Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -14

பெங்களூர் செல்ல இருந்த சித்தப்பா சித்தி நவினை சந்தித்து பேசினர் . "நவின் உன் அக்காக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு ல நீ பெசாம நீ எங்களோட வந்து எங்க மகனோட மகனாக நீயும் வந்துடு "என்று கூற

"சித்தப்பா இதை நீ 10 வருஷம் முன்னாடி இதை சொல்லியிருந்தா நான் ரொம்ப சந்தோஷ பட்டுருப்பேன்...இத்தனை வருஷமா நானும் அக்காவும் தனியா வாழ்க்கை நடத்திட்டு இருந்தோம் அப்போ எல்லாம் காட்டாத பாசம் இப்ப மட்டும் ஏன் காட்டுறீங்க???😢 அப்போ லாம் எங்க அக்காவை நீங்க பாரமாக நினைச்சது னால தானே ?????? இப்ப எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அதான் என்னை மட்டும் கூப்பிடுறீங்க அதானே உண்மை. ????சரி அது போகட்டும் எங்க அக்காவோட முதல் புருஷன் இறந்தப்ப உங்களுக்கு சொல்லி அனுப்பினோம்....அப்ப கூட நீங்க யாரும் வரலை......விடுங்கள் சித்தப்பா எனக்கு எல்லா கஷ்டமும் பழகிடுச்சு. இப்ப எங்க அக்காளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சு இனி எனக்கு எந்த கவலையும் இல்லை..... எனக்கும் வேலை கிடைச்சிருச்சு...அ...அ...சித்தப்பா இந்தாங்க இதை கை செலவு க்கு வச்சிக்கோங்க என்று 500ரூபாய் எடுத்து தந்தான் ...செருப்பால் அடித்தமாதிரி...😀
அவர்கள் முகம் வாடியது அதை ஏற்க மறுத்து அவர்கள் ஊருக்கு கிளம்பினர்.
🌸🌸🌸🌸🌸
நாட்கள் உருண்டோடின.....
...
....ட்ராவல்ஸ் நல்ல படியாக செயல்பட ஆரம்பித்தது. ட்ராவல்ஸ் பெயர் வீரா ட்ராவல்ஸ்.  அவன் ஏற்கனவே பேசியபடி ஹனிமூன் அதே காரில் சென்று வரலாம் என்று முடிவு செய்து வீராவை அழைத்து கொண்டு தனுஷ் சென்றான்.

ஹனிமூன் அப்படினா பெருசா எங்கேயும் போகல கொடைக்கானல் தான் போனாங்க. அந்த கொண்டை ஊசி வளைவு ....அவனுக்கு காரை செலுத்த மிகவும் கடினமாக இருந்தது. அதையும் மீறி எப்படியோ செலுத்தினான்.
ஒரு அறை எடுத்து இருவரும் தங்கினர் . சுற்றி இருந்த குனா கேவ் மற்றும் போட்டிங் பார்க் போன்றவற்றை அனுபவித்து அந்த குளு குளு க்ளைமேட் இருவரும் அனுபவித்தனர். தங்களது இன்பமான இரவை இரண்டு நாள் அங்கு கழித்தனர்.

அங்கேயே அவளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது என்னடா இது சாப்பாடு ஒத்துக்கலையோ என்னவோ என்ற பயத்தில் டாக்டரிடம் செல்ல அவள் கர்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி அவனுக்கு. இப்படி ஒரு மகிழ்ச்சி யாருக்கும் கிடைக்காது. ஹனிமூன் வந்த இடத்தில் கர்பமான செய்தி...😁😁😁இருக்காதே பின்ன..போன மாதம் கூடாரத்தில் முதலிரவு கழித்த தற்கு பரிசாக இந்த இன்ப செய்தி😀😀😀😀

போட்டிங் போனார்கள் இருவரும் அதுவும் இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில்...
"ஐ...லவ் ...யூ வீரா ...னு ஆசை தீர கத்தினான். அவளும் பதிலுக்கு "ஐ லவ் யூ டு தனுஷ் மாமா னு கத்தினா....

என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல...இந்த ஹில் ஸ்டேஷன் போயிட்டா மட்டும் எங்க இருந்து தான் லவ் மூடு ரொமான்டிக் மூடு எல்லாம் வருமோ தெரியாது. ஹிஹி....என்று நம்ப தனுஷ் சொல்லி மகிழ அவளோ "என்னங்க நம்ப இங்கேயே இருந்துடலாமா...???😊நீங்க நான் நம்ப குழந்தை மூனு பேரும் சந்தோஷமா ....

ஹாஹா அதுக்கென்ன தாராளமாக இருக்கலாம் ஆனால் கொஞ்ச வருஷம் பொறு.

ம்ம்ம்😁😁😁😁

ஏண்டி இந்த லிஸ்ட் ல எங்க அப்பா அம்மாவை விட்டுட்ட...

போங்க அவங்க எங்க சொந்த வீடை விட்டு வரபோராங்க....

வரேனு சொன்னாலும் நீ வேணாடானு சொல்லிருவ போல...😀😀😀

ஹாஹா.....

இரவு பொழுது அவ்வளவு உட்சாகமாக அவர்களுக்கு கழிந்தது.

இந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்குமா???😢

🐸🐸🐸🐸அடுத்து நம்ப புதுமண தம்பதி முருகேஷ் - சக்தி என்ன செய்றாங்க வாங்க பார்ப்போம்.

"என்னங்க வாங்க டைம் ஆயிடுச்சு ...டேய் நவின் வாயேன் டா சீக்கிரம். மாமா நீங்களும் ரெடி ஆகிட்டிங்களா ???😊எங்க போறாங்க பாக்குறீங்களா😀😀😀 குடும்பத்தோட திருத்தணி க்கு....

ஆமாம் நல்லபடியா கல்யாணம் ஆனால் திருத்தணி வரேனு நம்ப முருகேஷ் க்குவேண்டுதல். அதான் பஸ் பிடித்து குடும்பத்தோட திருத்தணி போறாங்க . "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...."என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்ய அவர்களுக்கு பொழுது இனிதே கழிந்தது.

தொடரும்.....

அடுத்த பகுதியில் ஒரு ஷாக் நியுஸ் ....😃அது என்ன?????? நல்லதா கெட்டதா ????? அடுத்து கதை எப்படி போகும்?? எதாவது தோனுதா உங்களுக்கு😀😀😀

கமெண்ட் பன்னுங்க.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro