பாகம் -49
இவன்தாங்க நம்ப சதிஷ் நம்ப அகல்யாவை கல்யாணம் பன்னிக்க போற ஆளு 😂😂
😂பார்க்க அவ்வளவு அம்சமா இருப்பான் . யூ.எஸ் ல இருக்கான் ஆனாலும் நம்ப வீட்டு பழக்கவழக்கங்கள் எல்லாம் தெரிஞ்சவன். டிரஸ் பன்றது மட்டும் கொஞ்சம் மாடர்ன் 😂இதையேன் இப்ப சொல்றேனு கேக்குறிங்களா ஒப்புதாம்பலம் முடிஞ்ச அப்புறம் தான் உரிமையாய் அகல்யாவை மீட் பன்றேனு கண்ணியமா சொன்னவன் கரெக்டா ஒப்புதாம்பலம் முடிஞ்சு ஒரே வாரத்தில் சென்னைக்கு டிக்கெட் போட்டாச்சு அகல்யாவை பார்க்க😊😊😊
வந்தவன் நேராக அவளை பார்க்க வராமல் அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் தர ஏற்பாடு செய்தான். முதலில் வீட்டுக்கு வந்து பெற்றோரை சந்தித்து சிறிது நேரம் கதைத்து விட்டு அகல்யாவுக்கு போன் செய்து "அகல் டார்லிங் உங்கள் வீட்டு கதவை யாரோ தட்டுவாங்க போ. சீக்கிரம் திற என்றவுடன் கதவு தட்டும் சத்தம் கேற்க ஓடிபோய் திறக்க "ஹலோ மேடம் நான் கொரியர் பாய் இந்த பொக்கே உங்களுக்கு குடுக்க சொன்னாங்க "என்று குடுத்துவிட்டு அவன் செல்ல அதை உற்று நோக்கும் போது அந்த பூக்களுக்கு இடையே ஐலவ் யூ என்று எழுதியிருக்க....அதை அசந்து பார்த்து "வாவ் என அவள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க சிறிது நேரத்தில் அவனிடம் மெஸஜ் அவனிடமிருந்து வந்தது மெஸஜ் முழுக்க "லவ் யூ "என்று ஆயிரம் முறை அதில் இருந்தது.பிறகு "மீட் மி அட் பீச் "னு மெஸஜ் வர அவளும் தயாராகி பீச்சை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தாள் ஸ்கூட்டியில் போகும் வழியில் வேணும் என்று பஞ்சர் ஆக்கியதும் அவன் செயல் தான்... பின்னாடியே அவன் வந்து "அகல் டார்லிங் ஸ்கூட்டி என்ன சொல்லுது 😂😂😂??பஞ்சர் பஞ்சர் சொல்லுதா..வா வா என் பைக்கில் ஏறு செல்லம்...
"ஏங்க என்னங்க நீங்க????
நானாங்க ???நான் சதிஷ்ங்க ...😂😂நான் ஒரு பையன் ங்க . ஹாஹா
இந்த நக்கல்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.
ஹாஹா வா வா உக்காரு பைக்ல ஆனால் ஒரு கண்டிஷன் இரண்டு கால் போட்டு உக்காரனும் அப்புறம் இந்த ஹாண்டுபேக் எடுத்து குறுக்க வைக்கிறது எதுவும் இருக்ககூடாது உனக்கு எனக்கு நடுவுல காத்துமட்டும் தான் இருக்கனும். ஓகே😊
ச்சி ரொம்ப தான் உங்களுக்கு . 😂 என்று அவனை செல்லமாக தட்டிவிட்டு பின்னே ஏறி அமர்ந்தாள் .இருவரும் பைக்கில் பறந்தனர் வேகத்தில் அவள் அவன் மீது மோத அவள் நெற்றியில் உள்ள குங்குமம் அவன் சட்டை பின்னே ஒட்டிக்கொண்டது. அவள் வெட்கப்படும் தருணத்தை கண்ணாடியில் ரசித்துக்கொண்டே வந்தான் சதிஷ். பீச் வந்தது இருவரும் இறங்க "அண்ணே பூ வாங்கி தாங்க உங்க ஆளுக்கு "என்று விற்பவள் கூற அதை வாங்கி அகல்யாவுக்கு தர அதை வைத்தவள் நல்லாருக்கா சதிஷ் ??😊என்று கேற்க "கண்ணடிக்க"அதுவே அவனது பதிலாக மாற அன்னைக்கு அகல்யாவுக்கு புது அனுபவமாக மாறியது.
சதிஷ்........
ம்ம்ம் என்னடா இதெல்லாம்??ரொம்ப சர்ப்ரைஸ் 😊
பின்ன சும்மாவா நான் தான் ஒரு ஆண்டியை கட்டிக்க போறேனே...
ஆண்டியா யார்??
ம்ம்ம் அகல்யா ஆண்டி தான்... என்னை விட இரண்டு வயசு மூத்த ஆண்டி ஹாஹா...😂
ஓய் என்ன நக்கலா???
ஹாஹா... ஏன் உண்மை தானே இதுல நக்கலடிக்க என்ன இருக்கிறது. ஆனால் இதுல ஒரு அட்வாண்டேஜ் என்ன தெரியுமா நான் எப்பவுமே யங்ஙா வே இருப்பன். உனக்கு 50 வயசு ஆனாலும் அய்யாவுக்கு 48 தான் ஆகும்😂😂😂😂
ரொம்ப தான் உனக்கு😂
ஹாஹா ..சரி சரி என்னை பற்றி நீ என்ன புரிஞ்சு வச்சிருக்க அகல்யா டார்லிங்😊
அவ என்ன சொல்றா நாளை பார்ப்போம்.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro