பாகம் -45
டெல்லியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான் நம்ப அரசன். ஏற்கனவே எம்.பி.பிஎஸ்ஸில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவனாக இருந்தவன் எனவே அவனுக்கு இந்த பிரிவில் நிறைய மதிப்பெண் எடுக்க ஆர்வம் வந்தது பாடம் அனைத்தும் புரிந்துபடித்தான்.
ஒரு நாள் அங்கு ட்ரெயினிங் தந்தனர் பேராசிரியர்கள் அதாவது "பெல்விக் எக்ஸாம்" எப்படி செய்வது என்று அங்கு வரும் மகளிர் நோயாளிகளுக்கு யூட்ரஸ் சம்மந்தமான பிரச்சினை யை சரிபார்க்க. ஒரு ஆண் மருத்துவராக இருக்கும் அவனுக்கு பெண்களின் நோயை கண்டரிந்து சிகிச்சை செய்வது பெரும்சவாலாக இருந்தது ஆனால் ஒவ்வொரு முறை சிகிச்சை செய்யும் போது அங்கு அவன் முன்பு டேபிளில் படுத்திருக்கும் பெண்ணின் முகத்தை பாக்குறப்ப தாயின் முகமே ஞாபகத்தில் வரும்...."அம்மா இவ்வளவு கஷ்டமாமா உங்களை மாதிரி பெண்களுக்கு.... என்று மனதளவில் வருந்துவான்.
படிப்பு நல்ல படியாக போய்க்கொண்டு இருக்க அவனுக்கென நட்பும் கிடைத்தது ஒரு புதிய சூழலில் வாழ பழகிக்கொண்டான். அநன்யா பற்றிய நினைப்புகளும் இல்லை சுத்தமாக சென்னை ஞாபகமே இல்லை. படிப்பு படிப்பு அதைவிட்டால் நோய் கண்டரியும் ஆராய்ச்சி அதைவிட்டால் நட்புகளுடன் ஊர்சுற்றுவது இப்படியே அங்கு காலம் தள்ளினான். நாட்கள் செல்ல செல்ல அங்கு அவனுக்கு ஒரு தோழமை கிடைத்தது அவள் பெயர் நேஹா.....அவள் மருத்தவரா??இல்லை ஆனால் அவளது அறிமுகம் சற்று வித்தியாசமானது அவள் ஒருவரால் காதலித்து கற்பழிக்கப்பட்டவள் ,கற்பழிக்கபட்ட நிலையில் மருத்துவ உதவிக்காக அரசன் இருக்கும் மருத்துவமனைக்கு வந்தவள். அவளது சோக கதையை கேட்ட நாளிலிருந்து அவளுக்கு ஆதரவாக இருக்க நினைத்தான் ஆனால் அந்த ஆதரவு காதலும் இல்லை நட்பும் இல்லை ஒரு சகோதத்துவ முறையிலான ஆதரவு. அவள் அரசனை bhai என்றே ஹிந்தியில் அழைப்பாள்.
ஒருநாள் இருவரும் ரெஸ்டாரன்ட் செல்ல அங்கு அவளிடம் அவள் வாழ்க்கையில் என்னலாம் நடந்தது என்பதை கேட்டான் அதற்கு அவள் "பாய்....எனக்கு அம்மா அப்பா தவிற யாரும் கிடையாது அவங்களும் இறந்துட்டாங்க அதற்கு அப்புறம் தனியாவே இருந்தேன் இந்த நிலையில் தான் அவனை காதலிச்சன்...இந்த காதல் கல்யாணம் வரைக்கும் போகும் னு எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி இல்லை... அவன் ஒரு பொறுக்கி போலருக்கு வெறும் உடல் சந்தோஷத்துக்காக என்னை பயன்படுத்தி சீரழிச்சிட்டான். இனி எனக்குனு யாருமில்லை.
"ஏய் நேஹா நான் இருக்கேன் உனக்கு என்று அவன் தோளில் சாய்த்துக்கொண்டான் அரசன். அன்றுமுதல் முடிவு எடுத்தான் . சீரழிக்கப்பட்ட பெண்களுக்காக மறுவாழ்வு மையம் அமைக்கவேண்டும் என்று. தனது மருத்துவ துறை நண்பர்களுடன் சேர்ந்து நிதி திரட்டி சீரழிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை யும் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவி தொகையும் அளித்து மற்றும் கவுன்சிலிங் தந்து அவர்களை புதுமையான வாழ்க்கை க்கு கொண்டு சென்றான் இதில் நேஹா அவனுக்கு உதவியாக இருந்தாள். இந்த விஷயமாக நேஹாவுடன் அடிக்கடி வெளியே செல்லும் வாய்ப்பு அவ்வப்போது இருக்கும் நிலையில் அவளுடன் செல்பி எடுத்து "டி.பி யில் வைப்பான். இதை பார்த்த அநன்யாவுக்கும் அகல்யாவுக்கும் பத்திட்டு வரும்😁பாவம் அவர்களுக்கு என்ன தெரியும் உண்மையில் அவர்களுக்கிடையே என்ன உறவு என்று.
🌼🌼🌼🌼🌼
அகல்யா ....அகல்யா உனக்கு போன் வந்துருக்கு என்று வீரா கூப்பிட "யாரு மா அரசனா????
இல்லை டி சதிஷ் யூ.எஸ் ல இருந்து பன்றான்
அப்படியா அப்ப நீயே பேசு😁என்றவளை நருக்குனு கிள்ளிய வீரா "அடி வாங்குவ ஒழுங்காக மாப்பிள்ளை கிட்ட பேசு லைன் ல இருக்காரு.
ச்ச இவன் வேற "ஹலோ சொல்லுங்க மிஸ்டர் சதிஷ்...என்றவுடன் ரொம்ப நேரம் போனை வைத்துக்கொண்டு அமைதியாக அவள் குரலை ரசித்தவன் "ஹாய் அக...ல்யா.....
ஹாய் .ரொம்ப நேரமா எதுவும் பேசாமையே இருந்திங்க ஏன்.
ஏன்னா... ஐ லவ் யூர் வாய்ஸ்.....😊😊😊😊ஹாஹா ரொம்ப நாள் கழிச்சு உங்க குரல் அவ்வளவு இனிமையா இருக்கிறது. கேட்டுட்ட இருக்கனும் போல இருக்கு ஆனால் முடியாது எனிவே....எப்படி போகுது லைப்???
லைப்க்கு என்ன சதிஷ் நல்லாவே போகுது...ம்ம்ம் ஆமாம் உங்களை விட நான் பெரியவ னு தெரிஞ்சும் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துடிங்க???என்ற கேள்விக்கு அவன் சொல்லிய பதில் அதிர்ச்சி அளித்தது "மிஸ். அகல்யா சின்ன வயசுல இருந்தே உங்களை பிடிக்கும் அப்புறம் உங்க ப்யுபர்டி பங்கஷன் வந்தப்ப உங்களை பாவடை தாவணி ல பார்த்த அந்த நொடி உங்களை விரும்ப ஆரம்பிச்சன் அப்போ நான் ஒன்பதாம் வகுப்பு தான் அது காதல் னு தெரியல ஒரு க்ரஷ் அவ்வளவு தான் . அப்புறம் நீங்க பி.இ மூன்றாவது வருடம் படிக்கிறப்ப முதல் வருடம் சேர்ந்தேன் . கவுன்சிலிங் ல நல்ல காலேஜ் ல சீட் கிடைச்சும் உங்களுக்காகவே நீங்க படிக்கிற காலேஜ்ல பணம் கட்டி சேர்ந்தேன். ஹாஹா நம்பள விட பெரிய பொன்னை எல்லாரையும் அக்கா னு கூப்பிடும்போது உங்களை மட்டும் கூப்பிடவே தோனாது பிகாஸ் ஐ லவ் யூ. இதை உங்க கிட்ட சொல்லனும் னு நினைக்கிறதுகுள்ள நம்ப வீட்டு பெரியவங்க முந்திக்கொண்டு கல்யாண பேச்சு ஆரம்பிச்சாங்க... இது தாங்க நடந்தது. எனக்கு கல்யாணம் பன்னிக்க ஆசை தான் நீஙக சொல்ற பதில்ல இருக்கு அகல்யா.
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro