பகுதி -13
வெள்ளி கிழமை கேலண்டர் கிழித்து விட்டு தனது திருமண நாள் என்பதை உணர்ந்து சந்தோஷபட்டு குளியலறைக்கு சென்றாள் நன்கு மஞ்சள் தேய்த்து குளித்துவிட்டு முஹூர்த்தம் சேலை அணிந்து... தலை நிறைய பூவுடன் சிம்பிளாவும் அழகாகவும் தயார் ஆகி காரில் தனது தம்பியுடன் வடபழனி கோவிலுக்கு வந்து இறங்க ......மாப்பிள்ளை வீட்டு சார்பில் கதிர்வேலன் வீரா மற்றும் தனுஷ் பிறகு நெருங்கிய உறவினர்கள் இருக்க....பெண் வீட்டு சார்பில் அவளுடைய சித்தப்பா பெங்களூரிலிருந்து புறப்பட்டு கரெக்டா தாலி கட்டும் நேரத்தில் வந்து அடைந்தார்.
"ஐயர்.... மாங்கல்ய தந்துனானேனா மவஜீவன ஏத்துனா...என்ற கல்யாண வைபோகம் மந்திரம் சொல்லி தாலியை சாமி பாதத்தில் வைத்து ஆசிர்வாதம் வாங்கி எடுத்து மாப்பிள்ளை கையில் அதாவது முருகேஷ் கையில் கொடுக்க..... அவனோ அவள் முகத்தை ஏறெடுத்து பார்த்து அவள் சங்கு கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சு போட பின்னால் நாத்தனார் முறையில் வீரா மூன்றாவது முடிச்சியை அவள் போட ....பின்பு மாப்பிள்ளை க்கும் மணப்பெண் க்கும் பட்டம் கட்டி , பிறகு மெட்டி அவன் கையில் கொடுக்கப்பட்டது அதை அவள் பாதவிரலில் அணிவித்து.... அவள் கால்களை முதல் முதலில் தொடும் பாக்கியத்தை அனுபவிக்க. சுற்றி இருக்கும் அணைவரும் பூக்கள் தூவி வாழ்த்த.....மறுமணம் இனிதே நடந்தது.
டோக்கன் கொடுக்கப்பட்டது சிற்றுண்டி சாப்பிட "ஏய் வீரா...சாப்பிட்டு நீ பாட்டுனு புருஷனை கூட்டு கிளம்பகடாத....வந்து வீட்டில் எல்லா ஏற்பாடும் நீ தான் பன்னனும் என்று கதிர்வேலன் சொல்ல..."சரிங்க பா "என்று தலையசிக்க தனுஷ் பக்கத்தில் நின்றவனோ "மாமா ஒன்னும் பிரச்சினை இல்லை நாங்க இரண்டு பேரும் வந்து எல்லா உதவியும் செய்யுறன் நீங்க தைரியமா போங்க"
"சரிங்க மாப்பிள்ளை 😀
ம்ம்ம் மாமா.... நீங்க போய் சாப்பிடுங்க நான் மாப்பிள்ளை பொன்னு அழைச்சிட்டு சாப்பிட வைக்கிறன்.
மாமனார் மருமகன் இவ்வளவு அந்நோன்யமாக பேசுவதை கண்டு இவளுக்கு ஒரே ஆச்சரியம் "என்னடா இது நம்ப அப்பா இவ்வளவு சகஜமாக பேசுறாரு ம்ம்ம் எப்படியோ ஒத்துமை இருந்தா சரி தான்"என்று சந்தோஷபட்டு விட்டு அனைவரும் சாப்பிடார்களா என்பதை கவனிக்க சென்றாள் வீரா.
எதிரே நவின் தென்பட்டான் "நவின் சாப்பிட்டியா ?☺️
ம்ம்ம்.... என்ன கவனிக்க யார் இருக்கா என்று சலிப்புடன் சொல்லிவிட்டு கிளம்ப..."முதல்ல இந்த லூசுக்கு கல்யாணம் பன்னனும் போல....புலம்பி புலம்பி நேரத்தை வீணடிக்கிறான் "😀,
ஏய் வீரா நீயும் வா சாப்பிடு என்று தனுஷ் கூப்பிட அவனருகே அமர்ந்து அவளும் சாப்பிட காலை உணவு வேலை அனைவருக்கும் முடிந்தது. மணமக்களை காரை அலங்காரம் பன்னி அனுப்பி வைத்தனர்.
பின்னாடியே தனுஷ் வீரா பைக்கில் சென்றனர் . கதிர்வேலன் தனது பைக்கில் செல்ல ப்பா வீட்டுக்கு வந்து சேர மணி மதியம் 11.30...
மதிய உணவை அவசர அவசரமாக வீரா செய்து முடித்து முதலில் மணமக்களை அமர வைத்து பரிமாறினாள் இலையில் சிறிது சக்கரை மற்றும் வாழைப்பழம் பிறகு உருளை வருவல் கேரட் பச்சிடி நெய் சோறு , அப்பளம் ,வடை என்று ஏதோ ஒரளவு நன்றாகவே இருந்தது மதிய உணவு😀😀😀😀😀
தனுஷ் - ஏய் பொண்டாட்டி என்னை ஸ்பெஷலா...கவனிக்க மாட்டியா 😀😀
உங்களுக்கு என்ன ஸ்பெஷல் 😀😀😀
எனக்கு நீயே ஸ்பெஷல் தான் டி பொண்டாட்டி ஆனாலும்.....
ப்பா...எனக்கு சமையல் பன்னி டயர்டா இருக்கிறது.. நீங்க வாங்க உக்காருங்க. உங்களுக்கும் அப்பாவுக்கும் நவினுக்கும் சாப்பாடு பறிமாறிடுறன். அ....ஆமாம் நவின் எங்க???☺️
அதானே கோவில்ல இருந்து அவன் காணோமே என்றான் தனுஷ்.
என்னங்க சொல்றீங்க....
ஷ்ஷ் கம்முனு இரு சக்தி அக்கா பதற போது நீ போன் பன்னு வருவான்.
"ஹலோ...நவின் நான் வீரா..
சொல்லு வீரா..
ஏய் எங்கடா போன??
சும்மா அந்த பக்கம் கோவில் ல தான் கொஞ்ச நேரம் உக்காந்தன் இப்ப தான் கிளம்புறன் ...பதறாதிங்க வந்தூடுவேன்.
சரி .....
அ...அப்புறம் சாப்பாடுக்கு வெயிட் பன்ன வேணாம் நான் வந்து பொறுமையா சாப்பிடுவேன் . நீங்க எல்லாரும் சாப்பிடுங்க.
தனுஷ் - வீரா பசிக்குது டி சீக்கிரம் சோறு போடு..
ம்ம்ம்.....
எல்லாரும் சாப்பிட்டார்கள் வீராவை தவிற...தனது நண்பர் நவின் காக வெயிட்டிங் என்ன தான் இருந்தாலும் பாசக்கார நண்பனை விட்டுட முடியுமா அதான் .
அவனும் கதவை தட்டினான் , கதவை திறந்தாள் வீரா "வந்துட்டியா நவின் வா சாப்பிடலாம்...
என்ன சாப்பிடலாமா....ஏய் நீயுமா சாப்பிடல லூசு உனக்கு என்ன சொன்னேன்
இருக்கட்டும் ..ஏன் உனக்கு நான் வெயிட் பன்ன கூடாதா....
ஹாஹா சரி வா எடுத்து வை.
இருவரும் அமர்ந்து சாப்பிட இதை கண்ட தனுஷ் க்கு பொஸஸிவ் தலைக்கு ஏறியது..."உச்சு கொட்டியபடி இடத்தை விட்டு நகர்ந்தான்..."இதை புரிந்து கொண்ட நவின் தட்டை தூக்கி கொண்டு சோப்பாவில் அமர்ந்தான். வீரா கீழே அமர்ந்து உண்டாள்.
"ப்ரோ...தனுஷ் ப்ரோ....
ம்ம்ம் சொல்லி தொலை என்ன
இல்லை... ஏன் இவ்வளவு கோபம்... இங்க பாருங்க தனுஷ்... வீரா என்னோட ப்ரண்டு எங்க அக்காவுக்கு இப்ப நாத்தனார் இதை தவிர எதுவும் இல்லை. ஸோ....ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.
இதெல்லாம் உனக்கு புரியாது நவின் கல்யாணம் ஆனால் தான் புரியும். நீ இப்ப ஈஸியாக சொல்லிடலாம் ஆனால்....
சரி நான் என்ன பன்னனும் வீரா கிட்ட பேசக்கூடாது அதானே??
ச்சி அவ்வளவு கேவலமானவன்.இல்லை நான்... நீ தாராளமாக பேசலாம்....இருந்தாலும் கொஞ்சம் இடைவேளி இருந்தா போதும்.
ஹாஹா புரியுது நான் அவகிட்ட பேசுறன் தனுஷ் ப்ரோ...சரி சாப்பிட்டு முடிச்சுட்டு மார்க்கெட் போகனும் ரோஜா மல்லிகை வாங்க வரிங்களா...
ம்ம்ம் வரேன்..... ஆமா எதுக்கு ??
ஹாஹா ப்ரோ...எல்லாம் மாப்பிள்ளை பொன்னு முதலிரவுக்கு தான்....
ஓ......😀😀😀😀ஆமா ல....வீரா வும் சொல்லிட்டூ இருந்தா அலங்காரம் க்ராண்டா பன்னனும் னு...
ஆமாம் ஆனால் என்னால வாங்க தான் முடியும் ...நீங்களும் வீராவும் தான் அலங்காரம் பன்னனும். நான் கல்யாண ஆகாத கன்னி பையன் அப்புறம் மூட் சேஞ் ஆயிடும்😀
ஹாஹா....
என்ன அங்க குசு குசு - வீரா.
ஒன்னுல வீரா நீ சாப்பிடு - தனுஷ்.
ஏதோ....பேசுற மாதிரி இருந்தது - வீரா
ப்பா டேய் நவின் உன் நண்பி ஏண்டா இப்படி நொய் நொய்யுனு கேள்வி கேக்குறா முடியல என்னால...😀
தெரியலையே ப்ரோ....சரி சரி நான் சாப்பிடாச்சு நீங்க கிளம்புங்க மார்கெட் போயிட்டு வருவோம். இருவரும் மார்கெட் கிளம்ப வீரா கிச்சனை சுத்தம் செய்ய உள்ளே சென்றாள்.
முருகேஷூம் சக்தியும் அவர்களது அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். கதிர்வேலன் தனது அறையில் படுத்து உறங்கினார்.
....நேரம் ஆனது
இரவு 9 இருக்கும் ..மணமக்களை முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர். வீரா எல்லாம் வேலையும் முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்தாள்.தனுஷ் அருகில் வந்து அமர்ந்தான்......அவளையே குரு குருன்னு பார்க்க..."ஏங்க என்ன விழுங்குற மாதிரி பாக்குறிங்க???
எனக்கும் முதலிரவு ஞாபகம் வந்துவிட்டது என்று ஹஸ்கி குரலில் சொல்ல அவளோ கொள் னு சிரித்துவிட்டாள். இதை பார்த்து நவின் "அய்யோ நமக்கு இந்த இடம் செட் ஆகாது மொட்டை மாடியில் படுப்போம் னு பாய் தலக்கானி கொண்டு சென்றான்"
இனிய இரவு மெல்ல கழிந்தது.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro