுமே பண்ண மாட்டான்னு கண் மூடி தனமா இருந்துட்டீங்க" 

மீண்டும் அவனுடைய அஞ்சு ஸ்ரீ என இலக்கியா அழுத்தி கூறியதில் நீண்ட மூச்சை விட்டு இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து கடுக்காய் வெடிக்கும் மனைவியை கை கட்டி பார்த்தான் அர்ஜுன். 

"பெரிய பெரிய டிகிரி எல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்றிங்களே, அப்டி என்ன ஒருத்தர் மேல கண் மூடித்தனமாக நம்பிக்கை? நான் தான் சொல்றேன் அவங்க பேசுனதை நான் கேட்டேன்னு, என்னமோ அவ ஒண்ணுமே தெரியாத குழந்தை மாதிரி அந்த சப்போர்ட் பண்ணீங்க. 

ஆமா நீங்க சப்போர்ட் பண்றதுல தப்பில்லையே, கல்யாணம் ஆகியும் ஊர்ல இருந்து வந்தவர் முதல போய் நின்னது அவகிட்ட தான. நீங்க அவங்ககிட்ட தான் போக துடிக்கிறீங்களாம், எத்தனை சொந்தம் இருந்தாலும் அவங்கள தேடி தான் போறிங்களாம்" 

அவள் வாக்கில் மனதில் தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டே இருக்க கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை. கோவம், வேதனை அவளையும் மீறி அழுகையாக வந்தது. 

"யார் சொன்னது?" அர்ஜுன் கேட்க, 

அவனை பார்த்தவள், "யார் சொன்னா என்ன? அன்னைக்கே நீங்க டைவோர்ஸ் பேப்பர்ஸ் வாங்கிட்டு வந்துட்டிங்கனு எனக்கு தெரியும். நேத்து கூட உங்க ரூம்ல பாத்தேன்" 

"யார் சொன்னதுனு கேட்டேன் இலக்கியா" 

"வேற யார் உங்க அஞ்சுஸ்ரீ தா..." காற்றின் வேகத்தில் நகர்ந்த அர்ஜுனின் கரம் மனைவியின் கன்னத்தை அழுத்தமாய் பற்றியிருந்தது. 

வலிக்கும்படி அவன் பிடிக்கவில்லை, ஆனால் அவளை பிடித்த அவன் கரம் வந்து சில நொடிகளில் அவனும் அவளை நெருங்கி வந்திருந்தான். அதன் தாக்கம், பெண்ணவளின் நெஞ்சம் பலமாக மூச்சு வாங்கியது. 

அர்ஜுனின் கண்கள் கள்வன் போல் அதை மறக்காமல் பார்க்க, கண் மூடி திறந்தவன், "உன்னையா என் வீட்டுல ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைக்கிறாங்க?" வியப்பாக கேட்டான். 

அவன் கேள்வியில் விழிப்பு தட்டியவள் அவன் கையை விலக்க பார்க்க அவன் விடவில்லை. 

"நீ சொன்னது எல்லாம் சரி தான், ஆனா அவ என்னோட அஞ்சுஸ்ரீ இல்ல. எனக்கு யாரு உரிமையானவங்க, நான் யாருக்கு உரிமையானவன்னு நீ சொல்ல கூடாது. நான் தான் சொல்லணும். புரியுதா?" 

நிதானமாக அவள் கண்களை ஆழம் பார்த்து பதில் கொடுத்து கேள்வி கேட்டான். 

அவனின் அப்பார்வையில் மயங்காத அவன் மனைவி, இல்லை என தலை அசைக்க, கொஞ்சம் விடுதலை கொடுத்தான் கைகளை சற்று தளர்த்தி, "என்ன புரியல?" கேள்வியாக அவளின் விரித்த கண்களில் கொஞ்சம் மயங்கி.

"நான் அவங்க மேல தப்புனு நிரூபிக்காம இருந்தா, அவங்க உங்க அஞ்சு..." 

"சொல்லாதனு சொன்னேன்" அழுத்தி ஆணை பிறப்பித்தவன், "அவ மேல நம்பிக்கை இருந்துச்சு, அதுக்குன்னு கல்யாணம் முடிவு பண்ணிட்டா என் உலகமே அவ தான்னு முடிவு எடுக்குற அளவு நான் போகல" நீ நம்பி தான் ஆக வேண்டும் என்றது அவன் கண்கள்.  

அவள் அமைதி அவனுக்கு ஊக்கமளிக்க, இந்த பிரச்னையை அதற்கு மேல் அவன் தொடர விரும்பவில்லை. 

இது மட்டுமல்ல, அவளோடு சண்டையிடவே அவனுக்கு மனம் ஒப்பாது போனது. இலக்கியாவின் கன்னத்திலிருந்து கையை எடுத்தவன் அவள் விலகும் முன் சற்று குனிந்து அவளது இடது முழங்காலை பிடித்து தன்னை நோக்கி திரும்ப அமர வைத்திருந்தான். 

"என்னங்க..." அவளின் அந்த அலறல் எதற்கு தான் அவனுக்கு பிடித்ததோ மீண்டும் அந்த வார்த்தையை கேட்கவே இன்னும் அவளை இழுக்க, 

வாகனத்தின் இருக்கையையும் டாஷ்போர்டையும் பிடித்துகொண்டாள் பதட்டமாக, "சார்..." அவன் எதிர்பார்த்ததை செய்யாமல் வேறு ஒன்றை தான் இப்பொழுதும் செய்தாள். 

"இன்னைக்கு சண்டைக்கு வருவோமா?" 

"நான் சண்டை போடல, அந்த குழந்தையை நினைச்சு கொஞ்சம் கோவமா பேசிட்டேன் அவ்ளோ தான்" 

"ஒஹ் இதுவே உங்க ஊர்ல சண்டை இல்லையா, அப்போ சண்டை போடுறப்போ எவ்ளோ கோவப்படுவ நீ?" 

கேலியாக அவளை பார்க்க பதில் பேசவில்லை அவள். அவளது குணமே இது இல்லை, அதிகம் கோவமே வராத பெண். இல்லை கோவம் வரும் சூழல் அவளுக்கு அதிகம் அமையவில்லையா தெரியவில்லை. இவன் என வரும் பொழுது இவளே மாறி தான் போகிறாள். 

"சரி கேளு. அந்த குழந்தையை ஏன் வேகமா எடுக்கலைனு தான நீ கேட்ட? எல்லா குழந்தையோட வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. 

ஆபரேஷன் தியேட்டர் வெளிலயே அம்மா சொன்னாங்க, பேபிக்கு க்ரோத் பத்தலை, லங்ஸ் இன்னும் வெளிய வந்து சர்வே ஆகுற அளவு க்ரோத் இல்லனு. 

அது மட்டும் இல்ல, அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் முதலை வச்ச கோரிக்கை அவரோட மனைவியை அவர்கிட்ட கேட்டு தான். ஒரே நேரத்துல ரெண்டு ஆபரேஷன் நாங்க பண்ணிடுவோம். 

அந்த பொண்ணோட நிலைமையை யோசிச்சு பாரு, குழந்தையையும் பாத்துக்க முடியாம தன்னையும் கவனிக்க முடியாம ஷி வில் பி மென்டல்லி ஸ்ட்ரெஸ்ட். இப்பவும் அது நடந்துருக்கு தான் ஆனா அதுக்கு காரணமே வேற" 

"இந்த ஸ்ட்ரெஸ்க்கு அது எவ்வளவு பரவல்லாம இருந்திருக்கும் சார். பேபி இப்போ சேப், ஆனா அம்மா? பெண் குழந்தை. ஒரு அம்மா இல்லாம அந்த குழந்தையால் எவ்ளோ நாள் இங்க சர்வைவ் பண்ணிட முடியும் நினைக்கிறீங்க. 

ஒவ்வொரு நாள் என்னன்னே தெரியாத பிரச்சனை எல்லாம் வந்து நிக்கும். எங்க எப்படி நடக்கும்னு தெரியாது, எந்த இடத்துல நிக்கணும் நடக்கும்னு கூட தெரியாது. 

கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி, சொல்லப்போனா பல நேரம் பைத்தியம் புடிக்காத குறையா...." 

"ஹே... ஹே... ரிலாக்ஸ். காம் டவுன் இலக்கியா" மென்மையாக அவளது முழங்காலில் அவன் மெல்ல அழுத்தம் கொடுத்து தடவினான். 

அந்த குழந்தையை தன்னோடு ஒப்பிட்டு அவள் பார்த்துவிட்டு தான் சண்டையிட்டுள்ளாள் என்பதை இப்பொழுது தான் புரிந்துக்கொண்டான். அவளின் நிலையை அவனும் அறியவில்லை, அவளும் அறிவிக்காத காரணத்தால் வந்த சிறிய பிரச்சனை என உணர்ந்தான் அர்ஜுன். 

"அந்த பேபிக்கு கண்டிப்பா அவங்க அம்மா இருப்பாங்க. நேத்து விட இன்னைக்கு அந்த பொண்ணு ரொம்ப பெட்டெர்ரா இருக்கு. இன்னும் 12 ஹௌர்ஸ் தாண்டிட்டா கம்ப்ளீட்டா சேப். 

பிரைன்ல பிரஷர் வச்சிட்டு அந்த பொண்ணுக்கு ஆபரேஷன் பண்றது எனக்கு சரியா வராம தான் ஸ்டாப் பண்ணேன். புரியுதா?" 

தலை கவிழ்த்தி அமர்த்திருந்தவளுக்கு சில நிமிடங்கள் கொடுத்தான். நிதானமாக, உணர்வுகளை தள்ளி வைத்து யோசிக்கும் பொழுது அவன் கூறுவதில் உள்ள சாத்தியக்கூறுகள் புரிந்து நிதானமானாள். 

"இருந்தாலும் நீங்க பேசுனது எல்லாம் சரியா? ச்சை-னு சொல்றதெல்லாம் ரொம்ப லோ-வா பீல் ஆகுது சார். ஒருத்தரை மதிக்கலானாலும் அவங்களோட கஷ்டத்துக்கும், உழைப்புக்கும் மதிப்பு குடுக்கணும் தான? 

எத்தனையோ பேர் வறுமைல படிக்காம இருக்குற இடத்துல என் அப்பா என்ன இவ்ளோ தூரம் ஆளாக்கினதே நீங்க படிச்சா டாக்டர் டிகிரிக்கு மேல பெருசு தான். தயவு செஞ்சு என்னோட வேலைய மட்டும் இழுக்காதீங்க சொல்லிட்டேன்" இயலாமையில் துவங்கியவள் கடுமையான எச்சரிக்கையோடு முடித்தாள்.

"சரி சாரி. ரொம்ப ரொம்ப சாரி. சின்ன வயசுல இருந்து அப்பா அம்மாவ பாத்து வளர்ந்து, ஒரு கெளரவம் மனசுல ஊறி போச்சு. கண்டிப்பா டாக்டர் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்சு, என்னோட வைப்க்கு என்னால பெருமை மட்டும் தான் வரணும்னு யோசிச்சே ரொம்ப படிச்சேன், நிறையா படிச்சேன். அதை எல்லாம் சட்டுனு மாத்திக்க முடியல. டைம் தேவை எனக்கு" என்றான் உளமார. 

இவ்வளவு இறங்கி வந்து பேசுபவனிடம் வீம்பிற்கு நிற்க முடியாமல் சிரிக்காமல் தலை அசைத்தாள். இருவருக்கும் இடையே உருவாகியிருந்த உருவமில்லா பதற்றம், ஆங்காரம் மெல்ல விலகி நிரந்தர தீர்வு இல்லையெனினும் அமைதி உருவாகியது. 

"சாப்பிட போகலாமா?" மறுக்காமல் தலை அசைத்தாள். எப்படி அவளை தன்னை நோக்கி திருப்பி வைத்திருந்தானோ அதே போல் மீண்டும் அவளை திருப்பிவிட்டு வாகனத்தை உயிர்பித்தான் உணவகத்தை நோக்கி. 

சுத்தம் சுகாதாரம் பார்க்கும் மருத்துவன் இப்பொழுதெல்லாம் எதற்கு இப்படி அவளோடு, அவளுக்காக, அவள் ஆசைப்பட்டு உண்ணும் உணவை வாங்கி கொடுத்து, அவளின் சோர்வை நீக்க அடிக்கடி உணவகம் செல்கிறோம் என்பதை கூட ஆராய மறந்து போனான். எதிலும் அவள் என்னும் வார்த்தை தான் உள்ளதென உணரும் நாளும் விரிவாக வந்து தானே ஆகும். 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro