பகுதி -36
வீட்டை விட்டு வெளியேறிய நவின் நர்மதாவுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. உலகமே இருண்ட மாதிரி ஒரு உணர்வு. ஆனாலும் தைரியத்தை கைவிடவில்லை ஒரு வீடு வாடகைக்கு எடுக்க தெரு தெருவாக அளைந்தனர். உரிமையாளரின் ஒரே கோரிக்கை "தாலி கட்டி கூட்டு வா வீடு தரேன் என்று" அவனும் சரி என்று ஒப்புக்கொண்டு பக்கத்தில் இருக்கும் நாட்டு மருந்து கடையில் மஞ்சள் கொம்பு ஒன்று வாங்கி மஞ்சள் கயிற்றில் அதை கட்டி அவள் கழுத்தில் ஒரு சாமி சன்னதி முன்பு கட்டினான் அந்த நொடி அவள் வயிற்றில் குழந்தையின் அசைவு உணர்வை உணர்ந்தாள்.
நர்மதாவை அழைத்து கொண்டு வாடகை வீட்டுக்கு சென்றான் . சிறிது நேரம் அந்த மஞ்சள் கயிற்றை பார்த்தவாறு அமர்ந்தாள் நர்மதா.
"என்னடி அதையே பாக்குற.....என்று அவன் வினவ அவன் தோளில் சாய்ந்தபடி "ஏங்க எனக்கு இந்த கல்யாணம் தான் பிடிச்சிருக்கு எனக்கே உரியாவனான உங்களையும் உங்க மூலமாக வந்த குழந்தை கருவும் சாமி சன்னதியும் சாட்சியாக நடந்த இந்த கல்யாணம் உண்மையில் ஒரு பாக்கியமா நினைக்கிறேன்.
ம்ம்ம் ஆனால் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என் தோழி வீரா கூட நமக்காக ஜாதகம் விஷயத்தில் எதுவும் பேசாமல் இருந்தா பாரு அதான் கஷ்டமா இருக்கிறது.
ஒரு ஏளன சிரிப்புடன் நர்மதா "ஏங்க இந்த காலத்துல சொந்த அண்ணன் தம்பியே நம்பிக்கை த்ரோகம் பன்றப்போ தோழி எல்லாம் எந்த மூலைக்கு.... அதெல்லாம் விடுங்க உங்கள் சக்தி அக்கா கூட உங்கள் கல்யாணம் மேல ஆசை இல்லை பாருங்க...ஒரு வருஷம் காத்துக்கொண்டு இரு கருவை கலைச்சிரு னு சர்வசாதாரணமாக சொல்றாங்க.
விடு நர்மதா இனி நீ நான் நம்ப குழந்தை இது தான் உலகம் அ...ஒரு நிமிஷம் இரு "அ...ப்பா ஆட்டோ நில்லுங்க என்று ஆட்டோவை பிடிக்க அவளுக்கு புரியவில்லை சிறிது நேரத்தில் அந்த வயதான தாத்தா பாட்டியை அழைத்து வந்தான் நவின் "பாட்டி இனி நானும் நர்மதாவும் உன் புள்ளைங்க மாதிரி என்ன சரியா??😊😊
அவர்களை பார்த்த அந்த நொடி நர்மதா அனைத்து கவலையும் மறக்க "வாங்க பாட்டி உக்காருங்க என்றவுடன் "அட உக்கார எங்க நேரம் இருக்கிறது நானூம் நவினும் பைக்கில் போய் வீட்டுக்கு தட்டுபுட்டு சாமான் ல வாங்கி வரோம் என்று பாட்டி உரிமையாய் சொல்ல வாய்மேல் கை வைத்தாள் நர்மதா😊
நவின் தங்கம் வா போய் வாங்கி வரலாம் என்றவுடன் சரிங்க பாட்டி என்று அவரை அழைத்து கடைக்கு சென்று இட்லி பாத்திரம்,4 கிளாஸ்,ஒரு குக்கர் ,இரண்டு கடாய்,ஒரு தவா,அப்புறம் பாத்திரம் கரண்டி னு எல்லாம் வாங்கிட்டு வீடு வந்து சேர்ந்தாங்க
"நர்மதா நீ மாசமா இருக்க பொன்னு அதனால உனக்கு வாய்க்கு ருசியா பருப்பு துவையல் ,மிளகு ரசம் இதெல்லாம் பன்னி தரேன் நீ ஓய்வு எடு என்று கிடு கிடுனு அந்த கிழவி எல்லாம் வேலையும் செய்ய அந்த கிழவனோ "அந்த காலத்துல என் பொஞ்சாதி முருங்கை கீரை பொறியல் பன்னா அவ்வளவு ருசியா இருக்கும், அப்புறம் அந்த ஃபில்டர் காபி போடுவா
பாரு சும்மா வீடே வாசனை தூக்கும்🙂🙂🙂
ஹாஹா ..எல்லாம் சிரிக்க அவரவர் கஷ்டங்கள் அனைத்தும் மறந்தது.
🌼🌼🌼🌼🌼
வீரா தனுஷ் வீட்டுக்கு வந்துவிட்டாள் வீரா தன்னை முழுசா ஏத்துகிட்டா என்ற உரிமை யில் அவளை பின்னிருந்து அணைக்க "விடுங்க தனுஷ் நானே நவின் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன் என்றவளை கடிந்து கொண்டான்
"போ...டி ....போ...அவனோடையே இருந்துக்கோ....எப்ப பாரு நவின் நவின் நவின்... ஆமாம் அவனை தான் புடிச்சிருக்கு என்றால் அவனையே கட்டியிருக்க வேண்டிய தானே...ஏண்டி என் உசுற வாங்கி தொலையிர???ச்ச
எ. .என்னங்க நான் அந்த அர்தத்துல சொல்லலங்க ...அவன் வீட்டை விட்டு போனானே எங்க தங்கியிருக்கானோ என்னவோ னு....
பாரு எதுவும் பேசாத .....அம்புட்டு தான் சொல்லிட்டேன்.கோபித்து கொண்டு சென்றுவிட அவளோ அழுதுகொண்டே தன் மகள் அகல்யா வின் பக்கத்தில் உறங்கினாள்.
தனுஷ் வீரா சண்டை தொடருமா....??
தொடரும்😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro