பகுதி -35
ஆஸ்பிட்டல்ல இருந்து சக்தி குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் வாசலில் நர்மதா ஆரத்தி எடுத்தாள் . "வாங்க அண்ணி உள்ள என்று அழைத்தாள்.அவளை அமரவைத்து காப்பி கொடுக்க அவளோ அதை வாங்கி பருகியபடி அனைவரிடம் நலம் விசாரித்து கொண்டிருந்தாள் இதற்கிடையில் கதிர்வேலன் தங்கச்சி (முருகேஷ் க்கு வீராவுக்கு அத்தை) வந்து இறங்க ..வாங்க அத்தை என்று அவரை அழைத்து உள்ள அமரவைத்தனர்...
"என்னத்தா நர்மதா கல்யாணம் முன்னாடியே புள்ளைய வாங்கிட்ட ம்ம்ம் என்னவோ போ...எப்படியோ கல்யாணம் பன்னிட்டு சந்தோஷமா இருங்க என்று சலித்து கொள்ள நர்மதாவுக்கு முகம் வாடி விட்டது ஓவென அழத்துவங்கினாள் அதுவும் நவின் அறைக்கு சென்று . அங்கு பின்னாடியே நவின் சென்றான்.
"எ...ஏய் நர்மதா இங்க பாரு அழாத அவங்க பெரியவங்க ஏதோ சொல்லிட்டாங்க அதுக்காக அழக்கூடாது கண்ணை துடை வா கீழ போலாம்...
என்னால முடியாது ...என்னை மட்டம் தட்டுற மாதிரி கேவலமா பேசிட்டாங்க எனக்கு அவமானமா இருக்கு நான் வரலை போ நவின்.
இங்க பாருடா நர்மதா பெரியவர்கள் அப்படிதான் அதுக்காக இப்படி அழுதுட்டு இருந்தா அது இன்னும் நம்ப வீக்னஸ் ஆயிடும் கண்ணை துடை என் செல்லம் ல வா கீழ போலாம் என்று அவளை சமாதானம் செய்வதை தூரத்தில் இருந்து பார்த்தாள் வீரா "நர்மதா நீ கொடுத்து வச்சவ இந்த மாதிரி புருஷன் கிடைக்க "😊என்று புன்னகையித்து செல்ல எதிரே தனுஷ் நின்றான் வழி மறித்தபடி "வழி விடுங்க என்றாள் வீரா ...ஆனால் வழி மறித்தபடி நிற்க அவரின் தோளை மெல்ல தள்ளியபடி நகர வைத்து நடந்தாள் அவளின் கைகளை பற்றி இழுத்தான் தனுஷ் அவனின் தொடுதலில் உண்மையான கணவன் மனைவி மீது வைக்கும் அன்பினை உணர்ந்தாள். திரும்பி தனுஷை பார்த்தவாறு "என்னங்க உங்களுக்கு பழைய ஞாபகம் வராட்டியும் பரவாயில்லை உங்களோட நான் வாழ தயாரா இருக்கேன் என்று முழுமனதோடு கூற அவனோ கண்ணடித்து "ஏய் பொண்டாட்டி இந்த ரவுடி பேபி மேல அவ்வளவு லவ்வா "என்று கேற்க ஆச்சரியத்தில் மெய்மறந்தாள் "உ....உங்களுக்கு ஞாபகம் வந்துடுச்சா????
ம்ம்ம் எப்பவோ வத்தாச்சு ஆனால் முழுசா உன் மனதால நீ என்னை ஏத்துக்கனும் னு இவ்வளவு நாள் சொல்லாமல் இருந்தேன் என்றவனை தன்னருகே இழுத்து "எப்படிங்க ஞாபகம் வந்துச்சு சொல்லுங்க 😊
சொல்றன் உனக்கு சர்ப்ரைஸ் 😊நவின் நர்மதா வுக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் சொல்றன் .
என்னால அவ்வளவு நாள் காக்க முடியாதே😊
உனக்காக நான் காத்த மாதிரி எனக்காக நீ காத்துட்டு இருந்துதான் ஆகனும். ஓகேவா.....
ஓகே இல்லை தான் ஆனாலும் ஓகே.
🌼🌼🌼🌼
நவின் நர்மதாவை அழைத்துக்கொண்டு கல்யாண மாலை தேர்வு செய்ய அழைத்து சென்றான் .
ஏங்க இந்த மல்லிபூ மாலை அழகா இருக்கு இதே மாதிரி கட்ட சொல்லிடலாமா??😊😊
ஆமா இந்த மாலை தான் நானும் செலக்ட் பன்னலாம் னு இருந்தேன் . சரி "அண்ணே இந்த மாதிரி மாலையே கட்டி வைங்க எங்க கல்யாணத்துக்கு "
சரிபா😊கல்யாணம் க்கு ஒருமணி நேரம் முன்னாடி வந்தாபோதும் ரெடியாகிடும் .எல்லாம் பேசிட்டு இவங்க கிளம்பி வரப்ப வரும்வழியில் ஒரு 70வயது கிழவியும் அவரது கணவருமான 80வயது கிழவரும் ஆதரவற்ற நிலையில் தெருவில் இருப்பதை கண்டனர் . பைக்கை நிறுத்தி அவர்களுக்கு உணவு அளிக்க அவர்களும் அதை வாங்கிக்கொண்டு "நல்ல மவராசனா இருப்பா"என்று வாழ்த்தி அனுப்பியபோது அந்த கிழவன் நவினின் பேண்டை பிடித்தவாறு "தம்பி உன்னை பார்த்தா நல்ல பையன் மாதிரி இருக்கு...நான் எத்தனை நாள் உசுரோட இருப்பனு தெரியாது நான் செத்துட்டா என் பொஞ்சாதிக்கு யாரும் இல்லை... கடவுள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தரவில்லை சொந்தகாரனும் பாத்துக்கல ....நாங்க கிட்ட தட்ட அநாதை . இந்த கிழவியை மட்டும் கவனிச்சிக்க பா....என்னை பத்தி எனக்கு கவலை இல்லை னு அந்த முதியவர் சொல்ல நவினுக்கு நர்மதாவுக்கும் கண்கலங்கியது.
நர்மதா - தாத்தா நீங்க கவலையே படாதிங்க எனக்கு இன்னும் 10, நாள்ல கல்யாணம் ஆயிடும் .உங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு போய் வீடு பாத்து எங்க கூடவே வச்சிக்கிறோம் . நான் ஒரு ஆஷ்ரமம் ல வளர்ந்த பொன்னு எனக்கு வாழ்க்கை தந்தவரு இதோ....நவின் தான். இனி நீங்களும் அநாதை இல்லை.
நவின் - ஆமா தாத்தா கவலை படாதிங்க உங்களை பாத்துக்குறோம் சாகுற வரைக்கும்.
கை எடுத்து கும்பிட்டது அந்த கிழவி. தன் வயிற்றை தடவியவாரு நர்மதா சிந்தித்தாள் "செல்லம் நீ வந்த நேரம் எனக்குனு எத்தனை சொந்தம் கிடைச்சது... "என்று .
வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் இருவரும் அங்கு சக்தி கண்கலங்கி நின்றதை நவின் கண்டான் "அக்கா என்ன ஆச்சு என்ன இம்புட்டு அழுகை "
அது...வந்து இன்னைக்கு ஒரு ஜோதிடர் வந்தாரு டா எதுக்கும் உன் ஜாதகம் காட்டினேன்.நர்மதா பேர் பொறுத்தம் எல்லாம் பாத்துட்டு இன்னும் ஒரு வருஷத்துக்கு கல்யாணம் பன்ன கூடாது சொல்லிட்டாரு டா என்ன பன்றது தெரியல ஏற்பாடு வேற நடந்திட்டு இருக்கு.
லூசா க்கா நீ.....இப்ப போயீ ஜாதகம்லா எவன் உங்களை பார்க்க சொன்னது . ஒருவருஷம் வரைக்கும் கல்யாணம் பன்னாம இருக்கனும் னா அவ வயகத்துல வளர புள்ளையே பிறந்திடும் . போக்கா நீயும் உன் பேச்சும்.
டேய் எனக்கு நீ தான் டா முக்கியம் உனக்கு எதும் ஆகாம நல்லபடியா இருக்கனும். இப்ப என்ன மூணு மாசம் தானே ஆகுது கர்பம் கலைச்சிடலாம் டா. கல்யாணம் ஆயிட்டு பெத்துக்க டா .😢
நர்மதா நீ வா நம்ப போலாம் இவங்களை நம்பனோம் ல நம்ப தப்பு -நவின்.
நர்மதா - ஏங்க கொஞ்சம் பொறுமையா இருங்க....பேசலாம்.
நவின் - இங்க பாரு கிளம்பு னு சொல்லிட்டேன் கம்முனு கிளம்பு ப்ளீஸ்.
இருவரும் தங்களது உடைமையை எடுத்துக்கொண்டு கிளம்ப வெளியே அனைவரும் கெஞ்சினர் அதை பொருட்படுத்தாமல் கிளம்பினான் நவின்.
நவின் எடுத்த முடிவு சரியா??
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro