பகுதி -43
வழக்கம்போல நிலாவை நர்ஸரியில் விட்டுவிட்டு தன் அலுவலகம் நோக்கி சென்ற ஆதியை சிரித்த முகத்துடன் வரவேற்றார் அவனின் எம்.டி சதாசிவம்.
அறுபதுகளை தொட்ட அவரது வயதை ஐம்பதிற்கு குறைக்க தன் நரைமுடிகளை கருப்பாக்க முயற்சித்து அதில் அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.
"குட் மார்னிங் சார். வாட் எ ப்ளசென்ட் சர்ப்ரைஸ்."(Good morning sir. What a pleasant surprise)
"ம்...குட் மார்னிங் ஆதி ஹவ் ஆர் யூ?"(How are you )
"ஃபைன் சார்.எனிதிங் இம்பார்டன்ட்?(Fine sir . Anything important?)
"ஆமா ஆதி ஒரு சின்ன பிரச்சினை.""
"சொல்லுங்க சார்."
"நம்மளோட இம்பார்டென்ட் க்ளையன்ட் இன்னைக்கு மார்னிங் யு.எஸ் ல இருந்து வந்திருக்காங்க.ஒரிஜினல் ப்ளான் படி அவங்களை நம்ம சதீஷ் சயிட் சீயிங் கூட்டிட்டு போகுறதா இருந்துச்சு.பட்."
"ஏன் சார் சதீஷ் லீவ் ல போயிருக்காரா?"
" நோ நோ அவர் இங்க தான் இருக்கார் ஆனால் அவங்க பார்க்கப்போகும் இடமெல்லாம் பழங்கால கட்டிடங்கள் அதனால் அவங்க கூட ஒரு ஆர்கிடெக்ட் வரனும் னு அவங்க விரும்புறாங்க."
இப்போது ஆதிக்கு தெளிவாக விளங்கியது .தன்னை அவர்களுடன் துணைக்கு போகுமாறு எம்.டி விரும்புகிறார் என்று.ஆனால் பெரிய பதவியில் இருக்கும் தன்னிடம் இதை கேட்க தயங்கியே சுற்றி வளைக்கிறார் .ஒரு நிமிட அமைதிக்கு பின்,"சரி சார் நோ ப்ராப்ளம்.அவங்க வரும் போது எனக்கு இன்ஃபார்ம் பண்ண சொல்லுங்க இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ."என்று கூறியவன் அவ்விடம் விட்டு விருவிருவென்று என்று சென்றான்.
அவன் சென்ற விதமே கூறியது அவனது கோபத்தை.
"என்ன சார் .ஆதி சார்க்கு இவ்வளவு கோபம் வருது."என்றுகேட்ட மேனேஜரிடம்,"கோபம் வரதான் செய்யும் . அவரோடது பெரிய போஸ்டிங்.அவரை போய் கைட் (guide) வேலை பார்க்க சொன்னா? நமக்கு வேற வழி இல்லை.இந்த க்ளையன்ட் ரொம்ப முக்கியம்."
"இப்போ நான் என்ன செய்யனும் சார்."
"ஒன்னும் செய்ய வேணாம்.அவங்க நம்ம ஆபிஸ்க்கு வருவாங்க வந்ததும் நீங்க மிஸ்டர்.ஆதி கிட்ட இன்ஃபார்ம் பண்ணுங்க அவரு மத்ததெல்லாம் பார்த்துப் பாரு."
"ஒகே சார்."என்றவாறு மேனேஜர் விடைபெற்று கொண்டார்.
அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகம் பரபரப்பானது. எம்.டி நேரில் வந்து அந்த அயல்நாட்டு பெண்ணை ஆங்கிலத்தில் வரவேற்றார். வந்த அப்பெண்ணிற்கு குறைந்தது ஐம்பது வயதிருக்கும் அவரின் வயதின் முதிர்வை விட அவரின் கண்களிலிருந்த கூர்மையான பார்வை அவரின் அனுபவ அறிவை உணர்த்தியது.
"வெல்கம் டு தமிழ்நாடு மிஸ். ஒலீவியா(Olivia)."
" உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்."என்று இருகைகளை கூப்பி அழகான தமிழில் அவர் பதில் கூற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அவர் மேலும் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
(இனி இவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவர் நான் தமிழில் மட்டும் இங்கு கூறுகிறேன்.)
" உங்க நாடு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் வரும்போது கொஞ்சம் தமிழ் வார்த்தையை படித்தேன்."
"ரொம்ப ரொம்ப சந்தோஷம் மிஸ்.ஒலீவியா. *என்று அவரை அழைத்துக்கொண்டு தனது அலுவலக அறையை நோக்கி சென்றார் சதாசிவம்.
பரஸ்பர நல விசாரிப்புகளின் இடையே தமிழக பலகாரம் வகைகளை ரசித்துக்கொண்டு இருந்த இருவரின் உரையாடலை கதவு தட்டும் ஒலி தடுத்தது.
"யெஸ் கம் இன்."என்ற சதாசிவத்தின் குரலை தொடர்ந்து உள் நுழைந்தான் ஆதித்யன்.முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் கடுமை சிறிது மட்டுப்பட வந்திருந்தவரை அமைதியாக பார்த்தான்.பின் மெதுவாக அவரிடம் சென்று ,"ஹாய் ஐம் ஆதித்யன். சீஃப் ஆர்கிடெக்ட் ஆஃப் திஸ் ஃபர்ம் (Hi I'm Athithyan. Chief architect from Sasha's firm)என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள ,"ஓ... மிஸ்டர்.ஆதி . உங்களை பார்ததில ரொம்ப சந்தோஷம்.உங்க டிசைன்ஸ் எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.உங்களை பார்க்க எங்க மொத்த டீமும் ஆவலா இருக்கோம்."என்று அவர் கூற ஆதி முகத்தில் லேசான முன் முறுவல் தோன்றி அடுத்த நொடி மறைந்தது,"ரொம்ப நன்றி.நான் என் கடமையை தான் செய்தேன்.சரி நீங்க அவுடிங் போகனும்னு சொன்னதா சார் சொன்னாங்க. எப்ப கிளம்பலாம்?"என அவரிடம் நேரடியாக வினவ சதாசிவம் சங்கடமானார்.
இதுதான் ஆதி அவன் போடும் டிசைன்கள் நேர்த்தியாக புதுவிதமாக இருக்கும்.அவன் வேலையில் எந்த ஒரு குறையும் வைத்ததில்லை.ஆனால் மனிதனிடத்தில் பழக தயாராக இருக்க மாட்டான். அவனுக்கு முசுடு என்று ஆஃபிஸில் பரவலான பெயர் உள்ளது.
ஆனால் ஒலீவியாவிற்கு அவனது கேள்வி தவறாக படவில்லை அவரோ,"ஓ.... தாராளமா உடனே கிளம்பலாம்,"என்று கூற ஆஃபிஸை விட்டு தங்களது பயணத்தை துவங்கினர்.
"முதல் ல நம்ம எங்க போறோம் மிஸ்டர்.ஆதி,"என்று முன் இருக்கையில் டிரைவருடன் அமர்ந்திருந்த ஆதியை நோக்கி கேட்ட ஒலீவியாவின் கண்களில் பொக்கிஷங்களை காண போகும்ஆவல் மிகுதியாக இருப்பதை கண்ட ஆதி மணம் தமிழனை எண்ணி பெருமை கொண்டது.
"இப்ப மாமல்லபுரம் போறோம் மிஸ்."
"மா....மல்பரோ?"என்று திக்கி திணறி உச்சரிக்க முயன்று தோற்றாள் ஒலீவியா.
"மா....மல்ல...புரம். "இம்முறை பிரித்து விளக்கினான்.
"ஓ...இந்த பேருக்கு எதாவது அர்த்தம் இருக்கா??"
"ம்...ஆமா. பல்லவர்கள் அப்படினு ஒரு பெரிய சாம்ராஜ்யம் இந்த பகுதியை ஆட்சி செய்தார்கள். அதில் முக்கியமான மன்னர் மகேந்திர பல்லவர்.அவரோட மகன் நரேந்திரவர்மர். அந்த நரேந்திர வர்மன் தன்னோட இளமைக்காலத்தில் மல்யுத்ததில கலந்துக்கிட்டாரு."
"வாட் இஸ் மல்யுத்தாம.?( What is malyuthaam?)"
"மல்யுத்தம் எங்க ஊரு ரெஸ்லிங்(wrestling)மாதிரி.அந்த மல்யுத்த்தில கலந்துகிட்ட அவ்வளவு மல்லர் களையும். மல்லர் னா ரெஸ்லர் (wrestler) மாதிரி.அவ்வளவு மல்லர் களையும் தோக்கடிச்சாரு அதனால் அவருக்கு மா மல்லர் . மா மா தமிழ் லோ பெரிய னு அர்த்தம். அதனால அவருக்கு மல்லர்களுககெல்லாம் மல்லர் மாமல்லர்னு பேரு வந்துச்சு.அவரோட பேரை தான் இந்த ஊருக்கு வச்சாரு மகேந்திர வர்மன்."தனது நீண்ட விளக்கத்தை கூறி முடித்தான் ஆதி.
"வாவ் சூப்பர் ஒரு பேருக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?"ஆச்சரியப்பட்டு போனார் ஒலீவியா.அவர்கள் பேசி முடிக்கவும் மாமல்லபுரம் நுழைவு வாயில் வரவும் சரியாக இருந்தது.
"சார் முதல்ல எங்க போகனும்?"என்று கேட்டு டிரைவரிம் ,"குடைவரை கோயில் போலாம் பா ,"அங்கெல்லாம் முடிச்சிட்டு கடைசியா கடல்கரை கோயில் போயிட்டு முடிச்சிடலாம்,"என்று விளக்கம் அளித்தான் ஆதி.
அவர்களிடம் வரலாற்று சார்ந்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டும் அங்கே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நுணுக்கமான வேலைபாடுகளை குறிப்பிட்டுக் கொண்டும் வந்தான் ஆதித்யன்.
இறுதியாக கடல்கரை கோயிலில் காரை பார்க் செய்துவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு கோயிலை நோக்கி சென்றான்.
கோயிலின் சில பகுதிகள் கடல் நீரினால் பாதிப்படைந்திருந்நது இருப்பினும் கம்பீரம் குறையாமல் அழகாக காட்சியளித்தது.அவர்களிடம் கோயிலை கட்டிய இரண்டாம் மகேந்திர வர்மனை குறித்து கூறிக் கொண்டிருந்த போது சிறிய சலசலப்பு சத்தம் கோயிலின்பின்புறமிருந்து வந்தது.
அதை முதலில் கவனிக்காதஆதி தனது விளக்கத்தை தொடர்ந்தான்.இம்முறை சத்தம் அதிகமாக வர கூடி இருந்தவர்கள் கோயிலின் பின்புறம் நோக்கி செல்ல திடீரென ஒரு பெண்ணின் அபய குரல் அனைவரையும் அங்கே விரைய வைக்க ஆதியும் ,"ஜஸ்ட் எ மினிட் மிஸ்.ஒலீவியா,"என்று கூறிய வண்ணம் அங்கே விரைந்தவனின் கண்ணில் பட்டது யாரோ ஒருவன் அவனது மதுவின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்ற காட்சி. அங்கே அவன் கண்ட காட்சி அவனது இரத்தத்தை கொதி நிலை அடைய செய்ய வேகமாக அவளிடம் விரைந்தவன் அவளை தன்புறம் இழுத்தணைத்துக்கொண்டு மற்றவனின் கண்ணத்தில் அறைந்தான்.
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அந்த புதியவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
"மது ஆர் யூ ஆல்ரைட்?"என்றுவினவியபடி அவளது தலைமுதல் கால் வரை ஆராய்ச்சி பார்வை பார்த்தவன் நிம்மத்தியடைந்தவனாக அந்த புதியவன் பக்கம் திரும்பினான் அதற்குள் அவன் எழுந்து தன்னை சமன் செய்து விட்டிருக்க,"உனக்கு அறிவில்லை? இப்படி தான் பப்ளிக் ப்ளேஸ் னு கூட பார்க்காம ஒரு பொண்ணு கையபிடிச்சு இழுத்துட்டு போவார்கள்?"அவனது சட்டையை மொத்தமாக பிடித்து உளுக்கினான்.
"அவ ஒன்னும் யாரோ ஒரு பொண்ணு இல்ல. என்னோட அத்தை மக தான்."
"நீ கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் அவளோட சம்மதம் இல்லாம தொடறவன் ஆம்பளையே இல்லை. அப்போ நீ?"
அவன் ஏதோ பதில் கூற முயல அதற்குள் சுற்றி இருந்த மக்கள் அவனை திட்ட துவங்கினர் அவன் கண்களில் கோபத்துடன் மதுவை பார்க்க அவளோ அழகாக ஆதியின் கைவளைவில் நின்று கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளின் செயல் மேலும் அவனுக்கு கோபத்தை கொடுக்க ,"உன்னை நான் வீட்ல வந்து கவனிச்சிக்கிறேன்."என்று கத்திவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அதுவரை தன் கவனத்தைச் முழுவதும் அவனிடம் செலுகத்தியிருந்தவள் தான் ஆதியில் கைவளைவிற்குள் நிற்பதை அப்பொழுது உணர வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.
"ரொம்ப தாங்க்ஸ்."
"பரவாயில்ல வது . உனக்கு ஒன்னும் அடிபடலையே?"
"ம்ஹீம் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன்."
"இப்பதானே கொஞ்சம் கொஞ்சமா உடம்பு சயியாகிட்டு வருது நீ இங்கெல்லாம் தனியா வரலாமா?"
"இல்லை இல்லை அவ எங்கூட தான் வந்தா.தனியா வரலை."அதுவரை மதுவின் பின்னால் இருந்து ஆதியை கவனித்து கொண்டிருந்த தேவி இப்போது முன்வந்தார்.
"ம்..ஓகே. மதுவை பத்திரமா பார்த்துக்கோங்க . ஆக்ஸிடென்டுக்கு அப்பறம் இப்பதான் நார்மல் ஆகிருக்கா ."கூறியவன் மதுவின் தலையில் கை வைத்து வருடி ,"டேக் கேர் மா" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அவன் சென்ற திசையை ஆ....வென பார்த்துக்கொண்டிருந்த மது தன் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக சுயநினைவு அடைய ,"ஆ....ஏன்டி கொரங்கே என்னை அடிச்ச?"
"பின்ன என்ன நானும் எவ்வளவு நேரம் தான் உன்னை கூப்பிடுறது நீபாட்டுக்கு அந்தா போற அவரை சைட் அடிச்சிசட்டே இருக்க?"
"நான் ஒன்னும் சைட் அடிக்கலை."
"சரி அதை விடு அவரு யாரு?"
"யாருக்கு தெரியும்?"
"அடிப்பாவி. அவரு என்னமோ உன் கூட ரொம்ப பழகுனவரு மாதிரி உன்னை செல்லமா வதூ...னு கூப்பிடுறாரு.உன் தலையை வருடி டேக் கேர் னு சொல்றாரு.உன்னை பார்த்துக்க சொல்லி என்கிட்ட சொல்லிட்டு போறாரு.நீ என்னடா னா அவரு யாருனே தெரியாது னு சொல்ற?"
அதுவரை மந்திரத்தால் கட்டுண்டதை போல இருந்த மது தேவியின் விளக்கத்தை கேட்டு நெளிந்தாள்,"என்னடி சொல்ற இதெல்லாம் எப்போ நடந்துச்சு ?"
"சரியா போச்சு போ. நீ தான்அவரை பப்ளிக் ப்ளேஸ் னு கூட பார்க்காம ஜொல்லு விட்டு கிட்டு இருந்தியே இதெல்லாம் கூட கவனிக்கலையா?"
மதுவின் முகம் யோசனையை காட்டியது,"மது என்னாச்சு டி உனக்கு. இவங்க ரெண்டு பேரும் யாரு?உன்னை பத்தி அவங்களுக்கு தெரிஞ்சிருக்கே?"
"ம்... அதான் நானும் யோசிக்கிறேன்.இவங்க இரெண்டு பேருக்கும் என்னை தெரிஞ்சிருக்கு. ஒருத்தருக்கு என்னோட அடையாளம் மட்டும் தெரிஞ்சிருக்கு. இன்னோருத்தருக்கு எனக்கு கடைசியாக நடந்த ஆக்ஸிடென்ட் கூட தெரிஞ்சு இருக்கு."
"என்ன சொல்ற மது ஆக்ஸிடென்டா??"
"ம்....ஆமா நீ கார்ல் வரும்போது கேட்டியே அடிக்கடி உனக்கு என்னாகுது னு?"
"ம்..."
"ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆச்சு.அதில நான் பழசெல்லாம் மறந்து போயிட்டேன்."
"என்ன சொல்ற மது?,"என்று வினவிய தன் தோழியிடம் தன் கடந்த காலத்தை விளங்கினாள் நர்ஸரியில் வேலை செய்வதை தவிர்த்து.
"ம்...முதல்ல என்கிட்ட பேசுனருக்கு என்னோட பேரு மட்டும் நனதுன் தெரிஞ்சிருக்கு வேற என்னை பத்தின எந்த விஷயமும் தெரியலை.அதனால தான் நான் மதுவே இல்லை னு பொய் சொன்னேன்.ஆனால் இரண்டாவதா என்கிட்ட பேசினவருக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு.அது மட்டும் இல்லாம என மேல் அவரு காட்டுனா அக்கறைக்கு அவரு பிரதிபலன் எதிர்பார்கலை.அப்போ எனக்கு பழசு மறந்து போனதும் அவருக்கு தெரிஞ்சிருக்கு.ஆனால் அவரு யாரு??எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு??"இவ்வாறு தனக்கு தானே கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்த மதுவை பார்க்க தேவிக்கு கஷ்டமாக இருந்தது.
"சரி விடு மது தானா தெரியவரும் நீ மனசு போட்டு குழப்பிக்காம வா போகலாம்."என்று தன் தோழியை அழைத்துக்கொண்டு அடுத்த இடம் நோக்கி சென்றாள் தேவி.
தேவியுடன் நடந்து சென்ற மதுவின் மனதில் ஆதி குறித்த சிந்தனையே வியாபித்து இருந்தது.
*******
மதுவை தேவியிடம் ஒப்படைத்து விட்டு வந்த ஆதி சற்று தள்ளி வந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.அவனது கோபம் இன்னும் குறையாமல் இருக்க கண்களை மூடி தலை கோதி தன்னை சமன் படுத்திக் கொண்டான். அவன் மனம் அமைதி அடைந்தவுடன் மிஸ்.ஒலீவியா இருக்கும் இடம் நோக்கி சென்றான்.அதுவரை அங்கு நடந்த அனைத்தையும் ஒரு பார்வையாளறாக பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்மணிக்கு அவர்கள் பேசியது கேட்காமல் இருந்தாலும் நிலைமையை ஒருவாறு யூகிக்க முடிந்தது. ஆதி அவர் நிற்கும் இடத்தை நெருங்கியதும்,"வாட் ஹாப்ன்ட் மிஸ்டர்.ஆதி ?இஸ் ஷு சம் ஒன் யு நோ?"(Is she someone you know?) என்று வினவ அதற்கு ஆதியோ ஒரு மென் சிரிப்புடன்,"நோ ஷீ இஸ் தி ஒன் ஐ லவ்.(No.She is the one I love.)"என்று கூறினான்.
"நீங்க அங்க போகனுமா?"
"இல்லை அவங்க பாத்துப் பாங்க். வாங்க நம்ம அடுத்த தா கடற்கரை க்கு போகலாம்."என்று கூறிய வாறு அவன் நடந்தான்.
மற்ற கடற்கரையை விட மாமல்லபுரத்து கடற்கரை சற்று வித்தியாசமாக இருக்கும்.அதன் மணல் பாலைவன மணலை போன்ற தன்மையுடன் இருக்கக்கூடியது.அதில் நடப்பதே ஒலீவியாவிற்கு சிரமமாக இருக்க . இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அவர் நடந்தது ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது.
அங்கே கடைகளில் விற்கப்படும் சிறு சிறு சங்காலான பொருட்களை வாங்கி வந்தார் ஒலீவியா.அதில் ஒரு கடையில். சிறிய சங்கில் பெயர் பொரித்து கொடுக்கப்படும் என்று போட்டிருக்க அதில் உள்ள நுழைந்தான் ஆதி.
பல வகையான சங்குகள் சிறிதும் பெரியதுமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.அதில் இரண்டை தேர்ந்தெடுத்தவன் ஒன்றில் ஆங்கில வார்த்தை"ஏ" என்றும் மற்றொன்றில் ஆங்கில வார்த்தை"எம்"என்றும் எழுதி வாங்கிக் கொண்டான்.
அந்த கடைத்தெருவில் வாங்கி முடித்துவிட்டு அருகிலிருந்த உணவகத்தில் அவர்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பும் நேரம் ஆதியின் செல்பேசி சினுங்கியது,அதில் மின்னிய நர்ஸரியின் பெயரை பார்த்த ஆதி முகத்தில் பதட்டத்துடன் அந்த கால் ஐ அட்டன் செய்தான்.
"ஹலோ .."
"ஹலோ மிஸ்டர்.ஆதித்யன்?."
"ஆமா நான் ஆதி தான் பேசறேன்.சொல்லுங்க."
"நீங்க இங்க கொஞ்சம் வர முடியுமா"
"நிலாக்கு என்னாச்சு"
"கொஞ்சம் நீங்க இங்க வந்தா நல்லா இருக்கும்.நிலாக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை.ஆனால் அவ அழுகையை எங்கலாள நிறுத்த முடியலை.
"வாட்??சரி நான் உடனே வரேன்"என்று கால் ஐ கட் செய்தவன் ஒலீவியாவிடம்,"ஐம் சோ சாரி மிஸ்.ஒலீவியா . நான் உடனே போகனும்."
"என்னாச்சு?"
"என் பொணண்ணுக்கு உடம்பு சரியில்லை."
"நோ ப்ராப்ளம். வாங்க இந்த கார்லயே போகலாம்." ஒரு சிறு யோசனைக்குப் பிறகு சரியென்று அந்த காரில் ஏறியவன் நர்ஸரிக்கு வழி கூறினான்.
அரை மணி நேரத்தில் நர்ஸரியின் வாசலில் கார் நிற்க திரும்பியும் பாராமல் புயலென உள்ளே நுழைந்தான் ஆதி.
வேகமாக அவள் உள் நுழைய அங்கே ஒரு பெண் நிலாவை கைகளில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.நிலாவோ கண்களில் கண்ணீர் வர அழுதுகொண்டே இருந்தாள்.வேகமாக உள்ளே வந்தவன் நிலாவை அவரிடம் இருந்து வாங்கி தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்.தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்த அந்த குழந்தை நிமிர்ந்து ஆதியை பார்த்தவுடன் தன் அழுகையை நிறுத்தி கொண்டு அவன் தோள்களில் வாகாய் சாய்ந்து கொண்டது.
"நிலாவுக்கு என்னாச்சு??"
"தெரியலை சார் காலையில நல்லா தான் இருந்தா ஒரு பத்து மணிக்கு மேல் அழுக ஆரம்பிச்சுட்டா.நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தோம் அவ அழுகை நிற்குறமாதிரி தெரியலை.அப்பறம் கொஞ்ச நேரத்தில தூங்கிட்டா.திரும்ப முழிக்கும் போதே அழுகை தான்.அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணேன்."
"ம்..சரி மேடம் நான் பார்த்துக்கிறேன்,"என்று கூறியவன் காரிற்கு அருகே சென்று ,"நான் அவசரமாக வீட்டுக்கு போகனும் ,சார் கிட்ட பேசிக்கிறேன்.சாரி இன்னைக்கு உங்க கூட என்னால வர முடியாது."
"கம்ஆன் மிஸ்டர்.ஆதித்யன் இதான் முக்கியம்.நீங்க வாங்க உங்களை டிராப் பண்றோம்."
",நோ. நோ..இது ஆபிஸ் காக கொடுத்தது.நான் டாக்ஸில போய்கறேன்,"என்று அவன் எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாக மிஸ்.ஒலீவியா அவனை ஏற்றிக்கொண்டே அவ்விடம் விட்டு அவன் இல்லம் நோக்கி சென்றார்.
தனக்காக இன்னும் காத்திருக்கும் அதிர்ச்சி புரிமாமல் ஆதி நிலாவுடன் இல்லம் நோக்கி பயணித்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro