பகுதி - இ
என்னைக்கும் இல்லாமல் அன்னைக்கு வீரா கிச்சன் ல அவளோட மாமியாருக்கு ஹெல்ப் பண்ண போனாள் "அத்தை கொடுங்க நான் சட்னி அரைக்கிறன்..." என்றவளிடம்
"அம்மாடி உனக்கு காலேஜ் க்கு நேரம் ஆகுது கன்னு நீ கிளம்பு...."என்று கரிசனத்தோடு மாமியார் கூற
"அத்தை எந்த பொண்ணுக்கும் இப்படி ஒரு மாமியார் அமைய மாட்டாங்க ...கல்யாணம் முடிஞ்சுது வீட்ல கெட னு சொல்ற மாமியார் மத்தியில் காலேஜ் போக சொல்ற நீங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் அத்தை." என்றாள் மனநிறைவுடன்
"ஹாஹா இதுல என்னமா இருக்கு என் புள்ளைய கட்டிட்டு எங்களை நம்பி இந்த வீட்டுக்கு வந்துருக்க உன்னை நாங்க நல்லா பாத்துட்டா எங்களுக்கு நல்லது மா.நீ எங்க வீட்டு மகாலட்சுமி மா....அதுமட்டுமின்றி இந்த குடும்பத்தில் எல்லாரும் படிச்சவங்க உன் மாமனார் பி.ஏ தமிழ் லிட்ரேச்சர் , நான் டிப்ளமோ முடிச்சன் அதுவும் கல்யாணம் ஆயிட்டு உன் மாமா படிக்க வச்சாரு கட்டாயபடுத்தி......அப்புறம் நம்ப தனுஷ் எம்.பி.ஏ.....அப்படி இருக்கிறப்ப என் மருமவ உன்னை மட்டும் படிக்காம விட்ருவோமா என்ன???😊என்றார் அவருக்கே உரிய பாவனையுடன்
"அத்தை ?"என்று வார்த்தையை முழுங்க
"என்னடா மா...."என்று மாமியார் கேட்க
"இல்லை அது வந்து அவரு எம்.பி.ஏ வா?" என்று சந்தேகமாக கேட்க
"ஆமாம் எம்.பி.ஏ பினான்ஸ் மா....ஏன் இம்புட்டு அதிர்ச்சி"என்று வினவ
"ஒன்னுல அத்தை ...."(இந்த ரவுடி எம்.பி.ஏ படிச்சிருக்கானா??.அப்புறம் ஏன் இப்படி கிறுக்கன் மாதிரி திரியுது வேலை வெட்டி போகாமல் என்று அவள் யோசிக்க) மணி ஆகிவிட்டது.
காலேஜ் க்கு பேக் எடுத்துட்டு கிளம்ப முற்பட்டபோது எதிரே அவளுடைய ரவுடி பேபி வந்தான். பைக் ஸ்டார்ட் பன்னிட்டு "ஹலோ வாங்க மேடம்....".என்று பைக்கை முறுக்கியவாறு கூப்பிட அவளும் பின்னாடியே வந்தாள்.
"வரேன் வரேன்......இன்னைக்கு ட்ரேடிஷனல் டே வேற சீக்கிரம் காலேஜ் போய் புடவை கட்டனும் என் க்ளாஸ் மரியா புடவை கட்டுறதுல எக்ஸ்பர்ட் எல்லாம் அவகிட்ட க்யூ ல நிப்பாங்க னு புலம்பிட்டே அவ பைக்கில் உக்கார....அவனும் பைக்கை கிளப்பினான் நேராக ஒரு ப்யூட்டி பார்லர் முன் நிறுத்தினான்...."ஏய் வீரா...இறங்கு சீக்கிரம்" என்றான்
"ஹாய் டயானா எப்படி இருக்க இவங்க என்னோட வைப்...ஒன்னுல காலேஜ் ட்ரேடிஷனல் டே அதான் உன்கிட்ட புடவை கட்டிக்க அழைச்சிட்டு வந்தேன். சீக்கிரம் ரெடி பண்ணி அனுப்பி வை நான் வெளியே வெயிட் பண்றேன்"என்று கூறிவிட்டு வெளியே வந்து காத்து கிடந்தான்.
"வாங்க மிஸ்ஸஸ் வீரா ...".னு அவங்க அழைச்சிட்டு போய் சிங்காரிச்சு கூட்டு வர...அதை பார்த்த தனுஷ் அசந்து போய்ட்டான்..."தாங்க்ஸ் டயானா....இந்தா பீஸ்"என்று நீட்ட
"ஹலோ நண்பா உன் காசு நீயே வச்சிக்க கிளம்பு எனக்கு நிறைய கஸ்டமர் வெயிட் பண்றாங்க னு டயானா சிரிச்சிட்டே உள்ள போயிட்டா."..
மறுபடியும் பைக்கில் அமர "என்னங்க இவங்கள எப்படி இந்த அளவு உங்களுக்கு பழக்கம்? என்று கேள்வி யை முன்வைக்க
"அதுவா...எங்க அம்மா இங்க தான் வருவாங்க கல்யாணம் காட்சி னா தயார் ஆகுறதுக்கு அதனால பழக்கம் ."
"ஓ..........சரி சரி காலேஜ் வந்துடுச்சு பை ...ஈவ்னிங் பார்க்கலாம் . "என்று விடைப்பெற்று செல்ல
.......அவள் காலேஜ் வாசலில் இருந்து வகுப்பறை வரை தேர் போல மெல்ல அசைந்து அசைந்து நடக்கும் காட்சி அவனுக்கு ஏதோ மயில் தோகை விரித்து ஆடுவது போல இருந்தது. தன் மனைவியை இப்படி தூரத்தில் இருந்து ரசிக்கும் கணவர் இவன் தான். பின்ன வேலையா வெட்டியா இவனுக்கு ??☺️☺️☺️இப்ப அடுத்து ப்ரண்டு மெக்கானிக் கடைல போய் உக்காந்து மொக்கை போடுவான் அதான் வேலையே......
என்ன பண்றது பிஸினஸ் ஆரம்பிக்க லோன் அப்ளை பன்னியிருக்கான் பேங்க் ல ஸாங்ஷன் ஆகல....லோன் வந்தவுடன் சின்னதா ஒரு ட்ராவல்ஸ் நடத்துற ஐடியால இருக்கான். அதுக்கு தேவையான கார் எல்லாம் புக் பன்னிட்டான். ஓகே பிஸினஸ் நல்லா நடந்தா சரி .
மெக்கானிக் கடையில் உக்காந்து இருக்கிறப்ப கதிர்வேலன் அதாவது வீரா அப்பா வந்தாரு...மருமகனை பார்த்தவுடன் எகத்தாளமா ஒரு பார்வை பார்த்தாரு.
"ஹலோ மாம்ஸ் சவுக்கியமா......னு இவன் வழக்கம் போல தோரணை ல சொல்ல."
"என் பொண்ணை கட்டினதும் இல்லாமல் சவுக்கியமா னு கேள்வி வேற கேக்குறீயா???ம்ம்ம்.......".
"ஹலோ மாம்ஸ் உன் பொண்ணை கட்டினதுக்கு ஒரே காரணம் தான். அதுவும் உனக்கு நல்லாவே தெரியும் ஆனால் இறங்கி வரமாட்டேங்குற என்ன செய்றது. எனக்கு தேவையானதை என்கிட்ட கொடுத்துரு உன் பொன்னு உன்கிட்ட ஒப்படைச்சிறேன் என்ன ஓகேவா....."
"ஏண்டா என்ன திமிர் உனக்கு என் பொன்னை காதலிச்சு கர்பமாக்கி கல்யாணம் பன்னி இப்ப உதறி தள்ளிவிட்டு போறேனா சொல்ற....ராஸ்கல் என் பொன்னுக்கு எதாவது ஆச்சு அவ்வளவு தான் உன்னை .".என்று மாறி மாறி வாக்குவதம் முற்ற...இதை புரிந்து கொண்ட மெக்கானிக் "அண்ணே தனுஷ் அண்ணே........மதியம் சாப்பாட்டுக்கு காய் வாங்கனும் எங்க ஆத்தா வையும் .....வாயேன் என்கூட மார்க்கெட் .....என்று அவனை தனியே அழைத்துக்கொண்டு செல்ல.......கதிர்வேலனும் இடத்தை விட்டு நகர...
"டேய் உங்க ஆத்தா வையும் னு என்னை ஏண்டா இப்படி அழைச்சிட்டு போற....எருமை.
அய்யோ தனுஷ் அண்ணா.... உனக்கு விவரம் புரியமாட்டேங்குது கதிர்வேலன் ஐயா உங்க மாமனார் இப்படி மல்லுக்கு நின்னா உங்களுக்கு அசிங்கம்...வீராவுக்கு தெரிஞ்சா உங்க மேல உள்ள மதிப்பு மரியாதை போகும்.
ஆமா அந்த ஆளுக்கு இவ்வளவு மரியாதை தருவதே பெருசு போடா....
அப்படி என்ன தான் அந்த ஆளு உங்களுக்கு த்ரோகம் பன்னாரு ???
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro