Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி.19

காதலில் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம்...
...
மயக்கம் என்ன காதல் வாழ்க.என்ற பாடல் லவ் குரு நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆனதை கேட்டு கொண்டிருந்தாள் வீரா...பக்கத்தில் யாருமில்லை .அப்போதெல்லாம் தனுஷ் அருகில் இருப்பான். இப்ப இவளருகில் யாருமில்லை.. பக்கத்தில் இருந்த தலையனை யை வருடியவாறு அவனுக்காக ஏங்கினாள்.

"ஏங்க.....என்னை விட்டு ஏன் போனிங்க ???என்னையும் உங்க கூடவே கூட்டு போயிருக்கலாமே னு அழதுவங்கினாள். அப்போது அவளுடைய அறை கதவை யாரோ தட்ட திறக்க சென்றவள் நவின் பால் டம்பளரோட நிற்பதை கண்டு "என்ன நவின்... இப்ப எதுக்கு எனக்கு இதெல்லாம் வேணாம்.

"உனக்கு வேணாம் ஆனால் உன் வயிற்றில் இருக்கும் புள்ளைக்கு என்று புருவத்தை ஏற்றி புன்னகைத்தான்...

அதை வாங்கி பருகியவள் "அண்ணா அண்ணி தூங்கிடாங்களா??என்று கேற்க "இல்லை ஹால்ல எல்லாம் டீவி பாக்குறாங்க ..பால் டம்பளர் கொடுத்து அனுப்பியது உன் அண்ணி தான்😃
"சரி வா நவின் கொஞ்ச நேரம் இங்க உக்காரு பேசிட்டு இருக்கலாம் என்று அவனை அமற வைத்தாள் .

சொல்லு டி என்ன திடிருனு... என்று அவன் தோள்களை பற்றி அவளிடம் கேற்க "ஒன்னுல டா தனுஷ் நியாபகம் வந்துச்சு அதான் கொஞ்சம் ஃபீல் பன்னேன்...

எனக்கு புரியுது உன்னோட கஷ்டம் பிரெக்னஸ்ஸி டைம் ல புருஷன் கூட இருக்கனும் னு பொன்னுங்க யோசிப்பாங்க...சரி சரி அதெல்லாம் விடு இப்ப உனக்கு ஏழாவது மாசம் ல...எங்க உன் பையன் வயித்துக்குள்ள என்ன செய்றான் பார்ப்போம் என்று அவள் புடவையினுள் வெளிபட்ட அந்த மேடிட்ட வயிற்றை நவின் ஆர்வத்தோடு தொட்டு பார்க்க உள்ள குழந்தை எட்டி உதைப்பதை உணர்ந்தான்."வாவ்..சூப்பர் ஃபீல்" என்ன க்யூட் தெரியுமா...சேன்ஸ இல்லை என்று கையை எடுக்க மனமில்லாமல் குழந்தை யின் அசைவை உணர்ந்து கொண்டிருக்க அவளுக்கோ சங்கடமாக இருந்தது..."நவின்....

ம்ம்ம்... என்ன வீரா.

எனக்கு சங்கடமா இருக்கு டா..கை எடு ப்ளீஸ்.

ஓ...ஓகே..ஐயம் சாரி என்று அப்போது தான் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் கை வைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கையை வெடுக்கென்று எடுத்தான்.சரி வீரா நான் கிளம்புறன் நீ படுத்து தூங்கு குட்நைட்.

குட்நைட் நவின்.

வெளியே வந்து பால் டம்ளர் கிச்சனில் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்று புகுந்து கொண்டான். வீராவின் வாழ்க்கை யை நினைத்து வருந்தினான். பாவம் வீரா இந்த மாதிரி நேரத்தில் தனுஷ் இழந்து நிக்கிறா....ச்ச...என்ன வாழ்க்கை யோ...கடவுள் தான் துணையாக இருக்கனும் என்று புலம்பியவாறு படுத்து உறங்கினான்.

அங்கு அவளும் உறங்க நினைத்தாள் ஆனால் உறக்கம் வரவில்லை. தலையணை யை கட்டிபிடித்து அழுதுகொண்டே இருந்தாள். மறுநாள் காலை பொழுது விடிந்ததே தெரியவில்லை அவளுக்கு "ஹலோ குட் மார்னிங் னு நவின் எழுப்பி அவள் கையில் காபி கோப்பையை நீட்டினான்.

"ஏய் நவின் என்ன டா நீ காபி தயாரித்தாயா....சூப்பர் எங்க டா வீட்டில் யாரும் கானும் எங்க போனாங்க.

கோவிலுக்கு... இன்னைக்கு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் அதான் காலையே கிளம்பி போயாச்சு. வர சாயங்காலம் ஆகும்.

அப்போ நீ போகலையா

இல்லை... உன்னை யார் பாத்துப்பாங்க??அக்கா சாப்பாடு செஞ்சு வச்சிருக்கு மத்தபடி உன்னை பக்கத்தில் இருந்து கவினிக்கனும் அவ்வளவு தான் என் வேலை.😀😀😀இது அக்காவோட ஆர்டர்.

ஓ....இல்லாடி என்னை அம்போனு விட்ருவ அக்கா சொன்னாங்க னு பாத்துக்கற??😊😊அதானே.

அப்படி எல்லாம் இல்லை.. சரி நீ போய் குளியல் போட்டு வா இட்லி எடுத்து வைக்கிறேன் என்றவன் அவளுக்கு இட்லி ஹாட்பாக்ஸை டைனிங் டேபிளில் வைக்க சென்றான். பாத்ரூமுக்கு சென்ற வீரா....சோப்பு தேய்த்து விட்டு குழாவை திருப்ப தண்ணீர் வரவில்லை....."நவின் இங்கே தண்ணீர் வரலை மோட்டார் போடு டா என்று கத்த...ஓடிப்போய் மோட்டார் ஆன் செய்தான். குளித்துவிட்டு ஐயோ டவள் மறந்துட்டன் என்றவளுக்கு டவளை நீட்டினான்...கடைசியில் அவள் தயாராகி வருவதற்குள் அவனுக்கு மூச்சு வாங்கியது.

யம்மாடி ..நீ பன்ற அலும்பல் ஓவர் டி யம்மா முடியல வா...வந்து இட்லி கொட்டிக்க..

ஹலோ ஹலோ நவின் ஊட்டி விடு அப்பதான் சாப்பிடுவேன். என்றவளின் தலையை வருடிவிட்டு பிறகு புன்முறுவலுடன் அவளுக்கு ஊட்டிவிட்டான். எந்த பெண்ணுக்கும் செய்யாத இந்த பணிவிடை இவளுக்காக செய்தான். 😀

பிறகு...டேய் நவின் என் மாத்திரை எடுத்துக்கொண்டு வா டா என்றவள் தன் அறையில் அமர..இவனும் மாத்திரை எடுத்து வந்து தந்தான். மாத்திரை போட்டு..."டேய் நவின் கொஞ்ச நேரம் இங்க உக்காரேன் ப்ளீஸ்....

என்னடி😀என்று அவன் கேட்ட அடுத்தநொடி அவன் தோளில் சாய்ந்தாள்...சாய்ந்தபடி அவளது வயிற்றை தடவிக்கொண்டு இருந்தாள் "நவின்..என் செல்லக்குட்டி க்கு என்ன பேரு டா செலக்டட் பன்ன???😊

ம்ம்ம் பொன்னா இருந்தா "அகல்யா..பையனா இருந்தா அகில்...

என்ன இந்த பேரு ??😊செலக்ட் பன்ன காரணம். ??"இது என்னோட அம்மா பேரு அகல்யா... அதான் அவங்க நியாபகம் வந்துச்சு டி வீரா..."

ஓ....அப்போ உனக்கு பெண் குழந்தை தான் பிடிக்குமா நவின். ??"ஹாஹா.. என்னடி ஏதோ புருஷன் கிட்ட கேக்குற மாதிரி கேக்குற.....🤣🤣🤣

அவள் முகம் வாடியது ...விம்மி விம்மி அழத்துவங்கினாள் அவனால் சமாதானம் செய்ய முடியவில்லை... ஒரு கட்டத்தில் அவளை கட்டி அணைக்க அவளுடைய மனசு லேசானது, அழுகையை நிப்பாட்டினாள்...அவளை நிமிர்த்தி "ஏய் வாலு இதுக்கெல்லாம் அழுவியா?? கிண்டல் தானே டி பன்னேன்."

இங்க பாரு நவின் தனுஷ் இல்லாமல் நானே நொந்து போயிருக்கேன் ,அவரை நியாபகம் படுத்துற மாதிரி அடிக்கடி எதாவது சொன்னா மனசு கஷ்டமா இருக்கிறது.

சரி ....சாரி சாரி 100 தடவை சாரி ஓகே😀

ம்ம்ம்... வேணாம் உன் சாரி....

ஓகே வேற என்ன வேணும்...😃என்று அவன் கேட்டவுடன் "one more huggy pleaseeeee..என்னனு தெரியல நீ சமாதானம் செய்ய கட்டி பிடித்த அந்த நொடி நான் ரொம்ப செக்யூரா (secure) ஃபீல் பன்னேன்.

மறுபடியும் ஒரு புன்முறுவலுடன் அவளை அணைத்து தலையை வருடினான். மேடிட்ட அவளது வயிறு அவன் மேல் இடிக்க "ஓய் செல்லக்குட்டி நீயும் நவின் மாதிரி நல்லபையனா வளரனும் என்று சொல்லியவள் "டேய் நவின்... என்ன நான் சொல்றது சரி தானே????😊

சரிதான்.... இப்ப கொஞ்சம் தள்ளுரியா..உன் வயிறு இருக்க நிலமைக்கு இந்த ஹக் எல்லாம் செட் ஆகாது😀😀😀😀

போடா பன்னி...கிண்டலா...

ஹாஹா.....

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro