பகுதி -28
விரைந்து மண்டபம் வந்து சேர்ந்தனர் கிடு கிடு வென வீராவின் அறைகதவை தட்டினர் கதவை திறந்த வீராவுக்கு அதிர்ச்சி "என்ன இது நம்ப கொடைக்கானல் பஸ்ஸில் பக்கத்தில் அமர்ந்த ஆளு இவரு...இவரு ஏன் என் மாமியார் மாமனார் கூட வரனும்"
நீ...நீங்க யார் ஏன் எங்க மாமியார் மாமனாரோட வந்துருக்கிங்க என்று அவள் சொல்லி முடிபதற்குள் "அம்மாடி இவன் தான் மா உன் தனுஷ்...என் புள்ள மா"
அத்தை என்ன சொல்றீங்க இவரு என் புருஷனா அத்தை இவன் யாருன்னு எனக்கு தெரியாது தனுஷ் எப்படி இருப்பாரு எனக்கு தெரியாத அவரு முகம் கூடவா தெரியாது. என்ன பேசுறீங்க நீங்கலாம்.
அ...வீரா நான் தான் உன் புருஷன்னு அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும் ஏனெனில் பழசு எல்லாம் மறந்துடுச்சு முகமும் ப்ளாஸ்டிக் சர்ஜரி பன்னி அதான் இந்த கன்ப்யூஸன் ...
மெளனமானாள் வீரா...அறைக்கதவை தாளிட்டு அழத்துவங்கினாள் எல்லாரும் கதவை தட்டி வெளியே வா வீரா என்று கதறினர்...."ஐயோ கடவுளே என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு... புருஷன்னு ஒருத்தர் வந்து நிக்க இன்னொரு பக்கம் என் நவின் நான் என்ன பன்னுவேன் என்று கதறினாள்.
நவின் - வீரா ஒரு நிமிஷம் கதவை திற உன்கிட்ட கொஞ்சம் பேசனும்
கதவை திறந்தாள் உள்ளே சென்ற நவின் முதலில் அவள் கண்ணீரை துடைத்தான் "ரிலாக்ஸ் வீரா உன் நிலமை எனக்கு புரியுது இங்க பாரு என்ன பத்தி கவலை படாத உன் முடிவு என்ன னு மட்டும் சொல்லு பெரியவங்க கிட்ட புரியுதா வா வெளியே வா....."
டேய் நவின் எனக்கு இதெல்லாம் வேணாம் டா...நான் உன்கூட வாழனும் அதுமட்டும் போதும் ப்ளீஸ் என்னை எடுத்துக்கோ ..ப்ளீஸ் ...என்று அழதுவங்கினாள்... அவளை சமாதானம் செய்து வெளியே அழைத்து வந்தான்.
"மிஸ்டர் தனுஷ் ...நீங்க வெற்றியா திரும்பி வந்துருக்கிங்க உங்க வீராவை உங்க கிட்ட ஒப்படைக்கிறன். இதோ இப்பவே இவ கழுத்துல நீங்க தாலியை கட்டி விடுங்கள் என்று நவின் கூற அனைவரும் சம்மதித்தனர் ஆனால் வீராவுக்கு வெறுப்பு மட்டுமே இருந்தது.
தன் கண் முன்னே கணவன் மலையிலிருந்து தவறி விழுந்தான் இந்த. நிலையில் எப்படி மீண்டு வர முடியும் எல்லாம் கட்டுகதை இவன் யாரோ என்ற தோரணையில் நின்றிருந்தாள் இவள் கழுத்தில் தனுஷ் தாலியை கட்டினான். கண்சிமிட்டும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
நவின் என்ன செய்வது தெரியாமல் அந்த இடத்தை விட்டு விலகி நடந்தான் உலகமே இருண்டது போல் இருந்தது அவனுக்கு என் வீரா இனிமே எனக்கு இல்லை.... அகல்யா என் குழந்தை இல்லை எல்லாம் கைவிட்டு போயிடுச்சு ..என்று விம்மி அழுதான். கைபேசி அழைப்பு வந்தது எதிர்முனையில் நர்மதா "ஏண்டா இப்படி பன்ன உன்னையே சுத்தி சுத்தி வந்தேனடா என்ன கைவிட்டு வீரா வை கைபிடிக்க போறியா... என அழுதாள்.
சாரி நர்மதா ஐயம் சாரி தப்பு தான் ஆனால் வீராவை இனி அந்த கடவுளே நினைச்சாலும் நான் கல்யாணம் பன்ன முடியாது . அவளோட புருஷன் வந்தாச்சு உயிரோட என்று விளக்கம் தர கண்ணீரை துடைத்த நர்மதா "நவின் நான் உங்களை பார்க்கனும் இப்பவே வாங்க "
ந...நர்மதா மணி 1 இரவு நேரத்தில் அதெல்லாம் நல்லாயிருக்காது நீ தூங்கு நாளைக்கு வந்து பாக்குறன். ப்ளீஸ் நீ தூங்கு
🐧🐧🐧🐧🐧
வீராவை தனுஷுடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்தனர் பெற்றோர். தனுஷ் நீயும் வீராவும் இப்போதைக்கு தனி தனியாக படுங்க நான் நல்ல நாள் பார்த்து சொல்றேன் புதுசா வாழ்க்கை ஆரம்பிங்க என்றவுடன் வீரா கொந்தளித்தாள்
"அத்தை என்ன நடக்கிறது இங்க ம்ம்ம்.... நல்ல நாள் எதுக்கு நான் ஏன் இவரோட வாழனும் நீங்க வேணும் னா இவரை புள்ளைய ஏத்துக்கலாம் ஆனால் நான் புருஷனா ஏத்துக்க முடியாது....
ச்ச ..வீரா என்னை நீ இவ்வளவு கேவலமா நினைச்சிட்டல இங்க பாரு வீரா சமுதாயம் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி சொன்னாலும் என் கண்ணுக்கு நீ புதுசா தெரியுற புரியுதா.. நீயே ஏத்துட்டாலும் நான் உன்னை அவ்வளவு சுலபமாக மனைவியா ஏத்துக்க முடியாது ஓகேவா போ...போய் படு .
....
...மறுநாள் காலை
நர்மதா வை சந்திக்க அவளிருக்கும் ஆஷ்ரமம் சென்றான் நவின். "வா நவின் என்று தயங்கியபடி கூப்பிட்டு அவனை அமரவைத்தாள்.
இங்கே பாரு நர்மதா...ஏன் யாரோ பாக்குற மாரி பாக்குற உன் நவின் வந்துருக்கன் முழுசா ...இங்க பாரு எப்பவும் போல கலகலப்பா இரு.
அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை நவின்.... என்னால நீ எனக்கு கிடைக்கமாட்ட அப்படிங்கிற விஷயம் தான் கண் முன்னே இருக்கு வேற எதுவும் இல்லை.... நீ கிடைப்ப அப்படிங்கிற நம்பிக்கை இல்லை.
ம்ம்ம்.... நானும் ஒன்னும் பச்சோந்தி இல்லை நர்மதா வீரா இல்லை அதுக்காக அடுத்த ஆப்ஷன் நர்மதா னு உடனே வரதுக்கு...கொஞ்ச நாள் போகட்டும் எல்லாம் பேசிக்கலாம். என்று சொல்லிவிட்டு கிளம்ப....ஒரு குழந்தை அவன் கையை பிடித்து இழுத்தது "மாமா ...நர்மதா அக்கா பாவம் "என்று சொல்ல அவனோ அந்த குழந்தை யை தூக்கி கொஞ்சி இறக்கிவிட்டு திரும்பி நர்மதாவை பார்க்க அவளோ முகத்தை திருப்பி கொண்டாள்.
வீரா பழையபடி தன் தனுஷ் வீட்டுக்கு சென்றுவிடவே வீடு வெறிச்சோடி இருக்கு என்று கதிர்வேலன் பேசிக்கொள்ள இதைகேட்டு சக்தி "மாமா இதுல தப்பு என்ன இருக்கிறது அவ புருஷன் வீட்டுக்கு அவ போயிட்டா அங்க இருக்கிறது தானே அவளுக்கு அழகு"
ஏம்மா நீ கூட உன் தம்பி வாழ்க்கை யை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல ல...நேத்து வரைக்கும் வீரா தான் மனைவி ஆக போறானு கனவு காணுருப்பான் ஆனால் இன்னைக்கு ...பாவம் மா உன் தம்பி நவின்.
ஆமால அவனை பத்தி நான் யோசிக்கவே இல்லை....."டேய் தம்பி சாரி டா என்று மெஸஜ் அனுப்பினாள்.
"Akka ,I'm just on the way ,let me speak "னு மெஸஜ் தட்டிவிட சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான் நவின் .
"என்ன அக்கா...சாரி எல்லாம் கேட்டுட்டு
இல்லை டா நேத்து நடந்தது எல்லாம் மறந்துட்டியா...
ஹாஹா எனக்கு என்ன ஷார்ட் மெமரி லாஸா எல்லாம் மறக்க.. என்னால மறக்க முடியல எதுவுமே. நான் கொஞ்ச நாள் பெங்களூர் போலானு இருக்கேன் . சித்தப்பா பையன் கூப்டுட்டே இருக்கான்.
ம்ம்ம் என்னையும் சித்தப்பா சித்தி விருந்துக்கு கூப்பிடாங்க எனக்கு எதுவுமே செய்யலனு வருத்தபட்டாங்க . என்னையும் முருகேஷ்யும் விருந்துக்கு வர சொன்னாங்க....நீயும் வா உனக்கும் ஆறுதலா இருக்கும் அப்ப பெங்களூர் க்கு மூனு டிக்கெட் போட்ரு ரயிலுக்கு.
சரிக்கா டிக்கெட் போடுறன் .
சரி சரி வா டிபன் எடுத்து வைக்கிறன்..."வேணாம் அக்கா காபி மட்டும் போட்டு தாயேன்...ப்ளீஸ் எனக்கு பசிக்கல...நான் கொஞ்சம் காபி குடிச்சா பெட்டரா இருக்கும் னு நினைக்கிறேன்"
ம்ம்ம்... ஓகே டா....கேப்பர்சீனோ பன்னவா நானே...😀
இங்க பாரு இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வேணாம் போ. போய் நார்மல் காப்பிய போட்டு எடுத்துட்டு வா அதுபோதும் ."அப்ப உனக்கு எங்க மேல எல்லாம் எதுவும் கோபம் இல்லை ல என்று அவன் அக்கா சக்தி கேற்க.."இங்க பாரு அக்கா சும்மா எறியுற நெருப்பில் எண்ணை ஊத்துற மாதிரி கேக்காத..."
ஹாஹா டேய் சொல்லுடா..
ம்ம்ம் ஒரு வெங்காயமும் இல்லை போதுமா காபி கொண்டு வா சிஸ்டர் 😀😀😀
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro