கொரோனாவின் கொடுமை !
இரவின் அரசி சந்திரன் மறைய பகலின் அரசன் வெய்யோன் பொன்கதிர்களை நிலமகளின் மேல் உதிர பறவைகள் பறக்க பூக்கள் மலர உலகமும் விழித்தது .
அவ்வினிய காலை பொழுதில் சோம்பல் முறித்து எழுந்தாள் அஷ்வினி . மனிதன் இயந்திரமாக இயங்கும் இவ்வுலகில் அஷ்வினியின் அப்பா ஒரு கூலித்தொழிலாளி . அம்மா இல்லாவிடினும் தன்னுடைய வேலை
மட்டுமல்லாது ஒரு பெண் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளையெல்லாம் குறுகிய நேரத்தில் அழகாகவும் , நேர்த்தியாகவும் செய்வாள் பதினாறு வயது சிறுமி அஷ்வினி .
அஷ்வினியின் அம்மா , அப்பா , நண்பன் எல்லாமே அவளது அப்பா குமரேசன் தான். அவளிற்கு உடன் பிறப்பு என்பதற்கு யாருமே இல்லை . அஷ்வினி பிறந்து சில நாட்களிலே அவளது அம்மா இறந்துவிட அவளை தாயாகவும் தந்தையாகவும் பார்த்துக்கொள்வது அவளது அப்பா தான் . ஓலை குடிசையில் வாழ்ந்த இவர்களுக்கு சோதனை அளிக்கவே வந்தது கொரோனா !
அஷ்வினி என்றும் போல தனது வேலைகளை முடித்துவிட்டு பாடசாலை செல்ல தயாராகி தந்தையிடம் சொல்லிவிட்டு வாசலுக்கு வரவும் அவளது சக தோழி நிலா வரவும் சரியாக இருந்தது . "அஷ்வினி இன்னைல இருந்து ஊரடங்குச்சட்டம் போட்டுட்டாங்களாம் . பள்ளிக்கூடத்திட்க்கும் விடுமுறை அளித்துட்டாங்களாம்" என்று கூறியவள் மின்னலென ஓடினாள் . முதலில் மகிழ்ச்சியடைந்த அஷ்வினி வறுமையை நினைத்து வருந்தினாள் . மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தவள் விடயத்தை தன் தந்தையிடம் கூறினாள் .
பாழாப்போன கொரோனா !
தீண்டுகிறதே ஏழை நம்மை !
ஊரடங்கு எனும் பெயரில் பட்டினியால் கொள்ளாதே நம்மை !
நோயால் இறப்பதற்கு பதிலாக
பட்டினியால் இருக்கின்றோம் !
ஏழை நமக்கு உதவ யாருமில்லையா !
என்னப்பா இப்போ பண்றது ? மூணு நாள் பொறுத்துகிட்டோம் . இதுக்கப்புறம் பட்டினி கிடைக்க முடியாது அப்பா . ரொம்ப பசிக்குது அப்பா ! என்று அஷ்வினி கண்களில் கண்ணீரோடு கூற தன் மகளுக்காக எதையும் செய்யும் குமரேசன் எதுவானாலும் நடக்கட்டும் என்று உணவு தேடி போவதாக முடிவு செய்தார் .
இங்க பாரு பாப்பா நான் இப்போ போய் சாப்பிட ஏதாவது கொண்டு வாருகிறேன் அது வரைக்கும் கவனமாக இருக்கணும் சரியா! என்று அஷ்வினியின் தலையை வருடிவிட்டு சென்றார் . அப்பா கூறிய படியே வீட்டிட்குள் இருந்தாள் .
ஊரடங்கையும் மீறிச்சென்றார் உணவுப்பிச்சை கேட்டு .பத்து வீதிகளிற்கும் ஏறி இறங்கிய அவருக்கு கிடைக்கவில்லை ஒரு பிடி அரிசி . இறுதியாக குப்பை தொட்டியினுள் கையை போட்டு தேடியவருக்கு கிடைத்தது சில அழுகிய பழங்கள் அவற்றை எடுத்துக்கொண்டு திரும்பும் போது பொலிஸின் கையில் சிக்கினார் . பாவம் பசி பட்டினி கிடந்த உடம்பு அவ்வடிகளை எவ்வாறு தாங்கும் . கையில் எடுத்த பழங்களையும் கீழே போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு ஓடினார் . சிறிது தூரம் சென்றவர் அஷ்வினியின் நினைவுகளோடு மயங்கி சரிய அவ்விடத்திலையே மூர்ச்சையாகினார் .
இதை அறியாத அவ்விளம் பேதை அப்பாவிற்காக வாசலின் அருகில் காத்து இருக்க அவ்விடத்திலையே உறங்கிப்போனாள் . அடுத்தநாள் பொழுது விடிய அவளிற்கு கிடைத்த செய்தி, தந்தை இறந்துவிட்டார் என்பதே அதை கேட்டவளோ தாங்கிக்கொள்ள முடியாமலும் உடல் சோர்வினாலும் மயங்கி சரிய அவளும் அவ்விடத்தில் மூர்ச்சையாகினால் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro