Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பதவியேற்பு

அந்த பெரிய கான்பிரென்ஸ் ஹால் முழுவதிலும் அந்த அலுவலக ஊழியர்கள் வந்தமர்ந்த வண்ணமிருந்தனர் அதன் பொருட்டு எழுந்த சத்தத்தை தவிர வேறு சத்தங்கள் அங்கே எழாமல் அமைதியாகவே இருந்தது.

அனைத்து கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களும் அங்கே குழுமியிருந்தனர்.முதல் வரிசையின் நாற்காலிகளில் கிளைகளின் ஜி.எம் கள் அமர்ந்திருக்க அவர்களுள் அமைதியாக ஒருஓரத்தில் விக்ரம் அமர்ந்திருந்தான்.அங்கே நடப்பவைகளை அமைதியுடனும் ஆராய்ச்சியுடனும் பார்த்தான்.அவனது ஆராய்ச்சி யை கலைக்கும் வகையில் அவன் அருகே வந்தமர்ந்த ஒருவர் அவனுடன் பேச தொடங்கினார்.

" நீங்கதான் டிசைன்ஸ் டிபார்ட்மென்ட் க்கு புதுசா வந்திருக்கிற ஜி.எம் மா?"

" ஆமா சார் ஐ அம் விக்ரம்??|என்று புன்னகையுடன் கை நீட்ட ," ஹாய் விக்ரம் ஐ அம் நரசிம்மன், க்ளாட் டு மீட் யூ,"( I'm narasimhan glad to meet you,"),இவ்வாறு அறிமுகம் செய்து கொண்டவர் நாற்பதுகளில் இருந்தார்.லேசாக நரைக்க தொடங்கியிருக்கும் முடி கண்களில் கோல்டன் ப்ரேம் தீர்கமான பார்வைபோன்றவைகள் அவரை மரியாதையுடனே பார்க்க செய்தது.

"இட்ஸ் மை ப்ளெஷர் சார்(it's my pleasure sir),"என்ற விக்ரமன் அடுத்து என்ன.பேசுவது என்று தெரியாமல் இருக்கும் வேளையில் அந்த அறையில் சலசலப்பு கேட்டது , சிலர் அங்கு முன்வரிசையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமருவது தெரிய நரசிம்மனை மறந்தவனாக அங்கே கவனிக்க துவங்கினான்.

கூர் பார்வையுடன் தன் வயதிற்கு சற்றும் பொருந்தாத நிமிர் நடையுடனும் தன் அறுபதுகளில் ஒரு.பெண் உள்ளே நுழைய.அவரை பின் தொடர்ந்து சிலர் நுழைந்தனர் ஆனால் விகர்மின் பார்வையோ அந்த வயதான பெண்மணியையே சுற்றி இருந்தது. அவரை இதற்கு முன் எங்கோ பார்த்த நினைவு இருந்தாலும் எங்கே என்பதை குறித்த ஆராய்ச்சி அவனின்.பார்வையில் இருந்தது.அதை கவனித்த நரசிம்மன்," அவங்க தான் இந்த A.K. HOMES ஓட. K. அதாவது திருமதி.கற்பகதேவி... நம்ம எல்லா ப்ரான்செஸோட சேர்மன்," என்று கூறனார்.

" ஆமா நான் கேள்விபட்டிருங்கேன் பட் பார்ததது இல்லை,"

" இப்ப இந்த மீட்டிங் எதுக்கு அதுவும் இவ்ளோ அவசரமா? என்று வினவிய விக்ரமை ஆச்சரிய பார்வை பார்த்தவர்," உங்களுக்கு தெரியாதா ஆறு மாசம் முன்னாடி வரை இவங்கதான் சேர்மன் அன்ட் எம்.டி. ஆறு மாசத்துக்கு முன்னாடி ," என்று அவர் கூறிக்கொண்டிருக்கையில்," குட் நூன்...ஆல்..."என்ற சத்தம் அவர்கள் முன்பு போடப்பட்டிருந்த மேடையில் இருந்து கேட்கத்துவங்கியது.

( தமிழகத்திற்கு வெளியே உள்ள அலுவலகம் என்பதாலும் அதில் பிற மாநிலத்தவரும் வேலை செய்வதாலும் அங்கே ஆங்கிலமே பிரதான மொழி...ஆனால் நான் இங்கு அதை நம் மொழியில் கூறுகிறேன்)

"குட் நூன் ஆல்....,நான் இந்த அலுவலத்தோட அட்வைஸர் மிஸ்டர்.ரெட்டி. நமது சேர்மன் திருமதி கற்பகதேவி எடுத்த சில அதிரடி முடிவுகளை உங்களிடம் கூறுவதற்காகவே இந்த அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அலுவலகத்தின்அட்வைஸர் என்ற முறையில் அவர்களின் முடிவு சரியாதென்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.," என்று கூறியவாறு மைகை திருமதி.கற்பகதேவியிடம் ஒப்படைத்தார்."

" வணக்கம்... நானும் என் கணவர் திரு.அருணாசலமும் இந்த A.K.HOMES நிறுவனத்தை முப்பது வருடத்திற்கு முன் கட்டிடம் கட்டும் நிறுவனமாகவே தொடங்கினோம். அதை இந்த முப்பது வருடத்தில் மல்டி டாஸ்க்(multi task)செய்யும் நிறுவனமாக மாற்றியது எங்களின் மூளைகளும் கடின உழைப்பும் மட்டுமே.என் கணவர் இருந்தவரை எம்.டியாக நானும் சேர்மனாக அவரும் செயல்பட்டோம்.அவரது மறைவுக்குபிறகு கடந்த இருபத்தைந்து வருடங்களாக இரு பொறுப்புகளையும் நானே கவனித்துக்கொண்டிருந்தேன் .இனி என் பதவியை அடுத்து வரும் சந்ததியினருக்கு பங்களிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.என் பேத்தி கடந்த ஆறு மாத காலமாக ஆக்டிங்(acting) எம்.டி.யாக இங்கே பணியாற்றியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.அவர் இனி A.K.HOMES இன் அத்தனை கிளைகளிற்கும் எம்.டி யாக செயல் படுவார்.இதை நான் அதிகார பூர்வமாக இங்கே அறிவிக்கிறேன். அலுவலகம் சம்மந்தமாக அவர் எடுக்கும் முடிவுகளே இனி இறுதியானது. "என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்," மேலும் எனது பேரன் கூடுதலாக என் பேத்தியை கைட் செய்யவும் பக்கபலமாக இருக்கவும் அவரை இந்த நிறுவனத்தின் ஆக்டிங் சேர்மனாக இன்று முதல் நியமிக்கிறேன்."என்று அவர் கூறி முடிக்கவும் கதவை திறந்து கொண்டு இருவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அதுவரை கற்பகதேவி கூறியதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த விக்ரமன் மனதிலோ அவர் பேச்சில், என் கடின உழைப்பு, என் மூளை, என் பேத்தி, என் பேரன் போன்ற வார்த்தைகளால் ஆணவம் மட்டுமே தெரிய முகம் சுளித்தான். அவனது எண்ணத்தையும் தடை செய்தது அந்த இருவரின் வரவு.அவர்களை அறிந்து கொள்ள அவன் ஆர்வம் காட்டாது தனது செல்பேசியை நோக்கிக்கொண்டிருந்தான்.

" என்ன விக்ரம் சார் நம்ம சேர்மனோட பேச்சை கேட்டு ஆஃப் ஆகிடீங்களா?"

" ஹா..ஹா...அப்படியெல்லாம் இல்லை சார், தன்னோட பதவியை அடுத்த தலைமுறைக்கு கொடுக்குறது எல்லா இடத்திலயும் நடக்குற விஷயம் தானே புதுசா ஒனானுமில்லையே னு தோனுச்சு அவ்ளோதான்," பட்டும்படாமலும் பேசியவன் மீண்டும் செல்பேசியில் கவனமானான்.

அங்கே அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் மனமும் உள்ளே நுழைந்தவர்களை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்தன.மேடையில் பேசிக்கொண்டிருந்த கற்பகதேவியோ கண்களில் பெருமிதம் வழிய இருவரையும் பார்தார்.

அவர்கள் இருவரும் தங்கள் பாட்டியின் கண்ணசைப்பில் மேடை ஏறி அவரின் அருகே நிற்க , கருப்பு நிற ஜீன்ஸ் லைட் பிங்க் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸுடன் ஃப்ரீ ஹார் ஸ்டைலுடன் இன்றைய ஃபேஷனான பெரிய வலையங்கள் காதுகளை அலங்கரிக்க நின்றிருந்த பெண்ணை தன் பக்கம் அழைத்தார் கற்பகதேவி.

" திஸ் இஸ் மை க்ரான்ட் டாட்டர் மிஸ் மதுமிதா....யுவர் நியூ மேனேஜிங் டைரெக்டர்(This is my grand daughter Miss. Madhumitha.Ur new managing director.)"

மதுமிதா என்ற பெயரை கேட்டதும் தீ சுட்டார் போல செல்லில் இருந்து தலையை உயர்த்திய விக்ரம் தன் பார்வையை அப்பெண் மீது செலுத்தினான்.தனது பாட்டியின் அருகே மாடர்ன் மங்கையென நின்றிருந்த பெண்ணின் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை.அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்தவன் அவளின் கழுத்தில் எதையோ தேடினான்.தான் தேடியது கிடைத்த சந்தோஷத்தில் ஒருவித குரூர திருப்தி ஏற்பட கால் மேல் கால் போட்டுக்கொண்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து மேடையை கவனிக்கலானான் விக்ரமாதித்தன்.
இதுவரை சுவாரஸ்யமில்லாமல் சென்று கொண்டிருந்த நிகழ்வு ஒரு நொடிக்குள் மாறிவிடும் என்பதை உணர்ந்து கொண்டவன் மனதில் வன்மம் உருவானது.அது அவன் கண்களிலும் வெளிப்பட்டது.

அந்த கான்ஃபிரன்ஸ் அறையினுள் நுழைந்தது முதலே பார்வையில் ஒரு.வித அலட்சியத்துடன் தனது பாட்டியின் அருகே நின்றிருந்த மதுமிதா தன் பெயரை குறிப்பிடவும் மனதில் குற்ற உணர்ச்சி எழுந்து அவளை மேலும் பேசவிடாமல் செய்தது.இவை அனைத்தும் ஒரிரு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட மதுமிதாவை கோபப்பட செய்யும் அடுத்த அஸ்திரத்தை அவளது பாட்டி தொடங்கினார்.

" அன்ட் திஸ் இஸ் மை கிரான்ட் சன் ஆனந்த கிருஷ்ணன்.... மதுமிதா'ஸ் ஃபியான்ஸி( And this is my grandson Mr.Anatha krishnan, madhumitha's fiancee), "என்ற கூறவும் அந்த அரங்கில் இருந்த அனைவருக்கும் அது புதிய செய்தி யாதலால் தமக்குள் கிசுகிசுக்க தொடங்கினர்.அந்த இடைவெளகயை பயன்படுத்திய ஆனந்த் மதுமிதாவின் இடையில் கையை போட்டு தன்னை அனைத்தவாறு நிறுத்திக்கொண்டான்.தனது பாட்டியின் அறிவுப்பை மற்றும் அறிமுகம் ஆகியவற்றை கேட்டு குழம்பி இருந்த வேளையில் ஆனந்த் இப்படி செய்துவிட யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனது ஹை ஹீல்ஸ் காலை அவனது கால் மீது நசுக்கினாள்.

அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்த ஆனந்தனோ அவனது கைகளை நீக்கிவிட்டு தள்ளி நின்றுகொண்டான்.மேடையில் நடந்தவைகளை கீழிருந்த பார்த்துக்கொண்டிருந்த விக்ரமின் கண்களில் அதுவரை இருந்த வன்மம் விலகி காதல் குடிகொண்டது.மதுமிதாவை காதல் பார்வை பார்க்க தொடங்கினான் விக்ரம்.

தன் அத்தை மகனின் காலை மிதித்துவிட்டு அவன் வலியில் துடிப்பதை சந்தோஷத்துடன் பார்த்த மதுமிதா தன் பார்வையை அந்த கூட்டத்திற்குள் செலுத்தினாள்.முதலில் அவள் கண்ணில் பட்டது காதலுடன் அவளை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமனையே......அவனை இதற்கு முன் சந்தித்த நினைவு இல்லாத போதும் மங்களாக ஏதேதோ நினைவுகள் அவளது மூளைக்குள் குடைய தொடங்கியது. கண்களை சிமிட்டி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்து தோற்றவளாக மேடையில் சரிந்தாள்.

இதை சற்றும் எதிர்பாராத அனைவரும் கலவரத்துடன் எழுந்து கொள்ள ஆனந்த கிருஷ்ணனோ அவளை மடியில் படுக்க வைத்து முகத்ததில் தண்ணீர் தெளித்தான்.முதல் வரிசையில் இருந்த விக்ரம் வெறும் பார்வையிளராக மட்டுமே இருக்க முடிந்த தன் நிலையை குறித்து வருந்தி யாரும் கவனிக்கா வண்ணம் அவ்விடம்விட்டு நகர்ந்து தனது அறையை நோக்கி சென்றான்.

அவன் இந்த கான்ஃபிரன்ஸ் அறைககுள் நுழைந்தது முதல் அவன் வெளியேறியது வரை அவனை ஒரு.நொடியும்.பிரியாமல் கண்காணித்துக்கொண்டிருந்த இரு விழிகள் அதிர்ச்சி, ஆச்சரியம் பிரமிப்பு,குழப்பம் போன்ற கலவையான எண்ணங்களினால் சூழப்பட்டு மேலும் அங்க நடப்பவற்றை கவணிக்க துவங்கியது.





Bạn đang đọc truyện trên: Truyen247.Pro