பகுதி -ஈ
வழக்கம் போல லவ் குரு நிகழ்ச்சி கேட்டுட்டு இருந்தவள் சட்டென தனுஷின் முகம் மாறுவதை கவனித்தாள். அவனுடைய கோபமான பார்வை வீராவை நோக்கி இருக்க "என்ன ஆச்சு னு அவ கேற்க.... தனது மொபைலில் அவளுடைய ஆபாசமான புகைப்படம் இருப்பதை அவளிடம் காட்ட அதிர்ச்சி அடைந்தாள். அவள் யோசிக்க கூட முடியாத அந்த கணம் அவளை கண்ணத்தில் கை வைத்து அறைய அவளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது .
"என்னடி இதெல்லாம் ??எவன்டி அவன் உன்னை இவ்வளவு ஆபாசமாக எடுத்து எனக்கே அனுப்புனது என்று வினவ
தான் அப்படிபட்ட பெண் இல்லை என்பதை அவள் உறுதிபடுத்தியும் அவன் மனது ஏற்கவில்லை. இரவு நேரம் கழிந்துக்கொண்டே இருந்தது அவன் உறங்கிவிட அவள் உறங்கவில்லை.
ஒரு பேப்பர் எடுத்து எதையோ எழுதி வைத்துவிட்டு அவள் இரண்டு மணியளவில் வீட்டை விட்டே செல்ல.... வீட்டருகில் இருக்கும் டீக்கடை வாசலில் டீ குடிக்க நிற்க ........டீயை பருகியவாறு "ச்ச மனசும் தளர்ச்சியா இருக்கிறது உடம்பும் தளர்ச்சியா இருக்கு எனக்கு எங்க போறது னு தெரியல...என்னை நல்லவனு அவங்க புரிஞ்சிக்கிற வரைக்கும் நான் இங்க இருக்கமாட்டேன் கடவுளே வழிகாட்டு என்று புலம்பிக்கொண்டு இருக்கும் வேளையில் அவளுடைய கல்லூரி நண்பன் நவின் வந்தான் .
"ஏய் லூசு இங்க என்னடி டீ கடையில பைத்தியமா நீ இந்த நேரத்தில் என்று அடுக்கி கொண்டே போக அவள் பதில் சொல்ல இயலாது அழுதுகொண்டே இருக்க...அவளுக்கு ஆறுதல் சொல்ல அவனால் முடியாமல் அவளை அழைத்துக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான். மறுநாள் அவனுடனே கல்லூரிக்கு செல்ல... இந்த இடைப்பட்ட நேரம் நமது கதாநாயகன் தனுஷ் அவளை தேடி தேடி அலைந்தான். "ச்ச அவசரபட்டு அவளை திட்டிட்டேன்...எங்க போனானு கூட தெரியாது... எப்படி தேடுறது. அவ அப்பனுக்கு தெரிஞ்சா நமள ஊருகாய் போடுவான். என்று புலம்பியவனுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது.
"மாப்பிள்ளை வீட்டுக்கு வரிங்களா???
ம்ம்ம் .....(ஒரு வேளை அவ அங்க இருக்காலோ )னு ஆசையா போனான் ஆனால் அவ அங்கு இல்லை என்பதை உறுதிக்கொண்டு மாமனார் அழைத்த காரணத்தை அறிந்துக்கொள்ள
"இந்தாங்க மாப்பிள்ளை உங்க அப்பாவை அந்த காலத்துல ஏமாத்தி பரித்த சொத்து... இதுக்கு தானே வீராவை கல்யாணம் பன்னிங்க....இந்தாங்க உங்க வைத்துல அடிச்ச சொத்து எனக்கு நிறந்தரம் இல்லை நீங்களே வச்சிக்கோங்க என் பொன்னை நல்லா பாத்துக்க அதுபோதும்.
ம்ம்ம் சரிங்க மாமா என்று பதற்றத்துடன் சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தான். அவள் படிக்கும் கல்லூரியை நாடினான். அவள் வகுப்பில் சென்று பார்த்து அவள் இருப்பது உறுதி கொண்டு அவளுக்காக காத்துக்கொண்டு இருக்க.....அவளோ கல்லூரி முடிந்ததும் நவீனுடன் செல்வதை கண்டு வருத்தப்பட்டான்.
"ஏய்....வீரா...நில்லு நில்லு என்று வழிமறித்தான்.
என்ன வேணும் உங்களுக்கு??
மன்னிச்சிறு வா நம்ப வீட்டுக்கு போலாம் என்று அவள் கையை வெடுக்கென்று பிடிக்க அதை உதறி தள்ளிவிட்டு நவினுடன் மீண்டும் நடக்க... பின்னாடியே தனுஷ் சென்றான். ஆனாலும் பலனில்லை நவினுடன் பைக்கில் ஏறிச்சென்றாள்.
வீட்டுக்கு சென்றவுடன் நவினும் வீராவும் பால்கனியில் காப்பி பருகியவாறு பேசிக்கொண்டு இருந்தனர்.......
"நீ சந்தோஷமா தானே டி இருந்த கல்யாணம் ஆயிட்டு திடிருனு உங்களுக்குள என்ன டி ஆச்சு.
இல்லை நவின் நானும் அவரும் சராசரி புருஷன் பொண்டாட்டி யா இல்லை சும்மா ஊர் உலகத்துக்கு அப்படி ஆனால் எங்க அறையில் தனி தனியாக தான் இருந்தோம். எனக்கு அவருகூட சேர்ந்து வாழனும் னு ஒரு பக்கம் ஆசை இருந்தது ஆனால் இந்த இன்சிடண்டு அப்புறம் எனக்கு அவர் மேல சுத்தமாக விருப்பம் போயிடுச்சு.
இதையெல்லாம் கேட்டுட்டு இருந்த நவினின் அக்காள் (விதவை) வீராவின் அருகில் வந்து அமர "வீரா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டல ???☺️
சொல்லுங்கள் அக்கா...
இல்லை..... அந்த தம்பி ஆயிரம் தான் உன் மேல சந்தேகம் பட்டு திட்டிருப்தாலும் உன் புருஷன் தானே யோசித்து பாரு அந்த நிலமைல எந்த புருஷனா இருந்தாலும் அப்படி தான் ரியாக்ட் பன்னியிருப்பாங்க.......அதற்கு நவினும் ஆமா சாமி போட அவளோ சற்று யோசிக்க துவங்கினாள். ஆனால் அவனை ஏத்துப்பாளா னு தெரியாது காலம் தான் பதில் சொல்லனும்.
"டேய் நவின்...... முதல்ல அந்த ஆபாசபடம் அனுப்பியது யாருன்னு தெரியனும் டா அப்போ தான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
கரெட் டி.....அந்த நம்பர் உனக்கு ஞாபகம் இருக்கா ???சொல்லு ட்ரேஸ் பன்னி யாருன்னு பிடிக்கலாம்.
அதுக்குள அவனுடைய அக்கா "ஏய் பசங்களா போதும் போதும் இப்போதைக்கு எதுவும் யோசித்து தப்பா எதுவும் பன்னிடாதிங்க .....போய் படிங்க செமஸ்டர் க்கு. என்று சிரித்துக்கொண்டே கிச்சனுக்கு செல்ல நவினை ஏறிட்டு பார்த்தாள் வீரா.
'நவின்......
ம்ம்ம்.... நீ பர்ஸ்ட் இயர்ல என்னை லவ் பன்ன தானே???😊
அதெல்லாம் ஒன்னுல ....என்று அவன் சினுங்க.
டேய் கேடி.....உண்மை சொல்லு நீ லவ் பன்ன தானே சத்யா சொல்லியிருக்கா..
ஹாஹா ஆமா அதுக்கு இப்ப என்ன ??😊
ஹாஹா ஏண்டா என்கிட்ட மறைச்ச லூசு....லவ்வை சொல்லியிருந்தா அப்போவே ....என்று வீரா இழுக்க.. அவளையே பார்த்துக்கொண்டு இருந்த நவின் "சொல்லுடி என்ன பன்னியிருப்ப ??
இன்நேரம் ஹனிமூன் போயிருக்கலாம் என்று கொல்லுனு சிரிக்க..அவனும் சிரித்துவிட்டான். தனுஷ் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அபிப்பிராயமும் மறைய ஆரம்பிக்க தற்போது வீராவுக்கு நவினும் அவனுடைய அக்காவுமே நல்ல நண்பர்களாகி விட்டனர்.
தொடரும்.
வீரா தனுஷ் கூட சேருவாளா??
அவளுக்கு ஆபாசமா அனுப்புனது யாரு ??
வீராவின் வாழ்க்கை இனி எப்படி ??
நவினுடன் இருக்கும் நட்பு இன்னும் பலம் பெறுமா??☺️
பார்ப்போம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro