Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -33

சக்தி க்கு பிரசவவலி ஏற்பட்டது அவளை முருகேஷ் மருத்துவமணையில் அனுமதிக்க விஷயம் கேட்டு பெங்களூர் சென்ற நவின் மற்றும் நர்மதா அவளை பார்க்க வந்தனர்.

பிரசவம் முடிந்த நிலையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது அப்போதே அதற்கு "அரசன்"என்று பெயர் சூட்டினர் ,இக்குடும்பத்தை கட்டி ஆளும் அரசனாக இருக்கவேண்டும் என்று அப்பெயரை கதிர்வேலன் சூட்டி மகிழ்ந்தார்.

குழந்தை யை தூக்கி நவின் கொஞ்சினான்"செல்லம் நான் மாமா ஆயிட்டன்"என்று...
"ம்ம்ம் ஏன் மச்சான் இன்னும் கொஞ்ச மாசத்துல அப்பாவே ஆயிடுவியே என்று முருகேஷ் நக்கல் அடிக்க அனைவரும் சிரித்து விட்டனர்

கதிர்வேலன் - இங்க வா தாயி..என்று நர்மதாவை அழைத்தார்.

சொல்லுங்க அங்கிள்...

என்ன அங்கிள் பங்கிள் னு உரிமையா அப்பானு கூப்பிடு . இங்க பாரு வீரா என்கிட்ட உங்க காதல் விவகாரம் சொல்லிட்டா. உங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் பன்னி வைக்கிறோம் .😊

ஆனந்த கண்ணீர் அவள் கண்களை நிரப்பியது."நிஜமாவா மாமா என்று நவின் கேற்க ...அட ஆமா மாப்பிள்ளை நிஜம் தான்.

இங்க பாருத்தா..இனி நீ அநாதை இல்லை உனக்கு அப்பா ஸ்தானத்தில் நான் இருக்கேன் . இதோ அண்ணே ஸ்தானத்தில் முருகேஷ் இருக்காப்புல வீரா உனக்கு அக்கா மாதிரி . ஹாஹா ஆஷ்ரமம் ல இனி நீ இருக்கவேண்டாம் .உன்னுடைய உடமைகளை எடுத்துட்டு வந்துடு.

சரிங்கப்பா என்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய அவளை தூக்கி நிறுத்தி "புள்ளதார்ச்சி பொன்னு இப்படி குனிய கூடாது தாயி...இப்ப நீ பத்ரமா ஆஷ்ரமம் ல இரு...நாளைக்கு காலை ல நம்ப வீட்டுக்கு வந்துடு சரியா.

சரிங்கப்பா..நம்ப வீட்டுக்கு நான் வந்துடுறன் என்று சொல்லிவிட்டு சக்தியிடம் பேசினாள் "சக்தி அண்ணி ரொம்ப தாங்க்ஸ் உங்க தம்பி மூலமாக எனக்கு ஒரு வாழ்க்கை கிடைச்சது"

உண்மையை சொல்லனும்னா உன் மேலயும் என் தம்பி மேலயும் அம்புட்டு கோவம் ஏன் தெரியுமா நீங்க லவ் பன்னிங்க அப்படிங்கறதுக்காக இல்லை.... என் கிட்ட மறைச்சிங்க பாரு அதுக்காக...

சாரி அக்கா என்று நவின் நர்மதாவுடன் சொல்ல "டேய் தம்பி இந்த காதல், கல்யாணம் இதெல்லாம் எப்ப நடக்கும் தெரியாது ஆனால் அதை நம்ப கைக்கு கிடைக்கிறப்ப அதை நம்ப பிடிச்சக்கனும்.... இனி நீங்க இரண்டு பேர் வாழ்ற வாழ்க்கை ல தான் எல்லாமே அடங்கியிருக்கு புரியுதா.தன் அக்காவிடம் விடைபெற்று வெளியே வந்தான் அங்கு வீரா மரத்தடியில் அமர்ந்து எதையோ யோசிக்க சட்டுனு நவின் அங்கே அவள் கண்களை மறைக்கும் படி எதிரே நிக்க "என்ன நவின் அண்ணியை பார்த்தியா?? குழந்தை எப்படி இருக்கான்.

"ம்ம்ம் அவனுக்கென்ன என் மருமகன் நல்லாதான் இருக்கான்😊அப்புறம். ரொம்ப தாங்க்ஸ் டி...என் கல்யாணம் பற்றி வீட்டில் எல்லார்கிட்டயும் பேசுனதுக்கு நிஜமாவே இந்த உதவியை மறக்கமாட்டேன்.

தாங்க்ஸ் சொல்லி என்னை வேறுபடுத்தாத நவின். போ...போய் உன் நர்மதா கூட சந்தோஷமா இரு. என்றவுடன் "ஏய்  வீரா...நீ அடிக்கடி சொல்லுவ என்னை கட்டி அணைச்சா ரொம்ப செக்யூரா ஃபீல் பன்னுவனு இப்ப சொல்றன் நீ இருக்கிற வரைக்கும் நான் செக்யூரா ஃபீல் பன்றேன். ஒரு தோழியோட அரவணைப்பு எப்படி இருக்கும் னு முழுசா உணர்ரன்.😊

ஹாஹா... போ...நவின். சும்மா எதாவது சொல்லி என்னை வெக்கபடவைக்காத ...போ..நர்மதா உனக்காக வெயிட்டிங்.

நர்மதா அருகே வீரா வந்து நிற்க "ஓ...என அழத்துவங்கினாள் வீரா.....
நர்மதா...... எனக்கு என்ன சொல்றது தெரியல ஆனால் எந்த சூழலிலும் நான் நவினோட நட்பை இழக்க விரும்பல ,எங்க இரண்டு பேரையும் பிரிச்சிட மாட்டியே ????

ச்சு...ஐயோ வீரா ..என்ன நீங்க??? இந்த வாழ்க்கை நீங்க விட்டு கொடுத்த வாழ்க்கை... அன்னைக்கு பிடிவாதமா நவினை தான் கல்யாணம் பன்னுவேனு நீங்க தீர்மானம் பன்னிருந்தா யார் தடுத்துருக்க முடியும். அன்னைக்கு தனுஷ் கையால தாலி ஏத்துட்டு நவினை  விட்டுகொடுத்துட்டு இன்னைக்கு நானும் நவினும் சேர்ந்து வாழறதுக்கு வீட்டில் எல்லார்கிட்டயும் பேசியிருக்கிங்க இந்த உதவிக்கே நான் உங்களை தலை வணங்கனும்.😊போங்க வீரா.... சரி சரி இன்னைக்கு உங்க நவின் கிட்ட ஹக் கேக்கல ஏன்???நான் இருக்கேனா???ஹாஹா.... அதெல்லாம் நான் தப்பா எடுக்க மாட்டேன்.....தாராளமாக ப்ரண்டுஸ் இரண்டு பேரும் ஹக் பன்னிக்கோங்க.

ஹாஹா ஏய் நர்மதா நவின் இப்ப பழைய நவின் இல்லை உன்னோட காதலன் இன்னும் கொஞ்ச நாளில் புருஷன்..... இப்படி எல்லாம் தாராளமாக கட்டிபிடி னு விட்டு கொடுக்குற உன் இடத்தை...😊😊லூசு.

வீரா,என் நவின் மேல எனக்கு நம்பிக்கை இருக்கிறது... அவரு என்கிட்ட மட்டும் தான் லவ்ஸ் எல்லாம் உங்கள் கிட்ட ப்ரண்டுலி ஹக் தானே குடுத்தாலும் தவறில்லை....

பார்ரரரரா....லவ்வர் மேல உள்ள நம்பிக்கை யை...சான்ஸே இல்லை😊,

ஹாஹா போங்க வீரா சும்மா கலாய்சிட்டு.
🌼🌼🌼
தொடரும்.


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro