பகுதி -16
மூவருமாக ஊருக்கு கிளம்பி வந்தடைந்தனர்...வீட்டில் இருந்த சக்தி பதறியபடியே என்ன ஆச்சு என்ன ஆச்சு யாராவது சொல்லுங்கள் என்று கண்ணீர் மல்க கேற்க "அண்ணி.......என் வாழ்க்கை போச்சு அண்ணி ....த...தனுஷ் தவறிட்டாரு "னு கதறி அழுதாள் . துர்க்கம் தாளாமல் தன் அண்ணியை கட்டி அணைத்து அழுதாள். அவளது அண்ணிக்கோ துர்கத்தில் கண்ணீர் கூட வரவில்லை அந்த அளவு மனசு ரணமாகியது. அவளுக்கு சமாதானம் சொல்ல அவளிடம் வார்த்தை இல்லை, இதே துர்க்கம் தான் ஒரு காலத்துல தானும் அனுபவித்தாள்.
சற்று நினைவு வந்தபடி "வீரா...வீரா அழாத மா....நாங்க எல்லாம் இருக்கோம் இங்க பாரு அண்ணி சொல்றதை கேளு வா உள்ள போலாம். என்று அவளை அழைத்து அமரவைத்தாள்...பின்பு அவளரியாமல் வலது கண்ணில் இருதுளி கண்ணீர் வந்து விழுந்தது. இது தான் துர்கத்தின் உட்சக்கட்டம். சில நேரங்களில் அதிக துயரம் அடையும் போது கண் கலங்காது மனசு ஆழமாக கலங்கிவிடும் . இதுவே நம் சக்திக்கும் ,மனம் கலங்கிவிட்டாள் ஆனால் கண்கள் அந்த அளவு கண்ணீர் சிந்த மறுத்தது.
சொந்தங்கள் அனைவரும் சூழ எழவு பாட்டு பாடியபடி அவன் (தனுஷ்) புகைப்படம் க்கு பூக்கள் தூவி அனைவரும் துர்க்கம் அனுசரித்து 16 நாள் காரியம்...அன்று சடங்கு என்ற பெயரில் வீராவை அமர வைத்தனர்.....அப்போது பிரளையமே வெடித்தது...
"என்ன பன்றீங்க ம்ம்ம்... வயிறு புள்ளதார்ச்சி பொன்னை இப்படி கஷ்டபடுத்துரிங்க....சின்ன பொன்னு அவ பாவம்...விடுங்க என்று கத்தி ஆர்ப்பாட்டம் பன்னாள் அண்ணி சக்தி...
ஏய் சக்தி நீ என்ன சும்மா இதுகெல்லாமா கத்துவ என்றாள் ஒரு விதவை கிழவி .
பாட்டி...... அந்த காலத்துல உனக்கு இந்த சடங்கு பன்றப்போ மனசு கலங்கல ????50 வயசு ல புருஷனை இழந்த உனக்கே இன்னைக்கு வரைக்கும் அம்புட்டு துர்க்கம் இருக்கிறப்ப 20 வயசு பொன்னு அவ...அவளை போய் இப்படி சடங்கு அது இதுனு...ச்ச...போங்க எல்லாரும்.
வீரா அருகில் சக்தி சென்றாள் "தாயி...இந்த சடங்கு எல்லாம் உனக்கு வேண்டாம் .....இங்க பாரு அந்த தாலியை கழட்டி கோவில் உண்டியலில் போட்டுரலாம் மற்ற படி எந்த சடங்குகள் வேணாம்...நீ எழுந்துரு தண்ணி குடி .....தன் அண்ணியின் செல்ல மகளானாள் வீரா.
இரண்டு நாட்கள் கழிந்தது... வீராவின் மாமியார் மாமனார் வந்தனர்... வாங்க வாங்க னு அனைவரும் அவர்களை அமரவைத்தனர்.
"நாங்க.. எதுக்கு வந்திருக்கோம் அப்படினா ..எங்க மருமகள நாங்க கூட்டு போகலானு வந்திருக்கோம்...பையன் தான் போயிட்டான் . ஆனால் மருமகளாச்சு ...என்று பேச்சை இழுக்க... கதிர்வேலன் குறுகிட்டார்
"இல்லை என் மகள் என் கூட இருக்கட்டும் அங்க சரிபடாது.....
சக்தி - மாமா...ஒரு நிமிஷம் நான் பேசிக்கிறன்..
"அ...அது வந்து தனுஷ் கூட வாழ்ந்த வீடு அது..அங்க வீரா இருந்தா அவரோட ஞாபகம் அவளை கொல்லும்... வேணாம் ப்ளிஸ்... அவ இங்கேயே... இருக்கட்டும். நீங்க வேணும் னா எங்க கூட இங்கேயே இருங்க உங்கள் சவுகரியம்"
இல்லை சக்தி நாங்க எங்க வீட்ல இருக்கிறோம் ...வீராவை நீங்களே பார்த்துகோங்க ...மாச மாசம் செக்கப் கூட்டிட்டு போங்க.....
ம்ம்ம் .....
அப்ப நாங்க கிளம்பறோம்.
🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
நாட்கள் நகர்ந்தாளும் அவனுடைய நினைவு அவளை விட்டு நகரவில்லை . வயிறு ஒரு பக்கம் . என்ன செய்ய இனி வயிற்றில் வளரும் குழந்தைக்காக வாழ்ந்து ஆகனும். சக்தியின் தாய் பாசத்தினால் சற்று மனமும் உடலும் வீராக்கு தேறியது .....முருகேஷ் மாதா மாதம் அவளை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் செக்கப் கூட்டு செல்வான். இப்படியே அண்ணன் அண்ணி துணையோடு வாழ்க்கை நகர்த்தினாள் வீரா......கதிர்வேலன் மகளின் நிலமையை. எண்ணி வருந்தினார்.
நவின் தன் தோழியின் நிலமையை கண்டு அவ்வப்போது கண்ணிர் சிந்துவான். வீராவை தேற்றும் முயற்சியில் அவர்களது சோகம் மறந்தனர்.
"டேய் நவின் , வீரா வீட்டில் இருந்தால் ஒரு மாதிரி ஆயிடுறா கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போய்ட்டு வாயேன் என்றாள் சக்தி...
"அக்கா....எங்க போறது சொல்லு....??புருஷன் இல்லாமல் தனியா இருக்கிற பொன்னு என்னோட சுத்துனா எல்லாம் தப்பா பேசுவார்கள் ...அதான் யோசிக்கிறன்.
ஹாஹா... நவின் . இந்த சமுதாயத்தை நினைச்சா பயப்படுற???☺️இது ஒரு கேடுகெட்ட உலகம் டா...நல்லதுக்கு காலம்.இல்லை நாக்கு ல நரம்பு இல்லை அதனால் என்ன வேணாலும் பேசலாம் அதுக்காக பேசுறது எல்லாம் உண்மை ஆயிடுமா சொல்லு. இங்க பாரு...அதெல்லாம் ஒன்னுல நீ அவளை தைரியமா அழைச்சிட்டு போ.
ம்ம்ம்..... சரி "வீரா...வரியா வெளியே போலாம்.....
வரேன்...... தனுஷ் இருக்கிற இடத்துக்கு 😢
பளார் என்று முதன் முதலில் தன் தோழியின் கண்ணத்தில் கை பதிந்தது...அறை வாங்கியவள் அவன் தோளில் சாய்ந்தபடி "டேய் நவின்.... என்னால முடியல டா...ப்ளீஸ் புரிஞ்சிக்க...
இங்க பாரு நீ என் கூட வா.....மனசு லேசாகுற மாதிரி ஒரு இடம் கூட்டிட்டு போறேன்....உனக்கு ரொம்ப பிடிக்கும். வா போலாம் என்று அவளை அழைத்து கொண்டு தன் பைக்கில் சென்றான்.
.....
.......இறங்கு வீரா...
அங்கு "மதர் தெரசா அன்பு இல்லம்"னு போட்டு இருந்தது அதை கண்டு அவளுக்கு அது அநாதை இல்லம் என்று புரிந்தது.
வீரா..... வா உள்ள....
நவினை கண்டவுடன் அங்கிருக்கும் குழந்தைகள் அவனை சூழ்ந்து கொண்டது அண்ணா அண்ணா னு .....இதைபார்த்து அவளுக்கு ஆச்சரியம்....
"என்ன வீரா பாக்குற....எனக்கு வேலை கிடைத்த நாளிலிருந்து தினமும் இங்க...மாலை நேரம் வந்து இங்க இருக்கிற குழந்தைகளை சந்திச்சிட்டு அவங்களுக்கு சாக்லேட் வாங்கி தந்துட்டு போவேன்...இதுல எனக்கு ஒரு சின்ன இன்பம்.. இந்த. இன்பத்தை நீயும் அனுபவிக்க கூட்டிட்டு வந்தேன். வா வந்து சாக்லேட் கொடு.
"அக்கா...உன் பேரு என்ன. னு ஒரு குழந்தை கேட்டது....
"வீரா..."
உன் வயித்துல பாப்பா இருக்கா???😊
ம்ம்ம்😀
குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியபடி அவர்களுக்கு சாக்லேட் நீட்டினாள்.
தொடரும்.😃🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro