Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் -41

இவன் தான் நம்ப சக்தியின் ஒரே புதல்வன் பெயர் அரசன். இப்ப இவனுக்கு 24 வயது ஆகிறது . எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டு இப்ப ஒரு க்ளீனிக் நடத்துறான். Mbbs முடிச்சதே பெரிய விஷயம் இதுல மேல்படிப்பு வாய்ப்பே இல்லை னு வீட்டில் கண்டிப்பாக சொல்லிட்டான் நம்ப பையன்😁😁😁அவங்க மறைந்த தாத்தா கதிர்வேலன் ஞாபகமா "கதிர்வேலன் க்ளினிக்"னு ஆரம்பிக்க தாத்தா ஆசிர்வாதத்துல நல்லபடியா நடக்குது க்ளினிக். இவனுக்கு கைராசி டாக்டர் னு பேரு. இவனை பத்தி நிறைய தெரியனுமா கவலையே படாதிங்க அவனே சொல்லுவான் 😁

இவதாங்க நம்ப வீராவோட ஒரே மகள் அகல்யா ,நம்ப அரசனைவிட ஒரு வயசு மூத்தவள் . இப்ப இவள் ஒரு பி.பி.ஓ ல கஸ்டமர் கேர்ல வேலை செய்யுறா. ஆனால் இவ செய்யுற வேலை தனுஷ் அதாவது இவளோட அப்பாக்கு சுத்தமா பிடிக்கல...சீக்கிரமே கல்யாணம் பன்னிடனும் னு தவியா தவிக்கிறாரு😁

இவதாங்க நம்ப நவினோட மகள் அநன்யா, நல்ல நேர்த்தியான உடலமைப்பு மட்டும் இல்லை நல்ல குணமும் கூட இவளுக்கு இப்ப 23 வயது . பி.எஸ். ஸி (மேக்ஸ்) முடிச்சிட்டு வீட்டில் ட்யூஷன் எடுக்குறா.என்னடா கல்யாண பொன்னு மாதிரி இருக்காளே னு யோசிக்காதிங்க இது ஒரு ப்ரைடல் மேக்கப் போட்டி ல கலந்துட்டப்போ பன்ன அலங்காரம் அதான்😁

சரி வாங்க என்ன கதைனு பார்ப்போம்😁

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
டேய் அரசன் இன்னைக்கு க்ளினிக் போகாத டா நம்ப நவின் மாமா வீட்டு க்ரஹப்ரவேசம் ,நாள் முழுக்க நம்ப அங்க தான் இருக்க போறோம் சொன்னா கேளு அப்புறம் உன் மாமன் நவின் கிட்ட என்னால பதில் சொல்ல முடியாது சாமி என்று சக்தி மகனிடம் கெஞ்ச...."மா..க்ரஹப்ரவேசம் 6,மணிக்கெல்லாம் முடியபோது டிபன் சாப்பிட்டு கிளம்ப போறன் நாள் முழுக்க அங்கயே இருந்து என்ன செய்ய????அதுமட்டுமின்றி க்ளினிக் என்ன வெத்தலை பாக்கு கடையா எப்பவேணாலும் மூடிவிட்டு போக...புரிஞ்சிக்க மா.

என்னமோ போ...உன் மாமி நர்மதா வேற எங்க என் மருமகன் எங்க என் மருமகனு கேள்வி கேட்டு சாகடிக்கும் எல்லாருக்கும் பதில் சொல்றதே என் வேலையா போச்சு.

ஸ்ஸ்...இப்ப என்ன நாள் முழுவதும் அங்க தான் இருக்கனும் அதானே....இருந்து தொலைவோம் அப்பாவ கூப்பிடு கிளம்பலாம் நான் கார் எடுக்குறன் கீழ வந்திடு.

அரசன் ட்ரைவிங் செய்யுறப்ப எப்பவுமே அவனோட அம்மா சக்தி தான் பக்கத்தில் உக்காரனும் னு ஆசைபடுவான் அது ஏன்னு தெரியல ஆனால் அதுல ஒரு சென்டிமென்ட்😁😁"மாம் கம் ப்ரண்டு"

டேய் அப்பா உக்காரட்டுமே டா....என்றவுடன் ஒரு முறை முறைக்க முருகேஷ் எகிரி குதித்து பின்னிருக்கையில் அமர்ந்தார். "நல்ல அம்மா பையன் டா நீ"

ஹாஹா ப்பா நீங்க சும்மா சீன் போடாதிங்க டெய்லி உங்களை லாங் ட்ரைவ் கூட்டுபோறன் ல அப்புறம் என்ன???☺️எனக்கு கல்யாணம் ஆனால் என் மனைவியை கூட இப்படி அழைச்சிட்டு போவேனா னு எனக்கு தெரியாது😁😁😁வரவ என்னை தலை மேல கொட்ட போறா. பேசிட்டே வந்ததுல வீடு வந்ததே தெரியலை. வாசலில் வாழைமரம் கட்டி பன்னிர் ரோஜாக்களின் வாசம் வீச வீட்டு வாசலில் பூக்கோலம் போட்டு ஐயர் மந்திரம் ஓதும் சத்தம் ஒளிக்க ....இவர்கள் உள்ள நுழைந்தனர் நவினும் நர்மதா வும் மனையில் அமர்ந்தனர் என்பதால் இவர்களை அநன்யா வரவேற்றாள் "வாங்க அத்தை வாங்க மாமா...வாங்க அரசுமாம்ஸ் 😁

அவள் காதை திருகியவன் ஏய் வாலு ஏண்டி போன் பன்னாகூட எடுக்க மாட்டேங்குற உன்னைய என்ன பன்ன போறன் பாரு. என்றவனை "மாம்ஸ் நான் என்ன உன்னை மாதிரி க்ளினிக் ல ஈஈஈஈ ஓட்டுறனா ட்யூஷன் எடுக்குறன் ரொம்ப பிஸியாக்கும்.என்று அவள் நக்கலடிக்க இதை அகல்யா பார்த்து கொண்டு இருந்தாள் இவளுக்கு அரசன் மீது ஒரு கன்னு வயதில் ஒரு வருடமே மூத்தவள் என்பதால் அரசன் மீது இவளுக்கும்  முறைமாமன் என்ற ஓர் நெருக்கம் .

ஹாய் அரசன் ...என்று கட்டியணைத்து வரவேற்றாள் அகல்யா அவளை விலக்கிவிட்டு "ப்பா இந்த நாத்தம் புடிச்ச சென்ட் தயவு செஞ்சு போடாத தாயே.....மூக்குக்கு அடிக்குது"என்று அரசன் அவளிடம் நக்கல்பன்ன சரி சரி உனக்கு புடிச்ச ப்ளேவர் என்ன சொல்லு அதையே வாங்கிக்கிறன் என்றவளை "ஹலோ லேடிஸ் செக்ஷன் க்கும் எனக்கு எந்த சம்மந்தம் இல்லை"என்று அவன் விரட்ட சக்தி அவன் காதை திருகி "டேய் மகனே வந்த வேலையை மட்டும் பாரு போதும் அதிகபிரசங்கி வேலை எதும் வேணாம் புரிஞ்சிதா "😁😁😁அதற்கு வீரா "அண்ணி  விடுங்க பராவாயில்லை நம்ப அரசன் தானே அவன் உரிமையை அத்தை பொன்னு மாமா பொன்னு கிட்டதானே காட்ட முடியும்.

அதுசரி தான் வந்திருக்கிற ஜனம் என்ன நினைக்கும் என்று காதில் கிசுகிசுக்க ஐயர் மந்திரம் ஓதி முடித்தவுடன் டிபன் பரிமாறபட்டது. தயாளன் -சத்யா தம்பதியும் அமர்ந்திருக்க "என்ன சத்யா உன் மகனை அழைச்சிட்டு வரலையா என்று வீரா கேற்க ",இல்லைடி வீரா அவன் வேலைக்கு போயிருக்கான் அ...அப்பறம் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்.

என்னடி சத்யா???

அதுவந்து என் மகன் உன் மகளை விட ஒரு இரண்டு வயசு  சின்னவன் அவ்வளவு தான் . அகல்யா பிறந்ததுல இருந்து எனக்கு மகன் பிறந்தா அவளை இவனுக்கு கட்டி வைக்கனும் னு ஆசைப்பட்டேன் . உன் மக அகல்யா கண்ணுக்கு லட்சனமா இருக்கா...நீ என்ன சொல்லவர

ச...சத்யா ஒரு வயசு வித்தியாசமான அரசனுக்கே அகல்யா வை தரக்கூடாது னு நான் நினைக்கிறேன் அப்படி இருக்கிறப்ப இரண்டு வயசு வித்தியாசம்லா வாய்ப்பு இல்லை . அது நல்லா இருக்காது டி ....என்றவுடன் தயாளன் "ஏன் நல்லாருக்காது மா...இரண்டு வயசு எல்லாம் ஒரு விஷயமா சொல்லு...அந்த காலத்துல விண்ணைதாண்டி வருவாயா படத்துல எல்லாம் நம்ப பாத்துருக்கோமே 😁😁😁

அப்படி இல்லை தனுஷ்க்கு தெரிஞ்சா என்ன சொல்வாறு தெரியாது அதான் யோசிக்கிறேன். ஆமா நீங்க ஏன் அநன்யா வை கேக்ககூடாது அவளும் உங்க மகன் சதிஷ் இரண்டு பேருக்கும் ஒரே வயசு தானே. ???😊

ஹாஹா.... அநன்யா ரொம்ப ட்ரேடிஷனல் ,என் மகன் சதிஷ் கொஞ்சம் மார்டன் அதுக்கு தான் டி வீரா உன் மகள் அகல்யாவை கேக்குறேன். என் மகன் அமெரிக்க ல இருக்காப்ல...ஒரு ஐ.டி நிறுவனம் ல கைநிறைய சம்பாதிக்கிறான் நீ ஏண்டி இவ்வளவு யோசிக்கிற ??? சரி தனுஷ் அண்ணே கிட்ட கேட்டு சொல்லு.

(குழம்பி போனாள் வீரா. )

தொடரும்.

எப்படி இருக்கு இந்த ஆரம்பம். சொல்லுங்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro