பாகம் -46
அகல்யாவின் எண்ண ஓட்டங்கள்
என்னையே விரும்புற சதிஷ் யை கல்யாணம் பன்னிகிறதா இல்லை நான் விரும்புற அரசனை கல்யாணம் பன்னிக்கிறதா எது என் வாழ்க்கை க்கு நல்லது ம்ம்ம் புரியலையே சதிஷ் கிட்ட பேசினது அப்புறம் என்ன முடிவு எடுக்கிறது னு புரியலை....இதை யோசித்து கொண்டிருக்கும்போது சக்தியிடம் இருந்து போன் வந்தது ...
"அ....சொல்லுங்க மாமி என்ன கால் பன்னிருக்கிங்க???
ஒன்னுல அகல்யா நான் நாளைக்கு அரசனை பார்க்க டெல்லி கிளம்பலானு இருக்கேன். டிக்கெட் புக் பன்னிட்டேன் கொஞ்சம் பர்சேசிங் போகனும் வாயேன் துணைக்கு வந்நினா இரண்டு பேரும் ஒன்னா போகலாம். அநன்யா வை கூப்பிட்டா அவ பிஸி னு சொல்லிட்டா அதான்.
ஓ....சரி மாமி வரேன் கிளம்பி தன்னுடைய ஸ்கூட்டியை கிளப்பி செல்ல தனது மாமி யை ஏத்திக்கொண்டு கடைக்கு சென்றாள் "ஏஏன் மாமி அரசனுக்கு பொன்னு பாக்குற ஐடியா இல்லையா என்று அப்பாவி போல கேள்வி கேக்க...."அவனுக்கு ஏண்டிமா பொன்னு பாக்கனும் அநன்யாவை தான் கட்டிவைக்கபோறோம்...ஆமாம் உனக்கு தெரியாதா என்ன???☺️
இல்லை சும்மா தான் கேட்டேன் ஆமா இது நீங்க எப்ப எடுத்த முடிவு????என்றவுடன் "முடிவு னு சொல்ல முடியாது ஒரு ஆசை அவ்வளவு தான்... பல வருஷம் முன்னாடி நர்மதா விளையாட்டா கேட்டா அரசனை என் பொன்னுக்கு கட்டி வைங்க னு ஹாஹா அந்த உந்துதல் தான் இந்த முடிவு..ஆனால் அரசனுக்கு விருப்பமா அநன்யா க்கு விருப்பமா தெரியாது பார்க்கலாம்.
ம்ம்ம்..... மா...மி கடை வந்துருச்சு இறங்குங்க...என்று ஸ்கூட்டியை நிறுத்தி பொருட்கள் வாங்க துவங்கினர் "ஏய் அகல்யா உனக்கு என்ன வேணும் கேளு ??😊பட்டுனு அரசன் தான் வேணும் னு கேட்டுடலாமா 😁😁😁சரி சரி மாமிகிட்ட முதல்ல இரண்டு குர்தா ஆட்டைய போடுவோம்.... மாமி நான் குர்தா வாங்கிக்குறன். நீங்க இந்த சேரிஸ் பாத்துட்டு இருங்க. என்று குர்தாவை தேர்வு செய்ய சென்றாள். திடிருனு யாரோ ஒருவன் அவள் வாயை பொத்தி இழுத்து சென்றான் வெளியே ஒரு காரில் அமர்த்தி வாயை பொத்தி அழைத்து செல்ல அவளால் கத்தக்கூட முடியவில்லை.
"எங்க இவ குர்தா செலக்ட் பன்ன போனவ இன்னும் காணும் அடக்கடவுளே எங்க இவ என்று சக்தி அவளை தேடினாள். அவளுக்காக கடை வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள் .நேரம் ஆனதே தவிற அவள் காணவில்லை. முருகேஷ் க்கு போன் செய்தாள் பதற்றத்துடன் "என்னங்க எனக்கு பயமா இருக்கு அகல்யா வை கூட்டிட்டு ஷாப்பிங் வந்தேன்...அவ திடிருனு காணல எங்கே னு தெரியல எனக்கு பயமா இருக்கு..... வீராவுக்கு தனுஷ்க்கு என்ன பதில் சொல்றது பாவம் என்ன மாதிரி ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கா அவளும்...நான் என்ன ங்க பன்னுவேன்.
வீட்டுக்கு வந்து விஷயத்தை வீராவிடம் சொல்ல வீராவுக்கு மயக்கமே வந்தது தனுஷ் அவளை தேற்றி விட்டு போலிஸ் டேஷனில் கம்ப்ளைண்ட் பன்னிவிட்டு அவரும் தேடும் முயற்சியில் ஈடுபட இரவு 9 ஆகியும் காணவில்லை மறுநாள் டெல்லி செல்லும் ப்ரோக்ராம் கேன்ஸல் செய்தாள் சக்தி . விஷயம் கேள்விபட்டு நவின் நர்மதா அவினாஷ் மற்றும் அநன்யா அனைவரும் வீரா வீட்டுக்கு வந்தனர்.
நர்மதா - அழாத வீரா ப்ளீஸ் உன் பொன்னுக்கு ஒன்னும் ஆகாது ...
அநன்யா - ஆமா ஆண்டி அவளுக்கு ஒன்னுல வந்துருவா பயப்படாதிங்க...
யார் ஆறுதல் கூறினாலும் அவளால் சமாதானம் ஆக முடியவில்லை நவினிடம் நர்மதா "என்னங்க உங்க தோழி நீங்க சொன்னா தான் கேப்பாங்க அதோ கார்டன் ல இருக்கிற சேர் ல உக்கார வச்சு பேசுங்க ப்ளீஸ்...என்றவுடன் வீராவை அழைத்துக்கொண்டு அந்த கார்டன் இல் உக்கார வைத்து அவள் தோளை தட்டி கொடுத்து "வீரா தைரியமா இரு வந்துருவா நம்ப வீட்டு பொன்னுக்கு எல்லா தைரியமும் இருக்கு. அகல்யா கண்டிப்பாக வருவா நல்லபடியா சரியா??ம்ம்ம் கண்ணை துடை ..
"ந....வின் எனக்கு பயமா இருக்கு...என் பொன்னு இப்ப எங்க இருக்கா சாப்பிடாளா கூட தெரியலை....என்று அவள் சிறுபிள்ளை போல விம்மி அழுவதை கண்ட அவனது மனம் கலங்கியது "வீரா...ப்ளிஸ் என்று அவள் கைகளை பற்றினான் பழைய நினைவுகள் எட்டிபார்த்தன முதல் முதல் அகல்யா வீரா வயிற்றில் இருக்கும் போது அதை தடவி பார்த்த ஞாபகம்.. இன்னும் நவின் மனதில் இருக்கின்றன . அகல்யா சீக்கிரமே வந்திடு மா என்று அவனும் கலங்கினான். "ஏங்க உங்களை ஆறுதல் சொல்ல அனுப்பினா வீராவோட சேர்ந்து நீங்களும் அழறிங்க....
என்னால முடியல நர்மதா.... எனக்கே அழுகையை முழுங்கமுடியல தொண்டை அடைக்குது. வீட்டில் உள்ள அனைவருக்கும் சோகம் பூண்டது . சக்தி க்கு குற்றவுணர்வு தான் ஷாப்பிங் கூட்டு சென்றதால் தான் தன்னுடைய நாத்தனார் மகள் அகல்யா காணலை என்ற வருத்தம். சக்தியை அநன்யா தேற்றினாள் "அத்தை விடுங்கள் நீங்க என்ன பன்னுவிங்க பாவம், அவளுக்கு ஒன்னும் ஆகாது வந்துடுவா . சரி உங்க எல்லாருக்கும் காபி போட்டு வரேன். வெறும் வயிற்றில் எவ்வளவு நேரம் இருப்பிங்க என்று எழுந்து கிச்சனுக்கு சென்றாள்.
தொடரும்.
அகல்யாவுக்கு என்ன ஆச்சு பார்ப்போம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro