Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -29

பெங்களூர் புரபட்டனர் மூவரும் முருகேஷ் சக்தி நவின் . மூவரும் பக்கத்து பக்கத்தில் அமரும்படி இருக்கைகள் அமைந்துள்ளது. "டீ சாய் சாயா ......
சூடா சமோசை...என்று கூவி கூவி திண்பண்டங்கள் விற்கப்பட்டன ..ஒருபக்கம் செண்டாஃ பன்ன பயணிகளின் உறவினர்கள் கூச்சல் என பரபரப்பான அந்த சூழலல் வெகு நாட்கள் கழித்து பயண அனுபவம் .

"என்னங்க அதுக்குள்ள காட்பாடி வந்துருச்சு என்று தன் கணவனுடன் சக்தி பேசி மகிழ, ஜன்னல் ஓர இருக்கையில் நவின் வேடிக்கை பார்த்தபடி வர....அவன் எல்லாவற்றையும் மறந்தவனாய் மனதில் உட்சாகத்துடன் பயணம் செய்தான்... அவனுடைய மொபைலுக்கு மெஸஜ் பாப்பப் ஆனது.

"Hey this is veera....

Ooh tell me.

Where are you 😊?

I'm in train ,going bangalore

Fine , are you okay now.

Mmmm..

Mmmm na enna da artham .

Ellam seri ayiduchu artham😀

Appo unaku en nyabagam edhum illaya ???

Nan enna appadi  vilunthu vilunthu love pannen ..Maraka kashta padurathuku 😀you are always a good friend and by the way don't text or call me like this often . Since it affect your life.

Hey...Navin why u say this. 

Yes veera its not fair to talk with me like this often . See dhanush is your life . He came back as new men ,start new life with him ok. Take care bye and leave me alone.
இது தான் அவங்களுக்குள்ள நடந்த தட்டச்சு உரையாடல் 😀மொபைலை ஆப் செய்து விட்டு மீண்டும் ஜன்னல் ஒர இயற்கை யை ரசிக்க துவங்கினான். திடிருனு சாரல் மழை தூவியது ,ஜன்னல் கம்பியில் முத்து முத்தாக மழையின் துளிகள் சொட்ட சிறுபிள்ளை போல அதை கையில் ஏந்தி விளையாடினான் நம்ப நவின்😀

டேய் நவின் என்னடா இது குழந்தை மாதிரி....

அக்கா கண்டுக்காத 😀நானே ஹேப்பியா விளையாடிட்டு இருக்கேன் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு . உனக்கு ஞாபகம் இருக்கா..நம்ப சின்ன வயசுல அப்பா அம்மா கூட ரயில் ல பயணம் செய்றப்ப ஜன்னல் இருக்கைக்கு அடம்பிடித்து சண்டை போடுவோம் கடைசியில் உன் மடியில என்னை உக்கார வச்சிட்டு வருவ..ஹாஹா..

ஹாஹா... ஆமா நவின் அந்த நினைவுகள் இன்னும் என் மனசுல அழியாம இருக்கு.

ம்ம்ம்...

முருகேஷ் - ப்பா...போதும் போதும் அக்கா தம்பி செண்டிமெண்ட் என்னால முடியல...கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருது 😀

மாம்ஸ் உனக்கு இந்த மாதிரி அக்கா யாரும் இல்லை னு பொறாமை தானே..

எனக்கு ஏண்டா பொறாமை எனக்கு தான் என் செல்ல தங்கச்சி இருக்காளே 😀

ச்ச இந்த மாமா மறுபடியும் வீராவை ஞாபகம் படுத்திருச்சே...என்று பல்லை கடித்து கொண்டு "அப்படியா மாம்ஸ் ஓகே ஓகே...வீராவும் நீயும் செம்ம ஜாலி டைப் தான்"என்றான் 😀

இவர்கள் பேசிக்கொண்டு வந்ததில் 6மணி நேர பயணம் வந்ததே தெரியவில்லை ...பெங்களூரில் இறங்கினர் அங்கு அவர்கள் வர கார் அனுப்பட்டது. காரில் சித்தப்பா வீட்டுக்கு சென்றடைந்தனர்.

"ஹாய் சித்தப்ஸ் என்று நவின் அவரை கட்டி தழுவ ..."வாடா நவின் எப்படி இருக்க...சித்தி சக்தியை கட்டி அணைக்க "வாங்க வாங்க என்று உள்ளே அழைத்து அமரவைத்தனர். படியிலிருந்து இறங்கி வந்த சித்தப்பா பையன் ராகேஷ் "ஹாய் சக்தி அக்கா..என்று ஓடி வந்து மடியில் அமர..

டேய் ராகேஷ் அக்கா கர்பமாக இருக்கா அப்படி தன்னுனு உக்கார கூடாது டா என்று சித்தி திட்ட "விடுங்க சித்தி இவனும் என் தம்பி தானே இவனுக்கு மிஞ்சுனது தான் எல்லாம் எனக்கு... என்று தம்பி ராகேஷை கொஞ்சினாள் சக்தி"

ராகேஷ் இப்ப நீ என்ன படிக்கிற?? என்று முருகேஷ் கேற்க..."நான் இன்ஜினியரிங் படிக்கிறன் மாமா "என்றான்.

எல்லாரும் ஒன்றாக அமர்ந்து டைனிங் டேபிள் அமர்ந்து உண்டனர் "அம்மாடி சக்தி இவ்வளவு நாள் உன்னையும் உன் தம்பி நவினையும் உபசரிக்க முடியல...ரொம்ப சுயநலமாக வாழ்ந்துட்டேன் மன்னிச்சிறு மா....உன் கல்யாணம் முடிஞ்சு கிளம்பி வரப்ப தான் நவின் எங்களை பக்குவபடுத்தினான் அவன் பேச்சுல. இனி ராகேஷ் எப்படியோ அப்படிதான் நீயும் நவினும் அதனால் அடிக்கடி வந்துபோங்க என்ன உதவினாலும் மறக்காமல் கேளுங்க ...

ஐயோ சித்தி ..உலகத்தில் யார் தான் சுயநலமா இல்லை சொல்லுங்கள்😀விடுங்க சித்தி . அதெல்லாம் மறந்துட்டு இப்ப என்னவோ அதை பாருங்க.

........
....நவினும் ராகேஷும் அவனது காலேஜ் கதைகளை கதைத்து கொண்டு இருந்தனர். திடிருனு ராகேஷ் மொபைலுக்கு அழைப்பு வந்தது.

"ஹலோ ராகேஷ் எப்படி இருக்க ???ரொம்ப நாள் ஆச்சு டா உன்கிட்ட பேசி என்று ஒரு பெண்ணின் குரல் கேற்க உற்று கவனித்தான் நவின்..."டேய் தம்பி மா யார் அது போன் ல ??

ஐயோ அண்ணே  ..அது வேற யாருமில்லை எனக்கு அக்கா மாதிரி .பெயர் நர்மதா ....நான் ஒருவாட்டி ப்ரண்டுஸ் கூட சென்னை வந்தப்ப ஒரு அநாதை ஆஷ்ரமம் க்கு சர்வீஸ் பன்னலானு போனோம் . அங்க அந்த அக்காவை மீட் பன்னேன்... ஸோ ஸ்விட் அந்த அக்கா....எங்களை அப்படி கவனித்து அனுப்பினாங்க.

ம்ம்ம் ஆமா ராகேஷ் "அவங்க ரொம்ப ஸ்வீட் "என்றான் அவளை நினைத்தபடி "அ...அண்ணே உனக்கு அவங்களே தெரியுமா ??

"ஹாஹா ..ம்ம்ம்...

என்ன ம்ம்ம் னு மழுப்புற...

ம்ச்ச் போடா என்று உச்சு கொட்டி விட்டு இடத்தை விட்டு நகர்ந்தான் நவின்.

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro