Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌚13🌚

பரபரப்பான சென்னை மாநகர விமான நிலையம் அந்த அதிகாலை வேளையிலும் தனக்கே உரிய விறுவிறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

தோழிகள் ஐவரும் பெங்களூர் நோக்கிய தங்கள் பயணத்தை தொடருவதற்கே இந்த அதிகாலையில் விமான நிலையத்தில் தங்கள் தூக்கத்தை எல்லாம் தொலைத்து விட்டு அமர்ந்திருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் புகையிரதத்தில் பயணத்தை மேற்கொள்ள திட்டம் போட்டிருக்க இவர்களின் திட்டத்தை குழைக்கவே நிருவின் அண்ணா அனைவருக்கும் விமான டிக்கட்டை ஏற்பாடு செய்வதாக கூறினார். இதைக் கேட்டு நிருவைத் தவிர ஏனைய நால்வருமே முகத்தை சுழிக்க தன் அண்ணனின் பேச்சை மீற முடியாமல் எவ்வாறோ இவர்களை சரிக்கட்டி விமான நிலையம் வரை அழைத்து வந்திருக்கிறாள் நிருஷனா.

வெங்கட் சாரிடம் மேலதிக நேரம் என்று கேட்டு வாங்கி வேளை செய்து ஏனைய நால்வருக்கும் தனக்குமாக ஒரு கிழமை விடுமுறையை வாங்கியிருக்கிறாள் நிரு. இதற்கும் அஞ்சலியிடம் இருந்து நிருவுக்கும் வெங்கட்டுக்குமாக பலமான அர்ச்சனை கிடைத்தது என்னமோ உண்மை தான்.

திடீரென "ஷிட்..." என்று முகத்தை சுளித்த அஞ்சலி தன் கையடக்கத் தொலைபேசியை கொஞ்சம் வேகமாக தட்டி விட்டு "ஐயோ" என்று அழுத்துக்கொண்டாள்.

"இப்போ என்னடி உனக்கு பிரச்சின?
கொஞ்ச நேரம் போஃன நோண்டாம உன்னால இருக்கவே முடியாதா?" - வித்யா

"ஏற்கனவே கடுப்புல இருக்கேன்.
நீ வேற சும்மா கேள்வி கேட்காத வித்."
என்றவள்,
முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு,
"என் மொபைல் டேடா முடிஞ்சிருச்சு"
என்றாள்.

"ஹஹ்ஹா அதுக்கு தான் மேடம் இவ்ளோ அழுத்துக்குரியா. விட்டா உன்னாலேயே நூற்று ஐம்பது கோடி ஜீபியும் கவர் ஆகிடும் போல" -வித்யா

"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியவே இல்ல."
உதட்டை சுழித்தாள் அஞ்சலி.

"இல்ல உலகத்துல அதிக மொபைல் டேடா யூஸ் பண்ற  நாடுகள்ல இந்தியா தான் முதல்ல இருக்கு தெரியுமா.
இந்தியாவுல ஒரு மாதத்துக்கு நூற்று ஐம்பது கோடி ஜீப்பி டேடா யூஸ் பண்றாங்களாம்.
எனக்கென்னமோ விட்டா நீ ஒருத்தியே அந்த மொத்ததையும் யூஸ் பண்ணுவ போல் இருக்கு.
ஹ்ம்ம்ம். உன்னை கட்டிக்கிட்டு வைபை பில்லு கட்டியே எவன் லோஸ்ட் ஆக போறான்னு தெரியல.
பாவம் அந்த அப்பாவி ஜீவன்." -வித்யா

"போடி உன்ன..."
என்று அஞ்சலி ஆரம்பிக்கும் போதே நிரு இவர்கள் அருகில் வந்தாள்.
"வாங்க போலாம் பிளைட்க்கு டைம் ஆச்சு"
என்று கூறி முன்னால் செல்ல அவளுக்கு  பின்னாலே சென்ற மீதி நால்வர்களிலும் அஞ்சலி வித்யாவின் காதைக் கடித்தாள்.
"இப்போ எல்லாம் நீ என்ன ரொம்ப ஓட்டுற வித்.
நிரு வீட்டுக்கு போனதும் முதலாவது உன் கணக்கை தான் முடிக்கணும். அப்புறம் ரிதூ கணக்கு ஒன்னு இருக்கு."

"என் கணக்கு ஓகே.
ரிதூ கணக்கு என்ன?
அவள் தான் உன் கூட தப்பிக்க முடியாதுன்னு வாயவே கொடுக்க மாட்டாளே"
நடைக்கு இடையே நாடியில் விரல் வைத்து போலியாக யோசித்தாள் வித்யா.

"ஹஹ்ஹா அதுனா சரி.
ஆனா ஒரு மேட்டர் இருக்கு. அங்க போனதுக்கு அப்புறம் நா சொல்றேன்." -அஞ்சலி

"ஏய் என்னடி?
எனக்கும் உனக்கும் இடையில எந்த கணக்கும் கெடையாது.
மவளே எதாவதுன்னு வந்த..." -ரிதூ

"என்ன பண்ணுவியாம்?" -அஞ்சலி

"ஹீ ஹீ.
ஒண்ணுமே பண்ண மாட்டேனே.
நீ தான் என் செல்லம் இல்ல.
என்ன விட்டுருவ இல்ல" -ரிதூ

"அது...
பொலச்சி போய்க்க" -அஞ்சலி

விமானத்தில் ஏறி ஒரு மணித்தியாளங்களும் ஐந்து நிமிடங்களிலும் பெங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கியிருந்தனர் ஐந்து நண்பிகளும். விமான நிலைய அனைத்து சம்பிரதயங்களையும் முடித்துக்கொண்டவர்கள் வெளியில் வர இவர்களுக்காகவே என்று காத்திருந்தது இரண்டு கார்கள்.

நிருவை தவிர ஏனைய நால்வரும் காரைப் பார்த்து விட்டு கொஞ்சம் குழம்பித்தான் போயினர்.

"என்னடி இது நமக்கு ராஜமரியாதை பெங்களூரில் கெடைக்குது?
நிரு வீட்டுக்கு போறதுக்கு ரெண்டு கார் வந்து நிக்குது?" -அஞ்சலி

"பேசாமவா அஞ்சல்ஸ்.
நீ முடிக்க வேண்டிய கணக்குல நிருவையும் எட் பண்ணிக்கோ. வீட்டுக்கு போய் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவ கணக்கை முடிச்சிறலாம்."
என்று கூறும் போதே இவர்கள் அருகில் வந்தாள் நிருஷனா.

"ஹேய் கேர்ள்ஸ் நீங்க எல்லாரும் அந்த கார்ல ஏறுங்க." -நிரு

"ஏன் நீ நம்ம கூட வரல்லயா நிரு?" -ரிதூ

"நாம் அஞ்சு பேர் இருக்கோம் டார்லிங்.
உங்கள கொண்டு போய் என் வீட்டுல தான் விடுவாங்க.
எனக்கு சின்ன ஒரு வேலை இருக்கு.
அத முடிச்சிட்டு நா அண்ணாவோட வந்துடுறேன்.
அம்மாகிட்ட எல்லாம் சொல்லி தான் இருக்கேன்."
எனும் போதே அஞ்சலி நிருவை முறைக்க ரிதூ வாய்விட்டே சிரித்தாள்.

"எதுக்குடி நீ சிரிக்குற?"- அஞ்சலி

"ஹீ ஹீ.
ஒன்னுமில்ல அஞ்சல்ஸ் நீ பிறக்குறபோவே முறைச்சிக்கிட்டு தான் பொறந்தியோன்னு சின்னதா ஒரு டவுட்டு.
யாருக்கிட்ட கேக்கலாம்னு வேற யோசனையா... அதான் சிரிச்சிட்டேன்." -ரிதூ

"உங்க எல்லாரையும் கவனிச்சிக்கிறேன்டி.
மொதல்ல போய் நல்லா தூங்கனும்.
அப்புறம் தான் என் வேலைய ஸ்டார் பண்ணனும்.
அப்போ வரைக்கும் பொலச்சி போய்க்கங்க.
வாங்க நாம கிளம்பலாம்."- அஞ்சலி

"அஞ்சல்ஸ் நீ முன்னால் ஏறு.
மத்தவங்க பின்னால் ஏறிக்கட்டும்"
சொன்ன நிருவைப் மீண்டும் ஒரு முறை முறைத்து வைத்தவள் முன்னால் அமர ஏனையவர்களும் போய் அமர்ந்துகொள்ள அந்த கார் அவ்விடத்தை விட்டும் நகர்ந்தது.

அந்த கார் நகரவும் மற்றைய காரில் இருந்து துள்ளலோடு இறங்கினான் அவன்.

தன் தங்கை அந்த கார் போவதையே பார்த்திருப்பதை பார்த்தவன்,
"சனா"
என்று குரல் கொடுக்க, தன் அண்ணனின் குரலில்
"நவாண்ணா"
என்றபடியே திரும்பினாள் சென்னையில் நிருவாகவும் பெங்களூரில் சனாவாகவும் இருக்கும் நிருஷனா.

அங்கே சிரித்தபடி நின்று கொண்டிருந்தான் நம் தலைவன் நவநீதன் ராகவ்.

இவளும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே
"போலாமாணா?"
என்று கேட்டபடி காருக்கு அருகில் வர, அவளது கையை பிடித்திழுத்து தோளை சுற்றி கைப்போட்டுக்கொண்ட நவா,
"தேங்க்ஸ் சனா.
தேங்க்ஸ் போர் எவ்ரிதிங்"
என்று சிரித்தபடியே சொல்ல,

"ஹ்ம்ம்ம்.
எவ்ரிதிங்னா?"
அடக்கப்பட்ட சிரிப்ப்புடன் ஒற்றை புருவத்தை உயர்த்திக்கேட்டாள் சனா.

"ஷோர்ட்டா சொல்லட்டா இல்லாட்டி லோங் லிஸ்ட்டையே சொல்லட்டா?"-நவா

"ஹஹ்ஹா ஷோர்ட்டாவே சொல்லுணா." -சனா

"ம்ம்ம்.
எனக்காக சென்னை போனதுக்கு,
ரிதூ கூட உன் கால நேரத்தை ஸ்பெண்ட் பண்ணதுக்கு,
அவள இவ்ளோ தூரம் மாத்தினதுக்கு,
அண்ட் பெங்களூர் வர எப்டியோ கூட்டிக்கிட்டு வந்ததுக்கு.
இப்டி நெறைய சொல்லலாம்
சனா." -நவா

"இவ்ளோ செஞ்சும் அவ இன்னும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லவே இல்லையேணா.
அது ஞாபகம் இருக்கு தானே" -சனா

"ஹீ ஹீ.
நாத்தனாரா இருந்துக்கிட்டு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தையும் வெச்சுக்கிட்டு நீ பேசுறது உனக்கே நியாயமா இருக்கா சனா?
பத்திரிகை வேற எல்லாருக்கும் கொடுத்துட்டோம்.
ஸோ அதுக்கும் நீ தான் சம்மதிக்க வெக்கணும்.

விஜய் மாமா எல்லாம் நைட்க்குள்ள வந்துருவாங்க ஸோ அதுக்குள்ள நீ செய்ய வேண்டியத மட்டும் பேர்பெக்டா செஞ்சிடு.
மீதியை மாமா பாத்துப்பாரு." -நவா

"ஹஹ்ஹா ஓகே ஓகே.
உலகத்துல எந்த நாத்தனாருக்குமே என் நிலமை வந்துராம அந்த கடவுள் தான் பாத்துக்கணும்.
உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சிக்கிக்கிட்டு விழிக்க போறது என்னமோ நா மட்டும் தான்ணா.
உன்னால என் பிரென்ட்ஷிப்கு ஏதாவது ஆச்சு அப்புறம் இருக்கு."
தன் அண்ணனை விரல் நீட்டி எச்சரித்தாள் சனா.

"ஹாஹா.
முதல்ல எனக்கு என் ரிதூ என் ரிதூவாகவே மாறனும்.
அதுக்கு அப்புறம் உன் பிரென்ட் ஷிப்க்கு எதுவும் ஆகாத மாதிரி நானே பாத்துக்குறேன் என்ன."

"ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.
எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் ரிதூ பத்ரகாளி ஆட்டம் போடாம இருந்தாள்னா ஓகே.
எப்டி சமாளிக்க போறேன்னு எனக்கு தெரியலணா.
அவளுக்கு மொத மீதி மூணு பேரையும்,
ஹையோ! இந்த அஞ்சலி வேற என் கழுத்தையே அருத்துருவாள்ணா.

உனக்கு ஒன்னு தெரியுமா?
வெங்கட் அங்கள் எனக்கு மட்டும் லீவ் தர்றார்ன்னு சொல்லி ஏற்கனவே அவளுக்கு என் மேல லைட்டா சந்தேகம் இருக்கு.
அடிக்கடி அவளே சொல்லுவாள் தெரியுமா.
இன்னேக்கி எனக்கு சாவு கன்போர்ம்" -சனா

"ஹஹ்ஹா"
என்று சத்தமாக வாய்விட்டே சிரித்த நவா.
"அவ உன்னை முறைக்கிறத நா பார்த்துட்டு தான் இருந்தேன்.
நல்லா அனுபவி சனா."
என்று சொன்னவன் கூலாக போய் காருக்குள் அமர,

"இதுக்கு தான் யாருக்குமே நல்லது செய்ய கூடாதுன்னு சொல்றது.
கடைசியில நம்ம தலைல தான் எல்லாம் வந்து விழுந்துடுது."
காருக்குள் ஏறி சத்தமாக சொன்னவள் கார் கதவை வேண்டும் என்றே வேகமாக சாத்தினாள்.

"ஹஹ்ஹா."
அதுக்கும் சிரித்து வைத்தான் நவா.

கடந்த இரண்டு மாதங்கள் நிருஷனா பெங்களூர் பக்கம் வரவே இல்லை. அங்கு பல பொய்க்கதைகளை கூறி ரிதூவை சரிக்கட்டி அழைத்துவர தான் மேற்கொண்ட முயற்சிகளை சுவாரஷ்யமாக வாய் ஓயாமல் கூறிக்கொண்டு வந்தாள் நிரு. அதை எல்லாம் புன்னகையோடே கேட்டுக்கொண்டு காரை ஓடிக்கொண்டு வந்தான் நவா.

"அன்னேக்கி பீச்சுக்கு வர்றதா நீ சொல்லவே இல்லையேணா" - சனா

"நீ கூடத்தான் பீச்சுக்கு போறதா என் கிட்ட சொல்லல.
அதான் நானே வந்தேன்.
உனக்கு ஒன்னு தெரியுமா எப்டி உங்கள பாக்குறதுன்னு யோசிச்சுட்டு தான் சும்மா வோக் ஒன்னு போட்டுட்டு இருந்தேன் நேரத்துக்கு ரிதூவாவே வந்து மோதிட்டா.
நீ பதறிக்கிட்டு ஓடி வந்தத பார்த்ததுமே எனக்கு அவ்ளோ சிரிப்பு .
ஹஹ்ஹா. நீ வறாம இருந்திருந்தா கூட அவளாவே சாரி சொல்லிருப்பா.
நீ தான் நடுவுல நந்தி மாதிரி வந்து குழப்பிட்ட"
என்ற தன் அண்ணனை சனா முறைக்க,

"சரி முறைக்காத விடு.
உண்மையிலே அவ ரொம்ப மாறிட்டாள் சனா.
நானே இவ்ளோ மாறுவான்னு நினைக்க கூட இல்ல."
ஆத்மார்த்தமாக கூறினான் நவா.

"எல்லாம் நம்மளோட ட்ரைனிங் தான்.
இதுக்கு எல்லாம் சேர்த்து சம்பளக்கணக்கு போடணும்.
ஒரு நாளா ரெண்டு நாளா?
அப்பாடா! எதுத்துன நாள் உழைப்பு"
வேண்டும் என்றே இல்லாத வியர்வையை துடைத்துக்கொண்டாள் சனா.

"ஹஹ்ஹா உனக்கு இல்லாததா.
எவ்ளோ வேணுமோ அவ்ளோ எடுத்துக்கோ.
நோ ப்ரோம்ப்ளம்."
என்று கூறி கண்ணடித்தான் நவா.

"நா எடுக்க மாட்டேன்னு தைரியம் இல்லணா.
அதான் கூலா சொல்ற"-சனா

சிரிப்புக்கு மத்தியிலே மேலும் கீழும் தலையாட்டி ஆமோதித்தான்.

"ஹ்ம்ம்ம்.
நேரம் வர்றபோ வட்டியும் முதலுமா எடுத்துக்குவேன்."
என்றவள் தன் போனை நோண்ட ஆரம்பித்திருக்க அவளை ஒரு பார்வை பார்த்த நவா.

"சனா"
என்று மெதுவாக அழைத்தான்.

"ம்ம்ம் சொல்லுணா" சனா

"கல்யாணத்துக்கு நிகில் வரமாட்டானாம்டா.
என் கல்யாணத்துக்கு இந்தியா வருவேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு தான் இருந்திருக்கான்.
திடீர்னு வர முடியாதுன்னு சொல்லிருக்கான் போல.
நா பேச ட்ரை பண்ணப்போ லைன் கெடக்கவே இல்ல" -நவா

முகத்தில் கவலையின் ரேகை படர அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
"ம்ம்ம்ம்"
என்று  பேச்சுக்கு பதில் கொட்டினாள் சனா.

உடனே கதையை திசை திருப்ப,
"அது சரி அன்னேக்கி ஈவினிங் நாங்க பீச்ல தான் இருக்கோம்னு எப்டி கண்டு பிடிச்ச?" -சனா

தங்கை கதையை திசை திருப்புகிறாள் என்பதை உணர்ந்தவன் அதை வெளிக்காட்டாமல்,
"ஹஹ்ஹா.
அதெல்லாம் அப்டி தான் சனா வெளியில சொல்ல முடியாது." -நவா

"ஓஹோ பரம்பரை இரகசியமோ?" -சனா

"யேஹ்! ஒப்கோர்ஸ்."
என்று சிரித்தான்.

"விஜய் சித்தப்பா கிட்ட கேட்டியா?" -சனா

"ம்ஹும்" -நவா

"அப்போ?" -சனா

"அதான் பரம்பரை ரகசியம்னு நீயே சொல்லிட்டியே.
எப்டி வெளியில் விடலாம்.
அது நியாயமா இல்ல தர்மமா?" -நவா

"ஹும்ம்.
ரொம்ப தான்."
என்று அழுத்துக்கொண்டவள்,
"சொல்ல முடியுமா முடியாதா?" -சனா

"அன்னேக்கி நீயும் குட்டியும் சித்தப்பா வீட்டுக்கு போனீங்க இல்ல.
அத எப்டி கண்டு பிடிச்சேனோ அப்டி தான் இதையும் கண்டுபிடிச்சேன்." -நவா

"அன்னேக்கி நம்மள உன் கிட்ட போட்டு கொடுத்தது உன் பிஏ தானே.
அவனுக்கு இருக்கு." -சனா

"ஹஹ்ஹா.
உனக்கும் கோபாலுக்கும் என்னடி பகை?
எப்போ பாரு அவன திட்டிக்கிட்டே இருப்ப?" -நவா

"அவன் தானே நம்மள உன்கிட்ட போட்டு கொடுக்குறது.
பாப்பா ரெண்டு பேரையும் அங்க பார்த்தேன் இங்க பார்த்தேன்னு,
அதான் எனக்கு அவன பிடிக்கவே மாட்டேங்குதுணா." -சனா

"அவன் ஒன்னும் அன்னேக்கி உங்கள் போட்டு கொடுக்கவே இல்ல.
நானா தான் கண்டு பிடிச்சேன்." -நவா

"அதான்ணா எப்டினு கேக்குறேன்.
ஓஓஹ் அம்மாட்ட கேட்டியாக்கும்?" -சனா

"இல்ல இல்ல சனா.
சரி சொல்லு பார்க்கலாம்,
அன்னேக்கிம் சரி பீச்சுக்கு போனபோவும் சரி எதுல போனீங்க." -நவா

"இதுல என்ன இருக்கு.
அன்னேக்கி நம்ம கார்ல போனோம்.
பீச்சுக்கு ஓபிஸ் கார வெங்கட் சார்ட சொல்லிட்டு எடுத்துட்டு போனேன்." -சனா

"நம்ம கண்ட்ரோல்ல இருக்குற எல்லா வெஹிகல்ஸ்க்கும் ட்ரக்கிங் சிஸ்டெம் பிக்ஸ் பண்ணி இருக்கோம்.
ஸோ சிம்பிளா எங்க இருக்குன்னு கண்டு பிடிச்சிடலாம்.
ஒரே ஒரு மெசேஜ் தான்." -நவா

"ஓஹோ.
இதான் சீக்ரட் மேட்டரா.
அத வெச்சு தான் வெங்கட் சாரோட செக்ரட்டரியயும் ப்ரொடக்ஷன் மெனேஜரையும் வேளையில இருந்து தூக்குனியாணா?" -சனா

"ம்ம்ம் யெஸ்.
அதவிடு சனா.
இன்னேக்கி ஈவினிங் சித்தியும் அம்முவும் வீட்டுக்கு வர்றதா சொல்லிருக்காங்க.
சித்தப்பாவை நா மீட் பண்ணி பேசினேன்."
என்று சொன்னவன் சனாவை திரும்பிப் பார்த்து,
"அம்மா உன்கிட்ட எல்லாம் சொல்லிருப்பாங்களே"
என்றான்.

"ம்ம்ம்ம் சொன்னாங்க.
எனக்கும் குட்டிக்கும் எப்போவோ தெரிஞ்ச மேட்டர் உனக்கு கொஞ்சம் லேட்டா தெரிஞ்சிருக்குணா.
அம்மு தான் நமக்கே கிளியர் பண்ணா.
பெரிய சித்தப்பாவையும் நீ இன்வைட் பண்ணிருக்குறதா அம்மா சொன்னாங்களே?"
கேள்வியாக தன் அண்ணனை நோக்கினாள்  சனா.

"ம்ம்ம்ம்" -நவா

"என்ன திடீர்னு?" -சனா

"எவ்ளோ நாளேக்கித்தான் பகையை வளர்க்குறதுன்னு தான்.
வர்றாங்களான்னு பார்ப்போம்.
அம்முக்கு இன்னும் டூ மந்த்ஸ்ல நிச்சியம் பண்ண இருக்குறதா சொன்னாங்க" -நவா

"ஹீ ஹீ தெரியுமே
அவள பொண்ணு பார்க்க வந்தன்னு தான் நானும் குட்டியும் போனோமே.
என் பிரென்ட் ஒருத்திட அண்ணா தான்." -சனா

"ஓஓஹ்"
என்றிழுத்தவன்
"உனக்கு தான் உலகம் பூரா பிரெண்ட்ஸ் இருக்காங்களே"
என்றான்.

"உனக்கு ஜெலஸ்"
என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

நிருவின் வீட்டை அடைந்ததும் தோழிகள் நால்வருக்குமே கொஞ்சம் குழப்பம் தான். இவ்வளவு பெரிய வீடு மற்றும் வசதிகளை வைத்துக்கொண்டு இவள் எதற்கு நம்முடன் வேலை பார்த்திருப்பாள் என்பது தான் அந்த குழப்பம். இவர்கள் நால்வருக்கும் ஆஹா ஓஹோ என்று வரவேற்பு வேறு பலமாக இருக்க பாவமாக நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள முடிந்ததே தவிர அந்த வேளையில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

நிருவின் அம்மாவே இவர்கள் நால்வருக்குமான அறைகளை மேல்மாடியில் ஒழுங்கு செய்து கொடுத்திருக்க நால்வரும் மாடிக்கு சென்றிருந்த நேரம் அண்ணனும் தங்கையும் வீட்டிற்குள் நுழைந்தனர். கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் கலைகட்டியிருக்க நிகிழினியின் முகம் மட்டும் இன்னும் தெளிவடையாமலே இருந்தது.

அதைக்கண்டு கொண்ட நவா அவருக்கு அருகில் சென்று ஆதரவாக அவரது தோளில் கைபோட்டுக்கொண்டு,
"எதுக்குமா மூட அவுட் ஆக்கிட்டு இருக்கீங்க"
கேலியாக கேட்டான்.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல கண்ணா.
மருமகளோட சித்தப்பா சித்தி எல்லாம். வந்து அவ கூட விபரமா பேசுற வர எனக்கு ஒரே பயமா இருக்குடா.
இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்த வேற வெச்சிக்கிட்டு.
நாம அவசரப்பட்டது பிழையோன்னு தோணுது கண்ணா.
அவ ஓகே சொல்லுவால்ல டா."
கண்கள் கலங்க கேட்ட தன் அம்மாவின் கைகளை ஆதரவாக பிடித்துக்கொண்டவன்,

"அவ ஓகே சொல்றாளோ இல்லையோ ரெண்டு நாள்ல அவ கழுத்துல தாலி ஏறும் மா.
இப்டி ஏன் சொல்றேன்னா அவ ஓகே சொல்லுவான்னு எனக்கு அந்தளவு நம்பிக்கை இருக்கு மா.
அவளுக்கு திடீர்னு கல்யாணம்னு சொன்னா தான் குழப்பி போயிருப்பா.
ஏற்கனவே விஜய் மாமாட சொல்லி கல்யாணம்னு இந்த மேட்டர பல தடவ சொல்லி அவள குழப்பி விட்டு தான் இருக்கேன்.
அவளுக்கு இப்போ ஒரு ஐடியா வந்துதான் இருக்குமா.
எப்டியும் விஜய் மாமா பேசி அவள சம்மதிக்க வெச்சிடுவாங்க மா.
யூ டோன்ட் வொரி.
இன்னும் ரெண்டு நாள்ல உங்க மருமகளா ரிதூ இந்த வீட்டுல இருப்பா. ஓகே." -நவா

மகனின் நம்பிக்கையான வார்த்தையில் சம்மதமாக தலையாட்டினார் நிகிழினி.

"இது அம்மா"
என்று அவரது கன்னங்கள் இரண்டையும் இழுத்து சிரிக்க வைத்தவன் விசில் அடித்தபடியே மாடியேறினான்.

வந்த களைப்பில் ரிதூவும் அஞ்சலியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க இதுதான் சந்தர்ப்பம் என்று அஞ்சலியை எழுப்பிக்கொண்டு ஏனைய இருவரையும் அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்ற நிரு அவர்களுடன் முழு விடயங்களையும் பகிர்ந்து கொண்டு தான் உண்மையை சொல்லாதததை எண்ணி பல தடவைகள் மன்னிப்பையும் கேட்டுக்கொண்டாள் .

இடையில் அடிக்கடி அஞ்சலி கண்களை கசக்கிக்கொண்டு இருப்பதை பார்த்த வித்யா பொறுக்க முடியானமல் அவளது கையை நன்றாக கிள்ளி வைத்தாள்.
"ஆஆஆஆ"
என்று கத்தியவள்,
"எதுக்குடி இப்டி கிள்ளின?" -அஞ்சலி

"நீ தானே கனவா நனவான்னு பார்க்க கண்ண கசக்கிக்கிட்டு இருந்த.
உன் கண்ண பார்க்க பாவமா இருந்ததா, அதான் கிள்ளிவிட்டு நீ கனவு கானல்லன்னு ப்ரூப் பண்ணேன்.
இப்போ அமைதியா அவள் கதைய கேளு." -வித்யா

நிருவின் கதைகள் அனைத்தையும் அமைதியா கேட்டுக்கொண்டிருந்த மீதி மூவரினதும் அமைதியை முதலாவதாக கலைத்தது என்னமோ அஞ்சலி தான்.

"நெனச்சேன் டி.
எனக்கு அப்போவே உன் மேல ஒரு டவுட்.
உனக்கு மட்டும் எப்டி இந்த மனுஷன் லீவ் கொடுக்குறாருன்னு.
நீயும் வெங்கட் சாரும் ரிலேஷன்ஸ்ஆ இருப்பீங்களான்னு தான் மொதல்ல சந்தேகம்.
அதுக்கப்புறம் நா உன்கிட்ட கேட்டபோ நீ நோனு சொன்ன இல்ல.
அப்புறம் நானும் விட்டுட்டேன்.
எப்டியோ என் சந்தேகம் ஓரளவு சரி தான் இல்ல." -அஞ்சலி

"ஹஹ்ஹா.
நீ யாரு அஞ்சல்ஸ்." -என்று சிரித்தாள் சனா.
"வெங்கட் சார் நம்ம அம்மாவோட குடும்பத்தோட ரொம்ப க்ளோஸ்டி.
நம்ம கைக்கு சென்னை ப்ரான்ச் வந்ததுமே அண்ணா அவரை  ஜீஎம் ஆ உடனே பிக்ஸ் பண்ணிட்டான்.
அவளோ நமக்கு நம்பிக்கையானவரு தான் அவர்." -சனா

"ம்ம்ம் நம்புறேன் நம்புறேன்.
ஆனாலும் நா உன்னைவிட இல்லமா.
என்னா மாதிரி எக்ட் பண்ணிருக்க.
சூப்பர் டி"
சிரித்துக்கொண்டே கூறினாள் அஞ்சலி.

"ரிதூ என்ன சொல்லுவாள்னு தான் எனக்கு பயமா இருக்குடி."
வருத்தம் கலந்த குரலுடன் கூறினாள் சனா.

"ஹேய் வெய்ட் வெய்ட்.
அப்போ அன்னேக்கி பீச்சுல ரிதூ மோதினது உன் அண்ணா கூடவா?"
குழப்பமாக கேட்டாள் வித்யா.

"ஆமா.
அண்ணாவே தான்.
ரிதூவை அண்ணா மொதல்ல பார்த்த இடமும் இதே பீச் தான்.
அப்போ அண்ணாக்கு வெறும் இருபத்து மூணு இயர்ஸ் தான்.
ரிதூ காலேஜ் பெஸ்ட் இயர் இருப்பாள் போல.
ஹீ ஹீ.
சாருக்கு கண்டதும் காதல்.
அவன் நம்ம கேஸ் விஷயமா தான் சென்னை போயிருக்கான்.
பெங்களூர் வந்ததுமே அம்மாகிட்ட தான் சொல்லியிருக்கான். அம்மா எதுவுமே சொல்லியிருக்க மாட்டாங்க போல.
அதுக்கு ரீசன் நானும் குட்டியும் தான். நம்மள சரியான முறையில் வளர்க்குற பொறுப்பு வேற அம்மாக்கு மட்டும் இருக்குஇல்ல.
அண்ணாவை ரொம்ப பொறுப்பா தான் அப்பா சின்ன வயசுல இருந்து வளர்த்திருக்காங்க. ஸோ அண்ணா தப்பா போயிட மாட்டான்னு அம்மாக்கு நம்பிக்கை.
ஸோ அம்மாவும் விட்டுட்டாங்க.
அண்ணா அன்னேக்கி அப்புறம் ரிதூ தொடர்பா அம்மாட்ட டூ இயர்ஸ் பேசவே இல்லை. ஆனா ரிதூ தொடர்பா எல்லா டீடெய்ல்ஸ்சையும் கெலெக்ட் பண்ணியிருக்கான். அதேபோல பல தடவ விஜய் சித்தப்பாவை மீட் பண்ணி பேசியும் இருக்கான்.
அவள மாற்ற பல கவுன்ஸ்லர்ஸ் கிட்ட அண்ணா அப்போய்ன்மெண்ட் போட்டுக்கிட்டு போய் பேசி விஜய் சித்தப்பா மூலம் ரிதூவ கவுன்சிலிங் கூட்டிக்கிட்டு போக ட்ரை பண்ணிருக்கான்.
ரிதூ தான் காலேஜ் போக ஸ்டார்ட் பண்ணதுமே கவுன்சிலிங் போறதயே நிறுத்திட்டாளே ஸோ அண்ணாவோட எல்லா முயற்சியும் தோல்வி தான்.
ரெண்டு மூணு கவுன்சலர் கிட்ட சித்தப்பா கம்பெல் பண்ணி கூட்டிக்கிட்டு போயிருக்காரு. ஆனாலும் நோ யூஸ் தான். ரிசல்ட் எப்போவும் ஸீரோ.
காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் ரிதூ வேலைக்கு போகணும்னு சொல்லியிருக்கா. அத சித்தப்பா அண்ணா கிட்ட சொல்லிருக்காரு. அண்ணாக்கு தெரிஞ்ச ஒரு சில கம்பனிக்கு அவள விஜய் சித்தப்பா மூலம் இன்டெர்விவ்க்கு அனுப்பி இருக்கான்.
ரெண்டுல அவளாவே பெயில் பண்ணிருக்கா மீதி எல்லாத்துலயும் அண்ணா சொல்லி வேணும்ண்ணே பெயில் பண்ண வெச்சிருக்கான்.
அதுக்கப்புறம் தான் நம்ம கம்பெனிக்கு அவ இன்டெர்விவ் வந்திருக்கா.
அன்னேக்கி தான் நானும் இங்க வந்தேன்.
அண்ணா அப்போ இங்க இருக்கவே இல்ல.
வியட்நாம் போயிருந்தான்.
அங்கப்போய் தான் ரெண்டு நாளேக்கி மொதல் கால் பண்ணி எனக்கு எல்லாம் சொன்னான்.
நானும் அடுத்த நாளே கெளம்பி சென்னை வந்தேன்."
என்றவள் பெருமூச்சொன்றை விட்டாள்.

"நீ தங்கியிருந்த வீடு உன் பிரென்ட் வீடுன்னு சொன்ன.
அதுவும் பொய் தானே"
கண்கள் மின்ன கேட்டாள் நேஹா.

"ஹஹ்ஹா ஆமா.
அது நம்ம கம்பெனியோட வீட்டு ப்ரொஜெக்ட் தான்.
பீகொக் கன்ஸ்ட்ராக்ஷன்." -சனா

"அடியாத்தி!
எவ்ளோ பொய் சொல்லிருக்க"
வேண்டும் என்றே கண்களை அகல விரித்து வாயில் கை வைத்தாள் அஞ்சலி.

"ஹஹ்ஹா எல்லாம் நம்மளோட  பிளான் தான்.
எப்புடி?" இல்லாத கொலரை உயர்த்திக்கேட்டாள் சனா.

"ஹ்ம்ம்ம் ஏதோ பரவால்ல.
இவ்ளோ நடிச்சிருக்க உன்ன கொலை பண்ணாம விடறோம் பாரு அதுக்கு நமக்கு எக்ஸ்டரா பேமண்ட் நீ கொடுக்கணும்.
ஏதோ விட்றோம்." -அஞ்சலி

"ஹஹ்ஹா.
கொடுத்துட்டா போச்சு. என் பிரெண்ட்ஸ்கு இல்லாததா.
ஹீஹீஹீ" -சனா

"அது சரி யாரு அந்த நிகில் அண்ணா?
நமக்கிட்ட நீ சொல்லவே இல்லல்ல" -வித்யா

"அது.....
என் கஸின்" -சனா

"ஓஓஹ் கஸினா.
கஸின் மட்டும் தானா இல்லாட்டி?"
என்று கேட்கப்போன அஞ்சலியை விரட்டிக்கொண்டு போனாள் சனா.

அன்று மாலைக்குள்ளே விஜய்-தர்ஷினி மற்றும் அவர் குழந்தைகள் சகிதம் பெங்களூர் வந்து சேர்ந்திருந்தனர்.

விஜய் நிருவுடன் பேசினான்.
அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நவாவின் அனைத்து முயற்சிகளையும் கூறினான்.

முகத்தில் பல உணர்ச்சிகளின் ரேகைகள் அலையாட மௌனமாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவள் மனதில் முகம் காணாவிட்டாலும் இளவரசனாக சிம்மாசனம் இட்டே அமர்ந்து விட்டான் நவநீதன்.

அனைத்தையும் கூறி முடித்த விஜய் ரிதுர்ஷிகாவை பார்த்திருக்க, அவள் கூறிய வார்த்தையை கேட்டு விஜய் ஒரு நொடி குழம்பி மறுநொடி சிரித்தான்.

"சித்தப்பா...
நான் இன்னும் அவர பார்த்ததே இல்லையே"
பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் ரிதூ.

"ஹஹ்ஹா
அப்போ நீ இன்னும் மாப்பிளைய பார்த்ததே இல்லையா ரிதூ."
கண்கள் சிரிப்பினால் மின்ன ரிதூவை பார்த்து கேட்டான் விஜய்.

"ம்ஹும்"
இடமும் வலமுமாக பாவமாக தலையாட்டினாள் ரிதூ.

அவள் தோளில்
ஆதரவாக கை போட்டுக்கொண்டவன்,
"நீ பல தடவ அவர் பார்த்திருக்க டா.
ஆனா உனக்கு தான் அவர் யாருன்னு தெரியல.
இவ்ளோ நாள் நிரு கூட பிரெண்டா இருந்துக்கிட்டு அவ அண்ணனையே தெரியாதுன்னா நீ எவ்ளோ டம்மின்னு பாரு"
என்று கூறி சிரித்து அவளது தலையில் விளையாட்டாக கொட்டினான் விஜய்.

"அவள் தான் அண்ணாக்கு கல்யாணம்னு சொல்லிட்டாள் இல்ல.
அதான் எக்ஸ்பியார்ட் ஆக போறவர எதுக்கு பார்க்கணும்னு நா பாக்கல்ல சித்தப்பா."
என்று கேலியாக கூறியவளை பார்த்து மீண்டும் சிரித்தான் விஜய்.

"நாவேணா மாப்பிளையே கூட்டிட்டு வரட்டுமா?"

"இல்ல இல்ல வேணாம் சித்தப்பா."
வேகமாக கூறினாள் ரிதூ.

"அப்போ பார்க்க வேணாமா?" -விஜய்

"இல்ல... பார்க்கணும் தான். நா அப்புறமா பார்த்துக்குறேன் சித்தப்பா"

எட்டிப்பார்த்திருந்த வெட்கத்துடன் குழப்பத்துக்கு மத்தியில் சொன்னாள் ரிதூ.

"அப்புறமா பார்க்குறதுக்கு இப்போவே பார்த்துடலாம் இல்ல டா" -விஜய்

இமைகள் வேகமாக அடித்துக்கொள்ள என்ன சொல்வது என்று புரியாமல் மௌனமாக இருந்தாள் ரிதூ.

"ஒரு உண்மை சொல்லட்டா"
ரிதூவின் தலையை வருடியவாறே புன்னகைத்த படி கேட்டான் விஜய்.

"என்ன?"
என்பது போல் பார்த்தவளின் கண்களை பார்த்து கண்சிமிட்டிய விஜய்.
"நீ அன்னேக்கி பீச்ல"
எனும் போதே இவளது முகம் யோசனைக்கு செல்வதை கண்டுகொண்டவன்,

"நீ அன்னேக்கி லாஸ்ட்டா எப்போ பீச்க்கு போனியோ அன்னேக்கி ஒருத்தர் கூட பேசின இல்ல.
அவர் தான் மாப்பிள."
என்றவர் பதிலுக்கு ரிதூவைப் பார்த்திருக்க,

"நா யார்கூடயும் பேசவே இல்லையே சித்தப்பா.
ஹாங். ஒருத்தர் கூட நா மோதினேனா அதுக்கு சாரி சொன்னேன்.
அப்போ அவர் தான்...."
மேலே சொல்லாமல் இதழ் கடித்தாள் ரிதூ.

"ம்ம்ம்.
அவரே தான் உன் புருஷன் ஆகப்போறவரு"
என்று கூறிய விஜய் அவளுக்கு யோசிப்பதற்கு அவகாசம் அளித்து அவ்விடம் விட்டும் நகர்ந்தான்.

ரிதூவின் மனக்கண்ணாடியில் அழகாக தரிசனம் அளித்தான் நவா.
உடனே தன் மண்ணவனை காண வேண்டும் என்ற ஆவல் தோன்றினாலும் இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவுடன் அவ்விடம் விட்டு தானும் நகர்ந்தவள் ஒரு அறையைத் தாண்டி செல்லும் போது அவ்வறைக்கதவு வேகமாக திறக்கப்பட்டு அதே வேகத்துடன் இவள் உள்ளிழுக்கப்பட்டு அதே மறுநொடி கதவும் சாத்தப்பட்டது.

எல்லாம் ஒரு நொடி.
என்ன நடக்கிறது என்று ரிதூ உணருவதற்கு முன்பே அந்த அறைக்கதவிலே சேர்த்து நிறுத்தப்பட்டிருந்தாள்.

தன்னை யாரோ இழுக்கிறார்கள் என்ற பயத்தில் கண்களை இருகமூடிக்கொண்டவள் தன்னை உரசியவாறே ஒரு உருவம் நின்று கொண்டிருக்கின்றது அது தன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறது போன்ற எதையுமே உணரவில்லை.

தான் அன்று கடற்கரையில் ஒரு ஆடவனுடன் மோதிய போது எழுந்த அதே வாசனை இப்பொழுதும் அவளது மூக்கை துளைக்க "அப்போ... அப்போ... அது நிரு அண்ணன்னா?"
என்று யோசனையை ஒருபுறம் தள்ளி நிறுத்தியவள் மெதுவாக இமைகளை திறந்து பார்த்தாள்.

அங்கே தன் மந்தகாச புன்னகையோடு கண்கள் மின்ன இவளை உரசியபடி நின்று கொண்டிருந்தான் ரிதூவின் கள்வன்.

ஆனால் முன்னைய கால ரிதூ போல் இன்று அவள் பயத்தில் நடுங்கவில்லை. அவளது விரல்கள் பயத்தில் நடனமாடவில்லை. பயத்தினால் அவளது  கண்களில் இருந்து கண்ணீர் வலியவுமில்லை. இருந்தாலும் முதன் முதலாக தன்னுடைய ஆண்மகனின் அருகாமையினால் ஏற்பட்ட இன்ப அவஸ்தையிலும் அவனது சூடான மூச்சுக்காற்று அடிக்கடி அவளது முகத்தை உரசிச்செல்வதனாலும் அவளையும் மீறி அவளது முழுநிலவு முகம் சிவப்பேர கூச்சத்தினாலும் வெட்கத்தினாலும் நெளிந்தவள் சட்டென்று முகத்தை தாழ்த்திக்கொண்டாள்.

நவாவே, இவள் இழுத்ததும் கத்திக் கூச்சலிடுவாள் என்று எதிர்பார்த்திருக்க வியப்புடன் இவளது வெட்கத்துடன் கூடிய மௌன நிலையை ரசித்தவன் ஒற்றை விரலால் அவளது முகத்தை உயர்த்தி தன்னை காணச்செய்ய இவளோ கண்களை இருகமூடிக்கொண்டாள். இதை ரசித்து சத்தமில்லாமல் சிரித்தவன்,

"பேபிமா"
என்று மென்மையாக அழைத்தான்.

அவனது முதல் அழைப்புக்கு பதில் என்னமோ வரவேயில்லை. மீண்டும் "பேபிமா" என்றழைக்க "ம்ம்ம்ம்" என்று பதிலளித்தாள் ரிதூ.

"ப்ளீஸ் என்ன கொஞ்சம் பாருடா"
குரலிலே ரிதூவால் தாய்மையுடன் கூடிய காதலை உணரமுடிந்தது.

மெதுவாக கண்களை திறந்தவள் அவனது கண்களில் காதலை மட்டுமே கண்டாள். அதில் கட்டுண்டவள் அவனது கண்களையே பார்த்திருக்க,

"பேபி... வில் யூ மெரி மீ?"
பட்டென்று கேட்டுவிட்டான்.

"உரசி நின்னுகிட்டு கேக்குறகேள்விய பாரு"
என்று மனதிலே நினைத்துக்கொண்டவள் வேண்டும் என்றே எதுவும் சொல்லாமல் தலையை தாழ்த்திக்கொள்ள அவளை உரசியபடி நின்று கொண்டிருந்த நவா சற்றே அவளிடம் இருந்து விலகிச்செல்ல முற்பட சட்டென்று அவனை கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்  இந்த கள்வனின் காதலி.

முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு அணைப்பு.
அதுவும் தன்னவளின் முதல் அணைப்பு. நவாவின் கட்டிப்போட்டிருந்த உணர்வுகள் எல்லாம் புல்லட் வேகத்தில் மேலெழும்ப தன்னை ஓரளவு கட்டுப்படுத்திக்கொண்டவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

இதுவரை உணர்ந்திராத பல உணர்ச்சிகள் தன்னை தாக்கிக்கொண்டிருக்க  தன்னவள் ஏதோ முனங்குவதை போல் உணர்ந்தவன் தன் தலையை சற்றே கீழ் நோக்கி நகர்த்த அவன் கேட்டது ரிதூவின்  "ஐ லவ் யூ" வை தான்.

சந்தோஷத்தில் அவனது உள்ளம் நிறைந்திருக்க ரிதூவின் காதில் இதழ் உரசியபடி "லவ் யூ டூ பேபி" என்று சொல்ல அதில் ரிதூவின் உள்ளம் குளிர்ந்தாலும் அதையும் தாண்டி அவனது ஷேவ் செய்யப்பட்ட தாடியின் உரசல் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி முகத்தை செம்மையாக்க அவனில் இருந்து தன்னை பிரிக்க பெரும் பிரயத்தனம் எடுத்தாள்.

அவனின் பிடியோ பஞ்சை விட மென்மையாக இருந்தாலும் உடும்பின் பிடியை விட உறுதியாக இருக்க அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப்போனவளின் கிட்னியில் ஒரு யோசனை சிக்க மெதுவாக தன்முகத்தை உயர்த்தியவள் "ஐ வொண்ட்டு கிஸ் யூ" என்று முனங்கினாள்.

ஒரு வேளை தான் காண்பது கனவாக இருக்குமோ?
இல்லாவிட்டால் ஏதாவது ஆள் மாறாட்டம் நடந்திருக்குமோ? என்று ஒரு நொடி குழம்பியவன் தனக்கு எதிரே இருந்த சுவர் கடிகாரத்தை பார்க்க "நீ காண்பது கனவல்ல நனவு தான்" என்ற படி ஓடிக்கொண்டிருந்தது செக்கன் முள். புன்னகைத்தவனின் மனதோ

"பார்றா.
என் பேபிமாவே என்ன கிஸ் பண்ணனும்னு சொல்றாளே. இந்த சான்ஸ எந்த ஆண் மகன் தான் மிஸ் பண்ணுவான். மிஸ் பண்றவன் லக்கே இல்லாதவன் தான்"
என்று எண்ணிய நொடி தன் அணைப்பின் பிடியை தளர்த்த முத்தம் கொடுக்க அவனது கன்னத்தை நெருங்கியவள் அவன் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் கன்னத்தை கடித்து வைத்து விட்டு அவன் கையில் சிக்காமல் வேகமாக கதவை திறந்து கொண்டு சிட்டாக வெளியே ஓடினாள்.

வலியிலும் சிரித்த படியே தன் கன்னத்தை தேய்த்து விட்டுக்கொண்டவன்,
"அடிப்பாவி நீ இந்த மாதிரி தில்லாளங்கடி வேலையெல்லாமும் பார்ப்பியா?
இந்த சனாவுக்கு பிட்டா இருக்குறவள பைட்டா மாத்திடுன்னு பொறுப்பு கொடுத்தா டேரா பைட்டா இல்ல மாத்தி வெச்சிருக்கா!
எதுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் என் பொண்டாட்டிய சனா கிட்ட அண்டவிடக் கூடாது"
என்று வாய்விட்டே கூறியவன் கதவின்பக்கம் ஏதோ அரவம் கேட்டு திரும்ப அங்கே அவனை முறைத்த படி கையில் டீ கப்புடன் நின்று கொண்டிருந்தாள் அவனின் பாசமலர் தங்கை நிருஷனா.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro