பகுதி -22
நர்மதா சின்னவயதிலிருந்தே எதார்த்தத்தை விரும்புபவள் அதனாலயோ என்னவோ தெரியவில்லை நவின் னின் எதார்த்தம் அவளை மிகவும் கவர்ந்தது. இக்காலத்தில் தங்களது சுயநலம் பற்றியே சிந்திக்கும் மக்களுக்கு இடையில் இந்த ஆஷ்ரமத்துக்கு தினமும் வந்து குழந்தைகளுடன் இனிப்பு வழங்கி சந்தோஷபட்டு போகும் நவினின் உயர்ந்த குணம் அவளை வெகுவாக கவர்ந்தது.
🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
தன் மாமியார் வீட்டில் வீரா ஒரு மகளாக இருந்தாள்...எந்நேரமும் வீரா வீரா னு அவளுடைய மாமியார் அவளை கவனித்து கொண்டார். பத்தாத குறைக்கு பேத்திக்கு தங்க செயின் வாங்கி தந்து அழகு பார்த்தார்.
"என் வம்ச வாரிசே....என் செல்லம் னு குழந்தையை தூக்கி கொஞ்சுவார். இடை இடையே தன் மகனை நினைத்து அழுவார்...ஆனாலும் வீராவை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்.
"அம்மாடி ஜூஸ் குடி......உனக்கு வாழப்பழம் வேணுமா....அது இது னு எதாவது சாப்பிட கொடுப்பாங்க அவங்களோட கவனிப்பு வீராவுக்கு சந்தோஷத்தை அளித்தாலும் மகன் இல்லாமல் இருக்கும் ஒரு தாயின் மனக்கஷ்டங்களையும் புரிந்து கொண்டு "அத்தை....இன்னைக்கு நீங்க சமைக்க வேண்டாம் நீங்க குழந்தை யை பாத்துகோங்க நான் சமையல் பன்றேனு அவர்களை அன்போடு அனுசரித்து மகள் இருக்கும் நம்பிக்கை யை அவங்களுக்கு தந்தார்.
மகன் இல்லாத கவலையில் மாமனார் ஒரு பக்கம் தன் நிம்மதிக்காக யோகா அது இதுனு கவனத்தை திசை திருப்ப இப்படியே நாட்கள் கழிந்தது.அன்று தன் மருமகளின் மனநிலை யை புரிந்து கொள்ள திடிருனு "அம்மாடி வீரா நீ கடைசி வர இன்னொரு கல்யாணம் பன்னாம வாழ முடியாது .ஒரு மகளா நீ இங்க வந்து போனாலும் உனக்குனு நிரந்தரமான வாழ்க்கை ஒன்று வேணும்ல....நான் வேணும் னா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கவா...???
துணிகளை மடித்துக்கொண்டிருந்தவள் அதை மேஜையில் வைத்துவிட்டு இரண்டு அடி மாமியாரை நெருங்கினாள் "அத்தை உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது. எனக்கு கல்யாணம் பன்னனும் னு தோனும் போது பன்னிக்கிவேன் இப்ப சத்யாமா எனக்கு எதுவுமே வேணாம்...இதோ என் குழந்தை , நீங்க மாமா..அப்புறம் அப்பா அண்ணி நவின்னு எல்லாரும் இருக்கிறப்ப எனக்கு என்ன குறை.
ம்ம்ம்... சரிமா வீரா அப்படினா உன் முடிவுல நீ தெளிவாக இருக்க அதுபோதும். வா...நம்ப நைட்டுக்கு சாப்பாடு தயார் பன்னலாம் மணி ஆச்சு.... உங்க மாமா யோகா க்ளாஸ் முடிச்சுட்டு வந்துடுவாரு.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தயாளன் ,நவின், சத்யா, வீரா எல்லாரும் கெட் டு கெதர் பங்கஷன் ல கலந்துக்கொண்டு காலேஜ் நட்புகளுடன் உறவாடிக்கொண்டு இருக்க...
தயாளன் திடிருனு நவினிடம் "அப்புறம் உனக்கு எப்ப மச்சான்ஸ் கல்யாணம் னு சீண்ட அவனோ "ஏண்டா நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா என்று கண்ணடிக்க"அதை எதிர்நோக்கி பார்த்த வீரா "ஏண்டா கல்யாணம் ஆனால் சந்தோஷம் போயிடுமா என்ன.....?????😊😊
"அப்படி இல்லை வீரா....நமக்கு பிடிச்ச மாதிரி ஆளு அமையனும் ல....எனக்குனு ஒருத்தி மறுபடியும் பிறக்கபோறது இல்லை ஏற்கனவே இருக்கா....😁என்றதும் "ஆமா மச்சான் அந்த பொன்னு உன் கண் முன்னாடியே கூட இருக்கலாமே என்று மீண்டும் கிண்டல் அடிக்க. வீராவுக்கு முகமே மாறியது....
சத்யா - என்ன வீரா டல்லாயிட்ட
வீரா- ஒன்னுல டி ,அது சரி உனக்கு எப்ப கல்யாணம்.
சத்யா - ம்ம்ம் மாமா பையன் லண்டன் ல இருந்து வந்த உடனே கல்யாணம் தான்.
தயாளன் -அடிப்பாவி என்ன பொய் புழுகுறா...நானும் சத்யாவும் செட் ஆகி இரண்டு மாசம் ஆச்சு இன்னும் ப்ரண்டுஸ் கிட்ட சொல்லாம சமாளிக்கிறா பாரு. என்று மனதில் கூற...
நவின் - மச்சி தயா...சத்யாவும் நீயும் நிறையா பொய் சொல்வீங்களோ 😀😀ஏண்டா மறைக்கிறிங்க சத்யாவும் நீயும் லவ் பன்றது உண்மை தானே.
உண்மை தான் டா...ஆனால் அதுல ஒரு சிக்கல் இருக்கிறது. எனக்கும் என் பேமிலி ப்ரண்டு பொன்னுக்கும் எங்கேஜ்மண்டு பன்றதா வீட்டில் பேசுறாங்க.....அதான்
விடு தயாளன் நாங்க எல்லாம் இருக்கோம் சேத்து வைக்கிறோம் உன்னையும் சத்யாவையும் என்று வீரா கூற நட்பு வட்டத்துக்குள்ள இருக்கும் காதலை ஆதரிப்பவள் தானோ வீரா...இது தெரிந்திருந்தாள் அப்பவே என் காதலை சொல்லியிருப்பேனே...இடையே தனுஷ் என்ற கதாபாத்திரம் வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று மனதில் கூறிக்கொண்டு நமட்டு சிரிப்பை வெளிபடுத்த இதை வீரா கவனித்துக்கொண்டிருந்தாள்
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro