பகுதி -ஐ
டிவோர்ஸ் கேஸ் தீர்ப்பு இன்னைக்கு முடிவு ஆகிடும் தனுஷ் மற்றும் வீரா ஆஜர் ஆனாங்க....வக்கில் இரண்டு தரப்பில் சார்பில் டிவோர்ஸ் சம்மந்தமான பேப்பர்ஸ் ஜட்ஜ் முன்னாடி சமர்பித்தாங்க....
முதல்ல தனுஷிடம் கேள்வி கேக்கப்பட்டது "என்ன காரணம் மிஸ்டர் தனுஷ் டிவோர்ஸ் பன்றதுக்கு??,
ஐயா.....என்னால வெளிபடையா சில காரணங்கள் சொல்ல முடியாது . எனக்கு உடம்பில் சில பிரச்சினை இருக்கு என் மனைவியை எந்த வகையிலும் திருப்தி படுத்த முடியாத காரணத்தால் நான் விவாகரத்து பன்ன முடிவு பன்னேன்.
அடுத்து வீராவிடம் "ஏம்மா.... முழுசா ஒரு வருஷம் இன்னையோட உங்களுக்கு திருமணம் ஆகி....இன்னைக்கு நீங்க எடுக்குற முடிவுல உங்கள் வாழ்க்கை யே மாற போது...என்ன சொல்றீங்க விவாகரத்து பன்றதுல முழு சம்மந்தமா???☺️
"இல்லைங்க ஐயா...நான் அவருக்கூட வாழ ஆசைப்படுறன் எனக்கு விவாகரத்து கொடுக்காதிங்க ப்ளீஸ்..அவரால எதுவும் த்ரிப்தி படுத்த முடியலனாலும் பராவாயில்லை எனக்கு அவரோட வாழ சம்மந்தம். "
அப்படினா section xxx ,படி இவர்களுக்கு விவாகரத்து இல்லை என்பதை முடிவு செய்து, சட்டபடி கணவன் மனைவியாக இவர்கள் வாழ்க்கை யை தொடராலாம் என்று உத்தரவிட்டு இத்துடன் இக்கோர்ட் கலைகிறது.
வெளியே வந்த வீரா தனுஷை பார்த்து "என்ன புருஷா...லுக் நான் தான் சொன்னேன் ல எனக்கு விருப்பம் இல்லை னு....போதும் நீ சோகமா முகம் வச்சிக்கிறது ஹாஹா வா வா வீட்டுக்கு போலாம் வண்டி எடு.....
நான் அவ்வளவு சொல்லியும் நீ கேக்கல ல???😢
நல்லது சொன்ன கேக்கலாம் நீ வீம்புக்கு டிவோர்ஸ் பன்னா ஒத்துபாங்கலா...போயா...நீ முதல்ல பைக் எடு.....பைக்கை கிளப்பியவன் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்...போகும் வழியில் வீரா...ஒரு மகப்பேறு மருத்துவமணை யில் வண்டியை நிறுத்த சொன்னாள்.
உள்ள சென்றவள் அங்கிருந்த மகளிர் டாக்டரிடம் அப்பாய்ன்மென்ட் போட்டாள்....
ஏய் வீரா...என்னடி பன்ற???☺️
நீங்க கொஞ்சம் நேரம் சும்மா இருங்க...வாயை மூடிட்டு😁😁😁
எதுக்கு டி இங்க கூட்டிட்டு வந்த??
ம்ம்ம் சும்மா பொழுது போகலை அதான்..ஹாஹா
உன்னையே.......வீட்டுக்கு வா கவனிச்சிக்கிறன்.
ஹாஹா....
(நெக்ஸ்ட்..... பேஷண்ட் வீரா)
அவனை அழைத்து கொண்டு டாக்டர் கன்சல்டிங் ரூமுக்கு சென்றாள் ...
உக்காருங்க மிஸஸ் வீரா சொல்லுங்க என்ன ப்ராப்ளம்??
அ...அது வந்து மேடம்....எங்க வீட்டுகாருக்கு எச்.ஐ.வி இருக்கிறது..அவருக்கூட நான் சந்தோஷமா வாழனும் னு ஆசைப்படுறன் அதே சமயம் எங்களுக்கு ஒரு வாரிசு வேணும்...அதுக்கு என்ன வழி இருக்கிறது??? எங்களோட சந்ததி க்கு எச்.ஐ.வி வராமல் பாதுகாப்பான முறையில் எப்படி வாரிசு உண்டாகுறது?👍
அ.....மிஸஸ்...வீரா முதல்ல எச்.ஐ.வி அப்படிங்கறது ஒரு வைரஸ் , உயிரை சீக்கிரம் பரிக்க கூடிய ஒரு நோய்..மற்றபடி அன்றாட வாழ்வில் எந்த பாதிப்பும் வராது அவரோட சேர்ந்து உண்ணலாம் பேசலாம் உறங்கலாம்...அதெல்லாம் எந்த பிரச்சினை யும் இல்லை ஆனால்...
ஆனால்.....???👍
உடலுறவு பாதுகாப்பான முறையில் வைத்துக்கொண்டு இருக்கலாம் அதாவது பாதுகாப்பு உறை பயன்படுத்தி ஆனால்... குழந்தை பேறு உண்டாகாது நான் சொல்றது உங்களுக்கு புரியுது ல மிஸஸ் வீரா & தனுஷ்.
புரியுது மேடம்......அப்போ நாங்க வாரிசு எப்படி பார்க்க முடியும்.??
இதுக்கு ஒரே வழி ஒன்னு அடாப்ஷன் 😀ஒரு குழந்தையை தத்தெடுக்க நீங்க மனசு இறங்கி வந்தா மட்டும் தான் வாரிசு பார்க்க முடியும். சராசரி கணவன் மனைவி மாதிரி உங்கள் மூலமாக வாரிசு பார்க்க இயலாது.ஏன்னா உங்கள் கணவன் மூலமாக உங்களுக்கும் உங்கள் மூலமாக குழந்தைக்கும் பரவும்.
தனுஷ் - மேடம்.....மற்றபடி என்னோட மூலமாக எந்த வகையிலும் என் குடும்பத்து ஆளுங்களுக்கு பரவாதுல ???
டாக்டர் - அட என்னப்பா நீ 😀 அதான் தெளிவாக சொல்றனே உன்னோட அன்றாட வாழ்க்கை எதுவும் பாதிக்காது ...ரத்தம் மூலமாகவும், எச்சில் மூலமாகவும் ,உடலுறவு மூலமாகவும் மட்டுமே அது பரவும். மற்றபடி ஒரு பயமும் இல்லை சரியா...உன் மனைவியை கூட்டிட்டு சந்தோஷமா போ.....சீக்கிரம் அடாப்ஷன் பத்தி யோசியுங்கள்.. குட் லக்
தனுஷ் - தாங்க்யூ டாக்டர்.
வெளியே இருவரும் வர..... ஏதோ மனதில் தெளிவுடன் காணப்பட்டான் தனுஷ்.
பைக்கை கிளப்பினான் ஒரு 2கி.மி தொலைவில் வந்தவுடன் வீரா மீண்டும் நிறுத்த சொல்லவே நிறுத்தினான்.
"என்ன வீரா......???😊
அங்க பாரு சித்தி விநாயகர் கோயில் ...வா ஒரு விளக்கு போட்டு வரலாம்😀😀😀
என்னடி திடிருனு???
இல்லை டிவோர்ஸ் ஆகல னா ஒரு விளக்கு போடுறதா வேண்டிக்கிட்டன் வா....உள்ள போலாம்.
ம்ம்ம் சரிதான்....வா..என்ன பன்றது மேடம் ஒரு பார்ம் ல இருக்கீங்க....😀
............
நாட்கள் உருண்டோடின.
நவின் வீடு வீரா இல்லாமல் வெறுச்சோடி இருந்தது ....எந்நேரமும் டேய்..நவின்...
டேய் நவின் என்றபடி சுற்றி திரிந்த வீரா...இல்லையே என்று அவனுக்கு வருத்தம். அன்று அவளுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியது பீச் போனது எல்லாம் அவன் நினைவுகளில் எட்டி பார்த்தன......என்னதான் இருந்தாலும் ஒரு காலத்துல வீராவை காதலிச்சவனாச்சே ,அவ்வளவு சுலபமாக அவளை மறக்க முடியுமா...
அப்புறம் முருகேஷ் மீண்டும் சக்தி யை சந்திச்சான் எதர்ச்சையாக..... இவங்க இரண்டு பேருக்கும் ஒரு லவ் ட்ராக் ஓடிட்டு இருக்கு . சக்தி இப்போது முருகேஷ் கம்பெனி ல வேலைக்கு சேர்ந்துட்டா.....
இவ்வளவு நாள் ஏதோ...அவளோட அப்பா சேர்த்து வச்சிருந்த பணத்துல வாழ்க்கை யை ஓட்டிட்டு இருந்தாங்க நவினூம் அவன் அக்கா சக்தியும். இப்ப மீண்டும் சக்தி மறுமணம் அதெல்லாம் பன்றப்ப பணம் தேவைப்படும் அதுக்காக தான் முருகேஷ் ஏற்பாடு பன்ன வேலைக்கு போறாங்க நம்ப சக்தி.
ஆனால் சக்தியும் முருகேஷும் ஒருத்தருக்கொருத்தர் காதலை சொல்லிக்கல ஆனாலும் காதல் இருக்கு...😀😀😀இப்போதைக்கு ஒரு வெல்விஷர்ஸ் இரண்டு பேரும். அன்னைக்கு பீச்சில் கொடுத்த அந்த விசிட்டிங் கார்டு தான் இவங்களை சேர்த்து வச்சது....அட ஆமாங்க வேலைக்காக சக்தி முருகேஷை மொபைலில் தொடர்பு கொள்ள இவர்களுக்குள் நட்பு தொடர்ந்தது.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro