பகுதி -18
தயாளா நான் கிளம்புறன் என்று தன் துணிமணி யை எடுத்துக்கொண்டு புறப்பட "டேய் நவின் என்னடா இரண்டு நாள் தங்குறேனு சொல்லி இப்ப ஒரே நாள்ள கிளம்புற என்ன விஷயம்??😊
"ஒன்னுல வீராவுக்கு இன்னைக்கு ஸ்கேன் எடுக்குறாங்க அதான் என்னை கூப்பிட்டா நான் போறேன் டா.
டேய் ஹாஹா நீ என்ன அவ புருஷனா ??,அவ வயித்துல வளர்ர புள்ளைய பார்க்க அம்புட்டு ஆசையா என்று அவனை கேளி செய்தான்.
தயா...இல்லை டா...அவளுக்கு இப்ப இருக்கிற ஒரே ஆதரவு என் நட்பும் என் அக்காவோட தாய் பாசமும் தான். அவ ஆசையா வா னு சொல்றப்ப நான் எப்படி டா போகமா இருக்கமுடியும்.
சரி சரி....எந்த ஆஸ்பிட்டல்ல டா அவளுக்கு செக்கப் போறிங்க??
பக்கத்தில் இருக்கிற ஒரு நர்ஸிங் ஹோம் டா
அட a.k hospital போங்க டா...எங்க அப்பா தான் அங்க chief doctor உங்களுக்கு தேவையான வசதி எல்லாம் செய்து தர சொல்றேன். டெலிவரி எல்லாம் கம்மி கட்டணம் ல பன்னிதர சொல்றன். இன்னொரு விஷயம் அங்க முக்காவாசி நார்மல் டெலிவரி தான் . பணத்துக்காக சிஸேரியன் பன்ற ஆளுங்க இல்லை.ரொம்ப காம்ப்ளிகேடட் தவிர.. என்ன ஓகேவா...???☺️
தாங்க்ஸ் மச்சான்.....இந்த உதவியை என்னால மறக்க முடியாது.
"ஏய் அவ உனக்கு மட்டுமா ப்ரண்டு எனக்கும் தானே டா..இதுல என்ன இருக்கு..... நான் எங்க அப்பாக்கு இப்பவே போன் பன்னி விவரங்களை சொல்லிடுறன்....இன்னைக்கு ஈவ்னிங் ஸ்கேன் டாக்டர் வருவார் நீ இங்கேயே எடுத்துக்கலாம் அவளுக்கு.
ஓ....டன் மச்சான்....
தயாளனின் உதவி இக்காலத்தில் பெரிய உதவி ,வசதி இருந்தாலும் உதவி பன்ற மனசு எத்தனை பேருக்கு வரும். நவின் வீட்டுக்கு செல்ல அங்கு ஸ்கேனுக்கு ரெரடியாகி உக்காந்திருந்தாள் வீரா....ஏ.கே ஆஸ்பிட்டல்ல செக்கப் விஷயத்தை நவின் சொன்ன உடனே வீராவுக்கு ஹேப்பி... அவளுக்கு டெலிவரி பற்றிய பயம் எல்லாம் பறந்து ஓடிருச்சு.
💢💢💢💢💢💢💢
நாட்கள் சென்றன....தயாளன் வீராவை பார்க்க ஒரு நாள் வந்திருந்தான். நலம் விசாரித்துவிட்டு பின்பு சக்தி அக்கா தந்த காப்பியை ரசித்து குடித்தப்படி வீராவிடம் பேசிக்கொண்டு இருந்தான்
"வீரா......
சொல்லு தயாளா....
அன்னைக்கு நவின் எங்க வீட்டுக்கு வந்திருந்தான் என்று பேச்சை இழுக்க அவளோ..ஆமா வந்தான் அதுக்கு என்ன இப்ப😀😀😀
இல்லை... உன்மேல இவ்வளவு பாசமா இருக்கான். நீ வா னு சொன்னா வரான் போ..னு சொன்னா போறான் உங்களுக்குள்ள இவ்வளவு புரிதல் இருக்கும் னு நான் நினைக்கவே இல்லை... காலேஜ் படிக்கிறப்ப உன்னை அவன் லவ் பன்னதா கேள்வி பட்டேன்.... அதுக்கப்புறம் நீ நட்பா பழகுனதை பார்த்துவிட்டு காதலை விட்டுட்டான்...அப்புறம் உனக்கும் தனுஷோட கல்யாணம் ஆகி ..எப்டிஎப்படியோ ஆயிடுச்சு. ம்ம்ம் அது வந்து ......
என்ன சொல்லு டா தயாளா...
இல்லை... நீ...ஏன் நவினை ஏத்துக்க கூடாது ????😊
வாட்???👍
இல்லை அதுவந்து தனுஷ் இல்லை னு ஆயிடுச்சு . எவ்வளவு நாள் நீ இப்படியே வாழ முடியும், உனக்கு வயசு 21 தான் ஆகுது ....
இவன் அடுக்கடுக்காக பேசிட்டே இருக்கிறப்ப முகம் மாறியது. அவளால் பதிலும் சொல்ல முடியவில்லை . வெடுக்கென்று அந்த நாற்காலியில் இருந்து எழ முற்பட்டபோது அவளை உக்கார வைத்தான் தயா..
ஏய் எதாவது தப்பா சொல்லியிருந்தா சாரி ...டி....ஐயம் சாரி.
இல்லை தயா....நீ சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் என்கிட்ட உன் கேள்விக்கு பதில் இல்லை டா...Infact i dono what to say . மறுபடியும் கல்யாணம் பன்னிபேனா தெரியாது. அப்படி பன்னிக்க சூழ்நிலை வந்தா நீ சொல்றதை கன்ஸிடர் பன்றேன்.
இதை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த நவின் தயாளன் சொன்னது உண்மையில் சாத்தியமா என்று யோசித்தான். அப்படி சாத்தியம் என்றால் வீராவுக்கும் அவள் குழந்தைக்கும் வாழ்க்கை தருவதில் எந்த தவறும் இல்லை என்று எண்ணினான்.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro