பகுதி -39
அவன் மதியம் வந்த அதே காபி ஷாப்பிற்கு வீரா வந்து காத்துக்கொண்டு இருந்தாள். இங்க தானே வர சொன்னான் நேரம் ஆச்சே இன்னும் காணுமே ஏன் இவ்வளவு தாமதம் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு கையில் ஒரு காபியுடன் அமர்ந்திருந்தாள்.
"அச்சோ நல்லா ட்ராபிக் ல மாட்டிக்கிட்டன், அவ வேற வெயிட் பன்னிட்டு இருப்பாளே என்ன பன்றது ஈவ்னிங் 8 மணிக்கு ப்ளைட் என்ன செய்றது என்று யோசித்தவாறு பயணம் செய்ய அந்த காபி ஷாப்ல உள்ள வரப்ப மணி 7.அவளை பார்த்தவுடன் "சாரி வீரா....வர லேட் ஆயிடுச்சு என்று அவளை உலுக்க அவளோ தப்பென்று சுயநினைவில் இல்லாமல் விழ..."ஹே வீரா வீரா...என்ன ஆச்சு அய்யோ என்று பதறியபடியே அவளை அழைத்து மருத்துவமனைக்கு செல்ல அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் இதயத்தை அந்த இஸிஜி கருவி மூலம் அழுத்த அழுத்த..."ஆ....ம் னு சட்டுனு அவளுக்கு மூச்சு வந்தது.டாக்டர் வெளியே வந்து "மிஸ்டர் ஷி இஸ் சப்பரிங் ப்ரம் சம் ஹார்ட் ப்ராப்லம்ஸ் ஸோ ஐ நீட் டு செக் ஹர் ஃபுல்லி ..நவ் ஷி இஸ் ஓகே ....யூ ஜஸ்ட் பே த பில் .
கையில் இருந்த பணத்தையும் அவன் கழுத்தில் இருந்த செயினையும் வைத்து பில் கட்டினான். அவளுக்கு ஹாஸ்பிட்டல் உடை அணிவித்து அவளை டெஸ்ட் எடுக்க உள்ளே கூட்டி செல்ல இடது புரம் நின்றிருந்த தன் நண்பன் நவினின் கரங்களை பிடித்தவள் "எனக்கு பயமா இருக்கு டா என்று மெல்லிய குரலில் சொல்ல அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை .தனுஷ்க்கு போன் செய்தான் "தனுஷ் ப்ரோ ...இங்க உங்க மனைவிக்கு இதய நோய் ஏதோ இருக்கிறதா சொல்றாங்க எனக்கு பயமா இருக்கு நானும் இந்தியா கிளம்பனும் . இன்னைக்கு ப்ளைட் ஏற்கனவே மிஸ் ஆயிடுச்சு ஆனால் நாளைக்கு நான் இந்தியா வந்திடுவேன்...நான் வேணும்னா வீராவை அழைச்சிட்டு வந்துடவா நம்ப ஊர்ல ஆஸ்பத்திரில பார்த்துக்கலாமா இல்லை நீங்க கிளம்பி மலேசியா வரிங்களா.??
ந...நவின் என்ன திடிருனு நல்லா தானே இருந்தா???நவின் நீங்க நாளைக்கு அவளை இங்கே கூட்டு வாங்க நான் இங்கேயே பாத்துகிறன் .
ஓகே நான் அப்படியே செய்றன் தனுஷ் .
🌼🌼🌼🌼
நவின் என்னை ஏண்டா இந்தியா கூட்டுபோற ப்ளீஸ் வேணாம் டா நான் இங்கேயே இருக்கன்.
இங்க பாரு வீரா யாருமே இல்லாமல் இந்த ஊரில் என்ன பன்ன போற இப்படி ஒரு பிரச்சனை வச்சிட்டு இதெல்லாம் வேணாம் வேலையாம் வேலை உடம்பு பாரு முதல்ல...தனுஷ் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.என்றவுடன் அமைதியாக இருந்தவள் சட்டென அவன் மீது பார்வையை வைக்க "ந..நவின் எனக்கு யாரும் வேண்டானு தான் நான் இங்கேயே வந்தேன் இப்ப மறுபடியும் யாருக்கு என்னை பிடிக்கலையோ அவங்க கிட்டயே கூட்டு போற....
யாருக்கு உன்னை பிடிக்கல..இங்க பாரு தனுஷ் அளவுக்கு யாரும் உன்னை அன்பு செலுத்திருக்க முடியாது. நான் கூட நர்மதா மேல இந்த அளவு பொறுமையும் காதலையும் வெச்சிருக்கனா னு தெரியல....தனுஷ் பாவம் டி...நீ விலகி விலகி போனாலும் உன்னை நெருங்கி நெருங்கி வருகிறார். பழைய நினைவுகள் அவருக்கு திரும்பிடுச்சா இல்லையா??திரும்பிடுச்சு தானே இதுக்கு மேல அவர் கிட்ட இருந்து விலகி நிக்க என்ன இருக்கிறது சொல்லு. எதுக்காக அவர் கூட நீ விலகுற சொல்லு..என்றவுடன் அழத்துவங்கினாள் "நவின் ஹீ இஸ் வெரி பொஸஸிவ் டா...நான் உன் மேல காட்டுற அன்பு பார்த்து ரொம்ப பொஸஸிவ் ஆகுறாரு.
ஹாஹா இது ஒரு பிரச்சனை யா உனக்கு??😊அவரு ன்னு இல்லை யாருக்குமே பொண்டாட்டி னா பொஸஸிவ் வரும் . இவ்வளவு ஏன் நர்மதா மேலையும் எனக்கு பொஸஸிவ் வரும். ஆனால் அவ பொஸஸிவ் வர வைக்கிற மாதிரி யார் கிட்டயும் பழகுறது இல்லை. ஆனால் நீ என்கிட்ட ரொம்ப இன்வால்வ் ஆகுற ...இது எந்த ஆம்பளைக்கும் பிடிக்காது தான். நீ முதல்ல நவின் அப்படிங்கிற கேரக்டர் ஒரு சாதாரண மனிஷனா பாரு. ஏதோ பெரிய ஹிரோ ரேஞ்சுல பாக்காத...நான் என்ன பன்றன் ஏது பன்றனு லா யோசிக்காத.தனுஷ் தான் உன்னுடைய ஹிரோ எல்லாம் ஓகேவா.
ம்ம்ம்.... ப்ளைட்க்கு இன்னும் டைம் இருக்குல...வா நவின் கொஞ்சநேரம் இங்க இருக்கிற கார்டன் ல உக்காந்துட்டு போலாம் என்று கிடு கிடுனு கார்டனுள் நடக்க ஆரம்பிக்க "ஐயோ இவ பன்றதை பார்த்தா இன்னைக்கு ப்ளைட் மிஸ் பன்னிடுவோம் போல....ஏய் வீரா வா போலாம்.
முடியாது உன் அட்வைஸ் கேட்டு டையர்டு ஆயிடுச்சு கொஞ்ச நேரம் கார்டன் ல ரெஸ்ட்😁😁"ஓஹொ...அப்ப நீ கிளம்ப மாட்ட அப்படிதானே ???என்றவனை பார்த்து நாக்கு காட்டி "ஹே...ஆமா அப்படிதான் என்றவுடன் அவளை அலேக்காக தூக்கியவன் நீ சொன்னா கேக்க மாட்டேங்குற அதான் என்று அவளை பார்க்க கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் அவன் சட்டை காலரை இறுக்கமாக பிடிக்க உள்ள நுழைந்து அவளை இறக்கி விட்டான்"லக்கேஜ் செக்கிங்க் எல்லாம் முடிந்து போர்டிங் பாஸ் காட்டிவிட்டு ப்ளைட்டில் ஏறினர்.
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro