Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி - 20

மூன்று மாதம் கழிந்தது.

டாக்டர் குறித்த தேதியில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது "ஐயோ அம்மா னு அவ கதற சத்தம் சக்தி காதுகளில் விழ பதறியபடியே ஓடி வந்து முருகேஷ் துணை கொண்டு அவளை ஏ.கே மருத்துவமணை யில் அனுமதிக்க. எதர்ச்சையாக அங்கு தயாளன் இருக்க அங்கு அவனுடைய அப்பா மூலமாக எல்லா ஏற்பாடுகள் நடந்தது பிரசவ அறையில் அவளை படுக்க வைத்தனர் நர்ஸ்கள்.

பன்னிர்குடம் உடைந்த நிலையில் இன்னும் அரைமணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவர்கள் பேசிக்கொள்ள தகவல் அறிந்து நவினும் ஓடி வந்தான். சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் வெளியே வந்து
"இங்க யார் சக்தி??என்று கூப்பிட இதோ நான் தான் என்று அவள் நர்ஸ் பின்னாடி செல்ல...

"அண்ணி....என்னால வலி பொறுக்க முடியல என் பக்கத்தில் இருங்க என்று அவள் கையை இருக்க பற்றிக்கொண்டாள். "ஆ......அம்மா னு அவள் சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தையை பிரசவிக்க. வெளியே வந்த சக்தி....."என்னங்க உங்க தங்கச்சி க்கு பெண் குழந்தை பிறந்துருக்கு சூப்பரா இருக்கு பாப்பா அப்படியே உங்க தங்கச்சி மாதிரி கலையா...😀

எல்லோரும் சந்தோஷபட்டனர் வாரிசு வந்துவிட்டது அதுவும் வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி வந்துவிட்டாள் என்று.
கதிர்வேலன் சக்தியிடம் "ஏன் தா.. நீயும் இப்படி ஒரு புள்ளைய பெத்துகுடுத்தா எம்புட்டு நல்லாருக்கும் 😀

மாமா.... சீக்கிரமே உங்க கையில் நானும் பேரப்புள்ளைய போடுவேன் வெயிட் பன்னுங்க... என்று வெட்கபட்டாள்."என்னத்தா....நீ சொல்றத பார்த்தா எதாவது விசேஷமா??☺️

ஆமா...மாமா பத்து நாள் தள்ளி போயிருக்கு நேத்து தான் கன்பார்ம் பன்னேன் பக்கத்தில் இருந்த முருகேஷ் "ஆமா பா....நேத்து கன்பார்ம் பன்னோம்...ஒரு ஸ்கேன் முடிஞ்சு எல்லார்கிட்டயும் சொல்லலாம் நினைச்சோம். ஆனால் இப்ப உங்கள் கிட்ட சொல்ல வேண்டியதா போச்சு😃

டேய் முருகேஷ்....😀😀😀என் வம்சம் தழைக்க வச்சிட்ட டா....எப்படியோ நீயாச்சும் ஆம்பள புள்ள பெத்து போடு சக்தி.😀😀😀😀😀

ஹாஹா... அதுக்கென்ன மாமா தாராளமாக 😀😀😀😀நவின் தன் அக்காவிடம் "ஓய் ஊமை குசும்பி என் கிட்டயும் மறைச்சிட்ட ல...இந்த தம்பி வேண்டாதவன் ல"

அப்படி இல்லை டா தம்பி.....ஸ்கேன் முடிஞ்சு சொல்லலாம் னு...என்று சக்தி புன்னகையிக்க நவின் அவளது முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்த்து பூரித்தான். "சரி சரி வாங்க எல்லாரும் வீராவை பார்க்கலாம் என்று சக்தி அழைக்க உள்ளே சென்றனர்.

நவின் வீராவின் குழந்தையை மெல்ல தன் ஆள்காட்டி விரலால் தீண்டினான் . அந்த பொக்கவாய் கொண்டு அது கோட்டாவி விட அதைபார்த்து அனைவரும் சிரிக்க.....நர்ஸ் உள்ள வந்தது "குழந்தைக்கு பால் தரனும் எல்லாம் வெளியே போங்க னு வெளியே அனுப்பி விட்டு வீராவை பால் குடுக்குமாறு அறிவுறுத்த ...அவளோ குழந்தை யை ஏந்தியபடி தனக்கு சுரக்கும் முதல் சீம் பாலை குழந்தைக்கு அளித்தாள்...நர்ஸும் வெளியே வந்துவிட வீரா அந்த அழகான சுகமான உணர்வை மெல்ல ரசித்தபடி குழந்தை யை பார்த்து மகிழ்ந்தாள். மூன்று நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிட வீட்டுக்கு அழைத்து வந்தனர்.ப்ரோகிதரை அழைத்து மூன்றாவது நாள் புன்னியதானம் செய்யப்பட்டு அவளை வீட்டுக்கு அழைத்தனர்.

🐱🐱🐱🐱
சக்தி கர்பமான விஷயம் மற்றும் வீராவுக்கு குழந்தை பிறந்த சந்தோஷம் இதையெல்லாம் வைத்து மதர்தெரசா அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஜாங்கிரி வழங்கினான்.

"என்ன மிஸ்டர் நவின் வழக்கமா சாக்லேட் தருவிங்க இன்னைக்கு ஜாங்கிரி??என்றாள் நர்மதா (ஆதரவற்ற பெண்)

ஹாஹா வீராக்கு குழந்தை பிறந்தது மூனு நாள் முன்னாடி.

ஓ....ஓகே கங்கராட்ஸ் 😁

தாங்க்ஸ்....... ஆமா இந்த கங்கராட்ஸ் நீங்க அவளுக்கு சொல்லனும்.

ஏன் உங்களுக்கு தான் அது சந்தோஷம் அப்பா ஆகியிருக்கிங்க ல...என்றவளை ஏறிட்டு பார்த்து விட்டு கொல் னு சிரித்தான் "ஏங்க வீரா என் மனைவி இல்லைங்க என்னோட ப்ரண்டு ப்ளஸ் எங்க அக்காவோட நாத்தனார்"

ஐயோ... சாரி நவின் ..ச்ச நான் இப்படிதான் எல்லாம் தப்பாவே புரிஞ்சிட்டு பேசிடுறன் சாரி சாரி என்று மூஞ்சியை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல..... அவளையே பார்த்தவன் "இட்ஸ் ஓகே..நோ ப்ராப்ளம்"என்றபடி அப்ப நான் கிளம்புறன் மிஸ்.நர்மதா.

ம்ம்ம்.. 😀பை.

பை...நர்மதா...அ...அப்பறம் ஒரு விஷயம் தப்பா எடுத்துக்கலனா சொல்லவா??😊

சொல்லுங்க.....

அ...அது வந்து உங்க உள்ளாடை பட்டி வெளியே தெரியுது சரி பன்னிக்கோங்க . சாரி இப்படி பட்டுனு சொன்னதுக்கு. இதுல தப்பா நினைக்க ஒன்னுல னு தோனுது..நானும் ஒரு அக்காவோட வளர்ந்தேன் அதனால.....உங்க கிட்ட சட்டுனு சொல்லிட்டேன்.

ம்ம்ம்... சரிங்க நவின். என்று தன் ஆடையை சரிசெய்தவள் "உண்மையில் உன்ன மாதிரி ஆண்கள் இருந்தா பெண்களுக்கு எந்த பிரச்சினை யும் வராது என்று மனதில் நினைத்தவள் அவனிடம் எதுவும் கூறாமல் உள்ளே சென்றாள்.

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro