பகுதி -25
வெற்றி அண்ணா நீங்க உங்களை பத்தி சொல்லுங்கனு ஆஷ்ரமத்தில் புதிதாக வந்த இளைஞனிடம் நர்மதா கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஹாஹா என்ன பத்தி சொல்ல என்னமா இருக்கு...முதல்ல என் பேரு வெற்றியானு எனக்கு கன்பார்ம் தெரியாது. இந்த பெயர் ஆஷ்ரமத்தில் இருந்த ஒரு தாத்தா வச்ச பேரு...நான் ஹாஸ்பிடல் ல இருந்து நேராக ஆஷ்ரமம் தான் போனேன்...எனக்கு நான் யாருன்னே தெரியாமல் இருந்தது.நடந்த விபத்தில் என் முகம் காயம் பட்டு ப்ளாஸ்டிக் சர்ஜரி பன்னதா டாக்டர் சொன்னாங்க......மற்றபடி என் அப்பா அம்மா எங்க ,எனக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா எதுவுமே என் ஞாபகத்தில் இல்லை.
ம்ம்ம்.... உங்க கதையை கேட்டா எனக்கே கஷ்டமா தான் இருக்கு. சரி வாங்க சாப்பிடலாம். என்றவளை "ஆமா இங்க எனக்கு எதாவது வேலை கிடைக்குமா நர்மதா"
ம்ம்ம் நீங்க கார் ஓட்டுவிங்க தானே இங்க ஆஷ்ரமம் குழந்தைங்க ஸ்கூல் போக நடந்தே போகுதுங்க பாவம் . நீங்க தினமும் விட்டு வாங்க ..
சரிமா..😀
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
கட்டி பிடித்ததை பார்த்த கதிர்வேலன் வீராவை அழைத்து பேசினார் "என்ன வீரா இதெல்லாம் , இவ்வளவு நெருக்கமாவா பழகுறது ஒரு ஆம்பள கிட்ட ???
அப்பா அப்படி இல்லை பா ,நவின் எனக்கு ஒரு நல்ல ப்ரண்டு, அவனை கட்டி பிடிக்கும்போதெல்லாம் என்னால எல்லா கஷ்டத்தையும் மறக்க முடியுது.ஒரு சின்ன ஆறுதல்.
ம்ம்ம் அப்படி னா வாழ்நாள் முழுக்க அவன் உன் கூட இருந்தா???☺️என்று கதிர்வேலன் சிரித்து கொண்டே கேற்க "பா..என்ன சொல்றீங்க புரியல ...
இல்லை மா அவன் உன் ப்ரண்டு னு சொல்ற...உன் அண்ணிக்கு தம்பி வேற உறவுக்கார பையனுமா ஆயிட்டான். உன்னோட விஷயம் எல்லாம் தெரிஞ்சவன் அதனால அவனை நீ கட்டிக்கலாமே ...உன் குழந்தைக்கு ஒரு தகப்பன் ஸ்தானத்தில் ஒருத்தன் வேணும்ல...எவ்வளவு நாளைக்கு தான் நீ ஒண்டியாக இருக்க முடியும். யோசித்து பாரு .நீ தனுஷ் மறக்க முயற்சி பன்னு...இனி தனுஷ் வர மாட்டான் அவன் தான் இறந்துட்டானே.
ப்பா.... என்னால எதுவும் முடிவு எடுக்க முடியல பா...நீங்க நவின் கிட்ட இதை பற்றி பேசுங்க அவனுக்கு சரி னா எனக்கும் சரி தான். என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தாள். வீராவின் குழந்தைக்கு கூட அகல்யா என்றே பெயர் சூட்டினாள் வீரா ஏற்கனவே நம்ப நவின் சொன்ன பெயர் தான். இந்த அளவு நவின் மேல ஆசையும் மரியாதையும் இருக்கிறப்ப ஏன் நவினை மறுமணம் செய்ய கூடாது னு வீரா யோசித்தாள். நாமே இதை டைரக்டா நவின் கிட்ட சொல்லிடலாம் என்று முடிவு எடுத்து அவனை அழைத்து கொண்டு ரெஸ்டாரன்ட் சென்றாள்
"நவின் உன் கிட்ட அப்பா எதாவது பேசினார்??
ஆமா நம்ப கல்யாணம் பற்றி தான்😀
அப்படினா எனக்கு முன்னாடி அப்பா முந்திட்டாரா ..சரி நீ சொல்லு என்ன முடிவு எடுத்துருக்க ???
"எனக்கு உனக்கு வாழ்க்கை தரனும் அப்படினு ஒரு நல்ல நோக்கம் தான் உன்னை கல்யாணம் பன்னிக்க மத்தபடி எதுவும் இல்லை...
புரியல...நவின்
ஐ...மீன் காலேஜ் ல உன்னை லவ் பன்னேன் ல ..அந்த லவ்வை மீண்டும் புதுபிக்க முடியாது. அந்த வயசுல வந்த அந்த உணர்வு இப்ப என்னால கொண்டு வர முடியாது ஆனால் உன்னை சந்தோஷமாக வச்சு என்னால வாழ முடியும். உன் மகள் அகல்யாவை நல்லபடியா வளர்க்க முடியும் . மற்றபடி அந்த காதல் கீதல் னு சொல்ல முடியாது. நீ எப்பவும் எனக்கு ஒரு நல்ல தோழி வீரா....எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.
ம்ம்ம்.... அப்பா கிட்ட நான் என்ன சொல்ல??☺️
ஹாஹா உன் முடிவை சொல்லு...சரி முதல்ல உனக்கு ஓகேவா கல்யாணம் பன்னிக்க...என்று அவன் கேட்டவுடன் "ம்ம்ம் கண்டிப்பாக...ஏன்னா உன்னுடைய அணைப்பில் எல்லாம் கஷ்டமும் என்னால தாங்க முடியும்..நவின் நீ எனக்காக எதுவுமே பன்ன வேணாம்...டெய்லி ஒரு சின்ன ஹக்..தந்தாலே ஐயம் ஹேப்பி...."
இதைகேட்டு அவள் தலையை மெல்ல வருடினான் வருடியவாறு அவள் கண்களை எதிர்நோக்கி "உன் சந்தோஷம் தான் என் சந்தோஷமும் உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்வேன்"என்று சொன்னவுடன் அவன் கைகளை பற்றினாள்.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro