🌚6🌚
வாழ்க்கை என்பது ஒரு சுழலும் சக்கரம். அதன் சுழற்சியை நாம் நம் மதியால் கணிக்கலாமே தவிர நமக்கென்று எழுதப்பட்ட விதியை ஒருநாளும் வென்றுவிட முடியாது.
நாம் நம் மதியால் நமக்கென்ற வாழ்க்கையை வடிவமைக்க எத்தணிக்க கடவுளோ அவனது அளவற்ற மதியால் நமக்கென்ற வாழ்க்கையை விதியாக என்றோ வடிவமைத்து முடித்துவிட்டான்.
நம் ஒவ்வொருவரின் ஆதி தொடக்கம் அந்தம் வரை அவன் அவனது விரல் நுனியில் வைத்துக்கொண்டு நகர்த்திக்கொண்டிருக்கிறான்.
இவ்வுலகம் கூட கற்காலத்தில் இருந்து இருண்ட யுகத்தை தாண்டியே நவீன யுகத்தில் காலடி எடுத்து வைத்தது.
மனிதனின் ஆதியில் இருந்து பார்க்கும் போது நமக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். ஒன்றுமே இல்லாத ஒரு அற்பத்தில் இருந்து தான் கடவுள் நம்மை சிருஷ்டித்தான். கற்காலத்தை பொறுத்தவரையில் அங்கும் அனைத்தும் அற்பமே.
நம்மை சிருஷ்டித்த கடவுள் ஒரு இருட்டறையில் வைத்து தான் நம்மை போஷித்தான். அந்த இருட்டறையில் தான் நம் வாழ்வின் முதல் பத்து மாதங்களை நாம் கடத்தினோம்.
அதன் பின்னர் தான் நாம் இவ்வுலகிற்கே வந்தோம். இருட்டறையில் இருந்து வந்த பலருக்கு இந்த வாழ்க்கை வசந்தமாக அமையும். இன்னும் சிலருக்கோ இந்த வாழ்க்கையும் இருண்டதாகவே அமைந்து விடும்.
இருண்ட கருவறை வாழ்க்கையில் இருந்து வந்த ரிதுர்ஷிகா தன் வாழ்க்கையின் முதல் ஏழு வருடங்களையும் அதை விட இருண்டதாகவே தான் கடத்தினாள்.
அவளை சுற்றி பல வர்ணங்கள் இருந்தாலும் அதை அவளால் ரசிக்கவும் முடியவில்லை. அவை அந்நேரத்தில் அவளுக்கு சொந்தமானவையாக இருக்கவும் இல்லை.
என்று அவளது சித்தப்பாவான விஜய்யால் அவள் கடத்தப்பட்டாளோ அன்று தான் அவளுக்குரிய வசந்தம் ஆரம்பமாகியது.
ஆனால் அந்நேரத்தில் அவளாகவே அவளைச் சுற்றி இருண்ட ஒரு வளையத்தை போட்டு வெகு நாளாகியிருந்தது. விஜய்யும் சரி இல்லத்தின் பொறுப்பானவறான நிஷாந்தினியும் சரி இவளை கவனிக்காமல் இருக்கவில்லை. கவனித்த அவர்களால் சரியான முறையில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தது.
பொதுவாக ஒருவரது பேச்சு, பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளை வைத்து அவரது பிரச்சினையை ஓரளவு கணிக்கலாம். இவளைக் கவனித்த நிஷாந்தினி, தான் கவனித்த விடயங்களை விஜய்யிடம் பகிர்ந்து கொள்ள விஜய் ஆரம்பத்தில் இவள் ஒட்டிஸம் என்ற உளவியலுடன் தொடர்பான ஒரு கோளாரால் பாதிக்கப்பட்டிருப்பாளோ என்ற சந்தேகத்தோடு தான் உளவல ஆலோசகரை சந்திக்க அழைத்துச்சென்றான்.
ஒட்டிஸம் எனப்படுவது ஒரு குழந்தையின் தகவல் தொடர்புகொள்ளும் திறமைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக வளர்ச்சியில் தாக்கங்களை ஏற்படுத்துகின்ற ஒரு சிக்கலான, வளர்ச்சிசார்ந்த கோளாறாகும்.
இது ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களில் தான் எழுகின்றன. ரிதர்ஷிகாவுக்கும் அப்படி இருந்து கவனிக்காமல் விட்டதால் இன்று இவள் இப்படி இருக்கிறாளோ என்று விஜய் ஒருகணம் யோசித்தான்.
காரணம் அவள் அவளது மூன்றாம் வயதுகளில் எவ்வாறான சூழ்நிலையில் இருந்தாள் என்பதை அவன்தான் நன்கு அறிந்தவனாயிற்றே.
(உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பிக்கேட்ஸ் கூட ஓடிஸத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது நம்மில் பலர் அறியா உண்மையாகும்.)
ஆனால் உண்மையில் அவளுக்குள் எந்தவித உளம் சார்ந்த பிரச்சினையும் இல்லை. அவளாகவே அவளை அப்படி மாற்றிக்கொண்டுள்ளாள் என்பதே உண்மையாகும்.
தானாகவே ஆழ்மனதில் பதிய வைத்துக்கொண்டுள்ள விடயங்கள் காரணமாக இவ்வாறு உள்ளுக்குள் இறுகிக்கொண்டுள்ளாள். அவள் சிறுவயதில் அனுபவித்த மோசமான நிகழ்வுகள் அவளை இப்படியாக மாற்றவைத்துள்ளது.
ஆனால் இன்று நிலைமை ஓரளவு மாற்றம் அடைந்துள்ளது. உளவியலின் கருத்துப்படி நம்மைச்சுற்றி அதிகமாக இருக்கும் ஐந்து நபர்களின் பழக்கவழக்கங்கள் காலப்போக்கில் நம்மில் ஒட்டிக்கொள்ளுமாம். இன்று நம் நாயகியோடு தன் குணத்தால் நன்றாகவே ஒட்டிக்கொண்டுவிட்டாள் நிருஷனா.
ஆம். ரிதுர்ஷிகா வேளையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. முன்பு போல் இல்லாமல் அவளுக்கு அங்கு நிறைய நண்பிகள் கிடைத்திருக்கின்றனர். அதற்கு காரணமும் நிருவே. இவளும் பல விடயங்களில் தன்னை மாற்றிக்கொண்டுள்ளாள். அவளுள் இப்பொழுது ஒரு புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது. இளமைக்கே உரிய துள்ளல் அவளிடம் சிறிது வந்துள்ளது. அவளே அவளுள் பல மாற்றங்களை கண்டுவருக்கின்றாள்.
ஆனால் ஆண்கள் விடயத்தில் மட்டும் இன்னும் அவள் மாறவில்லை. முன்பை போல் அவ்வளவாக இல்லை என்றாலும் அவளுள் உருவாகும் படபடப்பு இன்னும் குறைந்த பாடில்லை.
ரிதுர்ஷிகா இங்கு வேலையில் சேர்ந்த மறு கிழமையில் இங்கு வந்து சேர்ந்திருந்தார் அவர்.
வேறுயாரும் இல்லை. ஒரு உளநல ஆலோசகர். பொதுவாக உளநல ஆலோசகர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் போது ஒரு நிறுவன கட்டமைப்புக்குள் செய்யப்படவேண்டிய உளநல ஆலோசனைகள் தொடர்பான பயிற்சிகளும் அளிக்கத்தான் படுகின்றன.
இன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரையில் அது இன்றியமையாததாகும். ஒவ்வொரு நிறுவன கட்டமைப்புக்கும் உளநல ஆலோசகர் அவசியமாகும்.
இந்த நிறுவனத்தில் இதற்கு முன் யாராவது உளநல ஆலோசகர் என்ற இடத்தில் இருந்தார்களா இல்லை இவர் தான் முதலாமவராக வந்திருக்கிறாரா என்பதை இவர்கள் யாரும் தெரிந்திருக்கவில்லை. எது எவ்வாறோ இன்று உளநல ஆலோசகர் ஒருவரும் இந்த வணிகக்கட்டமைப்பில் உள்ளார்.
அன்றைய காலையில் லிஃட்டில் தாங்கள் பணிபுரியும் ஒன்பதாவது தளத்திற்கு வந்து சேர்ந்த ரிதுர்ஷிகா மெதுவான நடையுடன் தன் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். வரும் போதே ஒரு பரபரப்பான தன்மையை உணர்ந்தவள் பார்வையை சுழலவிட்ட வண்ணம் தான் வந்து சேர்ந்திருந்தாள்.
"குட் மோர்னிங் ரிதூ.
இன்னேக்கும் நிரு வரல்லயா?" -அஞ்சலி
"குட் மோர்னிங்டி. அவள் எங்க வரப்போறாள் வன் வீக் லீவ்ல தான் மேடம் ஊருக்கு போயிருக்கா. உன் கிட்டயும் சொன்னாள் இல்ல." -ரிதூ
"ம்ம் சொன்னாள் சொன்னாள். அந்த சொட்ட அவளுக்கு மட்டும் லீவ் கொடுத்தான் பாரு. அங்க நிக்கிறாள் அவள். அவரையும் கைல போட்டுக்கிட்டு இருக்காள். நானும் எத்துன முற கேட்டும் இன்னும் எனக்கு ஓகே சொல்லவே இல்ல அந்த சொட்ட..! " -அஞ்சலி
"ஹா ஹா. நீ சொட்டன்னு சொன்னது அவருக்கே கேட்டிருக்கும் இப்போ தான் இந்த இடத்த க்ரோஸ் பண்ணி போனாரு. பேசுரத்துக்கு முன்ன அக்கம் பக்கத்துல கொஞ்சம் பார்க்கணும் பேபி"
என்ற படி வந்து அஞ்சலியின் தலையில் கொட்டினாள் வித்யா.
கண்களை அகல விரித்தவள்,
"உண்மையாவா பேபி?"
"ம்ம்ம்" என்று மேலும் கீழும் தலையாட்டினாள் வித்யா.
"போடி போங்கு. நீ வாய திறக்காம தலையாட்டினா பொய் தான் சொல்றன்னு எனக்கு தெரியும்." -அஞ்சலி
"தெரியுமில்ல இப்பயாச்சும் வாய மூடிக்க. அதுசரி இன்னேக்கி என்ன நம்ம ஆபிசே பரபரப்பா இருக்கு. நம்ம தலைவர் கூட பம்பரமா சுத்திட்டு இருக்காரு.." - வித்யா
"ம்ம்ம். நானும் பார்த்தேன். சம்திங் டிஃப்ரெண்ட்" -ரிதூ
"அந்த சொட்ட.."
ஆரம்பிக்க போன அஞ்சலியை பார்வையாலே அடக்கி பேசினாள் வித்யா.
"அடியேய் உனக்கு இதுதான் லாஸ்ட் வார்னிங். இனிமே வெங்கட் சாருக்கு நீ சொட்டன்னு சொன்னனு வை. இந்த ஜென்மத்தில சொட்ட தலையன் ஒருத்தன் தான் உனக்கு கெடைப்பான் பாரு. நீயா மாத்திக்கிரியா இல்லாட்டி சொட்ட தலையன் ஒருத்தரையே கல்யாணம் கட்டிக்கிறியா. சாய்ஸ் பண்ணும் உரிமை அத்தனையும் உனக்கு தான்." -வித்யா
"ஏண்டி உனக்கு இவ்ளோ நல்ல மனசு. இப்டி சாபம் விடுற?"-அஞ்சலி
"வேறென்னடி பண்ண சொல்ற. எப்போபாரு சொட்ட சொட்டன்னு சொல்ற. அந்த குடும்பஸ்தனும் பாவம் இல்ல."
என்றவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "அதான்" என்று முடித்துக்கொண்டாள்.
"ஓகே இனி வெங்கட்னே சொல்றேன். அதுக்காக சாருன்னு எல்லாம் அந்த சொ... சீ சீ... அந்த மனுஷனுக்கு மரியாதை எல்லாம் கொடுக்க மாட்டேன்." -அஞ்சலி
"நீ என்ன வேணா சொல்லிக்க ஆனா சொட்டங்குறது மட்டும் வரக்கூடாது. இப்போ சொல்லு என்ன மேட்டர்?" -வித்யா
"அதான் நம்ம தலைவர் வெங்கட் ஓட தலைவர் வர்றாராம்." -அஞ்சலி
"யாரு அவரோட அப்பாவா?" -வித்யா
"இல்ல இல்ல.
அவரோட......
ஆயா வர்றாங்கலாம்" சிரிக்காமல் சொன்னவளை முறைத்துப்பார்த்தாள் அஞ்சலி
இடையில் பார்வையாளராக மாத்திரம் இருந்த ரிதூ குலுங்கிச்சிரித்தாள். அவளோடே அஞ்சலியும் வித்யாவும் சேர்ந்து கொண்டனர். இதுங்கள் இரண்டினதும் வழமையும் இதுவே. சிரித்து ஓய்ந்தவர்கள்,
"ப்ளீஸ் சொல்லு டி. யாரு வர்றாங்களாம்?" -வித்யா
"மிஸ்டர் என். ஆர்." -அஞ்சலி
"ஓஓஹ். அந்த மனுஷனா?" -வித்யா
"உன் மாமா இல்ல" -அஞ்சலி
"யாரு" -வித்யா
"என். ஆர் தான்." -அஞ்சலி
நங்கு நங்கு என்று அஞ்சலியின் தலையில் நாலு போடு போட்டவள்,
"என்னடி ஆச்சு உனக்கு. இன்னேக்கி என்ன வாரிக்கிட்டே இருக்க" என்று அவளை முறைத்தாள்.
"இல்ல நீ தான் அந்த மனுஷனானு சிம்பிளா கேட்ட இல்ல. அதான் உனக்கு தெரிஞ்ச உன் மாமாவா இருப்பாரோன்னு நெனச்சிட்டேன். ஹ்ம்ம்ம். வேற எப்டி இருக்கப்போராரு நம்ம சொட்... சீ சீ.
நம்ம வெங்கட் ஸ்டைலோட கண்ணுல தொங்குற கண்ணாடியோட ம்ம்ம்..
வேற... கொஞ்சம் தொப்பையோட வந்து இறங்குவாறு பாரு தலைவருக்கு எல்லாம் தலைவர்."
ஒரு தோரணையில் சொன்னாள் அஞ்சலி.
"ஹாஹா நிஜமாவே அப்டிதான் இருக்கப்போராரு பாரேன். நிரு இருந்திருந்தா அவளையும் கூட்டு சேர்த்திருக்கலாம். ஜஸ்ட்டு மிஸ்ஸு" -வித்யா
அப்பொழுது இவர்களோடு வந்து சேர்ந்தாள் நேஹா. அவளைப் பார்த்ததுமே முகத்தை சுழித்துக்கொண்டாள் அஞ்சலி.
அஞ்சலியும் நேகாவும் பல போது இந்தியாவையும் சீனாவையும் போல் இருப்பார்கள். அப்பொழுதெல்லாம் நடுவில் இலங்கையாக சிக்கித்தவிப்பது மீதி மூவரும் தான். இன்னும் சில போது இவர்கள் இருவரும் அமெரிக்காவும் ரஷ்யாவுமாக வலம்வருவார்கள். அப்பொழுதெல்லாம் நடுவில் துருக்கியாக மாட்டிக்கொண்டு தத்தளிப்பதும் இதே மூன்று ஜீவன்களும் தான்.
இத்தனைக்கும் அஞ்சலியும் நேஹாவும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் பிறந்த இரத்தபந்தங்கள் என்பது இவர்களும் அறிந்த உண்மையாகும். ஆனால் சிறுபிள்ளைத்தனமான இவர்கள் இருவரினதும் யுத்தத்திற்கு காரணத்தை இவர்கள் இன்னும் அறியவில்லை.
சீறிப்பாய்ந்த சிறுத்தையாக வந்த அந்த கருப்பு நிற காரில் இருந்து இறங்கிய நவா மின்னல் வேகத்தில் அந்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்தான். அவனது நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பின்னாலேயே மிகவும் சிரமப்பட்டு ஓடினார், அவனின் பி.ஏ யாக இருக்கும் கோபால்.
பதினைந்து மாடிகளைக்கொண்ட அந்த கட்டிடத்தின் பதினோராவது தளத்தில் இருக்கும் கான்பாஃரன்ஸ் ரூமிற்குள் அவன் நுழையும் போது அந்த அறையே நிரம்பியிருந்தாலும் மாயான அமைதி அங்கு நிலவியது.
அவனை இதுவரை கண்டிராதவர்கள் பலரும் அவனைப் பார்த்து ஒரு நொடி அசந்துதான் போனார்கள். அவன் இவ்வளவு இளவயதை உடையவனாக இருப்பான் என்பதை பலர் அங்கு எதிர்பார்க்கவில்லை. பலரது கற்பனையில் இருந்த அவனது முகமும் உண்மையான அவனது முகமும் உண்மையிலேயே வித்தியாசமானதாக தான் இருந்தது.
என்.ஆர் குரூப் ஒப் கம்பனியின் சென்னை கிளையை சேர்ந்தவர்கள் மாத்திரம் இல்லாமல் ஏனைய சில கிளையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் அங்கு இருந்தனர்.
அவனது முகம் சாந்தமானதாக இருந்தாலும் அவனது பார்வை ஏதோ ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க வந்த போலீஸின் பார்வையை போல சிலருக்கு தோன்ற அந்த குளிரிலும் வியர்வை துளிகள் அவர்கள் முகத்தில் அரும்பியிருந்தன.
சிலபல கலந்துரைலயாடல்களோடு அந்த ஒன்றுகூடல் முடிய நவநீதனின் பி. ஏ வெங்கட்டிடம் ஒரு உறையை நீட்டி ஏதோ கூற அவரின் முகம் சற்றே மாறியது.
கூட்டத்தை முடித்துக்கொண்ட நவா அதே வேகத்தில் அந்த இடத்தை விட்டும் அகன்றிருந்தான். அவனை அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தவிர்ந்த ஏனைய எவரும் காணவுமில்லை. அவன் யாரையும் பார்க்கவுமில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஏற்படாத வகையில் தான் அவன் தன் பயணத்தை திட்டமிட்டிருந்தான்.
வெங்கட் யோசனையில் மூழ்கியிருக்க, வெங்கட்டின் கீழ் இருந்த இருவருக்கான இடமாற்ற கடிதங்கள் அவரது கைகளில் இப்போது இருந்தன. யோசனைக்கு மத்தியில் அந்த கடிதங்களை எடுத்துக்கொண்டு தன் அறை நோக்கி சென்றார் வெங்கட்.
"நவா"
"என்னம்மா"
காதோடு உறவடிக்கொண்டிருந்த போனை கையில் எடுத்த வண்ணமே தன் தாயிடம் திரும்பினான் நவநீதன்.
"சனா இன்னேக்கு கிளம்புறதா சொன்னா. நா நாம வந்ததுக்கு அப்புறமா கிளம்புன்னு சொல்லிட்டேன்."
"ஓஓஹ். நாம தான் நாளைக்கு மோர்னிங் கிளம்புறோமே" -நவா
"ம்ம்ம்.
நீ அவகிட்ட பேசுறியா பா. எனக்கென்னமோ அவ ஒத்துக்க மாட்டளோன்னு பயமா இருக்குடா"
கவலை படர்ந்த முகத்துடனே தன் மகளிடம் எதையோ ஒப்புவிக்க தன் மகனின் உதவியை நாடினார் அவர்களின் செல்ல அம்மா.
அம்மாவின் தோள்களில் கையை போட்டு அணைத்த வண்ணமே தன் நடையை தொடர்ந்தவன்,
"அம்மா இதெல்லாம் ஒரு மேட்டரா. நா அவள்கிட்ட பேசுறேன்..."
என்றவன் பேசி முடிக்கும் முன்னரே யாரின் மீதோ இடித்திருந்தான்.
"ஓஓஹ் சாரி"
என்றவன் நிமிர்ந்து பார்த்ததும் அவனது முகத்தில் புன்னகை தாண்டவமாடி அவனது நாவு
"அக்கா" என்று உச்சரித்தது.
"ஹேய் நவா." அவளது முகத்திலும் ஒரு உற்சாகம்.
தன் தாயிடம் திரும்பியவன்,
"அம்மா இவங்க தர்ஷிகா. தர்ஷனோட அக்கா"
அவனை முறைத்தவர் "எனக்கு தெரியாது பாரு." என்றபடி அவளின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டவர்,
"எப்டிமா இருக்க. உன் கல்யாணத்துல பார்த்தது. அதுக்கப்புறம் இன்னேக்கி தான் பாக்குறேன். "
சிநேகமாக அவரைப் பார்த்து புன்னகைத்த தர்ஷிகா,
"நான் நல்லா இருக்கேன் ஆண்டி..."
என்று பேச்சை ஆரம்பிக்கும் போதே அங்கு ரிதுர்ஷிகாவும் விஜய்யும் வந்து சேர்ந்தனர்.
அவர்கள் அங்கு வந்து சேரும் வேளையில் சரியாக நவாவின் போன் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிக்கவே விஜய்யிடம் புன்னகை ஒன்றை வீசியவன் "எக்ஸ்கியூஸ் மீ" என்றபடி போனை ஸ்வைப் செய்து கொண்டு சற்றே அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
அமைதியாக காரை செலுத்திக்கொண்டிருக்கும் தன் மகனை நிகிழினி யோசனையோடு பார்க்க,
அம்மாவின் பார்வையை பார்த்த மைந்தன்,
"என்னமா? ஏதோ யோசனை பலமா இருக்கு"
"ம்ஹும். " என்று மறுப்பாக தலையசைத்தார் நிகிழினி.
"ஹா ஹா. எனக்கு உங்க பார்வைய தெரியாதா என்ன. சொல்லுங்க என்ன கேட்கனும்." -நவா
முதலில் சற்றே தயங்கினாலும் பின்னர்,
"எனக்கென்னமோ உனக்கும் சனாக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் வெச்சிக்கிட்டா நல்லா இருக்கும்னு தோணுது கண்ணா."
என்றவர் நிறுத்தி நவாவின் முகத்தை ஆராய்ந்தார்.
அவனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
"ம்ம்ம். என்னமா திடீர்னு இப்டி ஒரு ஐடியா?"
"இல்லடா கண்ணா. அப்டி செய்தா நல்லா இருக்கும்னு தோணுது. ரிசப்ஷன வேறயா வெச்சிக்கலாம். நீ என்ன சொல்ற?" -நிகிழினி
"என்னமா இவ்ளோ ஸ்பீடா இருக்குறீங்க. மொதல்ல பொண்ண பார்க்க வேணாமா?" குறும்பாக கூறி கண்ணடித்தான் நவா.
"நீ தான் பொண்ணு பார்த்திருக்குறதா சொன்னியே"
என்ற நிகிழினி தன் கண்ணனின் மீது துளைத்தெடுக்கும் ஆராய்ச்சிப் பார்வையை வீசினார்.
அவர் சொல்ல ஆரம்பிக்கும் போது "ஹஹ்ஹா" என்று சிரிக்க ஆரம்பித்தவன் தன் தாயின் ஆராய்ச்சிப் பார்வையை பார்த்து திரு திரு என்று முழித்து வைத்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro