Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வெறுப்பும் கவலையும்

தன் நினைவுகளில் மூழ்கியிருந்த ஆதித்யனை தூரத்தில் கேட்ட அழுகுரல்  சுய உணர்வு கொள்ளச்செய்தது. அவன் அமர்ந்திருந்த மருத்துவமனை வளாகம் மெல்ல மெல்ல உணவகமாக மாற தான் இருக்கும் நிலையை உணர அவனுக்கு ஒரு முழு நிமிட நேரம் தேவையானதாக இருந்தது.

தன் எதிரே தன்னை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த தன் நண்பனை பார்த்தவன் அவனது ஊடுருவும் விழியை சந்திக்க தைரியம் இல்லாமல் சுற்றுபுறம் நோக்கினான்.

அங்கு அமர்ந்திருந்த அனைவரும் தத்தமது உணவில் மூழ்கியிருக்க ஆதித்யன் அமர்ந்திருந்த மேஜையில் மட்டும் உணவு தீண்டப்படாமல் இருந்தது.

" ஏன் மச்சான் சாப்பிடாம என்னையே பார்த்திட்டு இருக்குற ? நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?" நிலைமையை சீராக்கும் பொருட்டு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் கேட்ட ஆதித்யனை ஒரு பெருமூச்சுடன் நோக்கிய ஜீவா எதுவும் கூறாமல் தனது உணவை உண்ண துவங்கினான்.

தன் முன்னே இருந்த உணவினை வேண்டா வெறுப்பாக உண்ண துவங்கிய ஆதித்யன் பின்பு வேக வேகமாக உண்ண துவங்கினான். அவன் தட்டை நிமிடத்திற்குள் காலி செய்ததை வைத்தே அவனது பசியின் அளவை உணர்ந்து கொண்ட ஜீவா அவனுக்கு மேலும்  உணவினை தருவித்தான். அதையும் நிமிடத்திற்குள் காலி செய்தவன் தன் நண்பனை பார்த்தவன்,"ஈ....ஈ....நல்ல பசி மச்சான் அதான் ஆமா நீ சாப்டியா??" என்று வினவ அவனிடம்  எதுவும் கூறாமல் எழுந்து கைகழுவ சென்றான் ஜீவா.

நண்பனின் இந்த புதிய பரினாமம் ஆதித்யனை வியப்படைய செய்ய அமைதியாக ஜீவாவை பின்தொடர்ந்து ஹோட்டலை விட்டு வெளியே வந்தவன் ஜீவாவின் முன்னே சென்று  ," டேய் ஏன்டா நீயும் என்னை வதைக்கிற?"அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்னு நீ இவளோ கோபமா அதுவும் என் கூட பேசாம இருக்க??" ஆற்றாயையுடன் வெளிவந்தது ஆதியின் குரல்.

ஆதியை கண்டுகொள்ளாமல் அவனை கடந்து சென்ற ஜீவா தன் பைக்கை ஸ்டார்ட் செய்து ஆதிக்காக காத்திருக்க , வேறு வழியில்லாத நிலையில் ஆதி அவன் பின்னே சென்று அமர்ந்து கொண்டான்.

நண்பர்கள் இடையே நிலவும் நட்பானது காதலையும் தாண்டிய சக்தி.தன் நண்பனின் மௌனம் ஆதியை கோழையாக மாற்ற துவங்கிய வேளை ," கீழே இறங்குற எண்ணம் இல்லையா?"என்று ஜீவாவின் குரல் கேட்க ஆயிரம் யானை பலம் வந்த உணர்வுடன் சிரித்துக்கொண்டே கீழே இறங்கினான்.

" ஹே....என் ஜீவா என்கிட்ட பேசிட்டான்," என்று சிறுகுழந்தை போல கூக்குரலிட்ட ஆதியை பார்த்த ஜீவா பழ வருடங்களாக தொலைந்துபோனவன் திரும்பி கிடைத்த சந்தோஷத்தில் அவனை அணைத்துக்கொண்டான்.

" அப்பாடா ஒரு வழியா உன்னை சமாதானம் படுத்தியாச்சு," என்று கூறி நாக்கை கடித்துக்கொண்டனை பார்த்த ஜீவா மேலும் சிரிக்க அதுவரை இருவருக்கும் இடையே நிலவிய சிறு ஊடல் அந்த சிரிப்பினூடே சிதறி கீழே விழுந்தது.

" ஆதி எனக்கு தெரியாம எதையோ நீ மறைக்கிறனு புரியுது ஆனால் ஏன்னு நீ சொன்னாதான் தெரியும் . "

" ம்...உன்கிட்ட இதுக்குமேலயும் என்னால மறைக்க முடியாது ஆனால் அதை சொன்னா நீ என்னை வெறுக்க கூட செய்யலாம், அதை ஒரு உணர்ச்சி வேகத்தில எடுத்த தப்பான முடிவா இல்லை சரியான முடிவானு இன்னைக்கு வரைக்கும் கூட எனக்கு தெரியலை," என்று பலமான பீடிகையுடன் தன் வாழ்க்கையில் ஜீவாவிற்கு தெரியாத பக்கங்களை வெளிப்படுத்தினான் ஆதித்யன்.

அவன் கூற கூற ஆதியின் மேலிருந்த நல்லெண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு ஆக்கிரமிக்க துவங்கியது.

***********
மருத்துவமனை

அங்கே நிலவிய அசாதாரண சூழலை சரிசெய்யும் விதமாக தோன்றிய செவிலிப்பெண்,"இங்கே ஏன் இவ்ளோ கூட்டம் போடறீங்க மணி எட்டாகிடுச்சு விசிடிங் அவர்ஸ் முடிஞ்சிடுச்சு ஒருத்தர் மட்டும் இருந்துட்டு மத்தவங்க எல்லோரும் கிளம்பலாம்,"என்று கண்டிப்புடன் கூற மதுமிதாவின் தந்தை ," நான் மதியை கூட்டிட்டு கிளம்பறேன் நீ மதுவை பத்திரமா பாத்துக்க ஏதாவதுனா எனக்கு கால் பண்ணு," என்று தன் மனைவியிடம் விடைபெற்றுவிட்டு மதுமிதாவிடம் வந்தார்.

" மதுமா நடந்தது எதையும் போட்டு குழப்பிக்காம எதையும் யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடு நான் காலையில வந்து உன்னை பார்க்குறேன்," என்று கூறி தன் இளைய மகள் மதியை தன்னுடன் அழைத்துச்சென்றார்.

அவர் சென்றபின் மதுமிதாவிடம் வந்த அந்த செவிலியர் அவளுக்கான உணவினையும் சில மருந்துகளையும் உண்ண செய்தார்.அவர் கொடுத்தவற்றை இயந்திரம் போல் உட்கொண்ட மதுமிதா தன் நிலையை யோசிக்க முயன்றாள்.

அன்று காலையிலிருந்து ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகவோ செவிலியர் கொடுத்த மருந்தின்  தன்மையினாலோ கண்கள் மூடியவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

அவள் உறங்குவதற்கென காத்திருந்தது போல மதுவின் தாயாரின் செல்பேசி ஒலிக்கத் துவங்கியது.அதில் மின்னிய தன் கணவரின் பெயரை கண்டவர் குழப்பத்துடன் காதில் வைத்து," சொல்லுங்க வீட்டுக்கு போய்டீங்களா??"

" இன்னும் இல்லை வெளியதான் நிக்குறோம், சரி மது உன்கிட்ட என்ன சொல்லிட்டு கிளம்புனா??"

" ப்ரெண்டோட கல்யாணத்துக்கு போறதா சொன்னாங்க, நான் அவளை நம்ம டிரைவர அனுப்புறதா சொன்னதுக்கு அவ ப்ரெண்ட்ஸெல்லாம் சேர்ந்து போறோம்னு மறுத்துட்டா , நானும் இந்த ஒரு தடவை தான்னு விட்டைன்ங்க," குரலில் அழுகை எட்டிபார்க்க பதறியவர்," ஏன்மா அழற?"

" இதெல்லாம் என் தப்பு தான் நான்தான் அவளை அனுப்பி வெச்சேன் ," என்று கூறி மேலும் வேடித்தார்.

" ச்....தைரியத்தை இழக்களாமா உன்னால எதுவும் நடக்கலை . நடக்கனும்னு இருக்குறதை நடக்க வைக்க நீ ஒரு கருவி அவ்ளோதான்.மனச போட்டு குழப்பிக்காம இரு மதுவோட ப்ரெண்ட்ஸ் போன் நம்பர் எனக்கு சென்ட்பண்ணு தேவைபட்டா நான் போலீஸீக்கும் போக வேண்டி இருக்கும்." என்று அவர் கூறியதை கேட்டு ," ஏன்ங்க போலீஸெல்லாம் வேண்டாம்.வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்,"

" நீ எதை  மனசுல வைச்சிட்டு சொல்றனு எனக்கு புரியுது, ஆனால் கவலை படாத நான் பார்த்துக்கிறேன், எனக்கு வேற வழி தெரியலை மதுவோட நிலை ரொம்ப கஷ்டமா இருக்கு.டாக்டர் நாளைக்கு அவளை வீட்டுக்கு கூட்டிபோக சொல்லிட்டாரு.அது இன்னும் பிரச்சினை. " என்று அவர் கூற ,"என்னங்க செல்றீங்க?? நாளைக்கேவா?"என்று பதறினார் மதுமிதாவின் தாயார்.

" நாளைக்கே கூட்டிட்டு போனா இன்னும் நிறைய பிரச்சனை வருமேங்க ,ஒரு இரண்டு நாள் மதுவை இங்கேயே இருக்க வைக்க முடியாதா?"

"புரியாம பேசாதமா எத்தனை நாள் ஆனாலும் வீட்டுக்கு போயிதானே ஆகனும் , அது ஏன் நாளைக்கே செய்ய கூடாதுனு தான் நான் சரினு சொல்லிட்டேன்.சரி நீ மதுவை பாத்துக்க நான் காலையில  டிஸ்சார்ஜ் பண்ண வரேன் , மறக்காம மது ப்ரெண்ட்ஸ் நம்பர் எனக்கு அனுப்பு," என்று கூறியவர் காலை கட் செய்தார்.மதுவின் தாயாரோ நாளை வெடிக்க இருக்கும் பூகம்பத்தை நினைத்து இன்றே கவலை கொள்ள துவங்கினார்.

மருத்துவமனையிவிருக்கும் தங்கள் குழந்தை விரைவாக நலம் பெற்று இல்லம் செல்ல வேண்டும் எஅறு நினைக்கும் பெற்றோரின் மத்தியில் இந்த பெற்றோர் ஏன் கலங்குகின்றனர்??மதுவின் வாழ்க்கையில் தெரியாத பக்கங்கள் என்ன??ஆதியை வெறுக்க வைக்கும் அளவிற்கு  அவன் செய்த குற்றம் என்ன??அடுத்த அடுத்த அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம் தோழர்களே.......





















Bạn đang đọc truyện trên: Truyen247.Pro