🌚9🌚
பதினைந்து மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் உணவகத்தில் அன்றைய மதிய வேளையில் சற்றே ஆள் நடமாட்டம் குறைவாகத் தான் இருந்தது.
இடதுபக்க மூலையில் இருக்கும் ஒரு மேசைக்கு முன்னால் இருக்கும் கண்ணாடித்தடுப்பை பார்த்த வண்ணம் நிருஷனாவும் ரிதுர்ஷிகாவும் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிர்த்திசையில் முழு உணவகத்திலேயும் பார்வை படும் வண்ணம் நேஹா,வித்யா மற்றும் அஞ்சலி முறையே வரிசையாக அமர்ந்திருந்தனர்.
அமர்ந்திருந்தவர்களின் வாய் தனது வேலையை சிறப்பான முறையில் செய்துகொண்டிருந்தது.
நிருவும் ரிதூவும் மௌனமாக தங்கள் கருமத்தில் கண்ணாயிருக்க நேஹா, வித்யா மற்றும் அஞ்சலி இடைக்கிடை கதையளந்து கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர்.
இவ்வாறு கதையளந்து கொண்டே வாயில் உணவை திணித்த அஞ்சலியின் பார்வை எதேர்ச்சையாக வாசலில் போய் படிய அப்பொழுது சரியாக அவளின் எதிரியும் சென்னை கிளையின் முகாமையாளருமாகிய மிஸ்டர்.வெங்கட் உணவகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்தவள் பார்வையை அகற்றாமல் வித்யாவிடம் ஏதோ சொல்ல முற்பட அவருக்கு பின்னாலேயே வந்த இளைஞனின் தோற்றம் அவளை பேச விடாமல் செய்தது.
ஒரு நிமிடம் அவர்கள் இருவரையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள் அவர்கள் இருவரும் தங்களை நோக்கி வருவது போல் தெரிய வேகமாக உணவை மென்றுகொண்டு பார்வையை உணவகத்தில் சுழலவிட்டாள்.
அவர்கள் இருவரும் இவர்களை நோக்கி வந்தாலும் இவர்களுக்கு பின்னால் முற்றிலும் காலியாக இருந்த மேசையில் அமரவே மெதுவாக பேச ஆரம்பித்தாள் அஞ்சலி.
"ஹேய் நான் சொல்றப்போவே தலையை தூக்கி பார்க்காதீங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு பாருங்கடி.
டூ டேஸ்க்கு மொத வெங்கட் கூட ஒரு ஹண்டசம் வர்றத பார்த்தேன்னு சொன்னேன் இல்ல.
அவன் இப்போ வந்திருக்கான்டி. நமக்கு பின்னால இருக்குற டேபல்ல தான் இருக்காங்க"
என்று சொல்லி முடிக்க முன்னரே ஆர்வத்துடன் தலையை உயர்த்திப் பார்த்தனர் வித்யாவும் நேஹாவும்.
நேஹா ஏதோ புது ஆளை பார்க்கும் தோரணையில் வெங்கட்டுடன் இருக்கும் ஆணைப் பார்க்க, வித்யாவின் கண்களில் நொடியில் ஆச்சரியம் வந்து வினாடியில் மறைந்து போனது.
"போச்சு"
என்று கொஞ்சம் சத்தமாகவே சொன்னவள் வித்யாவின் காலை தன் காலால் வலிக்கும் படி நன்றாக மிதித்துவிட்டாள்.
"ஆஆஆஆ..."
என்று குனிந்து தன் காலை இடது கையால் தேய்த்து விட்டவள் அஞ்சலியை முறைத்தாள்.
நேஹாவுக்கும் அஞ்சலிக்கும் ஆகாது என்பதால் இந்த விடயத்தில் தண்டனை பெறாமல் தப்பித்தாள் நேஹா.
இவர்களின் மோதலை இரகசிய புன்னகையோடு கவனித்த நிருவும் ரிதூவும் இப்பொழுது வாய்விட்டே சிரித்தனர். பின்னால் யார் வந்திருப்பார்கள் என்பதை அறிய ஒரே நேரத்தில் நிருவினதும் ரிதூவினதும் பார்வை கண்ணாடித்தடுப்பின் மேல் விழுந்து மீண்டது.
ரிதூ இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் உந்துதலாலும் அவளின் முயற்சிகளாலும் ஏனையவர்கள் போல் மாறிக்கொண்டு வருகின்றாள்.
"எதுக்குடி இந்த மிதி மிதிக்குற?" -வித்யா
"உன்ன கொல்லாம விட்டேன் பாரு. அதுக்கு சந்தோஷப்படு."
பல்லை கடித்துக்கொண்டே சொன்னாள் அஞ்சலி.
"இப்போ என்ன ஆச்சுன்னு இந்த குதி குதிக்குற? ஜஸ்ட் தலைய உயர்த்தி யாருன்னு பார்த்தோம். அதுக்கு இப்போ என்ன ஆச்சு?"
சூடாகக் கேட்டாள் வித்யா.
"நா அவங்கள பாக்குறத அவங்க ரெண்டு பேரும் பார்த்தாங்க. அதான் உடனே பார்க்காதேன்னு தமிழ்ல சொன்னேன்" -அஞ்சலி
"ஹாஹ்ஹா.
அதுக்கு?"-வித்யா
"போ. நா எதுவும் சொல்ல மாட்டேன்"
முகத்தை உம்மென வைத்துக்கொண்டாள் அஞ்சலி.
"ஐயோ பேபி மா.
வெங்கட் சார் எதுவுமே பார்த்திருக்க மாட்டார்.
அப்டி பார்த்திருந்தா கூட அவர் பையன சைட் அடிச்சதா நெனச்சிக்குவார்.
அவ்ளோ தான் விட்டுரு."
சிரித்துக்கொண்டே சொல்லி முடித்தாள் வித்யா.
"என்னது?"
என்று வாயைப் பிளந்தாள் அஞ்சலி.
அவள் கூடவே நேஹாவும் ரிதூவும் ஆச்சரியமாக வித்யாவைப் பார்த்தனர்.
"என்னடி சொல்ற அது வெங்கட் பையனா?"-அஞ்சலி
"ம்ம்ம் யெஸ்"
சட்டென்று யோசனைக்கு போயிருந்த வித்யாவின் குரல் மெலிதாகத்தான் வெளியே வந்தது.
"உனக்கு இதெல்லாம் எப்டி தெரியும்?'
வித்யாவின் முகத்தில் திடீரென சூழ்ந்து கொண்ட யோசனையின் ரேகைகளை கண்டு கொண்டவள் போல் கேட்டாள் அஞ்சலி.
"அது....."
என்று ஆரம்பிக்க போன வித்யாவை முந்திக்கொண்டு பேசினாள் நிரு.
"அவள் அத்தைப் பையன அவளுக்கு தெரியாமல் இருக்குமா அஞ்சல்ஸ்.
நீ வேற எப்டி தெரியும்னு கேட்டுட்டு இருக்க?"
என்று திடீரென பூகம்பத்தை கிளப்பிவிட்டு எதுவுமே நடவாதது போல் தண்ணீரை இரசித்து குடிக்க ஆரம்பித்திருந்தாள் நிரு.
இப்பொழுது கண்களை முழுப் பூசணிக்காய் அளவுக்கு திறப்பதற்கு ஏனைய மூவருடனும் சேர்ந்துகொண்டிருந்தாள் வித்யா.
இல்லாமல் இருக்குமா என்ன,
தனக்கு மட்டுமே தெரிந்த தனக்கும் வெங்கட் சாருக்குமா உறவு, அதுவும் வெளியூரைச் சேர்ந்த நிரு சொல்லவதைக் கேட்டு ஒரு நொடி ஆடித்தான் போனாள்.
வெங்கட் சாருடன் இருப்பது அவரது மகன் என்று வாய் தவறி தான் சொன்னாள், அதுதான் அவள் திடீரென யோசனைக்கு சென்றதற்கான காரணமும் ஆகும்.
வித்யா தன்னை சுதாகரித்துக்கொண்டு நிருவைப் பார்க்க நிருவும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏனைய மூவரும் கூட.
"என்ன வித் அப்டி பாக்குற?"
புன்னகைத்த வண்ணம் கேட்டாள் நிரு.
"அது... அது வந்து...
உனக்கெப்டி தெரியும்" -வித்யா
"உன் மாமா தான் என் கிட்ட சொன்னாரே.
அவரோட மருமகள பத்திரமா பார்த்துக்க சொன்னாரு."
கண்கள் இரண்டும் கேலியில் மின்ன தோள் குழுக்கி சொன்னாள் நிரு.
"மாமா"
என்று யோசித்தவள் நிரு "மாமா" என்று சொல்வது வெங்கட் சாரை தான் என்பதை உணர்ந்து அவளை முறைத்தாள்.
"ஏன்டி முறைக்கிற?
அவர் உன் மாமா தானே"
சந்தேகத்துடன் கேட்பது போலவே கேட்டாள் நிரு.
இவ்வளவு நேரமாக வித்யாவையும் நிருவையும் மாறி மாறி தலையை திருப்பித் திருப்பி பார்த்துக்கொண்டிருந்த அஞ்சலியின் பார்வை இப்பொழுது வித்யாவில் நிலைத்தது.
வித்யா என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாக அவளையே ஏனைய இருவரும் பார்த்துக்கொண்டிருக்க,
"ம்ம்ம் ஆமா அவர் என் மாமா தான்."
உள்சென்றிருந்த குரலில் சொன்னாள் வித்யா.
"அடிப்பாவி அஞ்சலி!
நீ என்ன வேலடி செஞ்சுவெச்சிருக்க?
இவ்வளவு காலமா மருமகள் கிட்டயே அவள் மாமாவ சொட்ட சொட்டன்னு சொல்லி இருக்க.
அதுமட்டும் போதாதுன்னு இன்னேக்கி அவள் முறைப்பையன அவள் முன்னாடியே சைட் அடிச்சிருக்க.
உன்னையெல்லாம்.."
அஞ்சலியின் மனசாட்சி அவளிடம் கேள்விகேட்டுக்கொண்டிருக்க பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு வித்யாவிடம் திரும்பினாள்.
அஞ்சலியின் எண்ணவோட்டத்தை கண்டு கொண்டவள் போல் நிரு அவளைப் பார்த்து சிரிக்க நிருவைப் பார்த்து முறைத்து வைத்தவள்,
"ஹேய் வித் சாரிடி.
அது உன் மாமா தான்னு தெரியாம இவ்ளோ நாளா ஏதேதோ சொல்லிட்டேன்டி.
ரியலி சாரிடி." -அஞ்சலி
"இப்போ சாரி சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல அஞ்சல்ஸ். அவ உன்ன வெங்கட் சார்னு சொல்லுன்னு எத்துன தடவ சொல்லிருப்பா? எப்பயாச்சும் வெங்கட் சார் மேல நம்ம வித்க்கு இவ்ளோ ஏன் அக்கறைன்னு யோசிச்சு இருக்கியா...
காலம் கடந்திருச்சு பேபி. உன் சாரி எல்லாம் ஏத்துக்க முடியாது போ போ." -நிரு
"ஏய் நா உன்ன கேட்டேனா.
நீ பேசாம இரு.
ஹேய் வித் நீ சொல்லுடி.
சத்தியமா நா தெரியாம தான் இவ்ளோ நாளா அப்டி சொன்னேன்டி.
இனிமே கண்டிப்பா வெங்கட் சாருன்னே சொல்றேண்டி.
அவ்ளோ ஏன் பெயர கூட சொல்லாம வெறும் சாருன்னு மட்டும் சொல்றேன் டி.
ப்ளீஸ் டி." -கெஞ்சும் தொனியில் சொல்லிக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
அவளின் நிலையைப் பார்த்து ஏனைய மூவரும் மெதுவாக சிரிக்க,
"ஹேய் என்னடி அஞ்சல்ஸ். நா எதுவுமே நெனக்கலபா. இதுக்கு போய் இத்துன சாரி சொல்லிட்டிருக்க.
சும்மா பிஃரீயா விடுடி" என்றவள் நிருவைப் பார்த்து,
"உண்மையிலேயே வெங்கட் சார் தான் உன்கிட்ட சொன்னாரா நிரு?"
என்று சந்தேகமாக கேட்டாள் வித்யா.
"யெஸ்.
ஆனா அவரும் சரி நீயும் சரி ஏன் அப்டி காட்டிக்கவே மாட்டேங்குறீங்க?
நீ நமக்கிட்ட கூட அவர சார்ன்னு தானே சொல்ற வித்?
அவங்க வொய்ப் உனக்கு தூரத்து அத்த முறையா?"
தனக்கிருக்கும் சந்தேகத்தை கேட்டாள் நிரு.
பெருமூச்சொன்றை வெளியிட்டவள்,
"தூரத்து சொந்தமா?"
என்று தானே கேட்டு விரக்தியாக மெலிதாக சிரித்தாள்.
"அப்போ வெங்கட் சாரோட வொய்ப் உன் அப்பாவோட தங்கச்சியா?"
கண்கள் அகல கேட்டாள் அஞ்சலி.
"ம்ம்ம்ம்"
என்று மேலும் கீழுமாக தலையை அசைத்தாள் வித்யா.
"என்னடி சொல்ற?
அப்போ அவங்க பையனுக்கு உன்ன எப்டி தெரியாம போகும்.
அதுவும் நீ உன் மாமாகூட ஏன் அந்த உறவ முன்னிறுத்தி பேசவும் மாட்டேங்குற?
ஏதாவது தகறாரா?" -அஞ்சலி
வித்யாவின் மௌனத்தை கண்டு ஒரு நொடி தயங்கியவள்,
"சொல்ல முடியுமா இருந்தா சொல்லு வித். நீ சொல்லாட்டி நாங்க இதுக்கப்புறம் எதுவும் கேட்க மாட்டோம்"-அஞ்சலி
"சொல்ல முடியாத அளவு எதுவும் இல்ல அஞ்சல்ஸ்.
ஆனா நீங்க எல்லாரும் எப்டி எடுத்துப்பீங்கன்னு தான் யோசிச்சன்."
என்றவள் வெங்கட்டும் அவரது மகன் ஆன இருபத்தாரு வயதுகளைக் கடந்து கொண்டிருக்கும் வினீதும் அமர்ந்திருக்கும் மேசையின் மீது பார்வையை ஒரு முறை செலுத்தியவள் நேராக அமர்ந்து கொண்டாள்.
"எங்க தாத்தா பாட்டிக்கு எங்கப்பாவும் அத்தையும் தான் பிள்ளைங்க. அத்தைய அவ்ளோ ஆச ஆசையா தாத்தா பாட்டி வளர்த்தாங்களாம்.
அப்பாவுக்கு அத்தைனா அவ்ளோ உயிர். அண்ணன் தங்கச்சினா இப்டி தான் இருக்கணும்னு மத்தவங்க சொல்ற அளவுக்கு அந்தளவு பாசம்.
தாத்தா அவங்க இஷ்டப்படுற எல்லாத்தையும் மறுக்காம அவங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்துருவாராம். இப்டி இருக்கும் போது தான் வெங்கட் சார.." இடையில் குரல் கொடுத்து அவளை நிறுத்தினாள் நிருஷனா.
"ஹேய் ப்ளீஸ் வித்.
திரும்பத் திரும்ப வெங்கட் சாருன்னு சொல்லாத.
என்னமோ மாதிரி இருக்கு.
அவர் உன் மாமா இல்ல. ஸோ மாமானு சொல்லு." -சற்றே அழுத்தமாக கூறினாள் நிருஷனா
அவளைப் பார்த்து மெலிதாக சிரித்து வைத்தவள்,
"அப்டி இருக்குறப்போ தான் மாமாவ மீட் பண்ணிருக்காங்க.
அத்தையோட பிரென்ட் ஒருத்தங்கட அண்ணாவா தான் அந்த அறிமுகம்.
ஆனா இவங்க ரெண்டு பேரோட கல்யாணம் முடியிர வர மாமா என்னோட அப்பாவோட பிரென்ட்ங்குறதோ, அத்த தன் பிரெண்டோட தங்கச்சிங்குறதோ அத்தைக்கும் சரி மாமாவுக்கும் சரி தெரியவே தெரியாது.
என்னோட அப்பா அவர் பிரென்ட் யாரையுமே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரமாட்டாராம். தாத்தாவுக்கு எப்பவும் அமைதி தான் பிடிக்குமாம். ஸோ பிரெண்ட்ஸ் சேர்ந்தாலே அந்த இடம் கலகலப்பா மாறி அவங்க என்ன பண்றாங்கன்னு அவங்களே மறந்துருவாங்க இல்ல. அதனால அப்பா யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர மாட்டாங்களாம்.
அதுமட்டும் இல்லாம மாமாவோட சொந்த இடம் பெங்களூர்னால லீவ் வந்ததுமே அவர் அம்மா அப்பாகூட அங்க போயிடுவராம். அந்த காலத்துல இப்போ மாதிரி போன் வசதி எல்லாம் குறைவுனால எப்பவாச்சும் ரெண்டு பேரும் சந்திச்சு கொள்ளுவாங்களே தவிர வேற எந்த தொடர்பும் இல்லாம தான் இருந்திருக்காங்க.
அப்டி சந்திச்சுக்குற நேரத்துலையும் ஏதோ ரெண்டு வார்த்த தான் பேசிக்குவாங்களாம். இப்டி இருக்குறப்போ தாத்தாகிட்ட அத்தையபத்தி யாரோ சொல்லி கொடுத்திருக்காங்க. இதுல தான் தாத்தா அத்தையோட விருப்பம் எதுவும் எதிர்பார்க்காம சட்டுப்புட்டுன்னு கல்யாணத்த ஏற்பாடு பண்ணிருக்காங்க.
விடிஞ்சா கல்யாணம்னு இருக்குற போ அத்த வீட்ட விட்டு மாமா வீட்டுக்கு போய்ட்டாங்களாம். மாமாவுக்கு கூட இங்க நடந்த எதுவுமே தெரியாது. அத்த அங்க போனபோ மாமாவோட அம்மா அப்பா அண்ட் அவரோட தம்பி மட்டும் தான் இருந்திருக்காங்க. மாமா வேல விஷயமா ஹைதராபாத் போயிருந்திருக்காரு. அவர் ஒரு மாசம் கழிச்சு தான் வர்றதா இருந்திருக்கு.
மாமாவோட அப்பா, அம்மாவுக்கும் இவங்க லவ் மேட்டர் தெரியும்னால அவங்க அத்தைய சமாதானம் பண்ணி வீட்டுக்கு கொண்டு போய் விட்டு அவங்களே தாத்தா கிட்ட பேசி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க பார்த்திருக்காங்க. தாத்தா முடிவு பண்ணிட்டா அந்த முடிவுல இருந்து மாறவே மாட்டாராம். ஸோ தாத்தா இதுக்கு ஒத்துக்குவே மாட்டார்னு தெரிஞ்சு அத்த பிடிவாதமா முடியாதுன்னு சொல்லி அங்கயே தங்கிட்டாங்களாம்.
மாமா ஒரு மாசம் கழிச்சு வந்ததுக்கு அப்புறம் தான் அத்த அவங்க வீட்டுல தங்கியிருக்கிறதே தெரிஞ்சுதாம். இடையில மாமாவோட அப்பா போய் தாத்தா கிட்ட பேச ரெண்டு மூணு தடவ ட்ரை பண்ணிருக்காரு அப்போ தாத்தா தனக்கு அப்டி ஒரு பொண்னே கிடையாதுன்னு சொல்லி மாமாவோட அப்பாவ நிராகரிச்சிட்டாராம்.
மாமா வந்து டூ வீக்ஸ்ல ரெண்டு பேருக்கும் அவங்க வீட்டவங்க கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க. இடையில தான் தன் பிரெண்டோட தங்கச்சி தான் நா இவ்ளோ நாள் லவ் பண்ண பொண்ணுக்குறதே மாமா தெரிஞ்சிக்கிட்டிருக்காரு.
அதுக்கப்புறம் என் அப்பாவோட மாமா எவ்ளோ பேச ட்ரை பண்ணிருக்காரு. ஆனா அப்பா அவர பார்க்குறதயே அவோய்ட் பண்ணிருக்கார்.
இந்த கல்யாணம் என் தாத்தாவ பொருத்த வரையில அவர் மகள் அவருக்கு செஞ்ச துரோகம்.
என் அப்பாவ பொறுத்த வரையில அவரோட பிரென்ட் அவருக்கு செஞ்ச துரோகம்.
வெங்கட் மாமா பக்கம் இருக்குற நியாயத்த ஏத்துக்க ரெண்டு பேருமே இன்னுமே தயார் கிடையாது.
நானும் அண்ணாவும் எத்துன தடவ பேச ட்ரை பண்ணிருக்கோம் தெரியுமா? நாங்க பேச ஆரம்பிக்கும் போதே தாத்தாவும் சரி அப்பாவும் சரி இடத்த காலி பண்ணுவாங்களே தவிர ஒரு நாள் கூட நாங்க என்ன சொல்ல வர்றோம்னு கேட்கவே மாட்டாங்க.
இவங்க பிரிஞ்சு இப்போ இருபத்தேழு வருஷமாச்சு."
என்ற வித்யா ஏக்கப்பெருமூச்சொன்றை வெளிப்படுத்தினாள்.
"உனக்கு யாரு இதெல்லாம் சொன்னாங்க வித்?" -நிருஷனா
"அண்ணா...
அண்ணாவும் மாமாவோட தம்பி பையனும் சேம் ப்ளேஸ்ல தான் வேர்க் பண்றாங்க. அவரு தான் சொல்லியிருக்கார்.
ரொம்ப பாசமான குடும்பம் போல." -வித்
"வெங்கட் சாரோட பையனுக்கு உன்ன தெரியுமா?" -அஞ்சலி
"இல்ல.
இனிமே தெரிஞ்சா தான்.
எனக்கு பல வருஷம் முன்னாடியே அவர தெரியும். ஆனா அவருக்கு என்ன தெரியாது." -வித்
"பார்றா... அவராமே"
ஆர்ப்பரித்த அஞ்சலியை முறைத்தாள் வித்யா.
"நா வேணா உங்கப்பா கூட பேசட்டா வித்?
பாவம் வெங்கட் சார். உங்கப்பாவ ரொம்ப மிஸ் பண்றார் போல. அன்னேக்கு ஏதோ சொல்ல வந்துட்டு சட்டுன்னு நிருத்திக்கிட்டாரு. உங்கப்பா பேரு எனக்கு தெரியும்னால நானும் திரும்ப எதுவும் கேட்கல." -நிருஷனா
"வேணாம் நிரு. நா இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்க்குறேன். முடியாம போனா உன் ஹெல்ப் கட்டாயம் எனக்கு தேவைப்படும்." -வித்யா
நிருஷனாவுக்கும் வித்யாவின் தந்தைக்கும் இப்பொழுதெல்லாம் நெருங்கிய தொடர்பு. இவளும் காணும்போதெல்லாம "அங்கள் அங்கள்" என்று அழைப்பாள்.
அதேபோல் அவரும் நிரு மற்றும் இவர்கள் கூட்டனியோடு "மகள் மகள்" என்று அன்புடன் பேசுவார். இதனால் தான் நிருஷனா பேச முயற்சிக்கிறாள்.
"ஹேய் வித்.
எனக்கிட்ட ஒரு ஐடியா இருக்குடி" -அஞ்சலி
"என்ன"
என்பதுபோல் வித்யா அவளைப்பார்க்க ஏனைய மூவரும் கூட அவளைத்தான் பார்த்தனர்.
"இல்ல...
ஒரு கல்யாணத்தால பிரிஞ்ச குடும்பத்த இன்னொரு கல்யாணத்தால சேர்த்து வைக்கிற கதை எல்லாம் இருக்கு இல்ல.
ஸோ அப்டி செய்யலாம் இல்ல. பையனும் சூப்பரா இருக்கான்டி"
புன்னகையோடு சொன்ன அஞ்சலி வித்யாவை பார்த்துக்கொண்டிருக்க,
"ஆமாம்"
என்பது போல் தலையசைத்தவள் அதன் பின்னே அவள் சொல்வதன் அர்த்தம் புரிந்து
"அடிப்பாவி. நீ அந்த மீனிங்லயா சொன்ன?"
என்று கேட்டு "நங்கு நங்கு" என்று நான்கு கொட்டுகளை அஞ்சலிக்கு பரிசளிக்க அங்கே சிரிப்பொலி எழுந்தது.
வேகமாக உள்ளே நுழையும் மகனை பார்த்திருந்த நிகிழினி,
"என்னடா கண்ணா? ஏதாவது அவசரமா?"
என்று கேட்டார்.
"ஆமாம்மா சனா எங்க?" -நவா
"அவ மேல ரூம்ல இருப்பாளே"-நிகிழினி
"ஓகே நா போய் பாக்குறேன்"
என்றவன் மாடிக்கு விரைய பின்னாலே மாடிக்கு படியேறினார் நிகிழினி.
"சனா.. சனா"
தன் தங்கையின் அறைக்குள் நுழைந்த நவா அவளைக் காணாமல் சற்று கத்தினான் என்றாலும் பிழையாகாது.
"நவாண்ணா"
சனாவின் குரல் பெல்கனியில் இருந்து வர அங்கே விரைந்தான் நவா.
தெரிந்து கொண்டே 'என்ன" என்பது போல் சனா நவாவைப் பார்த்திருக்க,
"சனா நா உனக்கு தந்த டூ மந்த்ஸ் இன்னையோட முடியுது இல்ல.
என்ன முடிவு பண்ணிருக்க?"
நேரடியாகவே கேட்டான் நவநீதன்.
"நவாண்ணா நா..."
என்று அவள் ஆரம்பிக்கும் போதே அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்க பெல்கனியில் இருந்தவாறே அறைக்கதவை எட்டிப் பார்த்தான் நவநீதன்.
அங்கே போர்மலாக ஆடை அணிந்த படி வந்து நின்றிருந்தான் நிகில். நவாவின் மாமன் மகன்.
ஒரு வருடத்திற்கு முன் சனாவின் உற்ற நண்பனாகவும் அதற்கு மேல் ஒரு படியாக சனாவின் காதலனாகவும் இருந்த நிகில் ரகுவரன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro