பகுதி -23
நர்மதாவின் மனதில் நவின் பற்றின கனவுகள் ஓடிக்கொண்டிருந்தது அவனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வது போல் மனதில் ஒரு குறும்படம் ஓட்டிக்கொண்டிருக்க ஜன்னல் ஓரம் இருந்த பல்லி சத்தம் போட்டது😀
அன்று ஆஷ்ரமத்தில் குழந்தையை தத்தெடுக்க ஒரு தம்பதியர் வந்திருந்தனர். நல்ல வாட்டசாட்டமான அந்த நபரும் மனைவியும் பேசிக்கொண்டிருந்தனர் "ஏங்க இந்த பேபி ஹெல்தியா...இருக்கு இது ஓகேங்க "
"அப்படியா...சரி சரி....இதை கவனித்த ஒரு ஊனமுற்ற குழந்தை பின்னால் வீல் சேரில் நகர்ந்து வந்து ". ப்ளீஸ் என்ன கூட்டு போய் வளத்துக்கோங்க என்று கண்ணீர் மல்க தெரிவித்தது .....சற்று மெளனமான தம்பதி "ஏய் இந்த பையனை வளத்துக்கலாம் பாவம் எல்லாம் அழகா ஹெல்தியா இருக்கிற குழந்தைகள் மேல தான் ஆசைபடுறாங்க அப்போ இந்த புள்ளைங்கள யாரு வளர்ப்பா பாவம்"என்று மனம் இறங்கி அந்த பையனை தத்தெடுக்க இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த நர்மதா "நாமளும் கல்யாணம் ஆயிட்டு ஒரு குழந்தையை வளர்க்கனும் என்று எண்ணினாள்...எதிரே சட்டுனு நவின் வந்து நிக்க "என்ன நர்மதா ஏதோ ஆழ்ந்த சிந்தனை 😀😀😀
வாங்க நவின் என்ன இன்னைக்கு சாக்லேட் எல்லாம் காணோம்... என்று கேற்க சாக்லேட் என்ன இன்னைக்கு நான் பிரியாணி வாங்கிட்டு வந்துருக்கேன். இன்னைக்கு ஞாயிறு ..பாவம் அசைவம் சாப்பிட குழந்தைகள் ஆசைப்படும் அதான்.
ஓஓஓஓ....ரைட்டு . சரி சரி வாங்க உக்காருங்க காபி டி எதாவது ???😊"இல்லை நர்மதா எதுவும் வேணாம் ஆமா இங்க இருந்த மேடம் எல்லாம் எங்க இன்னைக்கு காணோம்.
"ம்ம்ம் எல்லாரும் ஒரு ட்ரஸ்ட் அசோசியேஷன் மீட்டிங் போய்ருக்காங்க ...நான் மட்டும் குழந்தைகள் பாத்துட்டு இருக்கேன். குழந்தை அனைத்தும் கார்டனில் விளையாடிக்கொண்டு இருந்தது. இவள் நவினுடன் போர்டிகோ வில் பேசிக்கொண்டு இருந்தாள்.
"நர்மதா..தண்ணீர் மட்டும் எடுத்து வா...ஒரே தாகம் என்றவுடன் குடு குடுனு அவ செல்ல அங்கிருந்த ஆணியில் அவளுடைய தாவணி மாட்டிக்கொள்ள ...அவன் தான் இழுக்கிறான் என்று நினைத்துக்கொண்டு "விடுங்க நவின்.. என்று அவள் வெட்க குரலில் சொல்ல...
"ஹாஹா.... ஏய் லூசு ஆணியில் மாட்டிருக்கு என்று தாவணியை எடுத்து விட...அவளுக்கோ "ச்ச என்னடா இது இப்படி ரியாக்ட் பன்னிடுமே னு ஃபீல் பன்ன.....
"ஹலோ மேடம் தண்ணீர் கிடைக்குமா கிடைக்காதா.....😀😀😆என்று கேட்டவுடன் "அச்சோ தண்ணீர் கொண்டு வரேன் இருங்க என்று செல்ல.....
"என்ன ஆச்சு இவளுக்கு என்று இவன் சிரிக்க உடனே தண்ணீர் க்ளாஸ் எடுத்து வந்து தர நழுவி கிழே விழுந்தது டம்பளரை எடுக்க இருவரும் கீழே குனிய இருவரது நெற்றியும் இடிபட்டன.
"ஏங்க சாரி..என்றவுடன்.இட்ஸ் ஓகே என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.
🐾🐾🐾🐾🐾🐾🐾
நாட்கள் சென்றன வீராவுக்கு தன் அண்ணியின் ஞாபகம் மாசமா இருக்காங்க அவங்களுக்கும் அம்மா இல்லை... நமக்கு கை குழந்தை , இவங்களை யாரு பாத்துப்பா என்று யோசனை வர...ஒரு வேலைக்காரியை பணியில் அமர்த்தினாள். நான் சொன்னேனு சொல்லுங்க என்று வேலைக்காரியை அனுப்பி வைத்தாள்.
பிறகு வீட்டில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த வேளையில் சத்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. "ஏய் தயாளனுக்கு நிச்சயமாம் டி...என் காதல் மண்ணா போச்சு என்று அழத்துவங்கினாள்"
"அழாத டி...வா நம்ப போய் அந்த நிச்சயத்தை தடுக்கலாம்... என்று அவள் கூற "அது அவ்வளவு சுலபம் இல்லை டி...நிச்சயம் இங்க இல்லை கொடைக்கானல் ல....நம்ப இங்க இருந்து எப்படி டி போறது?????
என்ன கொடைக்கானல் ஆ??😢அதிர்ந்து போனாள் அவள் தன் கணவனை பறிக்கொடுத்த இடமும் அது தான். என்ன செய்ய அந்த சம்பவம் நடந்து பத்து மாதம் ஆகியிருக்கும் ஆனாலும் சுவடுகள் மறையவில்லை அதே சமயம் தோழியின் காதலை காப்பாற்ற வேண்டும். சத்யாவை அழைத்து கொண்டு கொடைக்கானல் சென்றாள். ப்ளைட் புக் பன்னி மதுரை இறங்கி அங்க இருந்து கொடைக்கானல் சென்றதால் தாமதம் ஆகாமல் மாலை 6 மணியளவில் மண்டபத்தை அடைந்தனர்.
மேடையில் நின்றிருந்த தயாளன் அப்போது தான் மோதிரம் போட இருந்தான் காதலியை பார்க்க நிச்சய மோதிரத்தை தவறவிட்டான் "ஸாரி டி என்று தயாளன் சத்யாவிடம் சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டு நிச்சயம் நிறுத்தி அதே மேடையில் சத்யாவுக்கு மோதிரம் அணிவித்தான். வீராவுக்கு மகிழ்ச்சி தன் தோழியின் காதலை வாழ்த்தினாள்.
எல்லாம் முடிந்து வீரா மட்டும் தனியே பஸ் ஏறினாள். சத்யாவும் தயாளனும் காரில் வந்தனர். பஸ்ஸில் வரும் போது தன் கை குழந்தை பற்றிய நினைப்பு வாட்டியது பால் ஒரு பக்கம் சுரந்தன..ஆனால் அதை சுவக்க குழந்தை தற்போது கையில் இல்லை....
தனது பக்கத்து இருக்கைக்கு ஒரு ஆண்(இளம் வயது) வந்து அமர ஒதுங்கி உக்காந்தபடி வந்தாள். "ஹலோ....மிஸ் ...உங்க பெயர் என்ன என்று அவர் கேற்க வீரா என்று மட்டும் ஒரே வார்த்தையில் கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
சிறிது தூரத்தில் அவனே பேச ஆரம்பித்தான் தனக்கு நேர்ந்த ஒரு விபத்தில் பழைய ஞாபகங்கள் இழந்துவிட்டதாகவும் தற்போது அவன் கொடைக்கானலில் ஒரு ஆஷ்ரமத்தில் இருந்ததாகவும் ,சென்னையில் வந்து ஒரு ஆஷ்ரமத்தில் தங்கி தனது பழைய ஞாபகங்களை தேடப்போவதாகவும் கூறினான். எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டி விட்டு ம்ம்ம் மட்டும் பதிலாக தந்து விட்டு பஸ்ஸில் உறங்கினாள் "மிஸ்டர் சென்னை வந்த உடனே எழுப்புங்க நானூம் அங்க தான் இறங்கனும்"...என்று சொல்லி விட்டு உறங்க துவங்கினாள்.
தொடரும் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro